Friday, August 05, 2011

'கிரிதாரிக்குத் தொண்டு' என்னும் இனிய கரும்பு!



ஆழமான கருத்துகள் கொண்டு இனிமையான எளிதான பாடல் இது.

பல்லவி
க2ள்ளி க2வொ க2ள்ளி க2வொ--நிச்சு
கைங்கர்யம் மெனஸ்தான் கொப்பு3 க2ள்ளி க2வொ [க2]

எடுத்து உண்ணுங்கள் எடுத்து உண்ணுங்கள் - தினம்
தொண்டு என்னும் கரும்பு எடுத்து உண்ணுங்கள் (எ)

அநுபல்லவி
கரெ கர்முன் த4மய்
ஹரிக் பாய்ம்பொடி3 பொ3வொ துமி [க2]

செய்த வினைகள் ஓடும்
ஹரியை வணங்கி அழையுங்கள் - நீங்கள் (எ)

சரணு
தா3ஸ் ஹோனாஜியெத் மோஸ் அவயி ஹரி
தா3ஸ§நுக் தா3ஸ்ஹொயெத் ஹரி க்ருபகரயி
தொ3ங்க3ர் ராணும் ஹிங்க3ன் வேஸ் நீ:
தொ3ங்க3ர் அங்க்3ளிதெ4ரெ ரெங்கா3க் ஸெங்கு3 ஸவொ யேட்[க2]

தொண்டன் ஆகாவிட்டால் மோசம் வருமே - ஹரி
தொண்டருக்கு தொண்டன் ஆனால் ஹரி கருணை செய்வானே
காடு மலை ஏறத் தேவையில்லையே - மலையை
விரலால் தொட்ட ரெங்கனைத் துணை கொள்ளுங்கள் இங்கே (எ)

மத்திம் உஜி மத்திம் ஹொடி3 மத்திமூஸ்ஜாய் ஸெரிர்
ப4க்தி கிஸொதி கரொ
வடபத்ரஸாயி ஹொய்கிநு மொகொ
நடனக்ருஷ்ண தா3ஸ§ந் ஜொவளும் ஜெய் [க2]

மண்ணில் பிறந்து மண்ணில் வளர்ந்து மண்ணிலே போகும் உடல்
பக்தி எப்படியாவது செய்யுங்கள்
வடபத்ரசாயி ஆகி என்னை
நடனகிருஷ்ண தாசர்கள் உடன் கொண்டு சென்று (எ)

இந்தப் பாடலை டி.எம். சந்திரசேகர் குரலில் இங்கே கேட்கலாம்.

19 comments :

பத்மநாபன் said...

நல்லிசை விருந்து... எந்த மொழிங்க.. எதுவாயிருந்தாலும் பாடல் மொழியை தடை செய்யவில்லை.. அந்த குரல் இளம் டி.எம்.எஸ் குரல் போன்று இனிமையாக இருந்தது...

குமரன் (Kumaran) said...

சௌராஷ்ட்ர மொழிப்பாடல் இது பத்மநாபன். பாடியவர் பெயர் எனக்குத் தெரியவில்லை.

Lalitha Mittal said...

குன்றைக்குடையாய்ச் சுமக்கும் குணக்குன்றைக் காணும்பொழுதெல்லாம்

எனக்கு ஆர்க்கிமிடிஸ்[என்று ஞாபகம்] பற்றி நான் சிறு வயதில் படித்த விஷயம் தப்பாமல் நினைவுக்கு வரும்! "எனக்கு மட்டும் சரியான

leverage கிடைத்துவிட்டால் நான் இந்த பூமியை ஒற்றை விரலால்

தூக்கிவிடுவேன்"என்றாராம்!



படமும் அழகு!பாட்டும் நல்லா இருக்கு!



எனக்கு மிகவும் பிடித்த வடபத்ர சாயியும் இன்று காட்சி கொடுத்து விட்டான்! நன்றி!நன்றி! நன்றி!

நாடி நாடி நரசிங்கா! said...

தொண்டு என்றால் என்ன?
கோவிலுக்கு பணம் கொடுப்பதா !
:)

நாடி நாடி நரசிங்கா! said...

நல்ல வரிகள்:)

Radha said...

குமரன், இம்முறை பாடலைக் கேட்டுவிட்டேன். :-)

மொழிபெயர்ப்பில் இரண்டு வரிகள் புரியவில்லை.

//பக்தி எப்படியாவது செய்யுங்கள்
வடபத்ரசாயி ஆகி //
???

jeevagv said...

நல்லாயிருக்கு குமரன்.
//காடு மலை ஏறத் தேவையில்லையே - மலை
விரல் தொட்ட ரெங்கனைத் துணை கொள்ளுங்கள்//
"மலையை விரலால்" தொட்ட - என்
று இருந்தால் இன்னும் நல்லா இருக்குமோ.

In Love With Krishna said...

//தொண்டன் ஆகாவிட்டால் மோசம் வருமே - ஹரி
தொண்டருக்கு தொண்டன் ஆனால் ஹரி கருணை செய்வானே//
:))
Beautiful thoughts :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கள்ளி=கரும்பு?
தொங்கர்=மலை?
மத்திம்=உலகம்?

பாடலின் அடியில் முக்கியமான செளராட்டிரச் சொற்களைப் பட்டியல் இட்டு, அவற்றின் தமிழ்ச் சொல்லும் கொடுத்தீங்க-ன்னா, செளராட்டிரம் பழக எளிதாய் இருக்கும்!!

//மலை விரல் தொட்ட ரெங்கனை//

வேல் தொட்டவனே, தொடு வேலவனே போல மலை தொட்டவனா? :)

பாட்டு நல்லா இருக்கு! தொண்டெனும் கரும்பு சுவைக்கவும் இனிதே!

குமரன் (Kumaran) said...

நன்றி லலிதா அம்மா.

குமரன் (Kumaran) said...

எது நல்ல வரி இராஜேஷ்? கோவிலுக்குப் பணம் கொடுக்குறது தான் தொண்டுன்னு சொல்ற வரியா? :-)

குமரன் (Kumaran) said...

இராதா,

நான் புரிந்து கொள்ளும் வகையில் சொல்கிறேன். நாயகி சுவாமிகளின் வரலாற்றை அறிந்திருப்பதால் வரும் புரிதலாகக் கூட இருக்கலாம்.

பக்தி செய்வதற்கு எத்தனையோ தடங்கல்கள் இருக்கின்றன - அதனால் எப்படியாவது முயன்று பக்தி செய்யுங்கள்!

வடபத்ரார்யர் என்ற வில்லிபுத்தூரில் இருந்த ஜீயர் தான் நாயகி சுவாமிகளுக்கு 'நடனகோபால நாயகி' என்ற திருநாமத்தைத் தந்து சமாஸ்ரயனம் செய்து வைத்தவர். அதனால் தனது ஆசாரியன் திருநாமத்தை நாயகி சுவாமிகள் தனது கீர்த்தனைகளில் எல்லாம் சொல்வார்.

வடபத்ரஸாயி என்னும் ஆசாரியனாக வந்து என்னை நடனகோபாலனின் (இங்கே நடனகிருஷ்ணன் என்கிறார்) தொண்டர்கள் நடுவில் வைத்தான் என்று பிரமகுருவாக வந்தவன் வடபத்ரஸாயியே என்று சொல்வதாகப் புரிந்து கொள்கிறேன்.

குமரன் (Kumaran) said...

அப்படித் தான் நானும் முதலில் நினைத்தேன் ஜீவா. தொ3ங்க3ர் அங்க்3ளி தெ4ரெ என்று பாடலில் வருவதால் ஒவ்வொரு சொல்லாக அப்படியே மொழிபெயர்த்து மலை விரல் தொட்ட என்று இட்டுவிட்டேன். இப்போது படிக்கும் போது 'வேல் தொட்ட' செயலின் பாதிப்பால் 'விரல் தொட்ட' என்று மொழிபெயர்த்திருக்கிறேன் என்று தோன்றுகிறது; ஏனென்றால் தெ4ரெ என்றால் தொட்ட என்று பொருள் இல்லை; பிடித்த என்று தான் பொருள். அதனால் 'மலை விரல் பிடித்த' அல்லது 'மலையை விரலால் பிடித்த' என்று தான் மொழிபெயர்த்திருக்க வேண்டும்.

இடுகையில் மாற்றிவிட்டேன்.

குமரன் (Kumaran) said...

Thanks ILWK.

குமரன் (Kumaran) said...

இரவி,

நீங்க சொல்ற மாதிரி செஞ்சா எல்லா சொல்லுக்கும் சொல்ல வேண்டியிருக்கும். :-)

இரவி,

நீங்க சொல்ற மாதிரி செஞ்சா எல்லா சொல்லுக்கும் சொல்ல வேண்டியிருக்கும். :-)

க2ள்ளி - எடுத்து; க2வொ - உண்ணுங்கள் (கா2னா என்ற இந்திச் சொல்லை ஒப்பு நோக்குங்கள்); நிச்சு - நிதமும்; கொப்பு3 - கரும்பு; த4மய் - ஓடும்; பாய்ம் பொடி3 - காலில் விழுந்து - வணக்கம் என்பதற்கு சௌராஷ்ட்ரம் சொல்லும் ஒரே சொல் பாய்ம்பொட3ஸ்தெ என்பது தான்; பொ3வொ - அழையுங்கள்; துமி - நீங்கள்; தொ3ங்க3ர் - மலை; ராண் - காடு; அங்க்3ளி - விரல்; ஸெங்கு - துணை; மத்தி - மண்.

குமரன் (Kumaran) said...

பாய்ம்போட்3 என்ற சொல் தான் புழக்கத்தில் (பேச்சில்) இருக்கும் சொல். வேறு சொல் சௌராஷ்ட்ரத்தில் இல்லை என்று சொன்னேன்; அது தவறு. நமுஸ்; நொம்முஸ் என்ற சொற்கள் உண்டு.

Radha said...

நன்றி குமரன். இப்போது நன்றாகப் புரிகிறது.
*********
கிரிதாரிக்கு ஜே ! இன்று நண்பர்கள் தினம். :-)

நாடி நாடி நரசிங்கா! said...

//எது நல்ல வரி இராஜேஷ்? கோவிலுக்குப் பணம் கொடுக்குறது தான் தொண்டுன்னு சொல்ற வரியா? //

சுத்தம் :)
நல்ல வரிகள் சொன்னது இவைகள்
எடுத்து உண்ணுங்கள் எடுத்து

உண்ணுங்கள் - தினம்
தொண்டு என்னும் கரும்பு எடுத்து உண்ணுங்கள் (எ)

செய்த வினைகள் ஓடும்
ஹரியை வணங்கி அழையுங்கள் - நீங்கள் (எ)

--------------

அதில் வரும் தொண்டு தொண்டு என்பது என்ன ?

பெருமாளுக்கு நாம் செய்ய வேண்டிய
தொண்டு தான் என்ன ?

Pl.. விளக்கமாக கூறுங்கள்

குமரன் (Kumaran) said...

இன்பம் என்றால் என்னன்னு கேக்குற மாதிரி இருக்கு இராஜேஷ். இன்பத்தை எல்லோரும் புரிஞ்சிக்கிற மாதிரி தொண்டுன்னாலும் என்னன்னு எல்லோருக்கும் புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன். தொண்டு, இன்பம் இரண்டையும் என்னால் வரையறுக்க முடியாது. :-)

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP