பாப்பா ராமாயணம் (ஒன்பதாம்பகுதி)
            பாப்பா ராமாயணம் (ஒன்பதாம்பகுதி) 
    சுந்தரகாண்டம்-(பாகம்-6 )
சர்க்கம்-  38 -முதல் - 42  - வரை 
        அனுமன் ''அடையாளம்'' கேட்டனராம்;
''ராமர்க்கு அளிப்பேன்''என்றனராம்.
     சீதை முன்னினைவினிலாழ்ந்தனராம்;
கண்ணீரால் துகில் நனைந்தனராம். 
     நிகழ்ந்ததை அனுமர்க்குக் கூறினராம்;
  பதிக்கு நினைவுறுத்தக் கோரினராம்.
          குடிலொன்றிலவள் அமர்ந்திருந்தனராம்;
மடியில் ராமர் துயின்றிருந்தனராம்.
காகம் ஒன்றைச் சீதை கண்டனராம்;
காகம் ஒன்றைச் சீதை கண்டனராம்;
       தேகத்தை அது கொத்தத் துடித்தனராம்.
உதிரத்தினாலுடை நனைந்தனராம்;
அதனால் பதி துயில்கலைந்தன ராம்.
        நிகழ்ந்ததை அறிந்தவர் வெகுண்டனராம்;
தர்ப்பாசனப்புல்லொன்றை எடுத்தனராம்.
தர்ப்பாசனப்புல்லொன்றை எடுத்தனராம்.
புல்லைக் கணையாக்கி எய்தனராம்;
                   காகத்தின் கண்ணொன்றைக் கொய்தனராம் .
      இதனை அனுமன் செவி மடுத்தனராம்;
     நினைவுறுத்த வாக்கு கொடுத்தனராம்.
சீதை சூடாமணி களைந்தனராம்;       
வீரர் சூடாமணி பெற்றனராம்;       
         விரலில் அதையணிந்து நின்றனராம்.
    வைதேகியின் பதம் பணிந்தனராம்;
வலம் வந்தே கரங்குவித்தனராம்.
              அண்ணலை மனத்தால் துதித்தனராம் ;
ஆனந்தக்கண்ணீர் வடித்தனராம்.
(ராம ராம ஜெய ......சீதாராம்)
அன்னைக்கு தைரியமூட்டினராம்;
அபலைக்கு ஆறுதல் கூறினராம்.
         வானரர் வலிமையை விளக்கினராம்;
'உதவுவர்'என வாக்களித்தனராம்.
      'வெற்றி உறுதி' என முழங்கினராம்;
         'அழிவர் அரக்கர்'என மொழிந்தனராம்.
                               துணிவினைத் துணைகொள்ளத் தூண்டினராம்;
                   கவலையைக் களைந்திட வேண்டினராம்.
           வைதேகி உத்சாகம் அடைந்தனராம்;
               வாழ்த்தி விடைகொடுத்தனுப்பினராம்.
           அனுமன் வேகமாய்த் தாவினராம்;
  மண்டபங்கள்பல இடித்தனராம்;
     அசோகவனத்தை அழித்தனராம்.
             கோட்டை வாயிலில் அமர்ந்தனராம்;
             அரசனைக் காணக் காத்திருந்தனராம்.
          ஓசையால் அரக்கியர் விழித்தனராம்;
         வனத்தின் அழிவினை அறிந்தனராம்.
        வானரச்செயல் என உணர்ந்தனராம்;
        வேந்தனுக்குரைக்க விரைந்தனராம்.
செவியுற்ற ராவணன் சீறினராம்;
           குரங்கைக் கொன்றுவிடக்  கூறினராம்.
கிங்கரர் ஆயுதமெடுத்தனராம்;       
 அஞ்சனி மகனை அடித்தனராம்.    
             கோபத்தால் மாருதி கொதித்தனராம்;      
கோர உருவம் எடுத்தனராம்.          
''ராமர்க்கே வெற்றி'' என்றனராம்;   
   தோரண வாயிலில் நின்றனராம்.     
இரும்பு உழல்தடி எடுத்தனராம்;     
    தாக்கிய கிங்கரரை அடித்தனராம்.      
    அடிபட்டனைவரும் இறந்தனராம்;       
அரசன் செவியுற்றதிர்ந்தனராம்.          
       ப்ரஹஸ்தனின்  மகனை ஏவினராம்;       
       ''குரங்கைக் கொல்''எனக் கூவினராம்.      
(ராம ராம ஜெய ....சீதாராம்)

8 comments :
ஸ்ரீ ராம ஜெயம் !
Superb! Superb! Superb! No Words:)
குடிலொன்றிலவள் அமர்ந்திருந்தனராம்;
மடியில் ராமர் துயின்றிருந்தனராம்.
So cute:)
சீதை முன்னினைவினிலாழ்ந்தனராம்;
பீப்பாக்கே புரியல பாப்பாக்கு எப்படி புரியும் :)
முன்னினைவினிலாழ்ந்தனராம் Means - முன்பு நடந்ததை சிந்தித்தனராம்
i Think:)
ந.நா
சரியாபிடிச்சீங்க;
''முன் நினைவினில்'',== பழைய நினைவில்
பாப்பாவுக்குப் புரிவது கஷ்டந்தான்.வேறேதாவது எளிமையான ,பொருத்தமான சொல்லிருந்தால் அடுத்த பின்னூட்டத்தில் சொல்லிடுங்க!மாத்திடலாம்!(''பீப்பாக்கே புரியல்லே''..இதப்படிச்சுட்டு நான் விழுந்து விழுந்து சிரிக்க எங்க வீட்டுத்தரை பள்ளமாயிடுத்து;என்னை வீட்டில் வந்த விருந்தினர் ஒருமாதிரி பாக்க ஆரம்பிச்சுட்டா ...காரணம் அவா தமிழ் தெரியாத டெல்லிக்காரா.)
:)
சீதை முன்னினைவினிலாழ்ந்தனராம்
சீதை முன் நினைவினில் ஆழ்ந்தனராம் - This is clear:)
கோபத்தால் மாருதி கொதித்தனராம்;
கோர உருவம் எடுத்தனராம்.
வார்த்தைகளைக் கோர்த்த விதம் அருமை