பாப்பா ராமாயணம்-(நான்காம்பகுதி)
பாப்பா ராமாயணம்-(நான்காம்பகுதி)
சுந்தரகாண்டம்- (பாகம்-1 )
சர்க்கம்-1 ----அனுமன் சமுத்திரம் தாண்டுதல் .
[பாடலை நண்பர் கே.ஆர்.எஸ் பாட கீழே கேட்கலாம்.]
அனைவரும் அனுமனை நாடினராம்;
சீதையை மீட்க வேண்டினராம்.
அனுமனும் அதற்குத் துணிந்தனராம்;
ராமநாமத்தை ஜெபித்தனராம்.
(ராம ராம ஜெய ......சீதாராம்)
பேருருவத்தினராய் மாறினராம்;
மலையுச்சியிலே ஏறினராம்.
மலையுச்சியிலே ஏறினராம்.
காலால் மலையை அழுத்தினராம்;
வேகமாய் மூச்சினை இழுத்தனராம்.
மலையை ஊன்றி உதைத்தனராம்;
விண்ணை நோக்கி விரைந்தனராம்.
வானவீதியை எய்தினராம்;
வானவர் மலர் மழை பெய்தனராம்.
வான்வழி அனுமன் பறந்தனராம்;
வால் நக்ஷத்திரம்போல் தெரிந்தனராம்.
கடலரசன் இதைக் கண்டனராம்;
உதவிட எண்ணங்கொண்டனராம்.
மைநாகமலைதனை விளித்தனராம்;
உபசரித்திடும்படி பணித்தனராம் .
மலையரசனும் மனமிணங்கினராம்;
வேகமாய் ஓங்கி வளர்நதனராம்.
அனுமனின் பாதையில் நின்றனராம்;
மாருதி மலையைக் கண்டனராம்.
வேகத்தடையென எண்ணினராம்;
தேக பலத்தால் தள்ளினராம்.
நிலைகுலைந்தரசன் விழுந்தனராம்.;
நாணியவாறே எழுந்தனராம்.
அனுமனின் ஆற்றலை உணர்ந்தனராம்;
அவரை அன்பாய் உபசரித்தனராம்.
கடலோன் விருப்பத்தைக் கூறினராம்;
களைப்பாறிச்செல்லக் கோரினராம்.
அனுமன் ஐயம் தெளிந்தனராம்;
அன்புடன் அவனை வருடினராம்.
ஓய்வாய் அமர்ந்திட மறுத்தனராம்.
வைதேகியை மீட்கப் பறந்தனராம்.
வானோர் கண்டு வியந்தனராம்.;
வாயுபுத்திரனைப் புகழ்ந்தனராம்.
நெஞ்சுறம் கண்டோமென்றனராம்.;
அறிவினைச் சோதிக்க எண்ணினராம்.
நாகமாதாவினை ஏவினராம்.;
சுரசை என்பது அவள் பெயராம்.
அரக்கியாய் சுரசை மாறினராம்;
அனுமனை நோக்கிச் சீறினராம்.
வீரனை வளைத்துப் பிடித்தனராம்;
விழுங்கிடத் துடிப்பதாய் நடித்தனராம்.
பேயென வாயை விரித்தனராம்;
வாயினுள் புகும்படி பணித்தனராம்.
'அயன் தந்த வரம்' என விளக்கினராம்;
அனுமனும் வாய்புக இணங்கினராம்
'அயன் தந்த வரம்' என விளக்கினராம்;
அனுமனும் வாய்புக இணங்கினராம்
தேகத்தை அனுமன் வளர்த்தனராம்;
அவளினும் பெரிதாய் பருத்தனராம்.
சுரசை அனுமனை அளந்தனராம்;
குகையென வாயைப் பிளந்தனராம்.
சட்டென அனுமன் சிறுத்தனராம்;
சுட்டு விரலளவு சுருங்கினராம்.
சுரசையின் வாயில் புகுந்தனராம்;
ஒரு நொடியில் வெளிவந்தனராம்..
ஒரு நொடியில் வெளிவந்தனராம்..
அறிவால் அரக்கியை வென்றனராம்;
சுரசையோ செயலற்று நின்றனராம்.
விண்ணோர் வியந்து மகிழ்ந்தனராம்;
அனுமனின் அறிவைப் புகழ்ந்தனராம்.
சுரசையும் சுயவுரு மாறினராம் ;
அனுமனுக்கு வாழ்த்து கூறினராம்.
வானரன் விருட்டெனப் பறந்தனராம்;.
ராமபாணமெனத் தெரிந்தனராம்.
(ராம ராம ஜெய....சீதாராம்)
பாடலை நண்பர் கே.ஆர்.எஸ் பாட கீழே கேட்கலாம்.
-------------------------------------------------------------
6 comments :
என்ன சொல்றதுன்னு தெரியல . வரிக்கு வரி படிக்க படிக்க சலனமே இல்லாத கடல் போல இருக்கு
superf:)
ந.நா
உத்சாகமூட்டும் உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி .தொடர்ந்துபடித்து கருத்து தெரிவிக்கவும்
பள்ளி நாட்களுக்கு கடத்திச் செல்கிறீர்கள்... ரவி குதூகலமாக பாடியிருப்பதும் அருமை.
இந்த பதிவை இதுவரை நான் படிக்கல.
இப்போ கேட்டுகிட்டே படிச்சேன்!
@KRS: கலக்கிடீங்க போங்க!! :))
கே.ஆர்.எஸ். ரொம்பம் நல்லா பாடியிருக்கீங்க!
அருமை
பாடலோடு பாடிக்கையில் பரவசமே தனித் தான்
கண்ணப்பிரான் அவர்களுக்கு வாழ்த்துகள்