பாப்பா ராமாயணம் (இரண்டாம்பகுதி)
பாப்பா ராமாயணம் (இரண்டாம்பகுதி)
அயோத்யாகாண்டம்
தசரதர் ஓய்வினை விரும்பினராம்;
ராமர்க்கு முடிசூட்டக் கருதினராம்;
சபையினில் கருத்தினைச் செப்பினராம்;
அனைவரும் மகிழ்வுடன் ஒப்பினராம்.
செவியுற்ற கைகேயி பதைத்தனராம்;
கணவனைத் தன்பால் அழைத்தனராம்.
இருவரம் வேண்டி நின்றனராம்;
"மறுத்தால் இறப்பேன்"என்றனராம்.
அரசர் அவள்மனமறிந்திலராம்;
வரந்தர வாக்குமளித்தனராம்.
கைகேயி மனமகிழ்ந்தனராம்;
வேண்டிய வரந்தனைப் பகர்ந்தனராம்.
பரதர்க்கு அரியணை வேண்டினராம்;
'முதல்வரமிது' 'எனக் கூறினராம்.
ராமர்க்கு வனவாசம் விதித்தனராம்;
'மறுவரமிது'என மொழிந்தனராம்.
இடிவிழுந்ததுபோல் அதிர்ந்தனராம்.
கைகேயி ராமனை அழைத்தனராம்;
கானகம் செல்லப் பணித்தனராம்.
மகிழ்வுடன் ராமர் இசைந்தனராம்;
மனைவியுடன் வனம் விரைந்தனராம்.
லக்ஷ்மணனும் பின்தொடர்ந்தனராம்;
மன்னன் மகனின்றி வருந்தினராம்;
புத்திர சோகத்தால் இறந்தனராம்.
நிகழ்ந்ததை பரதன் அறிந்தனராம்;
அதிர்ச்சியில் மயங்கிச் சரிந்தனராம்.
அன்னையின் செயலை வெறுத்தனராம்;
அரியணை ஏறிட மறுத்தனராம்.
அண்ணனைத் தேடிச் சென்றனராம்;
வனத்தினில் அண்ணனைக் கண்டனராம்.
அயோத்தி திரும்பிட அழைத்தனராம்;
அரசப் பொறுப்பேற்க இறைஞ்சினராம்.
இணங்கிட ராமர் மறுத்தனராம்;
பரதனை நாடாளப் பணித்தனராம்.
பரதன் உள்ளம் வருந்தினராம்;
அண்ணனின் பாதுகை இரந்தனராம்.
ராமரும் பாதுகை ஈந்தனராம்;
பரதனும் சிரந்தனில் ஏந்தினராம்.
விடைபெற்றயோத்தி மீண்டனராம்;
பாதுகை அரியணை ஏற்றினராம்.
ராமரின் பெயரால் ஆண்டனராம்;
ராமர்க்காக உயிர் வாழ்ந்தனராம்.
(ராம ராம ஜெய............சீதாராம் )
--------------------------------------------------
ஆரண்யாகாண்டம்
ராவணன் என்றொரு ராக்ஷஸராம்;
லங்காபுரிதனையாண்டனராம்.
தலைகள் பத்து உடையவராம்;
சூர்ப்பனகையின் சகோதரராம்.
சூர்ப்பனகை வனம் சென்றனராம்;
வழியினில் ராமரைக் கண்டனராம்.
ராமரின் எழிலில் மயங்கினராம்;
திருமணம் புரிந்திட விரும்பினராம்.
சீதையைக் கொல்லச்சென்றனராம்;
அதனை லக்ஷ்மணன் கண்டனராம்.
நொடியில் வாளை உருவினராம்;
வலியால் அரக்கி துடித்தனராம்;
வெட்கியே ஓட்டம் பிடித்தனராம்.
பழிக்குப் பழி வாங்க விரும்பினராம்;
அரசன் முன் கண்ணீர் சொரிந்தனராம் .
புண்பட்ட நாசியைக் காட்டினராம்;
ராமலக்ஷ்மணரைத் தூற்றினராம் .
சீதையை வருணித்துப் போற்றினராம்.
அவனுள் மோகத்தை ஏற்றினராம்.
தசமுகனும் மனம் மயங்கினராம் ;
சகோதரி சொற்படி இயங்கினராம்.
மாமன் மாரீசனை அழைத்தனராம்;
சீதையை மயக்கிடப் பணித்தனராம்.
(ராம ராம ஜெய.....சீதாராம்)
[ஆரண்யகாண்டம் அடுத்த பகுதியில் தொடரும் ]
-----------------------------------------
7 comments :
பரதன் உள்ளம் வருந்தினராம்;
அண்ணனின் பாதுகை இரந்தனராம்.
ராமரும் பாதுகை ஈந்தனராம்;
பரதனும் சிரந்தனில் ஏந்தினராம்.
விடைபெற்றயோத்தி மீண்டனராம்;
பாதுகை அரியணை ஏற்றினராம்.
nice one:)
வேதாந்த தேசிகரும் பரதனே எம்பெருமானின் பாதுகையின் பெருமையை உலகுக்கு உணர்த்தியவர் என்று சொல்வார் .
brahma kaDigina pAdamu | brahmamu dAne nI pAdamu
சீதையைக் கொல்லச்சென்றனராம்;
அதனை லக்ஷ்மணன் கண்டனராம்.
நொடியில் வாளை உருவினராம்;
அரக்கியின் நாசியை அரிந்தனராம்.:)
இன்றைக்கு பலரும் இதைதான் Nose cut-னு Fashionaa சொல்றாங்க போல :)
ஆரண்யகாண்டம் அடுத்த பகுதியில் தொடரும்*//
rama navami - 10 day urchavam - superb :)
ஸ்ரீ ராமனை துதிசெய் மனமே
ஸ்ரீ வாமனை கதியென்றிரு தினமே
எமனை அடிக்கும் வில்குணமே
காமனை ஜெயிக்கும்சொல் மனமே
நடன கோபால சுவாமிகள்
ந.நா.,
அண்ணன் தம்பிகள் ஒருவருக்கொருவர் குழிபறித்துக் கொள்ளும் இந்தக் கலியுகத்தில் பாரதரைப்பற்றிச் சின்னப் பாப்பாக்களுக்குச் சொல்லிப் புரியவைப்பது மிக மிக அவசியம்.
நீங்கள் குறிப்பிடும் நோஸ் கட் பற்றிப் படித்ததும் ஹைதர் அலி ஒருமுறை ஒரு ஆங்கிலேயருக்கு இதேமாதிரி மூக்கறுப்பு செய்ததும் ,வைத்தியத்திற்காக அவன் ஒரு நாட்டு மருத்துவரிடம் சென்று ஆச்சரியப்படும்வகையில் (ஒரு சின்ன வடு கூடத்தெரியாதபடி) சர்ஜரி பண்ணியதாக படித்தது நினைவுக்கு வருது!
தொடர்ந்து பாப்பா ராமாயணம் படித்து பின்னூட்டமும் கொடுப்பது என்னை மிகவும் உத்சாகப்படுத்துகிறது;நன்றி.
சிவமுருகன்,
நடனகோபால சாமிகளின் பாட்டை நினைவுறுத்தியதற்கு நன்றி;தொடர்ந்து இந்த பாப்பா ராமாயணம் படித்து பின்னூட்டம் அளிப்பதற்கும் மனமார்ந்த நன்றி.நேற்று கபீர்தாச ரின் வாக்கை நினைவுறுத்தியது மறக்கமுடியாது
தொடருங்கள்