ராம கோவிந்த ஹரி !
ரேடியோவில் வரும் சில விளம்பரங்கள் ஜாலியானவை. கேட்டாலே குதூகலம் அடைவோம். அப்படி சில வாரங்கள்(மாதங்கள்?) முன்பு கேட்டபொழுது மனதைக் கவர்ந்த விளம்பரம் இது:
"யார் யாரெல்லாம் ஃப்ரைட் ஃபூட் சாப்ட தயங்க்ராங்களோ
ஊ ! ஆ! ஆ !! (கோரஸாக)
யார் யாரெல்லாம் ஜிம்ல ஜாலியா இருக்காங்களோ
ஊ ! ஆ! ஆ !!! (கோரஸாக)
யார் யாரெல்லாம் டேஸ்டுக்காக ஓட்றாங்களோ
ஊ ! ஆ! ஆ !!! (கோரஸாக)
....
ஹார்லிக்ஸ் நியூட்ரிபார் சாப்பிட ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்.
உங்கள் காரணம் என்னவோ? "
என்று கேட்டுவிட்டு மிக வேகமாக ஒரு வாக்கியம் சொல்வர். கிட்டதிட்ட "இதை சாப்பிட்டால் வரும் பிரச்சனைகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல" என்பது போன்ற ஒரு டிஸ்கியோ என்று தோன்றும். :-)
கொஞ்சம் உன்னிப்பாக கவனித்தால் "ஹார்லிக்ஸ் நியூட்ரிபார் இஸ் எ நரிஷிங்க் ஸ்னாக் டு பி டேக்கன் அஸ் பார்ட் ஆஃப் எ பேலன்ஸ்டு டயட்" என்பதைத் தான் அவ்வளவு வேகமாக சொல்வார்கள். [ஆஹா ! ஆங்கிதமிழ் - அதாவது ஆங்கிலத்தை தமிழ்ல - படிக்க எவ்ளொ கடினமா இருக்கு பாருங்க. :-) தாங்கிலமும் இவ்ளோ கடினமா தான் இருந்தது. :-) நல்ல வேலை/வேளையா நண்பர் கே.ஆர்.எஸ் தமிழ் தட்டச்சு பெட்டியை பின்னூட்டமிடும் பக்கத்தில் இணைத்தார். அவருக்கு ரொம்ப நன்றி. :-) ]
இப்போ எதுக்கு இதெல்லாம் சொல்றேன் ? கண்ணன் பாட்டுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறீங்களா?
உடல் ஆரோக்கியம் போலவே உள்ள ஆரோக்கியமும் கவனிக்க வேண்டிய ஒன்றாம். "சித்த சுத்தி இறைவனின் நாமங்களை மீண்டும் மீண்டும் சொல்வதனால், நினைவு கூர்வதினால் ஏற்படுகிறது. " என்றெல்லாம் பெரியவங்க சொல்லி இருக்காங்க. மஹான் தியாகராஜர் நாள் ஒன்றிற்கு 1,25,000 ராம நாமம் சொல்வாராம். அன்னை சாரதா தேவி ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 15,000 முறை ஏதோவொரு இறை நாமத்தை நாவினால் உச்சரிக்க அல்லது உள்ளத்தில் ஒலிக்கச் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்.
"நமக்கு இருக்கற ஆயிரத்தெட்டு அதிமுக்கியமான வேலைகளில் இதை எல்லாம் செய்யறது கஷ்டம்".
அப்படின்னு என்னைப் போல நினைக்கறவங்க :-), எம்.எஸ் அம்மாவின் தெய்வீகக் குரலில் இந்தப் பாடலை (கபீர்தாஸ் பஜன்) கேளுங்க. :-)
பாடலை இங்கே தரவிறக்கம் செய்யலாம்.
பஜோரே பையா ராம கோவிந்த ஹரி
ராம கோவிந்த ஹரி
ஜப தப சாதன கச்சு நஹி லாகத்
கரசத் நஹி கத்ரி (பஜோ)
சந்தத் சம்பத் சுக கே காரண
ஜாசோ போல் பரீ (பஜோ)
கஹத கபீரா ஜாமுத் ராம நஹீ
வா முக் தூள் பரீ (பஜோ)
"பாடல் பொருள் எங்க?" என்று கேட்போருக்கு - இது கிட்டதட்ட ஜுனியர் ஹார்லிக்ஸ் பாடல் தான். அப்படியே கேட்கலாம் :-) [ ஹி ஹி..பொருள் தெரியாதுன்னு சொல்றதுக்கு தான் என்னவெல்லாமோ எழுதி ஒப்பேத்தயிருக்கேன். :-) ]
பாடல் பொருளை பின்னூட்டத்தில் அளித்த சுப்பு தாத்தாவிற்கு நன்றி. :-)
பொருள் :
ராம கோவிந்தன் ஹரி இவர்கள் நாமங்களை ஜெபியுங்கள், நீங்கள் செய்யும் மற்ற ஜபங்கள், தவங்கள் எத்தினாலும் உங்கள் பழைய வினைப் பயன்கள் இருக்கும் பாண்டம் காலியாவதில்லை. புத்திரர்கள், சொத்துக்கள் ஆகிய மற்ற சுகம் தரும் சாதனங்களால் தவறுகள் தான் பாவங்கள்தான் சேருகின்றன. எந்த முகமானது ராமனை காண வில்லையோ, அந்த முகம் புழுதி நிறைந்ததே. அதனால் ராமனை விடாது ஜெபி.
14 comments :
ஹிந்தி தெரிந்தவர் யாரேனும் பாடல் வரிகளை சரி பார்த்து பொருள் சொன்னால் பதிவில் சேர்த்துவிடலாம். ராம கோவிந்த ஹரி ! :-)
Bhajo re Bhaiya, Ram Govinda Hari !
भजो रे भैया (मन) राम गोविंद हरी ।
राम गोविंद हरी भजो रे भैया राम गोविंद हरी ॥
जप तप साधन कछु नहिं लागत, खरचत नहिं गठरी ॥
संतत संपत सुख के कारन, जासे भूल परी ॥
कहत कबीर राम नहीं जा मुख, ता मुख धूल भरी ॥
I VISITED SRI RENGANATHA TEMPLE , Pamuna , NEAR NEW YORK . A COUPLE OF SRI RENGANATHA PERUMAL AND THAYAAR ARE FROM THEIR WEBSITE
http://ranganatha.org
please log on to:
http://kabeeran.blogspot.com
to have the translation of this prayer in English
and in Tamil
subbu rathinam
அந்த வெடவெட குளிரில் நடுங்கியபடி, நான் அந்த நயு யார்க் பமுன கோவில் லே பாடியது இங்கே இருக்கிறது.
http://www.youtube.com/watch?v=puWHEOLk6sk
in march 2009
சுப்பு ரத்தினம்
பொருள் :
ராம கோவிந்தன் ஹரி இவர்கள் நாமங்களை ஜெபியுங்கள், நீங்கள் செய்யும் மற்ற ஜபங்கள், தவங்கள் எத்தினாலும் உங்கள் பழைய வினைப் பயன்கள் இருக்கும் பாண்டம் காலியாவதில்லை. புத்திரர்கள், சொத்துக்கள் ஆகிய மற்ற சுகம் தரும் சாதனங்களால் தவறுகள் தான் பாவங்கள்தான் சேருகின்றன. எந்த முகமானது ராமனை காண வில்லையோ, அந்த முகம் புழுதி நிறைந்ததே. அதனால் ராமனை விடாது ஜெபி.
சுப்பு ரத்தினம்.
என்னதான் ஒப்பேத்தினாலும் 'நாம ஜெபம் செய்'னு சூப்பர் விஷயத்தைச் சொன்னதுக்கே உங்களுக்கு எம்புட்டு நன்றி வேணுன்னாலும் சொல்லலாம் :) சுப்பு தாத்தா தயவால் பொருளும் தெரிஞ்சிக்கிட்டேன். நன்றி ராதா :)
ராதா,
சூரி சாரின் மொழிபெயர்ப்புக்காகக் காத்திண்டிருந்தேன்.என் ப்ளாகில் சிவராத்திரிக்காக எழுத ஆரம்பித்ததில்,இந்த கபீர் பாட்டுக்கு எம் எஸ் இன்
மெட்டிலே தமிழிப்பாட்டு எழுத நேரம் போதலை.பாட்டு மிக அருமை
சுரிசார்,சாரிசார்,சூரிசார்,
பாடியதை "கத்தி"
இருப்பதாய் அடிக்கடி
குறிப்பிடுவதால்,என்னையும்
அறியாமல் சுரி[கத்தி] என்று
அழைத்தேனோ?ஹிஹிஹிஹி [சிரிப்பு
சிறந்த மருந்து]
மொழிபெயர்ப்பு அருமை.
நடுங்கிக்கொண்டே[கமகத்தோடு]நீங்கள் பாடியதை நான் இன்னும்
கேட்கவில்லை [என் ப்ளாகில் சிவராத்திரிக்காக எழுதிக்கொண்டிருப்பதால் ]
கேட்டதும் கமெண்டுவேன்!
சுப்பு தாத்தா,
மிக்க நன்றி. :-) நீங்கள் பாடியதையும் கேட்டேன். ரொம்ப எளிமையா இருக்கு. எனக்கும் இதே மெட்டில் பாடலாம் என்று ஆசை வந்து விட்டது. :-)
//என்னதான் ஒப்பேத்தினாலும் //
கவிக்கா,
ஒப்பேத்தி இருக்கேன்னு நான் மட்டும் தான் சொல்லணும். நீங்க "பதிவு அருமை" அப்படின்னு சொல்லணும். :-)
//'நாம ஜெபம் செய்'னு சூப்பர் விஷயத்தை //
ஆமாம். நாம ஜெபம் சூப்பர் விஷயம் தான். நிறைய பெரியவங்க அறிவுரை சொல்லி, திட்டு வாங்கி இன்னும் பழக்கத்தில் கொண்டு வர முயற்சி செய்கிறேன்...செய்கிறேன்...செய்து கொண்டே இருக்கிறேன். :-) சோம்பேறித்தனம் என்னைக்கு ஒழியுதுன்னு பார்க்கணும். :-)
லலிதாம்மா, உங்கள் நவராத்திரி பதிவை இன்னும் படிக்கலை. படங்கள் மட்டும் பார்த்தேன். அருமை. :-)
//கவிக்கா,
ஒப்பேத்தி இருக்கேன்னு நான் மட்டும் தான் சொல்லணும். நீங்க "பதிவு அருமை" அப்படின்னு சொல்லணும். :-)//
ஹாஹா :) 'என்னதான் நீங்க ஒப்பேத்தினதா சொன்னாலும்' அப்படின்னுதான் மனசில் நினைச்சேம்ப்பா. அவசரத்தில் பாதியை சாப்பிட்டுட்டேன் போல! :)
"பதிவு அருமை"
அருமையான வலைப்பூ