கண்ணனுக்கு வெண்ணெய் ஏன் அதிகப்ரியம்?
கண்ணனுக்கு வெண்ணெய் ஏன் அதிகப்ரியம் ?
==========================================
ஸர்ர்ர்ர் ..ஸர்ர்ர்ர் ..ஸர்ர்ர்ர் ..ஸர்ர்ர்ர்
ஸர்ர்ரூ ..ஸர்ர்ருன்னு தயிர் கடையும் சத்தம் கேட்குது
திரண்டவெண்ணெய் தாழி விளிம்பில் எட்டிப்பார்க்குது
வெள்ளைவெளேர் வெண்ணெய் வாசனை மூக்கைத்துளைக்குது
கள்ளக்ருஷ்ணன் உள்ளம் துள்ளி துள்ளிகுதிக்குது
கைகழுவ யசோதை புறக்கடைக்குச் செல்கிறாள்
தருணம்பார்த்து கண்ணன் ஒருகைவெண்ணெய் உண்கிறான்
சின்னவாயில் வெண்ணெய் ஈஷி இருக்கக்கண்ட தாய்
"தின்னையாநீ வெண்ணெய்?" என்று அதட்டிக்கேட்கிறாள்
"கழுவப்போன வழியில் உன்கையிருந்து சிந்திய
வெண்ணெய் வழுக்க விழுந்த என்வாயில் வெண்ணெய்பட்டது
வலிக்குதம்மா!இடுப்பில்என்னைத் தூக்கிவெச்சிக்கோ"
என்றுசொல்லி "உம்ம்ம்" என்றுவிசும்பிஅழுகிறான்
அழும்பிள்ளையை அன்னை இடுப்பில் தூக்கிக்கொள்கிறாள்
சேயைச் சினந்ததெண்ணி நெஞ்சம்நோக நிற்கிறாள்
வெண்ணெயூட்டி சமாதானப்படுத்த நினைக்கிறாள்
வெண்ணெய்த்தாழி நோக்கி அவள் விரைந்துநடக்கிறாள்
கடைந்துவைத்த வெண்ணெய் குறையக்கண்டு திகைக்கிறாள்
பதிந்திருந்த கைத்தடத்தைக்கண்டு மலைக்கிறாள்
"கள்ளக்க்ருஷ்ணா!வெண்ணெயில் உன்கைச்சுவடிருக்கு
பொய்சொன்னவாய்க்கு போஜனமில்லை" என்கிறாள்
"பூனையொன்று பானையருகே போகக்கண்டேனே
அதுவே வெண்ணெய்தின்னுருக்கும்"என்று அளக்கிறான்
"பூனைநாக்கால் நக்கும்,கையால் அள்ளித்திங்காது
நீயேவெண்ணெய் தின்னவனென்று அடிக்கவருகிறாள்
"குரங்கொன்று பானைதனை நெருங்கக்கண்டேனே
திருடியிருக்கும் அதுவேவெண்ணெய்" என்றுபுளுகறான்
"அடிஉதையால் இவன்வாயில் உண்மைவராது "
என்றுணர்ந்த தாயும் இனியகுரலில் கேட்கிறாள் :
"விதவிதமாய் உணவுஉனக்கு ஊட்டிவிட்டாலும்
வெண்ணெய்மட்டும்நீ விரும்பி உண்பதேனடா ?"
அடிவிழாது என்றுகண்டுகொண்ட கண்ணனும்
அன்னையுள்ளம் உருகுமாறு காரணம்சொல்கிறான் :
"கோபியர்கள் `கருப்பா,கருப்பா!`'என்று கிண்டலாய்
கூவியழைத்து என்னைரொம்பக்கேலி செய்யறா
வெள்ளைவெண்ணெயுண்டால் கருமைகரைந்துபோகுமே
என்றுஎண்ணி வெண்ணெய்விரும்பிஉண்டேன் "என்கிறான்
"கோபியரின்நீர்க்குடத்தை கல்லாலடித்து நீ
உடைத்ததாலே கோபங்கொண்டு கேலிசெய்கிறார்
பொல்லாத்தனம்விட்டால் கருமைகரைந்துமறையுமே
வெண்ணெயுண்ணத்தேவையில்லை"என்றுமறுக்கிறாள்
கருமைக்காக தாய்தன்மேல் இரக்கம்காட்டுவாள்
என்றுஎதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த
மாயக்கண்ணன் தாயவளின் மனத்தை இளக்கிட
மழலையாக மாயாஜால வார்த்தை மொழிகிறான்:
"`அன்னை'போல `வெண்ணெய்' இனிமையாக ஒலிப்பதால்
உன்னைப்போல வெண்ணெய்மீதும் பிரியம் அதிகமே "
யசோதை இதுகேட்டு வெண்ணெயாய் உருகிவிடுகிறாள்
குட்டிக்கண்ணனைக்கட்டி அணைத்துமுத்தமிடுகிறாள்
=============================================================================================
==========================================
ஸர்ர்ர்ர் ..ஸர்ர்ர்ர் ..ஸர்ர்ர்ர் ..ஸர்ர்ர்ர்
ஸர்ர்ரூ ..ஸர்ர்ருன்னு தயிர் கடையும் சத்தம் கேட்குது
திரண்டவெண்ணெய் தாழி விளிம்பில் எட்டிப்பார்க்குது
வெள்ளைவெளேர் வெண்ணெய் வாசனை மூக்கைத்துளைக்குது
கள்ளக்ருஷ்ணன் உள்ளம் துள்ளி துள்ளிகுதிக்குது
தருணம்பார்த்து கண்ணன் ஒருகைவெண்ணெய் உண்கிறான்
சின்னவாயில் வெண்ணெய் ஈஷி இருக்கக்கண்ட தாய்
"தின்னையாநீ வெண்ணெய்?" என்று அதட்டிக்கேட்கிறாள்
"கழுவப்போன வழியில் உன்கையிருந்து சிந்திய
வெண்ணெய் வழுக்க விழுந்த என்வாயில் வெண்ணெய்பட்டது
வலிக்குதம்மா!இடுப்பில்என்னைத் தூக்கிவெச்சிக்கோ"
என்றுசொல்லி "உம்ம்ம்" என்றுவிசும்பிஅழுகிறான்
அழும்பிள்ளையை அன்னை இடுப்பில் தூக்கிக்கொள்கிறாள்
சேயைச் சினந்ததெண்ணி நெஞ்சம்நோக நிற்கிறாள்
வெண்ணெயூட்டி சமாதானப்படுத்த நினைக்கிறாள்
வெண்ணெய்த்தாழி நோக்கி அவள் விரைந்துநடக்கிறாள்
பதிந்திருந்த கைத்தடத்தைக்கண்டு மலைக்கிறாள்
"கள்ளக்க்ருஷ்ணா!வெண்ணெயில் உன்கைச்சுவடிருக்கு
பொய்சொன்னவாய்க்கு போஜனமில்லை" என்கிறாள்
"பூனையொன்று பானையருகே போகக்கண்டேனே
அதுவே வெண்ணெய்தின்னுருக்கும்"என்று அளக்கிறான்
"பூனைநாக்கால் நக்கும்,கையால் அள்ளித்திங்காது
நீயேவெண்ணெய் தின்னவனென்று அடிக்கவருகிறாள்
திருடியிருக்கும் அதுவேவெண்ணெய்" என்றுபுளுகறான்
"அடிஉதையால் இவன்வாயில் உண்மைவராது "
என்றுணர்ந்த தாயும் இனியகுரலில் கேட்கிறாள் :
"விதவிதமாய் உணவுஉனக்கு ஊட்டிவிட்டாலும்
வெண்ணெய்மட்டும்நீ விரும்பி உண்பதேனடா ?"
அடிவிழாது என்றுகண்டுகொண்ட கண்ணனும்
அன்னையுள்ளம் உருகுமாறு காரணம்சொல்கிறான் :
கூவியழைத்து என்னைரொம்பக்கேலி செய்யறா
வெள்ளைவெண்ணெயுண்டால் கருமைகரைந்துபோகுமே
என்றுஎண்ணி வெண்ணெய்விரும்பிஉண்டேன் "என்கிறான்
உடைத்ததாலே கோபங்கொண்டு கேலிசெய்கிறார்
பொல்லாத்தனம்விட்டால் கருமைகரைந்துமறையுமே
வெண்ணெயுண்ணத்தேவையில்லை"என்றுமறுக்கிறாள்
கருமைக்காக தாய்தன்மேல் இரக்கம்காட்டுவாள்
என்றுஎதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த
மாயக்கண்ணன் தாயவளின் மனத்தை இளக்கிட
மழலையாக மாயாஜால வார்த்தை மொழிகிறான்:
உன்னைப்போல வெண்ணெய்மீதும் பிரியம் அதிகமே "
யசோதை இதுகேட்டு வெண்ணெயாய் உருகிவிடுகிறாள்
குட்டிக்கண்ணனைக்கட்டி அணைத்துமுத்தமிடுகிறாள்
16 comments :
கண்ணனை பற்றி பேசுவதெல்லாம் மதுரமே..
உங்கள் வார்த்தைகளும் மதுரம்
அதில் தவழ்ந்து வந்த கண்ணனின் ஜாலங்களும் மதுரம்.
ரொம்ப அழகு!
என்ன செய்தாலும் கடைசியாக எதையாவது செய்து மனதை உருக்கிவிடுகிறான் மாயக்கண்ணன்.....அவனை என்ன செய்யலாம்?
மிகவும் ரசித்தேன்.... அருமை!
romba azhaga irundhudhu!!!
Krishna-vin "madhuram adharam" secret idha vennai dhaan. :))
//Krishna-vin "madhuram adharam" secret idha vennai dhaan. :))//
Thousand likes.. !!
such a chweeeet poem ammaa. just like our chweetecht kutti krishnan :)
very nice. :-)
pictures also ! :-)
1)sankar,thanks for visiting and sweet comments.
2)subadraa,he is jail- born 'mahaa thirudan'
3)ilwk,
avan sollum poi,avan seiyum thiruttu ellaame,avan ninaippe madhuram!thanks for visiting.
4)kavinaya,krishna's leelaas are chweet and chweet ,chweet and nothing but chweet!
5)radha,thanks a lot for everything
கோகுல கண்ணனின் குறும்புகள் எல்லாம் அழகு.
அதை நீங்கள் சொன்ன விதம் அருமை.
ஊத்துக்காட்டார் பாட்டைப் படித்தது போல் ஒரு ஆனந்தம் அம்மா. அழகான சிந்தனைகள். குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க ஏற்றப் பாடல்.
பாடமா இல்லை பாவா
அருமை
பாடலில் பள்ளி கொண்ட பாலகனை இரசித்தேன்
வாழ்த்துகள்
1)gomathi arasu,
his 'kurumbus' are such that who ever tells,it will sound sweet due to his grace.
2)kumaran,
yr comments were as if you've read my mind!while i was writing the lyrics i was just imagining the same being sung for children who can be taught to dance for the song.(as far yr ooththukkaattar comparison,i wonder whether i am
worth even his 'kaal dhoosu')
3)thigazh,
thank you for yr encouraging remarks.
//ஸர்ர்ர்ர் ..ஸர்ர்ர்ர் ..ஸர்ர்ர்ர் ..ஸர்ர்ர்ர்
ஸர்ர்ரூ ..ஸர்ர்ருன்னு தயிர் கடையும் சத்தம் கேட்குது //
அவள்தான்! opening - லேயே இந்த தூக்கிட்டு போய்டீங்க கண்ணன் வீட்டிற்கு :)
ந.நா:
எங்கள் குட்டிக்கண்ணன் வீட்டுக்கு வந்து விருந்து சாப்பிட்டதற்கு நன்றி !
Lalitha
வெள்ளைவெண்ணெயுண்டால் கருமைகரைந்துபோகுமே
என்றுஎண்ணி வெண்ணெய்விரும்பிஉண்டேன் "என்கிறான்
அருமை