கண்ணீரில் கரைந்திடுமோ கர்மவினை?
மீராபாயைப் பற்றி அதிகம் தெரியாது, இப்போதான் முதல் முறையா படிச்சேன்… ரா.கணபதி அவர்களின் "காற்றினிலே வரும் கீதத்" திலிருந்து ஒரு நிகழ்வையும், அதன் தாக்கத்தில் பிறந்த கவிதையையும் இங்கே பகிர்ந்துக்கறேன்...
எத்தனையோ துன்பங்களுக்கு பிறகு மீராவுடைய ஆசை நிறைவேறுகிறது. கார்மேகக் கண்ணனே அவளுக்கு கணவனாக வாய்த்து விட்டான். எப்பேர்ப்பட்ட பேறு அது. மணமான அன்று கண்ணன் தன்னைப் பிரியும் முன் அவனைப் பார்த்து மீரா கேட்கிறாளாம்:
“கண்ணா, நான் அனுபவிக்க வேண்டிய துன்பம் எல்லாம் தீர்ந்ததா? என் கர்ம வினை கழிந்ததா?” என்று.
அதற்கு பதிலாக தன் நிறத்தைத் தாங்கி அலையும் ஒரு மேகத்தைக் காட்டறான் கண்ணன்.
“மீரா, அதோ பார். அந்த கார்மேகத்தை.”
“அடேயப்பா… கண்ணா, இந்த மேகம்தான் எவ்வளவு பெரிசா, விரிஞ்சு பரந்து இருக்கு!”
“நீ தினமும் கண்ணுக்கு இட்டுக் கொள்ளும் அஞ்சனத்தின் அளவு என்ன, மீரா?”
“அதுவா? அது இந்த கார்மேகத்தில் அணுவளவு கூட இருக்காதே?”
“அந்த மை அளவுதான் உன் கர்ம வினை கழிந்திருக்கிறது, மீரா. இன்னும் கழிய வேண்டியது இந்த கார்மேகம் அளவு இருக்கு. உன் கர்ம வினை கழியக் கழிய, இந்த மேகம் அளவில் குறைஞ்சுக்கிட்டே வரும்”, அப்படின்னு சொல்றான் கண்ணன்.
அன்றிலிருந்து அந்த கார்மேகத்தை பார்ப்பதே மீராவுக்கு வேலையாயிருந்ததாம். ஏதாவது துயரம் ஏற்படும் போது, குடம் குடமா கண்ணீர் பெருக்கிட்டு, மேகம் இப்போ நல்லா சின்னதாயிருக்குமேன்னு நினைச்சு அதைப் பார்ப்பாளாம். ஆனா அது கண்ணுக்கே தெரியாத அளவுதான் குறைஞ்சிருக்குமாம்…
போகப் போக துன்பம் அவளுக்கு பழகிடுது. எவ்வளவு துயரம் வந்தாலும் கலங்கறதில்லை. எப்படிப்பட்ட துன்பம் வந்தாலும் சந்தோஷப்படறா. ‘என் கர்ம வினையைக் கழிக்க என் கண்ணன் எனக்காக அனுப்பி வச்ச உதவி இது’ன்னு நினைச்சு பரவசப்படறளாம்…
கண்ணீர் பெருகப் பெருக, கார்மேகம் கரையத்தானே வேண்டும்?
கார்மேகம் கரைந்திடுமோ?
கர்மவினை கழிந்திடுமோ?
காலன்வரும் காலம்வரை
கண்ணீர்தான் சுகவரமோ?
பலப்பலவாம் பிறவிகளும்
பழவினையைக் கரைக்கவில்லை
நீளும்துன்ப மோஎன்னை
வேண்டாம்என்று வெறுக்கவில்லை
இப்பிறவியி லேனும்உன்னை
ஏற்றும்வரம் தந்துவிட்டாய்
தப்பாதுன் மலரடிகள்
மனதில்மணக்கச் செய்துவிட்டாய்!
--கவிநயா
சுப்பு தாத்தாவின் குரல் வண்ணத்தில்... நன்றி தாத்தா.
47 comments :
when i read[in'katrinile varum geetham'few years back]meera asking krishna,"naan enna paavam seithu ivvalavu karmachchumaikku aalaanen?"my eyes became wet;on reading your kavithai,those scenes started passing through my mind; i couldn't control my tears.the positive note at the end cheered me up."ippiraviyilenum unnai etrum varam thanthu vittaai........."
'காற்றினிலே வரும் கீதம்' - கிட்டத்திட்ட பத்து வருடங்களுக்கு முன் படித்தேன் அக்கா.
கல்லூரி நண்பன் ஒருவன் அன்புடன் தந்த அற்புதமான புத்தகம். Highly influential character. ராதைக்கு தோழியர் இருந்தனர். ஆண்டாளுக்கு பெரியாழ்வார் இருந்தார்.மீராவிற்கு கிரிதரன், கிரிதரன் கிரிதரன் மட்டுமே. அவனும் கனவில் வந்து காணாமல் போய்விடுவான்...
//தப்பாதுன் மலரடிகள்
மனதில்மணக்கச் செய்துவிட்டாய்!
//
இனிமை.
மாறி மாறி வரும் பிறவிகள் தனிலும்
மாறா ப்ரேமையைத் தருவான்.
//கண்ணீர்தான் சுகவரமோ?//
சுகவரம்! அருமையான சொல்லாட்சி-க்கா! வாழ்க!
கர்ம வினைகள் என்ன Balance Sheet-ஆ? சல்லிக் காசு பார்த்துக் கழிப்பதற்கு? வட்டி குட்டி போட்டுக் கொண்டே இருக்காதா?
போய பிழையும்
புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும்!
எந்தத் தீ?
= கண்ணுல வரும் தண்ணி ஏன் ஜில்-ன்னு இல்லாம சூடா இருக்கு? அந்தத் தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்!
மீராவின் மேகத்துக்கு எனது வந்தனங்கள்!
கர்ம வினைக்காக அல்ல! கண்ண வினைக்காக!
உன்னைக் கூடுவதை விட
உன்னை எண்ணுவது தான்
ஆயிரம் மடங்கு இன்பம்!
இற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு!
//தப்பாதுன் மலரடிகள்
மனதில்மணக்கச் செய்துவிட்டாய்//
Romba azhaga irundhudhu aunty! :)
btw, "Theeyinil thoosaagum seppelor empaavay"!
Perumal karma vinaigal-ai kanakku podalaam...
Aanal kaadhal-ai?
all is fair in love and war...
Meera kadhali...
Avalukku ellam karma vinai double-entry form kidaiyaadhu...
Avalukku varum sodhanaigal karma-vinai pattri illai...
Avalai Perumal mulumaiyaaga koopidum oru "method" avvalavudhaan!
Atleast, this is what i think! :)
///நீளும்துன்ப மோஎன்னை
வேண்டாம்என்று வெறுக்கவில்லை//
இந்த கவிதை படிக்கும்பொழுது எனக்கு பிரசித்த ஆங்கில கவிஞன்
டி.எஸ்.எலியட் ஏனோ நினைவுக்கு வருகிறான். துன்பத்திற்கே பழக்கப்பட்டுப்
போன ஒருவனுக்கு வேறுவிதமாக ஒரு நிலை இருக்கவும் கூடும் என எண்ணவும்
தெரியாது போல.. என்கிறார் ஒரு கவிதையில் டி.எஸ்.எலியட்.
ஆக, நீளும் துன்பமும் என்னை வேண்டாம் என்று வெறுக்கவில்லை.
நானும் அந்த துன்பத்தை நீ வேண்டாம் எனச் சொல்லவில்லை.
ஒரு வேளை, அந்த துன்பத்தையே நான் ரசிக்கிறேனோ !
அந்த துன்பமே எனக்கு இன்பம் என அதை ஒவ்வொரு பிறவியிலும்
விழைந்து நிற்கிறேனோ !!
இது மன நிலை.
சுப்பு ரத்தினம்.
contd
இதை ஒரு psychiatry பார்வையில் பார்த்தால்:
இது ஒரு obsessive compulsive syndrome.
இது வேதனை தான். கஷ்டம் தான். அந்த வேதனை ஆனால் என்
மனதை விட்டு நீங்காமல் இருக்கிறதே !! மற்ற எண்ணங்கள் வரவே மாட்டேன்
என்கிறதே !! மீரா ஒரு ஓ.ஸி.டி. யாக இருந்திருப்பாரோ ? கண்ணனுக்கே வெளிச்சம்.
அந்தக்கண்ணன் வந்து சொல்லாட்டாலும், நம்ம கண்ணபிரான் ஸார் ஆவது சொல்வார்.
இதை மறுபடியும் ஒரு ந்யூரோ ஃபிஸிக்ஸ் ஆங்கில்லெ பார்த்தால்,
ப்ரைன் வேவ்ஸ் ( neurons embedded by synoptic threads) ஒரு தடவை ஒருவிதமாக form
ஆகிவிட்டால், அவை ரிலீஸ் ஆகிவிடினும், பிறகும் பிறகும் அதே நிலைக்கு
வரவே யத்தனிக்கும். ( ஒரு சின்ன உதாரணம்: சின்ன பொடி கிட்ஸ்களுக்கு
அதிக ஜுரம் வரும்பொழுது வரும் ஃபிப்ரைல் ஃபிட்ஸ்.
ஒருவேளை நம்ம மீராவுக்கு அதுமாதிரி எதுனாச்சும் !!
சுப்பு ரத்தினம்.
(contd..)
ஏ மனமே !! அனாவசிய ஆராய்ச்சி இந்த வயசிலே வேண்டாம்.
ஸல்லாபத்தில் ஸங்கர் பாடினார். இப்ப
ஸோகத்திலே கவினயா பாடுகிறார்.
இந்த ஸோகத்தை ஸாரங்காவிலும் அமைக்கலாம்.
கான்டாவிலேயும் (கனடா இல்ல) போட்டேன்.
என்னதான் இசை அமைச்சாலும், அது இந்த
இந்த கவிதைக்கு முன்னாடி தூள்.!!
சுப்பு ரத்தினம்.
Kayinaya akka.. Meera pathi nenaikkum bodhe en kanla tears vara arambichidum..
Avangaloda oru Poem la solliruppanga..
"Mero Dard na jane koyi; Heri mein tho prem Diwani.."
Adhey alavukku azhuthamana, unarvu poorvamana varigal.
Meera vazhaga.. Meeranadhan vaazhaga..
வாங்க லலிதாம்மா. அந்த புத்தகம் படிக்கும்போது நானும் நிறைய்ய அழுதிருக்கேன் :)
வருகைக்கு நன்றி அம்மா.
//Highly influential character. ராதைக்கு தோழியர் இருந்தனர். ஆண்டாளுக்கு பெரியாழ்வார் இருந்தார்.மீராவிற்கு கிரிதரன், கிரிதரன் கிரிதரன் மட்டுமே. அவனும் கனவில் வந்து காணாமல் போய்விடுவான்...//
சரியாச் சொன்னீங்க ராதா!
//மாறி மாறி வரும் பிறவிகள் தனிலும்
மாறா ப்ரேமையைத் தருவான்.//
தரணும். தந்தே ஆகணும்.
நன்றி ராதா.
//சுகவரம்! அருமையான சொல்லாட்சி-க்கா! வாழ்க!//
நன்றி கண்ணா. எனக்கும் பிடிக்கும், ரெண்டு மூணு கவிதைகளில் பயன்படுத்தியிருக்கேன்.
//வட்டி குட்டி போட்டுக் கொண்டே இருக்காதா?//
குட்டி போட்டுக்கிட்டேதான் இருக்கும். நல்லதானாலும் தீயதானாலும்.... அதானே பிரச்சனை!
//எந்தத் தீ?
= கண்ணுல வரும் தண்ணி ஏன் ஜில்-ன்னு இல்லாம சூடா இருக்கு? அந்தத் தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்!//
சூப்பர்! :)
//உன்னைக் கூடுவதை விட
உன்னை எண்ணுவது தான்
ஆயிரம் மடங்கு இன்பம்!
இற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு!//
அப்படியே ஆகட்டும் :)
//Romba azhaga irundhudhu aunty! :)//
நல்லது கள்வனின் காதலி! நன்றி.
//Avalukku varum sodhanaigal karma-vinai pattri illai...
Avalai Perumal mulumaiyaaga koopidum oru "method" avvalavudhaan!
Atleast, this is what i think! :)//
நீங்க சொல்வது சரிதான். அவதாரங்களுக்கு ஏது கர்ம வினை? ராதாவே மீராவாகப் பிறந்தாள்னு அந்த புத்தகத்திலேயே சொல்வார். ஆனாலும், ராமனைப் போலவே, உலகத்தில் மனுஷியா பிறந்த பிறகு அவதார நினைவில்லாததால், தனக்கு ஏன் இத்தனை துன்பம் வருதுன்னு மீரா மனம் கலங்கியிருக்கக் கூடும்...
அது மட்டுமில்லை; அந்தக் கவிதை பாதி மீராவுடைய மனநிலையிலும் பாதி என்னோட மனநிலையிலும் எழுதியது :)
(உங்களுக்கு வேற ஏதாச்சும் பேர் வைக்கலாம்னு பார்க்கிறேன்... கள்வனின் காதலின்னு கூப்பிட கஷ்டமா இருக்கு. கண்ணம்மான்னு கூப்பிடவா? :)
வாங்க சுப்பு தாத்தா :)
//துன்பத்திற்கே பழக்கப்பட்டுப்
போன ஒருவனுக்கு வேறுவிதமாக ஒரு நிலை இருக்கவும் கூடும் என எண்ணவும்
தெரியாது போல.. என்கிறார் ஒரு கவிதையில் டி.எஸ்.எலியட்.//
சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். ஒரே உணர்வுக்கு பழக்கப்பட்டு போகிற மனசு, அது இல்லைன்னா என்ன செய்யறதுன்னு தெரியாம restless-ஆ ஆயிடும்! :) ஆனா ocd - பத்தி தெரியலை :) ப்ரேமைன்னாலே அப்படித்தான்னு தோணுது. அதுவே மிகவும் சுகமான உணர்வும் கூட. கண்ணன் என்கிற கேயாரெஸ் சொன்னது போல் - //உன்னை எண்ணுவது தான் ஆயிரம் மடங்கு இன்பம்!//
தாத்தா, நீங்கள் அனுப்பிய இரண்டு ராகங்களிலும் பாடலைக் கேட்டேன். இரண்டில் கானடா ராகம் பொருத்தமாக இருப்பது போல் தோன்றியது... கண்ணா, கண்ணா, என்று அழைத்து நீங்கள் குழைந்து பாடியிருப்பது உருக்கமாக இருந்தது. மிக்க நன்றி தாத்தா.
உங்கள் வலையில் ஏற்றினால் அனைவரும் கேட்க ஏதுவாக இருக்கும்... நன்றி தாத்தா.
வாங்க சங்கர்.
//"Mero Dard na jane koyi; Heri mein tho prem Diwani.."//
உங்களுக்கு எத்தனை மொழிதான் தெரியும்!! எனக்கு ஒண்ணும் தெரியாது :)
//Adhey alavukku azhuthamana, unarvu poorvamana varigal.//
நன்றி சங்கர்.
//Meera vazhaga.. Meeranadhan vaazhaga..//
நானும் ரிப்பீட்டிக்கிறேன்... :)
//ராதாவே மீராவாகப் பிறந்தாள்னு அந்த புத்தகத்திலேயே சொல்வார். //
:))
i have read a different version.
There were two kinds of women in Vrindavan: those who were born there and those who came there in marriage.
While Radha was a Vrajavasi, there was a girl was from Mathura.
She came to Vrindavan as a new bride.
Her friends had already been teasing her that she would lose herself to the famous blue-complexioned boy, but she had laughed it off.
She had come to Vrindavan to make it her home.
But, she saw no homes there.
When she went, she saw not the splendor of Vraj, but utter disaster.
It was raining incessantly. There were dilapidated ruins of houses all around her. Trees were falling.
And, there were none around her.
Such appalling sights for a new bride!
And then she saw!
A mountain hanging in mid-air!
Amazed, she went to see what it was/
And there she saw, a blue-complexioned boy, with peacock feathers in His hair, wearing a yellow garment, His hands bearing the large mountain almost lazily by the pinky.
She saw the whole village crowded around His feet, staring at Him with happiness.
Then she realized-there were no houses in Vraj, but they had found the truest shelter.
And, she lost herself to Him that very minute.
And, as she stood dumbstruck, He invited her with His eyes, smiling.
But, just then, a stroke of lightning struck her.
She died instantly, the thoughts of Giridhari in her head, and her eyes, and her heart.
i have read that it was this girl who was born as Meera.
She always sang about Giridhari, in all her songs.
This is why.
Coz the reason of her birth was her intense longing for Giridhari. :)
Akka.. My mother tongue is Telugu. Though I know very little, my parents still talk such a calssical version of telugu.
I know Tamizh and little bit of English, Hindi and Mewari.
I learnt MEwari for the pleasure of reading to Meera's words. :)
I ll post " Dard na Jane koyi" as next. :)
//
I learnt MEwari for the pleasure of reading to Meera's words. :)
//
wonderful !!! :-) will contact you to know the meaning of meera bhajans. :-)
//I ll post " Dard na Jane koyi" as next. :)
//
eagerly awaiting for the post. :-)
@ilwk,
awesome narration...கோடி நமஸ்காரங்கள். :-)
//awesome narration...//
thanks:)
கோடி நமஸ்காரங்கள்.///
Yes, to our kannan!
My mom was just telling me meaning of some verses of Periyazhwar.
Absolutely mindblowing!
i cant quote direct verse, dont remember fully, but the meaning:
"Hey Full Moon! You think He is a small child?
Go find out how small He is from Maavali."
//I learnt MEwari for the pleasure of reading to Meera's words. :)//
@Shankar: i found i cud iterpret Mewari very well with my Hindi.
there are a few words to get used to, but somehow, i always got the meaning.
Maybe, bcoz in my school, we used to have dohas and intense analysis of meaning of couplets by Surdasa, etc.
so, the language was something that cme directly from Hindi for me.
You really learnt it seperately?
my all-time fav meera bhajan:
"mere toh giridhar gopala!
DUSRO NA KOII!!!""
//Mero Dard na jane koyi; Heri mein tho prem Diwani.."//
@ Shankar
Latha has sung this song in Nau bhahar and Vani Jayaram has sung the same song in a most traditional way also. Both songs I have placed in my blog
http://arthamullavalaipathivugal.blogspot.com
Shankar can land on this blog to listen to both these songs.
@ Kavinaya
Thank u so much for placing the video in the blog itself.
subbu rathinam
http://pureaanmeekam.blogspot.com
//i cant quote direct verse, dont remember fully, but the meaning:
"Hey Full Moon! You think He is a small child?
Go find out how small He is from Maavali//
சிறியன் என்று என் இளஞ்-சிங்கத்தை இகழேல் கண்டாய்
சிறு மையின் வார்த்தையை-மாவலி இடைச்சென்று கேள்
சிறுமைப் பிழை கொள்ளில்-நீயும் உன் தேவைக்கு உரியை காண்!
நிறைமதீ நெடுமால்-விரைந்து உன்னைக் கூவுகின்றான்!!
தன்முகத்துச் சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய்
பொன்முகக் கிண்கிணி ஆர்ப்பப் புழுதி அளைகின்றான்
என்மகன் கோவிந்தன் கூத்தினை இளமா மதீ,
நின்முகம் கண்ணுளவாகில் நீ இங்கே நோக்கிப்போ!
//I ll post " Dard na Jane koyi" as next. :)//
Create a new label for Mewari language, now itself Radha! Token pOttu vachiru, sankar cannot escape:)
Is Mewari same as Marwari or Rajasthani?
@ILWK, @ரவி,
அற்புதமான பெரியாழ்வார் பாசுரங்கள். பல வருடங்களுக்கு முன் இசை வடிவில் கேட்டது(ஜானகி ராமனுஜம் பாடியது) இன்னும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது....
இப்படியே யாரவது ஒரு பதிவு எழுதிக்கிட்டே இருக்க, கண்ணன் அன்பர்கள் பின்னூட்டங்களை படித்துக் கொண்டே காலத்தை ஓட்டி விடலாம் என்று தோன்றுகிறது. :-)
nanganallur anjaneyar provides food on all dayss...will someone sponsor me for internet connection? :-)
//my all-time fav meera bhajan:
"mere toh giridhar gopala!
DUSRO NA KOII!!!""
//
oh ! thats an absolutely fantastic bhajan !!
ஆனால் இது போல ஒன்றே ஒன்றை மட்டும் சொல்ல வேண்டும் என்றால் ரொம்ப ரொம்ப கஷ்டம்...எம்.எஸ் அம்மா பாடியுள்ள அனைத்து மீரா பாடல்களும் all time favourite தான். :-)
@KRS:
Thanks for the paasuram.
Mewari is quite close to Marwari.
They are among the so many different dialects spoken in Rajasthan.
Actually, both Mewari and Marwari are spoken in parts of Gujurat as well, and specifically quite close to braj-basha.
@Radha:Ya ya .. Kelunga.. Chittodgar la naraya friends irukkanga.. Na illanalum avanga help pannuvanga.. :)
Will soon post ya..
@ILWK: Correct.. Basic hindi and Sanskrit knowledge would help you understand Mewari pretty well.
She had used some earthy phrases in her verses which could be understood when you hear it from a typical mewaris. I fortunate to learn some of the bhajan, when i was in Chittodgarh. :)
@ILWK: More tho Giridhar is one of her gems. :)
there are many,
1. Math ja jogi
2. Baadal dekhi mein dari huyi Sham
3. Tey bin mhari kown kabar ley
4. Pyare Darshan
5. Mayee mhane supne mein..
List goes on and on...
We actually need a separate posting to list out her identified poems. :)
@Sury Sir: thanks for the link sir. Will listen to them soon. :)
@KRS: Can you please explain the paasuram also. ? Atleast in the comments area?!?
@KRS: Illa KRS. Mewari and Maarwari are differnt. There are subtle differences. The former is more authentic than the latter.
KRS, I wont escape. My realtionship rather connectivity with Meera is something, which cant be expressed by words. :)
//i have read a different version.//
ராதா சொன்னது போல அழகா கதை சொல்லியிருக்கீங்க :) நன்றி க.க!
//Akka.. My mother tongue is Telugu.//
//I learnt MEwari for the pleasure of reading to Meera's words. :)//
கீதை படிக்க, அதைப் படிச்சே, சமஸ்கிருதம் கத்துக்கிட்டதாக கும்ரன் சொன்னதாக நினைவு. நீங்க இப்படி. உண்மையிலேயே க்ரேட்!
//இப்படியே யாரவது ஒரு பதிவு எழுதிக்கிட்டே இருக்க, கண்ணன் அன்பர்கள் பின்னூட்டங்களை படித்துக் கொண்டே காலத்தை ஓட்டி விடலாம் என்று தோன்றுகிறது. :-)
nanganallur anjaneyar provides food on all dayss...will someone sponsor me for internet connection? :-)//
ஹாஹா :) அடிக்கடி நான் நினைச்சுக்கிற விஷயம் ராதா :)
@Sankar,
Please find the meaning for the pasurams here:
சிறியனென்று
தன்முகத்துச்சுட்டி
@Radha:
i didnt have PSP's darshan.
But thanks for the info, a lot! :)
i sent my mom off to see Him! :))
i cant go coz i have a rev exam tomorow :((
With my boards abt 15 dayz away, my visits to "my home-PSP's place" have reduced greatly :((
i think i saw Him once last month!
Anyways, do describe Him in detail for me!
@ilwk,
all the best for your exams...
******
கிரீடம் முதல் பாதம் வரை பல வண்ணங்களில் பளிச்சிடும் கற்கள் பதித்த நீல நிற ஆடைகளில் அற்புத ராஜ அலங்காரம். சாமந்தி மாலை, ரோஜா மாலை, கதம்ப மாலை, விருட்சி மாலை எல்லாமும் சேர்ந்து காணக் கண் கோடி வேண்டும்.
கவலை வேண்டாம். அடுத்த ரத சப்தமியில் மீண்டும் தரிசிக்கலாம். :-)
********
have left the description in your blog as well.
அடடா தாமதமாய் பார்க்கிறேனே என்று இருக்கிறது அருமை கவிநயா!
நீங்கள் பார்த்ததே மகிழ்ச்சி. நன்றி ஷைலஜாக்கா.
//கிரீடம் முதல் பாதம் வரை பல வண்ணங்களில் பளிச்சிடும் கற்கள் பதித்த நீல நிற ஆடைகளில் அற்புத ராஜ அலங்காரம். சாமந்தி மாலை, ரோஜா மாலை, கதம்ப மாலை, விருட்சி மாலை எல்லாமும் சேர்ந்து காணக் கண் கோடி வேண்டும்.
கவலை வேண்டாம். அடுத்த ரத சப்தமியில் மீண்டும் தரிசிக்கலாம். :-)//
நாங்களும் தரிசித்துக் கொண்டோம் :) நன்றி ராதா.