Sunday, December 26, 2010

ஆராவமுதே...

 
[முகுந்தமாலா - 16 ]

ஜிஹ்வே ! கீர்த்தய கேசவம் முரரிபும் சேதோ ! பஜ ஸ்ரீதரம்
பாணித்வந்த்வ ! ஸமர்ச்சய அச்யுதகதா: ஷ்ரோத்ரத்வய ! த்வம் ஷ்ருணு !
க்ருஷ்ணம் லோகய லோசநத்வய ! ஹரேர்-கச்ச அங்க்ரியுக்மாலயம்
ஜிக்ர க்ராண ! முகுந்த பாத துளஸீம் மூர்த்தந் ! நமாதோக்ஷஜம் !


[பொருள்]
நாவே ! கேசவனைத் துதி செய்வாயாக; மனமே ! முராரியை பஜனை செய்வாயாக; கைகளே ! ஸ்ரீதரனுக்கு அர்ச்சனை செய்வீர்; காதுகளே ! அச்சுதனின் கதைகளைக் கேட்பீர்; கண்களே ! கிருஷ்ணனைக் காண்பீர்; கால்களே ! ஹரியின் ஆலயத்திற்கு செல்லுங்கள்; நாசியே ! முகுந்தனின் பாத துளசியை நுகர்வாயாக; தலையே ! நீ ஆண்டவனை வணங்குவாயாக !
[ ராகம் - கல்யாணி ]

ஆராவமுதே ! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே !
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே !


மேலே உள்ள நாலாயிர திவ்ய பிரபந்த உயிர் பாசுரத்தை (திருவாய்மொழி 5-8-1) இங்கே கேட்கலாம்.
பாடியுள்ளோர்:  சென்னை பள்ளிக்கரணை திருநாரணன் கோயில் திவ்ய பிரபந்த பாடசாலை குழுவினர்.

22 comments :

Radha said...

அன்பன் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம் அன்பன் !
பயன் அன்றாகிலும் பாங்கு அலர் ஆகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான் !
குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பீ !
முயல்கின்றேன்....உன் தன் மொய்கழற்கு அன்பையே.

ஷைலஜா said...

வாரா வருவாய் வருமென் மாயா! மாயா மூர்த்தியாய்!

ஆரா அமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்,

தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்! திருக்குடந்தை

ஊராய்! உனக்காட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ?

ஷைலஜா said...

சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
>>><<<.சீரார் செந்நெல் கவரி வீசுகிறதாம் ஆஹா என்ன உவமை!

குமரன் (Kumaran) said...

எம்மானே என் வெள்ளை மூர்த்தி! என்னை ஆள்வானே!
எம்மா உருவும் வேண்டுமாற்றால் ஆவாய் எழில் ஏறே!
செம்மா கமலம் செழு நீர் மிசைக் கண்மலரும் திருக்குடந்தை
அம்மா மலர்க்கண் வளர்கின்றானே! என் நான் செய்கேனே?!

செழு நீர் மிசை செம்மா கமலங்கள் கண் மலர்கின்றன! ஆனால் திருக்குடந்தை அம்மானோ மலர்க்கண் வளர்கின்றானே! என்ன நான் செய்வேன்?!

குமரன் (Kumaran) said...

முகுந்தமாலாவின் மிக எளிதான சுலோகம் இது!

Radha said...

//செழு நீர் மிசை செம்மா கமலங்கள் கண் மலர்கின்றன! ஆனால் திருக்குடந்தை அம்மானோ மலர்க்கண் வளர்கின்றானே! என்ன நான் செய்வேன்?! //
குமரன்ன்ன்ன்....கொன்னுட்டீங்க !! அட்டகாசம் !!!! :-)))
உங்கள் ரசனை = தாமரை செந்தீ !
~
தேன் மாந்தும் வண்டு

Radha said...

"சாதா ஷைலஜா" அக்கா, உங்க முன்னாடி ராதால்லாம் சோதா தான்.
எப்படி டக்குன்னு "வாரா வருவாய்" பாசுரத்திற்கு தாவினீர்கள்?
"இன்னம் உழல்வேனோ?" என்று இந்த பாசுரத்தை சாக்கா வெச்சி நானும் பல முறை கேட்டதுண்டு. :-(

Radha said...

//சீரார் செந்நெல் கவரி வீசுகிறதாம் ஆஹா என்ன உவமை! //
எனக்கு தெரிந்து இந்த உவமையில் ஆழ்வாரிடம் சொக்கிப் போன nth person ! :-) That "n" includes radha too ! :-)

ஷைலஜா அக்கா/குமரன்,
இன்னக்கு நான் இதுக்கு மேல absent.தம்பி/தங்கை யாரும் வந்து கேள்வி கேட்டா பதில் சொல்லவும்.
~
அன்புடன்,
ராதா

ஷைலஜா said...

//Radha said...
""இன்னம் உழல்வேனோ?" என்று இந்த பாசுரத்தை சாக்கா வெச்சி நானும் பல முறை கேட்டதுண்டு
//////
அந்த இன்னம் உழல்வேனா வரி நிதர்சனம் நாமெல்லாம் உழல்கிறோமே இன்னமும் அவனுக்கு முழுமையாய் ஆட்படாததால்!
Radha said...
ஷைலஜா அக்கா/குமரன்,
இன்னக்கு நான் இதுக்கு மேல absent.தம்பி/தங்கை யாரும் வந்து கேள்வி கேட்டா பதில் சொல்லவும்.
~
அன்புடன்,
ராதா

<<<<<<<<<<<<<<>
சரி,,,,,தெரிஞ்சவரை சொல்றேன்.

ஷைலஜா said...

//Radha said...
""இன்னம் உழல்வேனோ?" என்று இந்த பாசுரத்தை சாக்கா வெச்சி நானும் பல முறை கேட்டதுண்டு
//////
அந்த இன்னம் உழல்வேனா வரி நிதர்சனம் நாமெல்லாம் உழல்கிறோமே இன்னமும் அவனுக்கு முழுமையாய் ஆட்படாததால்!
Radha said...
ஷைலஜா அக்கா/குமரன்,
இன்னக்கு நான் இதுக்கு மேல absent.தம்பி/தங்கை யாரும் வந்து கேள்வி கேட்டா பதில் சொல்லவும்.
~
அன்புடன்,
ராதா

<<<<<<<<<<<<<<>
சரி,,,,,தெரிஞ்சவரை சொல்றேன்.

In Love With Krishna said...

//இன்னம் உழல்வேனோ?//
Pls. someone explain!

In Love With Krishna said...

//நமாதோக்ஷஜம் !//
How is this split?
What is the meaning of this line?

In Love With Krishna said...

@Radha:
i have decided!
This Narasimmha is our Azhagiya Singar!
How beautifully He is calling Prahlada to Him. :)
Really nice pic!

In Love With Krishna said...

Thirukudanthai Perumal pattri therindhavargal yaaravudhu solreengla?
He is reclining like Ranganathar, that's all i saw. :)
Dressed in yellow, and such big, beautiful eyes! :)

His eyes are usually compared to the petals of the Lotus, but here, His eyes are thousand times deeper than the pond on which the lotus lives.
O Perumal-e! Will you not let Your devotee be lost in that never-ending sea? You are already drawing me in with one sight! :)

Kavinaya said...

ராதாவின் உதவியால் இத்தனை அழகான பாசுரங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிகிறது. மிக்க நன்றி ராதா. குறிப்பாக இந்தப் பாசுரம் வெகு அழகு.

Radha said...

//நமாதோக்ஷஜம் !//
How is this split?
What is the meaning of this line?
++++
nama + adhokshajam
adhokshaja = one who is beyond the control of material senses; one whose character never stoops low; one who has no downfall

Radha said...

கவிநயா அக்கா, உங்கள் நன்றியை அப்படியே எனக்கு பாசுரங்களை அறிமுகம் செய்தவர்களுக்கு உரித்தாக்குகிறேன். :-)

Radha said...

//இன்னம் உழல்வேனோ?//
Pls. someone explain!
+++++
being caught in the vicious cycle of worldly matters totally forgetting the Lord...

Radha said...

//This Narasimmha is our Azhagiya Singar! //
:-)
i think all u.s ppl are gonna come and settle in tiruvallikeni ! நல்லாவே பில்ட்-அப் பண்றோம். :-)

நாடி நாடி நரசிங்கா! said...

நேற்று பாடலை கேட்டேன் .
முன்பு பதிவிட்ட அமலனாதிபிரான் பாடலும் அருமை.

ஆராவமுதே பாசுர பாடல் அற்புதம்! அற்புதம்!

ஆராவமுதே - . குடந்தை பெருமாளை மறக்கவும் முடியுமோ .நினைக்க நினைக்க திகத்தாத பெருமாள்:)

மிக்க நன்றி ராதா:)

Radha said...

//ஆராவமுதே பாசுர பாடல் அற்புதம்! அற்புதம்!//

வாங்க ராஜேஷ். ஆராவமுதே பாசுரம் உங்களுக்கு பிடிக்காமல் போயிருந்தால் தான் அதிசயம். :-)

Sankar said...

@ Radha & shailaja akka.. Thanks a lot.. Actually, sorry for the delayed comments.. :)

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP