Friday, December 24, 2010

திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடவா !


[ ராகம் : வசந்தா ]
வார்புனல் அம்தண் அருவி
வட திருவேங்கடத்து எந்தை
பேர்பல சொல்லிப் பிதற்றிப்
பித்தர் என்றே பிறர் கூற
ஊர்பல புக்கும் புகாதும்
உலோகர் சிரிக்க நின்று ஆடி
ஆர்வம் பெருகிக் குனிப்பார்
அமரர் தொழப்படு வாரே.

மொய்ம்மாம் பூம்பொழில் பொய்கை 
முதலைச் சிறைப்பட்டு நின்ற
கைம்மாவுக்கு அருள் செய்த
கார்முகில் போல்வண்ணன் கண்ணன்
எம்மானைச் சொல்லிப் பாடி
எழுந்தும் பறந்தும் துள்ளாதார்
தம்மால் கருமம் என்? சொல்லீர் !
தண் கடல் வட்டத்து உள்ளீரே !

மேலே உள்ள திருவாய்மொழி(3-5-8, 3--5-1)  பாசுரங்களை இங்கே கேட்கலாம்.
[ ராகம்: சங்கராபரணம் ] 
உலகம் உண்ட பெருவாயா ! உலப்பில் கீர்த்தி அம்மானே !
நிலவும் சுடர்சூழ் ஒளிமூர்த்தி ! நெடியாய் ! அடியேன் ஆருயிரே !
திலதம் உலகுக் காய் நின்ற திருவேங்கடத்து எம்பெருமானே !
குலதொல் அடியேன் உனபாதம் கூடு மாறு கூறாயே.

கூறாய் நீறாய் நிலனாகிக் கொடுவல் அசுரர் குலமெல்லாம்
சீறா எரியும் திருநேமி வலவா! தெய்வக் கோமானே
சேறார் சுனைத் தாமரை செந்தீ மலரும் திருவேங்கடத்தானே !
ஆறா அன்பில் அடியேன்உன் அடிசேர் வண்ணம் அருளாயே.

மேலே உள்ள திருவாய்மொழி(6-10-1, 6-10-2)  பாசுரங்களை இங்கே கேட்கலாம்.
பாடியுள்ளோர்:  சென்னை பள்ளிக்கரணை திருநாரணன் கோயில் திவ்ய பிரபந்த பாடசாலை குழுவினர்.

29 comments :

In Love With Krishna said...

//எம்மானைச் சொல்லிப் பாடி
எழுந்தும் பறந்தும் துள்ளாதார்
தம்மால் கருமம் என்? சொல்லீர் ! //
:))
Thanks for the post.

//உலகம் உண்ட பெருவாயா ! உலப்பில் கீர்த்தி அம்மானே !நிலவும் சுடர்சூழ் ஒளிமூர்த்தி ! நெடியாய் ! அடியேன் ஆருயிரே !திலதம் உலகுக் காய் நின்ற திருவேங்கடத்து எம்பெருமானே !குலதொல் அடியேன் உனபாதம் கூடு மாறு கூறாயே.கூறாய் நீறாய் நிலனாகிக் கொடுவல் அசுரர் குலமெல்லாம்சீறா எரியும் திருநேமி வலவா! தெய்வக் கோமானேசேறார் சுனைத் தாமரை செந்தீ மலரும் திருவேங்கடத்தானே !
ஆறா அன்பில் அடியேன்உன் அடிசேர் வண்ணம் அருளாயே.//
i said i was at the PSP temple for Thiruvengadamudiyan thirukolam right?
i had heard the above paasuram, i really loved it, and it was stuck in my head for the last few days.
The word ஆருயிரே ! had a huge impact on me, and i kept repeating it, within myself.
i kept wishing i would hear it one more time, and here it was!!!
Now, i really am moved and overwhelmed.
Thanks :)

நாடி நாடி நரசிங்கா! said...

தித்திக்கும் தேன் சாரல் திருவேங்கடத்தான் பாசுரங்களை கொடுத்தமைக்கு மிக்க நன்றி :)

நாடி நாடி நரசிங்கா! said...

எம்மானைச் சொல்லிப் பாடி
எழுந்தும் பறந்தும் துள்ளாதார்
தம்மால் கருமம் என்? சொல்லீர் !
தண் கடல் வட்டத்து உள்ளீரே !

கண்டிப்பா சொல்லனும்னா அதுங்கல்லாம் உருபடாத கேசுங்க:)

நாடி நாடி நரசிங்கா! said...

பித்தர் என்றே பிறர் கூற
ஊர்பல புக்கும் புகாதும்
உலோகர் சிரிக்க நின்று ஆடி
ஆர்வம் பெருகிக் குனிப்பார்
அமரர் தொழப்படு வாரே:))

vow:)

ஷைலஜா said...

//ஆறா அன்பில் அடியேன்உன் அடிசேர் வண்ணம் அருளாயே///


<<<

ஆறா அன்பாமே! எத்தனை எளிமையான சொல் அதே சமயம் வலிமையான சொல்லுமாக இருக்கிறது!

//கைம்மாவுக்கு அருள் செய்த
கார்முகில் போல்வண்ணன் கண்ணன்
எம்மானைச் சொல்லிப் பாடி
எழுந்தும் பறந்தும் துள்ளாதார்
தம்மால் கருமம் என்? சொல்லீர்///


தமிழின் துள்ளலை உற்சாகத்தை இங்கே அனுபவிக்க முடிகிறது!

நாடி நாடி நரசிங்கா! said...

உலகம் உண்ட பெருவாயா ! உலப்பில் கீர்த்தி அம்மானே !
நிலவும் சுடர்சூழ் ஒளிமூர்த்தி ! நெடியாய் ! அடியேன் ஆருயிரே !:)

டே மொதல வாயா! தவளை வாயா
என்றெல்லாம் நண்பர்களை கிண்டல் செய்வார்கள் .:)

இங்க நம்மாழ்வார் பெருமாளை உலகம் உண்ட பெருவாயா!
என்று சொல்வது பெருமாளை கொஞ்சுவது போல் இருக்கிறது.:)

Radha said...

என் பொன்னான சகோதர சகோதரிகளே, கண்ணான கண்மணிகளே,
நாமலே ஒரு உருப்படாத கேஸ் தான். நம்ம அப்பா அம்மாவை கேட்டா சொல்வாங்க. :-)
விஷயம் என்னன்னா நாம எவ்ளோ நல்ல பிள்ளையா இருந்தாலும் நம்ம அப்பா அம்மாவிற்கு உருப்படாத கேசுங்களை சுத்தி தான் மனசு எல்லாம். :-)

Radha said...

//தமிழின் துள்ளலை உற்சாகத்தை இங்கே அனுபவிக்க முடிகிறது! //
ஆமாம் அக்கா. (முன்னாடி போட்ட பின்னூட்டம் உங்களுக்கு அல்ல. :-))

Radha said...

//ஆறா அன்பாமே! எத்தனை எளிமையான சொல் அதே சமயம் வலிமையான சொல்லுமாக இருக்கிறது! //
ஆமாம் அக்கா. பிரபந்த பாசுரங்களிலே எனக்கு மிகவும் பிடித்தவை நம்மாழ்வார் பாசுரங்கள் தான். :-)

Radha said...

@KK,
Have you seen VK & RP in sandalwood color dress? If not, in coming one of these days you may see them in that attire...don't miss the occasion.
I don't have words to describe that darshan.

Radha said...

//இங்க நம்மாழ்வார் பெருமாளை உலகம் உண்ட பெருவாயா!
என்று சொல்வது பெருமாளை கொஞ்சுவது போல் இருக்கிறது.:)
//
நீங்க சொன்ன பிறகு தான் கவனிக்கிறேன் ராஜேஷ். பாடலை கேட்கும் பொழுதும் அந்த உணர்வு தான் ஏற்படுகிறது. :-)

In Love With Krishna said...

@Radha:
No, i haven't.
Hope He will bless me with darshan when He wills. :)

குமரன் (Kumaran) said...

அடியார்கள் அனுபவிக்க பாசுரங்களில் ஒவ்வொரு வரியும் இருக்கும் போது கவிதையை அனுபவிப்பவர்களுக்கும் இந்த இடுகையின் கடைசி பாசுரத்தில் ஒரு வரி இருக்கிறது. 'சேறு ஆர் சுனைத் தாமரை செந்தீ மலரும் திருவேங்கடம்'. :-)

Radha said...

குமரன்...முதலில் "செந்தீ மலரும் திருவேங்கடம்" என்று தான் பதிவின் தலைப்பாக இட நினைத்தேன். :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

தாயாரோடு கூடிய திருவேங்கடமுடையான் படங்களுக்கும், பாசுர வரிகளுக்கும், பாசுரத்தின் பொருளுக்கும் மிகவும் நன்றி ராதா!

மார்கழியில் அடியார்களோடு கூடி இருக்கும் குணானுபவம் மிக இனிது!

கண்ணன் பாட்டு துவங்கிய போது, மார்கழி ஒவ்வொரு நாளும் கண்ணன் பாட்டில் ஒரு பதிவு வரும்! குமரன் தவறாது வந்து மழை பொழிவார்! அது போல் இந்த ஆண்டு ராதா மழை! இதைத் தினமும் தையொரு திங்கள் வரை செய்யவும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//திலதம் உலகுக் காய் நின்ற திருவேங்கடத்து எம்பெருமானே//

//சேறார் சுனைத் தாமரை செந்தீ மலரும் திருவேங்கடத்தானே//

அது என்ன சேறார் சுனை? சுனை-ன்னா என்ன? = கிணறா, குளமா? ஏரியா? ஊற்றா?

சுனையில் தண்ணீர் அல்லவா இருக்கும்! இவர் செந்தீ-ன்னு சொல்றாரே! என்ன உவமை இது, பொருத்தமே இல்லாமல்! நம்மாழ்வார் தூக்கக் கலக்கத்தில் எழுதிட்டாரோ? :))

கிளப்பியாச்சு! இனி ராதா பார்த்துக்குவான்! மேல்படி குமரன் பார்த்துக்குவார்! :)

Radha said...

அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வந்தாச்சு. ஆனா செம தூக்கம் வருது. :-)
குமரன்/ரவி யாருக்காவது நேரமிருந்தால் பாசுர விளக்கம் தாருங்கள். காலையில் பார்க்கலாம். :-)

Kavinaya said...

தாமதமா படிச்சா நல்லது போல :) அனைவரும் அனுபவிக்கும் அழகையும் சேர்த்து அனுபவிக்கலாம் :)

ஷைலஜா said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//திலதம் உலகுக் காய் நின்ற திருவேங்கடத்து எம்பெருமானே//

//சேறார் சுனைத் தாமரை செந்தீ மலரும் திருவேங்கடத்தானே//

அது என்ன சேறார் சுனை? சுனை-ன்னா என்ன? = கிணறா, குளமா? ஏரியா? ஊற்றா?

சுனையில் தண்ணீர் அல்லவா இருக்கும்! இவர் செந்தீ-ன்னு சொல்றாரே! என்ன உவமை இது, பொருத்தமே இல்லாமல்! நம்மாழ்வார் தூக்கக் கலக்கத்தில் எழுதிட்டாரோ? :))

கிளப்பியாச்சு! இனி ராதா பார்த்துக்குவான்! மேல்படி
///<<<<>>>>>

ராதாக்கு முன்னாடி சாதா நான் கொஞ்சம் பார்த்துக்கவா?:)

சுனை என்றால் சிற்றருவி . மலைமேல உற்பத்தியாகிற இடத்தில் அங்கேமலை இடுக்கினில் தெரியும் காலைச் சூரியனின் சிவப்பு நிறம் தாமரையாய் ஆழ்வார் கண்ணுக்குத்தெரிகிறதா நினைக்கிறேன்.
சரியா ரவி?

In Love With Krishna said...

@Radha:
btw, i wanted to tell you.
Today is Giridhari tirukolam for PSP.
You once told me you liked Giridhari a lot, so if you are free, go to the temple around 9:30-10.00.
You can have a good darshan.
Just to inform, if you are free.

Radha said...

ம்ம்...அதானே பார்த்தேன். யாருமே பாசுரங்களின் பொருள் சொல்லவில்லை...யாராவது பதிவில் சேர்த்து இருப்பார்கள் என்று பார்த்தால் என்ன ஏமாற்றம். :-( திருவேங்கடவன் சோதனை செய்யாம விட மாட்டானே...எல்லோரையுமே பிசியா வெச்சி இருக்கான். சரி நாமலே நிதானமா வந்து சொல்வோம்...

Radha said...

அக்கா, நீங்க சொல்லும் பொருள் அழகா இருக்கு. ஆனா "சேறார் சுனை" என்பதோடு பொருந்தி வரணும். :-)

Radha said...

@KK,
many thanks for the info. :-) didn't i say that PSP is attached to me !!
~
இப்படிக்கு,
பீத்தல் திலகம்.

Radha said...

//இந்த ஆண்டு ராதா மழை //
ஆராவமுதன் பாசுரம் நாளைக்கு. அதுக்கு அப்பறமா மழையை மற்றவர்கள் பொழிவார்கள். :-) already kavinaya akka and shylaja akka are waiting in the queue, i guess. :-)

In Love With Krishna said...

@Radha:
So, are u going to the temple?

Radha said...

yes...right now. :)
குன்றமெடுத்த என் குணக்குன்றே ! மீரா பிரபு கிரிதாரி !! how can i ever miss the occasion ! once again many thanks !! :)

Sankar said...

Radha.. seekiram.. :)Amudhan enna solrar.. :)

In Love With Krishna said...

@radha:
Hope you had darshan.
i did :)
He was awesome, especially when they put the paniporvai on Him. :))
Yellow colour-dress-la superb-aga irundhaar.
When they took Him inside, i was almost crying, no i was. :(
i thought how bad He has to go.

Radha said...

@KK,
yes !! i had an excellent darshan sister ! :-))) shall reply to your thiruvaimozhi related questions later...
@sankar,
aravamudhan has arrived atlast ! :-)
"உங்க குல தெய்வத்துக்கும் மேல " அப்படின்னு எல்லாம் பில்ட் அப் கொடுத்து இருக்கீங்க.
அதனால அவரை பத்தி நிறைய சொல்வீங்கன்னு எல்லொரும் எதிர்பார்க்கிறோம். ;-)

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP