பேர் ஆயிரம் கொண்டதோர் பீடுடையன்
[ஹரி பஜனை]
(ராகம்: செஞ்சுருட்டி)
(ராகம்: செஞ்சுருட்டி)
கேசவா ! நாராயண மாதவ கோவிந்தா !
விஷ்ணு ! மதுஸுதனா ! த்ரிவிக்ரம வாமனா !
ஸ்ரீதரா ஹ்ருஷீகேசா பத்மநாபா தாமோதரா
அச்சுதா ! அனந்தா ! கோவிந்தா !
ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும்
பேர் ஆயிரம் கொண்டதோர் பீடுடையன்
கார் ஆயின காள நல் மேனியினன்
நாராயணன் நங்கள் பிரான் அவனே.
விஷ்ணு ! மதுஸுதனா ! த்ரிவிக்ரம வாமனா !
ஸ்ரீதரா ஹ்ருஷீகேசா பத்மநாபா தாமோதரா
அச்சுதா ! அனந்தா ! கோவிந்தா !
ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும்
பேர் ஆயிரம் கொண்டதோர் பீடுடையன்
கார் ஆயின காள நல் மேனியினன்
நாராயணன் நங்கள் பிரான் அவனே.
அவனே அகல் ஞாலம் படைத்திடந்தான்
அவனே அஃது உண்டு உமிழ்ந்தான், அளந்தான்
அவனே அவனும் அவனும் அவனும்
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே.
மேலே உள்ள திருவாய்மொழி பாசுரங்களை(9-3-1, 9-3-2) இங்கே கேட்கலாம்.
பாடியுள்ளோர்: சென்னை பள்ளிக்கரணை திருநாரணன் கோயில் திவ்ய பிரபந்த பாடசாலை குழுவினர்.
[ விளக்கம்]
எங்கள் தலைவனான நாராயணன் ஆயிரம் பேர்களைக் கொண்ட பெருமை வாய்ந்தவன். ஒரே ஒரு பெயர் மட்டும் போதும். அது ஓர் ஆயிரம் வழிகளில் ஏழு உலகங்களையும் காக்கும் வல்லமை உடையது. அழகு, மென்மை, கம்பீரம், கருணை, சமத்துவம் போன்றவற்றை வெளிப்படுத்தும் அவன் திருமேனியே கரிய காளமேகம் ஆனது. (ஓ! எங்கள் தலைவன் சீர் சொல்லி முடியாது.)
அவனே முன்பு இந்த உலகங்களைப் படைத்தான். முன்பு (வராஹ அவதாரம்) இந்த பூமியை இடந்தான். பிரளய காலத்தில் அவனே உலகங்களை தன் வயிற்றில் வைத்து காத்தான். மீண்டும் அவனே மறுபடியும் எல்லா உலகங்களையும் வெளியில் இட்டான்.அவனே முன்பு திரிவிக்ரமனாக எல்லா உலகங்களையும் அளந்தான். நாராயணனும் அவனே. இந்திரனும் அவனே. பிரம்மாவும் அவனே. பரமசிவனும் அவனே. மற்றும் எல்லாமும் (etc etc) அவனே என்று அறிந்தோம்.
(சொற்பொருள்)
பீடு - பெருமை
அளித்தல் - காத்தல்
ஞாலம் - உலகம்
64 comments :
Lord Ranganatha Bless You and your family.
subbu rathinam
http://vazhvuneri.blogspot.com
அடுத்த பதிவுக்கு நன்றி ராதா! :)
"பேர் ஆயிரம் கொண்டதோர் பீடுடையன்" அப்படின்னு சொல்லும்போதே என்னவொரு தோரணை!
Oh ! May the whole world become my family ! Thanks Subbu thaathaa ! :-)
@Radha: Beautiful pics!
Nice post...but it would be nicer for me if you could please explain the paasuram?? :)
//அடுத்த பதிவுக்கு நன்றி ராதா! :) //
இன்னும் ரெண்டே இரண்டு பதிவுகள் மட்டும் reserve செஞ்சிக்கறேன். :-)
//"பேர் ஆயிரம் கொண்டதோர் பீடுடையன்" அப்படின்னு சொல்லும்போதே என்னவொரு தோரணை! //
அதுக்குள்ள பாட்டை கேட்டாச்சா ! சூப்பர். :-)
@KK,
Completed the post with the explanation just now. Please refresh the web page...
@Radha: Just now had darshan of PSP's pani porvai!
No words to describe!
He's awesome. :)
After that, to come and read here, this paasuram, is,overwhelming.
Thankyou so much for this post.
And, all your other posts as well.
Very enriching for me :)
//இடந்தான்//
அப்படீன்னா என்ன ராதா?
//அவனே அவனும் அவனும் அவனும்//
அவனும் அவனும் அவனும்-மா? ஹிஹி! ரொம்ப கோவம் வந்துச்சின்னா தான் பேரைச் சொல்லாம, அவனும், அவன் மூஞ்சும், அவன் கண்ணும்-ன்னு சொல்லுவோம்! அது போல அவனும் அவனும் அவனும்? :))
அவனே அவனும் அவனும் அவனும் - இதான் நம்மாழ்வார் என்னும் மாறன் என்னும் சின்னப் பையனின் அழகிய டெக்னிக்! :))
@KK
//PSP's pani porvai!//
ஆளு முகமூடி மாதிரி துணி சுற்றிய கோலமா? என்ன கலர் போர்வை? தனியாத் தானே வந்தாரு? :)
//இன்னும் ரெண்டே இரண்டு பதிவுகள் மட்டும் reserve செஞ்சிக்கறேன். :-)//
அட, அப்பறம் அமலனாதி பத்தும் யாரு போடுவதாம்? :)
ராதாவின் புதிய பதிவிற்கு நன்றி / கவிந்யா சொல்வதுபோல தலைப்பிலேயே நல்ல தோரணை! தர்பார் நடத்தறீங்க! வரேன் நானும் சீக்கிரமா!
அரையர் ஸ்ரீராமபாரதி இதில் பாடவில்லையா ராதா?
அம்மா, செளபாக்கியலட்சுமி ஸ்ரீராமபாரதி அவர்களே முழுதும் பாடிய பாட்டா? அருமை!
//வரேன் நானும் சீக்கிரமா! //
கொஞ்சமே கொஞ்சம் பொறுமையா வாங்க ! :-)
"திருமலையில் பொற்கால் இட்ட வேங்கடவன்" பாசுரம் ஒன்றும் திருக்குடந்தை பாசுரம் ஒன்றும் இருக்கு. :-) அதுக்கு அப்பறம் மார்கழி முடியும் வரை நான் வாசகன். :-)
@KK,
The beauty of my posts - they are enriching for me too sister. :-)
Is it the first time you are having "kabai sevai" ?
//அரையர் ஸ்ரீராமபாரதி இதில் பாடவில்லையா ராதா? //
இல்லை ரவி. [This was recorded after the Araiyar Swami attained Paramapadham.]
செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண் :)
ராத பாசுர பாடல் போட்டா அதில் ஒரு சந்தோசம்
இன்னும் இரண்டு பாடல்தான் இருக்குன்னா அதில் ஒரு வருத்தம்
@Radha: No, kabai sevai i have had many times :)
Oh, i 4got, kabai looked gr8 too! :)
What i meant was, PSP...they take Him from the dwajastambam inside the temple covered in a netted shawl (pani porvai), right? (Rapathu)
Yesterday, was Thiruvengadamudiyan thirukolam.
Yes, appadiye tirupati-la irundha madhiri irundhudhu.
Avarum (PP) ivarum (PSP) onnu dhaan.
Aanalum avar avar-dhaan, ivar ivar dhaan.
But yesterday, avar ivaragi, ivar avaragi...gr8 darshan :)
@KRS:
//ஆளு முகமூடி மாதிரி துணி சுற்றிய கோலமா? என்ன கலர் போர்வை? தனியாத் தானே வந்தாரு? :)//
No, after the Margazhi utsavam where Divya Prabandham is read out just next to dwajastambam, He goes inside with shawl around Him (actually it's just netted transparent cloth. The name should have been fancy porvai or fashion porvai, not pani porvai) :)))
After that, they close the Swarga Vaasal.
i am not sure, but i think it opens for Nammazhwar alone on the last day (Nammazhwar Moksham)
And oh! koodave Sri Devi Thaayarum, Bhooma Devi Thaayarum :)
@KRS: i forgot to add, His face is uncovered. :)
Radha said...
"திருமலையில் பொற்கால் இட்ட வேங்கடவன்" பாசுரம் ஒன்றும் திருக்குடந்தை பாசுரம் ஒன்றும் இருக்கு. :-) அதுக்கு அப்பறம் மார்கழி முடியும் வரை நான்
//
<<<<<<<<<>.சரி...பொறுமையாகவே வருகிறேன்...:) ஆனா அந்தப்பதிவில் இருக்கு உங்களுக்கும் ரவிக்கும் டோஸ்!:):)
பேர் சொல்லும் பிள்ளை
அந்த டோஸ் பற்றி சீரியசா சொன்னதாநினச்சிக்கவேண்டாம் ராதா மற்றும் கேஆர் எஸ்! just kidding!
அவனே அவனும் அவனும் அவனும் - நாராயணனே நாராயணன்; நாராயணனே பிரம்மன்; நாராயணனே சிவன் - இப்படி பொருள் கூறலாம் தான். அவனே அவனும் அவனும் அவனும் என்னும் போது அவனே பிரம்மனும் சிவனும் இந்திரனும் என்று பொருள் கூறியிருக்கிறார்கள் உரையாசிரியர்கள். மற்ற இடங்களிலும் நம்மாழ்வார் இந்த மூவரையும் கூறுவதால் அவருடைய மனதிலும் அதுவே இருந்தது என்று தோன்றுகிறது.
நம்மாழ்வார் பாசுரங்களைப் பொறுத்த வரையில் முதல் மூவர் என்பது போய் முதல் நால்வர் என்று ஆகிறது. மாயோன், சேயோன், வருணன், வேந்தன் என்ற தொல்காப்பிய வரிசையும் நால்வரைப் போற்றுகிறது; அந்த நால்வருக்கும் நம்மாழ்வார் சொல்லும் திருமால், சிவன், பிரமன், இந்திரன் என்ற நால்வருக்கும் தொடர்பு உண்டோ என்றும் தோன்றுகிறது. :-)
//அவனே அவனும் அவனும் அவனும் என்னும் போது அவனே பிரம்மனும் சிவனும் இந்திரனும் என்று பொருள் கூறியிருக்கிறார்கள் உரையாசிரியர்கள். //
உரை நூல்களை சரியா படிக்காமல், நடுராத்திரியில் அரை தூக்கத்தில் விளக்கம் எழுதினேன். :-) "இந்திரனும் அவனே" என்று பதிவில் சேர்த்துவிட்டேன். நன்றி குமரன். :-)
//அந்த டோஸ் பற்றி சீரியசா சொன்னதாநினச்சிக்கவேண்டாம் ராதா மற்றும் கேஆர் எஸ்! just kidding! //
ம்ம்ம்...அந்த பயம் இருந்தா சரி தான்.
வாங்க திகழ். ஆயிரத்தில் எந்த பேர் சொல்பவர் நீங்கள்? நான் ராமன் பேர் சொல்லும் பிள்ளை. :-)
//But yesterday, avar ivaragi, ivar avaragi...gr8 darshan :) //
:-)
//ரொம்ப கோவம் வந்துச்சின்னா தான் பேரைச் சொல்லாம, அவனும், அவன் மூஞ்சும், அவன் கண்ணும்-ன்னு சொல்லுவோம்! அது போல அவனும் அவனும் அவனும்? :))
//
i was laughing uncontrollably on reading that...:))
//Oh ! May the whole world become my family ! Thanks Subbu thaathaa ! :-) //
sooo sweet thambee :)
//i was laughing uncontrollably on reading that...:))//
me too :)
//But yesterday, avar ivaragi, ivar avaragi...gr8 darshan :) //
பாசுரத்துக்கு பொருத்தமா...அவனே அவனும் அவனும் அவனும் :)
@Shylaja akka.. thanks for reminding Radha..
@ Radha: Sir.. next Amudhanodadhu pl pl pl.. :)
@கவிநயா:
////But yesterday, avar ivaragi, ivar avaragi...gr8 darshan :) //
பாசுரத்துக்கு பொருத்தமா...அவனே அவனும் அவனும் அவனும் :)//
:)))
That's why i said it was overwhelming to read the post after coming back from PSP temple. :)
btw, i think i heard this paasuram in PSP temple yesterday. (i am not sure)
Muthangi sevai for utsavar :)
@Radha:
i have a little doubt. Pls. clarify.
Yesterday, when i went to PSP temple, they said Nachiar Tirukolam fo Nammalwar.
On the way, i was wondering from when Alwar started this. :)
Then, as i stood in front of Nammalwar, it all came back to me.
All my thoughts went to the Lord of Thenthiruperai. :)
(You do know that Alwarthirunagari is quite close, like 5 km?)
i was so stupid it didn't strike me before, Nammalwar has sung about Thenthiruperai, irettai Thirupati, etc. thinking himself to be a girl madly in love with Perumal. (Those are the only examples i know, but you may know many more)
In Irettai Thirupathi paasuram, he sings as a girl who is so in love with perumal that people advise her mother to leave her in that temple itself.
And, the tenth paasuram is like "Sindhaiyaalum, sollaalum, Seygaiyaalum Devarpiraane"
In Thenthiruperai he says "en kaadhal oraikkel thozhi", "kannapiran-idam en penmai thotren", etc.
-------
So, my doubt: these paasurams you post are general, or may i say, not in that mode.
They are beautiful, but the kind of poetry is different.
The number of lines are different, the mode of expression is different.
So, how is it segregated in the Prabandham?
Is there a special name for Paasurams where nammazhwar speaks as a woman?
In Love With Krishna...
So, my doubt: these paasurams you post are general, or may i say, not in that mode.
They are beautiful, but the kind of poetry is different.
The number of lines are different, the mode of expression is different.
So, how is it segregated in the Prabandham?
Is there a special name for Paasurams where nammazhwar speaks as a woman?/////
இதுக்கு என்னால் தமிழில் தான் அனுபவித்துக்கூறமுடியும். ஆகவே அதற்கு முதலில் மன்னித்து வாசிக்கவும்.(உஙக் பேரை எப்படி சொல்வது என தெரியவில்லையே!)
ஆழ்வார்கள் தாமான தன்மையை விட்டு பெண்பாவனையை ஏறிட்டுக்கொள்ளக்காரணம் அவர்களுக்கு ஏற்பட்ட பக்திப்பரவசமே ஆகும் இதனை அழகிய மணவாளப்பெருமான் ஆசார்ய ஹிருதயம் நூலில் ‘ஞானத்தில் தம்பேச்சு , ப்ரேமத்தில் பெண்பேச்சு; என்கிறார்.ப்ரேம நிலையில் ஆழ்வார்பாடல்கள் தாய்ப்பாசுரம் தோழிப் பாசுரம் மகள் பாசுரம் என்று மூன்றுவகையாக இருக்கும். நம்மாழ்வாரின் கட்டமே காதல் பாடல்கள் மிகவும் அற்புதமானவை.பராங்குசநாயகி பாவனையில் அருளீயவைகள் அவை. திருமங்கை மடலேறிவிடுவேன் என அரங்கனை பயமுறுத்திப்பாடல் எழுதி இருக்கிறார் மிகச்சுவையான பாடல்கள் அவை!
அகத்துறை இலக்கணப்படி அமைந்தவை என்றாலும் பாசுரங்களின் அகப்பொருள் ஆன்மபலத்திற்கு அமிர்தமாய் அமைந்தவை. ஆகவே இவையும் நாலாயிரதிவ்யப்பிரபந்தத்தில் சேர்கிறது.
@ஷைலஜா:
Thanks :)
(Neenga iniya thamizh-la reply seydhaalum, enakku typing theriyaadhadhaal manikkavum) :)
//ஆழ்வார்பாடல்கள் தாய்ப்பாசுரம் தோழிப் பாசுரம் மகள் பாசுரம் என்று மூன்றுவகையாக இருக்கும். //
So, maybe Thenthiruperai paasurams will be தோழிப் பாசுரம் and Irettai thirupathi paasurams will be மகள் பாசுரம்.
So, Periyazhwar's paasuram's come under தாய்ப்பாசுரம், right?
And, also, please answer my question a bit more in detail.
Have these paasurams where Nammazhwar sings in the female mode been grouped differently?
The way i remember, most of those paasurams are pertaining to each temple. So, they seemed more directed at one tirupathi.
(The word "seemed" here because all this is my assumption, i am not very sure of anything)
Here, Nammazhwar refers to Perumal in "general" (right, na?)
But, there are Paasurams where he sings about particular temple.
Do they also come under Tiruvaaymozhi? Or, is there a different name for them?
(Sorry for the extensive use of English. My problem: i can talk Tamizh, read Tamizh, even understand the Tamizh of the kind found in paasurams, but i cannot write!)
@ஷைலஜா:
//(உஙக் பேரை எப்படி சொல்வது என தெரியவில்லையே!)//
i should ask you.
You are way older than me, and please give me a way of addressing. i cannot put "@ஷைலஜா"...it's not nice :)
Regarding my name, some people on your blog translated it. :)
But, really, neenga koopidum podhu vera oru idathil uraikkavendum. :)
Anga nalla uraikkira madhiri neenga eppadi koopitaalum paravaillai- Tamil or English :)
// In Love With Krishna said...
@ஷைலஜா:
//(உஙக் பேரை எப்படி சொல்வது என தெரியவில்லையே!)//
i should ask you.
You are way older than me, and please give me a way of addressing. i cannot put "@ஷைலஜா
/////<<<<<<<<<<<<<<<<நிங்க ரொம்ப சின்னபொண்ணுன்னு தம்பிகள் சொன்னாங்க அதனால் என்னை அம்மா எனவும் அழைக்கலாமே கேகே!(இந்த உங்க பெயரை கே ஆரெஸ் சொல்லிட்டாரே!) என் இரண்டுமகள்களும் க்ருஷ்ணபக்தைகள்தான் மூன்றாவதாய் நீங்களும் இப்போ!
In Love With Krishna said...
@ஷைலஜா:
. //
So, maybe Thenthiruperai paasurams will be தோழிப் பாசுரம் and Irettai thirupathi paasurams will be மகள் பாசுரம்.
So, Periyazhwar's paasuram's come under தாய்ப்பாசுரம்
right?
And, also, please answer my question a bit more in detail.
Have these paasurams where Nammazhwar sings in the female mode been grouped differently?
The way i remember, most of those paasurams are pertaining to each temple. So, they seemed more directed at one tirupathi.
(The word "seemed" here because all this is my assumption, i am not very sure of anything)
Here, Nammazhwar refers to Perumal in "general" (right, na?)
But, there are Paasurams where he sings about particular temple.
Do they also come under Tiruvaaymozhi? Or, is there a different name for them<<<<<<<<<<<<<<
விவரமா எழுதறேன் விரைவில்!
In Love With Krishna said...
So, maybe Thenthiruperai paasurams will be தோழிப் பாசுரம் and Irettai thirupathi paasurams will be மகள் பாசுரம்.
So, Periyazhwar's paasuram's come under தாய்ப்பாசுரம்
right
???/
>>>>>>>
அப்படித்தான் இருக்கவேண்டும்.
//Have these paasurams where Nammazhwar sings in the female mode been grouped differently?
The way i remember, most of those paasurams are pertaining to each temple. So, they seemed more directed at one tirupathi.
(The word "seemed" here because all this is my assumption, i am not very sure of anything)
Here, Nammazhwar refers to Perumal in "general" (right, na?)
But, there are Paasurams where he sings about particular temple.
Do they also come under Tiruvaaymozhi? Or, is there a different name for them<<<<<<<<<<<<<<
///
திருவாய்மொழியில் நம்மாழ்வார்27பாடல்கள் பெண்பாவனையில் அருளிச்செய்துள்ளார்.தாய் பாவனையில்7ம் தோழி மகள்பாவனைகளில் 3 மற்றும் 17ம்.
இவைகளை குறிப்பிட்ட கோயில்களில் மட்டும்தான் பாடுகிறார்களா என்ற விவரம் தெரியவில்லை திருவரங்கன் மீது தீராக்காதல் கொண்ட பராங்குசநாயகி(நம்மாழ்வார்) பாடல்களை ஸ்ரீரங்கம் கோயிலில் அரையர் சேவை நாட்களில் பாடுகிறார்களா என யாராவது சொல்லவேண்டும்..இப்படியெல்லாம் சிந்தனைசெய்து கேட்கக்கூடத்தெரியவில்லை எனக்கு இந்த சின்ன வயசில் நீங்க ஆழ்ந்த சிறந்த கேள்விகளை எழுப்புது உற்சாகமாய் இருக்கிறது கேகே!
//இடந்தான்//
அப்படீன்னா என்ன ராதா?
++++
இடத்தல் - "பெயர்த்தல்", "குத்தி எடுத்தல்" என்று திருமகள் (அகராதி) சொல்கிறாள். :-)
நல்ல வேளை அக்கா. நீங்க எதுவும் பதில் சொல்லாம இருந்திருந்தா உங்க பெயரை உடைத்து தமிழ் மொழியாக்கம் செய்து உங்களுக்கு V.V அப்படின்னு ஒரு புது பெயர் உருவாகி இருக்கும். :-) யார் கண்டா, நாங்களே கூட "V.V akka" அப்படின்னு கூப்பிட ஆரம்பிச்சி இருப்போம். :-)
//Radha said...
நல்ல வேளை அக்கா. நீங்க எதுவும் பதில் சொல்லாம இருந்திருந்தா உங்க பெயரை உடைத்து தமிழ் மொழியாக்கம் செய்து உங்களுக்கு V.V அப்படின்னு ஒரு புது பெயர் உருவாகி இருக்கும். :-) யார் கண்டா, நாங்களே கூட "V.V akka" அப்படின்னு கூப்பிட ஆரம்பிச்சி
///>>>>>>>>>>>>
shy - lajjaக்கா?:) மகா குறும்பு தான்:)
@Shailaja aunty (ok-va?):
Thanks for the reply. :)
i remember asking my ama when i was really small why Perumal preferred men inside the temple and not women? Why my father could go inside but i cannot?
i remember her telling me that alwar himself thought of himself as a woman and proposed love to God. That really stuck with me. :)
i know very few paasurams. But, the ones i mentioned are among them. And, since, they are meant for Kuzhaikaathar, the archaka will mostly say it during the aarti. And, it is a regular thing at home. Same case with Irettai thirupathi.
Okay one more question please:
Is there some other work of Nammazhwar other than Tiruvaymozhi?
Sorry to bug you with too many questions. i am just very curious. :)
@KK,
"திருப்பேரை", "தென் திருப்பேரை" என்று இரண்டு திவ்ய தேசங்கள் உள்ளன. You may be knowing them...but for the benefit of those who are not aware of this...
++++
திருப்பேரை/திருப்பேர்நகர்: திருச்சி அருகில் உள்ளது. (பெருமாள் பெயர் அப்பக்குடத்தான் - கிடந்த கோலம்.)
தென் திருப்பேரை - திருநெல்வேலி அருகில். (பெருமாள் பெயர் மகர நெடுங்குழைக் காதர் - வீற்றிருந்த கோலம்)
++++
இது நாள் வரை பெரியாழ்வார் பாசுரங்கள் திருப்பேரை திவ்ய தேச பாடல்கள் என்று அறிந்து வைத்து இருந்தேன்.
["பின்னை மணாளனை பேரில் கிடந்தானை..." என்ற பாசுரம், மற்றும் இன்னொரு தாய் பாசுரம்.] இவற்றை தென் திருப்பேரையிலும் சேவிக்கிறார்கள் என்று இன்று தான் அறிந்தேன்.
@KK,
the pasurams that i had been posting were chosen by the prabandham school. they have picked up those which will appeal to all...
btw, i am not sure how many (among men) will be able to relate themselves easily to nayaki bhavam...definitely i can't. :-)
imho, one should be very very privileged to have madhura bhakthi. you may find some interesting articles here:
http://godhaitamil.blogspot.com/
@Radha:
i am aware of only 10 paasurams regarding Thenthiruperai.
Those are by Nammazhwar.
Enga koil enbadhaal, i'll definitely be acquainted with the Paasurams there.
Thenthiruperai comes under the Navathirupathi, all of which have Nammazhwar Mangalasasanam. That too is quite understandable, as Nammazhwar was born in Azhwarthirunagari (5 km from Thenthiruperai), which is among these 9 temples situated on the banks of Thamaraparani.
----
And, i didn't know of the other Tiruperai. Maybe, that's why this is called 'Thenthiruperai".
@Radha: Can you please explain what Nayaki bhavam is? i hear that word a lot. :)
@Radha: Since i can't type in Tamil, i can't quote the pasurams i reffered to.
Irettai Thirupathi Tiruvaymozhi (6.5)
Thenthiruperai - 7.3.1-11
//In Love With Krishna said...
@Shailaja aunty (ok-va?):>>>>
OK!
.
//// one more question please:
Is there some other work of Nammazhwar other than Tiruvaymozhi?
Sorry to bug you with too many questions. i am just very curious
//<<<<>>>
திருவிருத்தம் எல்லாம் இதில்தான் அடங்கும்னு நினைக்கிறேன்... இன்னும் தெரிந்துகொண்டுவந்து உங்க கேள்விக்கு சரியா பதில் சொல்லவரேன் கேகே , ஒகேயா?:)
//In Love With Krishna said...
@Shailaja aunty (ok-va?):>>>>
OK!
.
//// one more question please:
Is there some other work of Nammazhwar other than Tiruvaymozhi?
Sorry to bug you with too many questions. i am just very curious
//<<<<>>>
திருவிருத்தம் எல்லாம் இதில்தான் அடங்கும்னு நினைக்கிறேன்... இன்னும் தெரிந்துகொண்டுவந்து உங்க கேள்விக்கு சரியா பதில் சொல்லவரேன் கேகே , ஒகேயா?:)
In Love With Krishna said...
@Radha: Can you please explain what Nayaki bhavam is? i hear that word a lot. :)
9:48 AM,
////<<<>>>>>>>நாயகிபாவம் என்பது தன்னைப்பெண்ணாய் பாவித்துக்கொண்டு பரமன் மீது ஆழ்ந்த காதல் கொள்வது. இரண்டு ஆழ்வார்கள் இப்படித்தங்களை மால்மீது மயக்கம்கொண்ட நங்கைகளாக மாறியதில் மனத்தை உருக்கும் பாடல்களைத்தந்துள்ளார்கள்.
இதை விரிவாகப்பேசவேண்டும் கேகே.
@Shailaja aunty:
Andal-ai vittuteengala or it refers to Alward assuming nayaki bhavam only-aa?
alwars*
You mean, Perumal as boyfriend?
Pesalaame, Pesalaame :)))
(Idhu sathyama not my idea, one of my friends at school started teasing PSP as my bf because i had His pic in my pouch)
In Love With Krishna said...
@Shailaja aunty:
Andal-ai vittuteengala or it refers to Alward assuming nayaki bhavam only-aa?
..////////
ஆண்டாளை விடறதா கே ஆர் எஸ் நெத்திக்கண்ணத்திறந்துடுவார்மா அவரோட ஜிக்ரி தோஸ்த் ஆண்டு:) அதாவது ஆண்டாள் தான் பெண் ஆச்சே எதுக்கு நாயகியாய் பாவிச்சிகக்ணும் அவளே நாயகி! அதுவும் அந்த நாளில் கண்ணனைத்தவிர வேற எந்த மன்னனையும் மணக்கமாட்டேன் என்ற புரட்சி நாயகி!
//In Love With Krishna said...
alwars*
You mean, Perumal as boyfriend?
Pesalaame, Pesalaame :)))
(Idhu sathyama not my idea, one of my friends at school started teasing PSP as my bf because i had His pic in my
/////<<<<<>>>>
boy friend girl friend என்று சும்மா தமாஷாய் சொல்லிக்கலாம் ஆனா நிஜத்தில் அந்தபுருஷோத்தமன் ஒருவனே ஆண் ஆகிறான் மற்ற பிரஜைகள் அனைவரும் பெண் என்ற பாவத்தில் அனைவரும் தன்னை பெண்ணாகபாவித்து அவனிடம் மனத்தை செலுத்துதல் என்னும் தத்துவார்த்த உண்மை இதில் அடங்கும். .
கேகே! நேரம் கிடைக்கறப்போ நாயகிபாவம் அதைப்பாடிய ஆழ்வார்பெருமைகள், திருமடல் இதையெல்லாம் சொல்றேன் என்ன? விடுமுறைநாட்கள் என்பதால் அதிகம் விவரமாய் இங்கே எழுத நேரம் கிடைப்பதில்லை. மேலும் விஷயம் அறிந்த பலர் அடக்கமா இருக்க நான் உளறிட்டு இருக்கேனோ என்று பயமா இருக்கு:)
@Shailaja aunty:
//விடுமுறைநாட்கள் என்பதால் அதிகம் விவரமாய் இங்கே எழுத நேரம் கிடைப்பதில்லை.//
Verupethadheenga! :(
i am not having holidays. :(
Rather, i have bonus exams :(((
Everyone i know is enjoying, except me. :((
//கேகே! நேரம் கிடைக்கறப்போ நாயகிபாவம் அதைப்பாடிய ஆழ்வார்பெருமைகள், திருமடல் இதையெல்லாம் சொல்றேன் என்ன?//
:))
//நிஜத்தில் அந்தபுருஷோத்தமன் ஒருவனே ஆண் ஆகிறான் மற்ற பிரஜைகள் அனைவரும் பெண் என்ற பாவத்தில் அனைவரும் தன்னை பெண்ணாகபாவித்து அவனிடம் மனத்தை செலுத்துதல் என்னும் தத்துவார்த்த உண்மை இதில் அடங்கும்.//
100% true! Romba azhaga soneenga! :)
i truly, truly agree with what you said, Aunty, but there is a little problem.
But, if you tell this to Him, like general manner, He will say - "ok, so I have infinite number of people calling me, so I have to go. Don't waste my time" and run away.
Better to make Him boyfriend, so He has to listen. :))
@KK,
Your boy-friend, PSP, will teach you what nayaki bhavam means and He will do that at the right time. Now you be a good girl, go and study well, finish your exams !!! :)))
Radha said...
@KK,
Your boy-friend, PSP, will teach you what nayaki bhavam means and He will do that at the right
psp=Parthasarathi PerumaL right?
kk!பார்த்தசாரதிப்பெருமானைப்பற்றி சீக்கிரமே எழுதறேன் ஒரு பதிவாக மகிழ்ச்சிதானே பெண்ணே?:)
@Radha:
//Now you be a good girl, go and study well, finish your exams !!!//
:(((
Finish agira madhiri theriyala...Thursday one set got over, Monday the next set begins. :((
@Shailaja aunty:
//பார்த்தசாரதிப்பெருமானைப்பற்றி சீக்கிரமே எழுதறேன்//
:))))
You are right aunty, boyfriend-nnu solvadhellam chumma vilaiyattu dhaan, He is the Lord to whom we are surrendered...
But, naan bf-nnu vilaiyattu panna neram avare unga blog-kku varaar partheengla???
Awaiting ur post :)