Saturday, December 04, 2010

த்யாகராஜ ராஜ ராகவ ப்ரபோ...


ஒரு தியாகராஜர் கீர்த்தனை. சற்றே சோகமானது. இரவில் கேட்கலாம் வகை.
உங்களுக்கு ராமர் பிடிக்கும் என்றாலோ, பொறுமைசாலி என்றாலோ நிச்சயம் இதனை விரும்புவீர். பாடலை முசிறி அவர்கள் பாடி, இங்கே கேட்கலாம்.

பாலமுரளி கிருஷ்ணா-சுசீலா பாடுவது, அதுவும் மெல்லிய குழுப் பாடலாக...கீழே கேளுங்கள்!

madhavipanthal.podbean.com


ராகம்: யதுகுல காம்போதி

பாஹி ராமசந்த்ர ! ராகவா ! ஹரே மாம்...
பாஹி ராமசந்த்ர ! ராகவா ! ஹரே ராமையா !

ஜனக ஸூதா ரமண காவவே கதி நீவு
கநுக நந்நு வேக ப்ரோவவே...

அம்புஜாக்ஷ வேக ஜூடரா நீ கடா-
க்ஷம்புலேனி ஜன்மமேலேரா...

சோதனலகு நேநு பாத்ரமா ராமையா ய-
சோதனுலகு நுதி பாத்ரமா...

ராஜராஜ பூஜித ப்ரபோ ஹரே
த்யாக ராஜராஜ ராகவ ப்ரபோ...


[பொருள்]
ஓ ராகவா ! ராமசந்த்ர ! ஜானகியின் மனதைக் கவர்ந்தவனே ! உன்னைத் தவிர வேறு கதியில்லை. என்னைக் காப்பாற்றுவாய் ! தாமரைக் கண்ணா ! விரைவில் கண்டு கொள் ! நின் கடைக்கண் பார்வை பெறாத பிறவி எதற்கு?
ஓ ராமையா ! பெரும் கீர்த்தி வாய்ந்தவர்கள் எல்லாம் புகழும்படியான பெருமை உடையவனே ! நீ சோதனைகள் செய்வதற்கு நான் தகுந்தவன் தானா? ராஜாதி ராஜர்களால் வணங்கப் பெற்ற தலைவனே ! த்யாகராஜனை ஆளும் ராகவனே !


languages->tamil என்பதன் தொடர் முயற்சியாக...
கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்ற பாரதியின் வாக்குக்கு இணங்க...
மேற்கண்ட தியாகராஜரின் பாடல், தமிழில், அதே மெட்டில்...

சரணம் ராம, சந்திர ராகவா - என்னை உனக்கு
சரணம் ராம, சந்திர ராகவா

சனகன் மகளின் மனத்துக் கினியவா - எந்தன்
கதியும் நீயே விரைந்து காக்கவா
(சரணம் ராம, சந்திர ராகவா)

விழித்-தாமரையால் என்னைக் காணப்பா - உந்தன்
பார்வை இல்லாப் பிறவி வீணப்பா!
(சரணம் ராம, சந்திர ராகவா)

சோதனைக்கு நானும் பொம்மையா? - உந்தன்
சாதனை தான் பேசும் தன்மையா?
(சரணம் ராம, சந்திர ராகவா)

ராஜராஜர் போற்றும் ராகவா - தியாக
ராஜராஜன் நீயே ராகவா!
(சரணம் ராம, சந்திர ராகவா)

15 comments :

Radha said...

http://thyagaraja-vaibhavam.blogspot.com/2008/02/thyagaraja-kriti-paahi-ramachandra-raga.html

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ராதா
நீ பல பதிவுகள் கண்ணன் பாட்டில் இட்டிருந்தாலும்,

இந்த ஒரே படம்+பதிவுக்காக,

உன்னை உள்ளத்து மகிழ்ச்சியோடு வாழ்த்துகின்றேன்!
கண்ணன் குழல் அமுதம் நீங்காத துழாய்க் காட்டிலே (பிருந்தா வனத்திலே), நீயும் உடனிருந்து நீங்காத செல்வம் நிறைந்தேலோ! நிறைந்தேலோ!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ராஜ ராஜ ராகவ ப்ரபோ...
ராஜ ராஜ ராகவ ப்ரபோ

என்னுடைய இன்னமுதே
ராகவா! ராகவா!

நீ கடாக்ஷம்பு லேனி ஜன்மமே லேரா...
ராகவா, ராகவா!
ராகவா ராகவா!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கடைசி வரிகளைப் பாருங்கள்...

ராஜராஜ பூஜித ப்ரபோ - ஹரே த்யாக
ராஜராஜ ராகவ ப்ரபோ

உனக்கு, பல ராஜர்களின் ராஜன் என்ற பெருமை வேண்டுமானால் இருக்கலாம்!
எனக்கு, தியாக ராஜனின் ராஜன் என்ற பெருமை மட்டுமே! ராகவா!

ராஜ ராஜ - தியாக ராஜ ராஜ என்பதில் எத்தனை சொல்லாட்சி! சொல்லாட்சி மட்டுமா? மனசு-ஆட்சி அல்லவா அங்கே தெரிகிறது!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அந்தப் படத்தை, அன்பர்கள் அனைவரும் சொடுக்கிப் பெரிதாக்கிப் பார்க்கவும்! அப்படியொரு நிம்மதி அந்தப் படத்தில்!

ராகவா, ராகவா
இப்படி ஒரு இன்பமா!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மெட்டு மாறாமால் தமிழில் பாடிப் பார்த்த போது வந்த வரிகள் இவை: தியாகராஜர் திருவடிகளே சரணம்!

சரணம் ராம, சந்திர ராகவா - என்னை உனக்கு
சரணம் ராம, சந்திர ராகவா

சனகன் மகள் மனத்துக் கினியவா - எந்தன்
கதியும் நீயே விரைந்து காக்கவே
(சரணம் ராம, சந்திர ராகவா)

விழித் தாமரையால் என்னைக் காணப்பா - உந்தன்
பார்வை இல்லாப் பிறவி வீணப்பா!
(சரணம் ராம, சந்திர ராகவா)

சோதனைக்கு நானும் பொம்மையா? - உந்தன்
சாதனைகள் பேசும் தன்மையா?
(சரணம் ராம, சந்திர ராகவா)

ராஜராஜர் போற்றும் ராகவா - தியாக
ராஜராஜன் நீயே ராகவா!
(சரணம் ராம, சந்திர ராகவா)

sury siva said...

பாட்டினைக்கேட்டேன்.
மெய் சிலிர்த்தேன்.
உருகி நின்றேன்.
உன்மத்தமானேன்.

கே ஆர் எஸ்ஸின் தமிழாக்கம்
கடைந்தெடுத்த புது வெண்ணையாக்கும் !

இந்த பிட்சில் பாட இயலுமா என்ன !

சுப்பு தாத்தா.

Kavinaya said...

//உங்களுக்கு ராமர் பிடிக்கும் என்றாலோ, பொறுமைசாலி என்றாலோ//

நானு :)

பாடலும், கண்ணனின் தமிழாக்கமும், படமும், எல்லாமே சுகம்.

ஸ்ரீ ராமஜெயம். நன்றி ராதா.

Radha said...

ரவி,
இந்தப் படம் மயிலாப்பூர் கபாலி கோயில் வாசல்ல வாங்கினேன். பார்த்த உடனே பிடித்து போனது. :-)
என்ன ஒரு அற்புதமான அமைதியான கம்பீரமான அழகு !! கல்யாண group photo மாதிரி இருக்கு. :-))

Radha said...

//உனக்கு, பல ராஜர்களின் ராஜன் என்ற பெருமை வேண்டுமானால் இருக்கலாம்!
எனக்கு, தியாக ராஜனின் ராஜன் என்ற பெருமை மட்டுமே! ராகவா! //
ஆஹா ! படம், பதிவு எல்லாம் சொல்லாம விட்டதை சொன்னமைக்கு உன் தோழி கோதையுடன் பிரிவின்றி பல்லாண்டு ! :-)

Radha said...

தமிழ் மொழியாக்கம் மிக அருமை.

Radha said...

//இந்த பிட்சில் பாட இயலுமா என்ன ! //
சுப்பு தாத்தா,
முசிரி அவர்களின் speciality அது தான் என்று ஓரளவு சங்கீத ஞானம் படைத்த எனது சில நண்பர்கள்
சொல்கிறார்கள். இவர் பாடுவதில் பாவம்(bhavam) அவ்வளவு அருமையாக இருக்கிறது. நெஞ்சோடு நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில்...

Radha said...

//ஸ்ரீ ராமஜெயம். //
நானும் சொல்லிக்கறேன் அக்கா. :-)
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம !
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம !

நாடி நாடி நரசிங்கா! said...

மிக்க நன்றி ராதா:)

Radha said...

பால முரளி - சுஷீலா பாடியதை இணைத்தமைக்கு நன்றி ரவி.

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP