Tuesday, April 13, 2010

மூங்கிலுக்கு முகவரி தந்தவன் யார்? ஏன்?

அனைத்து அன்பர்களுக்கும் இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்!
நிங்களுக்கு கண்ணன் பாட்டு மக்களோடே விஷூ ஆஷம்சகள்!
ஈ புது வருஷத்தில், நிங்களுக்கு நல்லது வரட்டே, பாக்யம் கடாஷிக்கட்டே! :)

கண்ணன் பாட்டில், தொடர்ந்து...வாசகர்கள் எழுதி இடும் கவிதைகள்! அந்த வரிசையில் இன்று சித்ரம் ஐயா!
ஆனா ஏதோ அவரு நம்மளைக் கேள்வி கேக்குறாப் போல கவிதை எழுதி இருக்காரு! என்னவாம்? மூங்கிலுக்கு முகவரி தந்தவன் யார்? :)



கண்ணன் கையில் புல்லாங்குழல் இருக்கக் காரணம் என்ன?
வேற எந்த ஆயர்களோ, மாடு மேய்ப்பவர்களோ புல்லாங்குழல் வச்சிருந்ததா காணோமே?
கண்ணன் கையில் மட்டும் இந்த Weapon of Mass Destruction எப்படிக் கிடைச்சுது? :)

யாராச்சும் Giftஆ கொடுத்தாங்களா? அது அப்படியே ஒட்டிக்கிச்சா?
மகாபாரதம் அல்லது பாகவதம் கதையைப் படிச்சவங்க, கொஞ்சம் ஹெல்ப் ப்ளீஸ்! :)



மூங்கிலுக்கு முகவரி தந்த கண்ணா
முத்து மணி மாலை அணிந்த வண்ணா
(மூங்கிலுக்கு)

வெள்ளை மனம் உள்ளம் கொண்டு - என்
வெண்ணை திண்ண நீ வாருவாய்
வெங்கல பானை உருளக் கண்டேன் - அதில்
வெண்சங்கு மணி ஓசை கேட்டேன்!
(மூங்கிலுக்கு)

அமுத வாயில் குமுத மொழி பேசி
அன்ன நடை நடந்த அழகா
அலைகடல் மீது உனது ஆனந்த நடனமதை
ஆயர்ப்பாடி மக்களை கண் குளிர வைத்தாயே
(முங்கிலுக்கு)

வெண் பனி மேகங்கள் உறவாட
வெள்ளை மலர்ப் பூ மழையாக
வெந்தபூமி தணித்த நின் கருணை
வேதமானவனே கீதை நாயகனே நீயே
(மூங்கிலுக்கு)

குழல் ஊதிய கண்ணணுக்கு ...சித்ரம் ..//

15 comments :

குமரன் (Kumaran) said...

மூங்கிலால் செய்யப்பட்ட குழலுக்கு முகவரி தந்தவன் கோபாலன் தான்!

யாராவது புல்லாங்குழல் ஊதுவதைக் கண்டால் உடனே மூன்று வயது சேந்தன் 'கோபாலா! கோபாலா!' என்கிறான்!

Raghav said...

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களேன்னு ஒருத்தர் பாடினா.. இங்கே மூங்கிலின் முகவரி கொடுத்தவரை தேடும் பாடல் நன்றாகவே உள்ளது..

கண்ணனுக்கு கிப்ட்டாக வந்தது தானே புல்லாங்குழல்.. குழலைக் கொடுத்து இதனைக் கற்றுக்கொள்ள நாட்களாகும் என்று சொல்ல, உடன் கண்ணன் சரஸ்வதியை வேண்டி.. அமுத கானத்தை பொழிய ஆரம்பிப்பான்

Raghav said...

//வெண்ணை திண்ண நீ வாருவாய் //

வாருவாயா ??? கண்ணன் வெண்ணை தின்ற போது சிந்தியதில் யாரும் வழுக்கி விழுந்ததை தான் வாரி விட்ட கண்ணன்னு சொல்றீங்களா ? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கண்ணனுக்கு கிப்ட்டாக வந்தது தானே புல்லாங்குழல்..//

அப்படியா? அது என்ன கதை? கொஞ்சம் சொல்லுங்களேன்!

//கண்ணன் சரஸ்வதியை வேண்டி..//

பாருங்க, அப்ப கூட கண்ணன் சரஸ்வதியைத் தான் வேண்டுகிறான்! பிரம்மாவையோ பணிய வைக்கிறான்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மூங்கிலால் செய்யப்பட்ட குழலுக்கு முகவரி தந்தவன் கோபாலன் தான்!//

ஏன் குமரன், என் முருகனுக்கு புல்லாங்குழல் எங்குமே காட்டப்பட வில்லையா என்ன? சங்க இலக்கியத்தில் கூட? (இதுக்கு ஒரு படத் தரவு இருக்கே! :))

//யாராவது புல்லாங்குழல் ஊதுவதைக் கண்டால் உடனே மூன்று வயது சேந்தன் 'கோபாலா! கோபாலா!' என்கிறான்!//

:)
கோபாலா கோபாலா
மலையேறு கோபாலா!

குமரன் (Kumaran) said...

முருகனுக்கும் புல்லாங்குழல் உண்டு என்று சொல்லும் இலக்கியத் தரவை தாருங்கள் இரவி. எனக்கு ஏற்கனவே தெரிந்திருந்தாலும் இப்போது நினைவில்லை. என் மறதியைப் பற்றி தான் உங்களுக்குத் தெரியுமே! :-)

படத்தரவு எனக்கு அவ்வளவா பயன்படாது இரவி! ஆனால் அத்தரவுகளை மிகவும் விரும்பும் நம் நண்பர் காலத்தின் உரிமையாளருக்காக அதனையும் இடுங்கள்!

Rajewh said...

கண்ணனைச் சுவைத்து மகிழ...இதர தளங்கள்:::))

இந்த பதிவு --- not open..
i dont know what happen..

Rajewh said...

கண்ணன் கையில் புல்லாங்குழல் இருக்கக் காரணம் என்ன?

எளிமையே உருவானவன்.
எளிமையைதானே விரும்புவான்.
எளிமையான இசைக்கருவி புல்லாங்குழல்

Rajewh said...

வேற எந்த ஆயர்களோ, மாடு மேய்ப்பவர்களோ புல்லாங்குழல் வச்சிருந்ததா காணோமே?

எல்லாரும் மாடு மேய்க்கிற குச்சியில் ஒன்றாக மூங்கிலை பார்க்க
கண்ணனோ மாடு மேய்த்த கையோடு ஊதியும் பார்த்தான்.
இசை வந்தது . புல்லாங்குழலாக மாறியது.
....not sure...

Rajewh said...

சித்ரம் பாடல் வரிகள் அற்புதமா இருக்குங்க!
இசை வடிவம் கொடுத்தால் மேலும் அழகு பெரும்.

Rajewh said...

வெண்ணை திண்ண நீ வாருவாய்:::)))))


என்னங்க ஒரே காமெடியா இருக்கு
கண்ணனை கிண்டல் பண்றீங்களா!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கண்ணனைச் சுவைத்து மகிழ...இதர தளங்கள்:::))
இந்த பதிவு --- not open..
i dont know what happen..//

Rajesh, Thatz only title...
The links are listed below that and on the left & right sides!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//எல்லாரும் மாடு மேய்க்கிற குச்சியில் ஒன்றாக மூங்கிலை பார்க்க
கண்ணனோ மாடு மேய்த்த கையோடு ஊதியும் பார்த்தான்//

achicho! maadu meikka moongil use panna koodathu...moongil-la thattinaa romba valikkum...very strong...
maadu meikkum kuchi-kku peru cheNdai! athula oru kayiRu kothu thaan maattai thattuvaanga! or some times light perambu! but definitely not mooNgil!

And kannan never uses the cheNdai for cows...Cholla ponaa, he will act like a cow himself and tame them. aathula thaNNi kudikka, he will use his hands & legs as 4 legs, and teach the calves how to drink, even if the river runs fast...Appdipattavan kannan...he will never whip the cows!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வெண்ணை திண்ண நீ வாருவாய்:::)))))

என்னங்க ஒரே காமெடியா இருக்கு
கண்ணனை கிண்டல் பண்றீங்களா!//

he he...may be typo from chitram ayya...but itz true in one way! :)

After stealing, kannan gives the pot to friends only. Then only he gets down from the shoulders of kuchelan. By that time, these fellows have eaten the butter half way through! Poor boy, he "vaarufied" the leftovers only! :)

Thilaga. S said...

//வெண் பனி மேகங்கள் உறவாட
வெள்ளை மலர்ப் பூ மழையாக//

அழகான அற்புதமான வரிகள்..

எல்லோரும் இந்த புத்தாண்டில் கண்ணனின் திருவருளால் நலம், வளம் பெறுவார்களாக.

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP