பி.சுசீலா in solo: கண்ணாஆஆஆ, கருமை நிறக் கண்ணா!
கண்ணன் பாட்டு குழுவினருள் மிக முக்கியமானவரும், கண்ணனுக்கு கோவர்த்தனத்திலே சொந்தக்காரருமான திருவாளர் ராதாமோகன்!
எப்படிச் சொந்தம்-ன்னு கேட்காதீங்க! ஒன்னு விட்ட சித்தப்பா பையனாவும் இருக்கலாம், இல்லை மூனு விட்ட முத்தப்பா பையனாகவும் இருக்கலாம்! :)
அவர், கண்ணன் பாட்டின் கெட்டப் சேஞ்சில் மயங்கிப் போய், சைட் பாரில் இருக்கும் பாட்டையெல்லாம் பார்த்து விட்டு, குற்றங் குறைகளை அடுக்க ஆரம்பித்து விட்டார்!
இதுக்குத் தான் நாமளே பட்டியல் போட்டு மாட்டிக்க கூடாது-ன்னு சொல்லுறது!
இப்போ பட்டியலைப் பார்த்து, யாரு வேணும்-ன்னாலும், கேள்வி் எழுப்பலாம் பாருங்க! சொ.செ.சூ = சொந்த செலவில் சூயிங்கம்! :)
அவர் நேயர் விருப்பமாகக் கொடுத்துள்ள பல திரைப்பாடல்கள், முன்பே கண்ணன் பாட்டில் வந்து விட்டன! ஆனால்...ஆனால்...ஆனால்...
ஒரு பாட்டு, ஒரே ஒரு பாட்டு, அது மிஸ் ஆகியிருக்கவே கூடாத பாட்டு!
இவ்ளோ நாள் எப்படி மிஸ் ஆச்சு-ன்னே் தெரியலை! இத்தனைக்கும் என் மனசில் நிலாவி உலாவும் பாட்டு!
இப்போ, முருகனருள்-150ஆம் பதிவால், அது கண்ணன் பாட்டில் பின்னூட்டமா எழுப்பப்பட்டு, இப்படி Trigger ஆகணும்-ன்னு இருக்கு போல!
என் முருகா! ஆராய்ந்து அருளேலோ-ன்னு இல்லாம, விட்டுப் போனதைக் கூட, நீயாக வந்து அருளுகிறாயே! நீயல்லவா பக்தவத்சலன் = அடியார்க்கு நல்லான்!
இந்தப் பாட்டுக்கு என் மனசு கிறங்கிப் போகும்! ஏன் தெரியுமா?
மனம் பார்க்க மறுப்போர் முன்............. படைத்தாய் கண்ணா!
இனம் பார்த்து எனைச் சேர்க்க ............. மறந்தாய் கண்ணா! கண்ணாஆஆஆ.....
புகுந்த வீட்டில் அன்பைப் பெற ஏங்கும் ஒரு ஜீவன்!
ஆனால் அது எத்தனை தான் நல்லபடியா பார்த்து பார்த்து நடந்துக்கிட்டாலும், அதுக்கு-ன்னு வாய்ச்சது என்னமோ உதாசீனமும், வெறுப்பும் தான்!
"நம்மை ஒருத்தர் வெறுக்கறாங்க-ன்னு தெரிஞ்சா, நாமளா ஒதுங்கிக்கணும்! எதுக்குப் போயி போயி அவமானப் படணும்?
நீ என்ன தான் முயற்சி செஞ்சாலும் சரி, நல்லபடியா நடந்துக்கிட்டாலும் சரி, அவரோட அன்பை உன்னால் பெற முடியாது! அவமானத்தைத் தான் பெற முடியும்!"
- இதுக்கு அவ என்ன பதில் சொல்லுறா? இதை அவமானமாக எடுத்துக் கொள்வாளா? நீங்களே கேளுங்க, ஆரம்பப் பகுதியின் உரையாடலை!
அப்படியே....சுசீலாம்மாவின் சுகமான சோகத்தில் கேட்டுக்கிட்டே படிங்க!
Also, just before the song starts, a flute piece will float, as she runs singing kaNNaaa! Dont miss that!
கண்ணாஆஆஆஆஆ
கருமை நிறக் கண்ணா
உன்னைக் காணாத கண் இல்லையே!
உன்னை மறுப்பாரில்லை
கண்டு வெறுப்பாரில்லை
என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லை!
(கண்ணாஆஆஆஆஆ)
மனம் பார்க்க மறுப்போர் முன், படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுப்போர் முன், கொடுத்தாய் கண்ணா
இனம் பார்த்து எனைச் சேர்க்க, மறந்தாய் கண்ணா
நல்ல இடம் பார்த்துச் சிலையாக அமர்ந்தாய் கண்ணா!
(கண்ணாஆஆஆஆஆ)
பொன்னான மனம் ஒன்று தந்தாய் கண்ணா
அதில் பூப் போன்ற நினைவொன்று வைத்தாய் கண்ணா
கண் பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா
எந்தக் கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா?
(கண்ணாஆஆஆஆஆ)
படம்: நானும் ஒரு பெண்
குரல்: பி.சுசீலா
இசை: ஆர்.சுதர்சனம்
வரிகள்: கண்ணதாசன்
கவியரசர் கண்ணதாசனால் மட்டுமே இப்படி உள்ளத்தின் உண்மையை, பாட்டில் கொண்டு வர முடியும்!
சுசீலாம்மா பாடிய Solo-க்களில் மிகவும் உன்னதமான Solo Piece இது!
இந்த Solo-வில், அவர் உச்சரிக்கும் ஒவ்வொரு சொல்லிலும் ஈரம் இருக்கும்!
துள்ளலான கிக்-கான ரொமான்டிக் பாடல்களுக்கு ஜானகி என்றால்...
சுகம், சோகம், தாலாட்டு, மென்மை என்பதற்கெல்லாம் சுசீலாம்மா!
Janaki Madam is a Very Good Companion = When You are in Happy Times! But Am I always so? This is where you might need Susheelamma!
மனம் பார்க்க மறுப்போர் முன் படைத்தாய் கண்ணா! இனம் பார்த்து எனைச் சேர்க்க மறந்தாய் கண்ணா!
ஹைய்யோ...இனம் பார்த்து இவளைச் சேர்க்க முடியாமல் போன கண்ணனே! நீயும் ஒரு தெய்வமா? எந்தக் கடன் தீர்க்க இவளை நீ படைத்தாய் கண்ணா?? கண்ணாஆஆஆ...கருமை நிறக் கண்ணா!
சுசீலாம்மாவின் முன்னால், அதே பாட்டைப் பாடும் சின்னஞ் சிறு சிறுமி!
7 comments :
ஜெயபார்க்கவியும் நல்லா பாடுனாங்க!
கண்ணன் பக்தர்களுக்கு ஒர் அற்புதமான வலைத்தளம்..
//குமரன் (Kumaran) said...
ஜெயபார்க்கவியும் நல்லா பாடுனாங்க!//
:)
உங்களுக்குப் பிடிக்கும்-ன்னு தெரியும், இது போல போட்டி நிகழ்ச்சிகள்...அதான் போட்டேன்!
ஆனால் பாட்டில் அந்த ஈரம் சின்னக் குழந்தை கிட்ட எதிர்பார்க்க முடியாது அல்லவா!
//வைகறை நிலா said...
கண்ணன் பக்தர்களுக்கு ஒர் அற்புதமான வலைத்தளம்..//
நன்றி வைகறை நிலா!
நான் கண்ணன் பக்தன் அல்ல! :)
ஆனா பாடல்கள், இசை ரொம்ப பிடிக்கும்! அதனால் கண்ணன் பாட்டு வலைப்பூ பிடிக்கும்!
அற்புதமான பாடலுக்கு நிறைய நன்றிகள். இரவில் கேட்க இன்னும் அருமையாக இருக்கும். இது போன்ற அற்புதமான பாடல்களை தொகுத்து ஒரு சிடி போட்டு அடுத்த முறை நாம சென்னை - காஞ்சிபுரம் போகும் பொழுதோ அல்லது இரவில் திரும்பி வரும் பொழுது கேட்டுக் கொண்டே வரலாம். :)
//Radha said...
அற்புதமான பாடலுக்கு நிறைய நன்றிகள்//
:)
//இரவில் கேட்க இன்னும் அருமையாக இருக்கும்//
ஆமாம்! esp susheelamma's songs!
//இது போன்ற அற்புதமான பாடல்களை தொகுத்து ஒரு சிடி போட்டு அடுத்த முறை நாம சென்னை - காஞ்சிபுரம் போகும் பொழுதோ அல்லது இரவில் திரும்பி வரும் பொழுது கேட்டுக் கொண்டே வரலாம். :)//
அட...திட்டம் எல்லாம் இப்பவே போட்டிங்கா? :)
ஆனா காரை மட்டும் நான் தான் ஓட்டுவேன் சொல்லிட்டேன்!
btw, bangalore poyittu vanthu, appram irukkura time-la thaan all chennai visits, okay-vaa? :)
பாடல்கள் நிறைய கேட்கமுடியவில்லை. குறிப்பாக கண்ணன் வந்தான் இராமன் எத்தனை இராமனடி என்ற பாடல்கள் ஏன்?