Tuesday, March 23, 2010

கணபுரத்தென் கருமணியே ! இராகவனே தாலேலோ !



மன்னுபுகழ் கௌசலை தன் மணிவயிறு வாய்த்தவனே !
தென்னிலங்கைக் கோன் முடிகள் சிந்துவித்தாய் ! செம்பொன் சேர்
கன்னிநன் மாமதிள்  புடைசூழ்  கணபுரத்தென் கருமணியே !  
என்னுடைய இன்னமுதே ! இராகவனே தாலேலோ !

[பெருமாள் திருமொழி (8-1)]

மேலே உள்ள திவ்ய பிரபந்த பாசுரம், குலசேகர ஆழ்வார் ராமனைக் குழந்தையாக பாவித்து தாலாட்டாக பாடியது.   இன்று ராம நவமியை முன்னிட்டு இந்தப் பாடல்களை பதிவு செய்யலாம் என்று வந்தால், நம் குமரன் ஏற்கனவே இங்கே பொருளுடன் பதிவு செய்துள்ளார். :)

சரி, அதனால் என்ன? இந்த முறை ஆழ்வார்களின் பாசுரங்களே வாழ்வாகக் கொண்ட "அரையர் சுவாமி ஸ்ரீ ராமபாரதி"யின் குரலில் இந்த பாசுரங்களை இங்கு கேட்டு மகிழலாம்.


புண்டரிக மலர் அதன் மேல் புவனியெல்லாம் படைத்தவனே!
திண் திறலாள் தாடகை தன் உரம் உருவச் சிலை வளைத்தாய்!
கண்டவர் தம் மனம் வழங்கும் கணபுரத்தென் கருமணியே!
எண் திசையும் ஆளுடையாய்! இராகவனே! தாலேலோ!

கொங்கு மலி கருங்குழலாள் கோசலை தன் குலமதலாய்!
தங்கு பெரும் புகழ்ச் சனகன் திருமருகா! தாசரதீ!
கங்கையிலும் தீர்த்த மலி கணபுரத்தென் கருமணியே!
எங்கள் குலத்தின்னமுதே! இராகவனே! தாலேலோ!



தாமரை மேல் அயன் அவனைப் படைத்தவனே! தசரதன் தன்
மாமதலாய்! மைதிலி தன் மணவாளா! வண்டினங்கள்
காமரங்கள் இசை பாடும் கணபுரத்தென் கருமணியே!
ஏமருவும் சிலை வலவா! இராகவனே! தாலேலோ!



பாராளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி
ஆரா அன்பு இளையவனோடு அருங்கானம் அடைந்தவனே!
சீராளும் வரை மார்பா! திருக்கண்ணபுரத்தரசே!
தாராளும் நீண்முடி என் தாசரதீ! தாலேலோ!
 
 
சுற்றம் எல்லாம் பின் தொடரத் தொல் கானம் அடைந்தவனே!
அற்றவர்கட்கு அருமருந்தே! அயோத்தி நகர்க்கு அதிபதியே!
கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத்தென் கருமணியே!
சிற்றவை தன் சொல்கொண்ட சீராமா! தாலேலோ!
 
ஆலின் இலைப் பாலகனாய் அன்றுலகம் உண்டவனே!
வாலியை கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே!
காலின் மணி கரையலைக்கும் கணபுரத்தென் கருமணியே!
ஆலிநகர்க்கதிபதியே! அயோத்திமனே! தாலேலோ!
மலையதனால் அணை கட்டி மதிளிலங்கை அழித்தவனே!
அலைகடலைக் கடைந்து அமரர்க்கு அமுதருளிச் செய்தவனே!
கலை வலவர் தாம் வாழும் கணபுரத்தென் கருமணியே!
சிலை வலவா! சேவகனே! சீராமா! தாலேலோ!


தளை அவிழும் நறுங்குஞ்சித் தயரதன் தன் குலமதலாய்!
வளையவொரு சிலையதனால் மதிளிலங்கை அழித்தவனே!
களை கழுநீர் மருங்கு அலரும் கணபுரத்தென் கருமணியே!
இளையவர்கட்கு அருளுடையாய்! இராகவனே! தாலேலோ!



தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே!
யாவரும் வந்தடி வணங்க அரங்க நகர் துயின்றவனே!
காவிரி நல் நதி பாயும் கணபுரத்தென் கருமணியே!
ஏவரி வெஞ்சிலை வலவா! இராகவனே! தாலேலோ!





கன்னி நன் மா மதிள் புடை சூழ் கணபுரத்தென் காகுத்தன்
தன்னடிமேல் தாலேலோ என்றுரைத்த தமிழ்மாலை
கொல் நவிலும் வேல் வலவன் குடைக்குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே!

அப்படியே, ராம நவமியை முன்னிட்டு திருவரங்க ப்ரியா (என்ற நம் ஷைலஜா அக்கா)
பாடிய பஜன் - "ராமா ராகவா ஜெய சீதா நாயகா" இங்கே கேட்கலாம். :-)

~
கிரிதாரியின்,
ராதா

16 comments :

Kannabiran, Ravi Shankar (KRS) said...

Happy Birthday Rama! :)
Lullaby da Ragava! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

Appdiye
Happy Birthday Bharatha!
Happy Birthday Lakshmana!
Happy Birthday Shatrughana!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பாசுரங்களுக்கும், அருமையான படங்களுக்கும் நன்றி ராதா!

ஸ்ரீராம பாரதி இரண்டு பத்திகளே பாடினாலும், very soul stirring!
I am happily sleeping now! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

To very famous Kousalya, Born in her blessed womb!
Gloriously Lankan king, You sent him to blessed tomb!
Ramparts of Kannapuram, rightfully own you thee!
My nectar Ragava oh, here is your lulla-bee!

:)
Happy bday Raamu! Goto sleep :)

ஷைலஜா said...

ஸ்ரீ ராமபாரதியின் விளக்கத்துடன் அருமையான கணீரென்ற குரலுடன் மனத்தை நிறைக்கும் பதிவு.

ஷைலஜா said...

//தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே!
யாவரும் வந்தடி வணங்க அரங்க நகர் துயின்றவனே!
காவிரி நல் நதி பாயும் கணபுரத்தென் கருமணியே!
ஏவரி வெஞ்சிலை வலவா! இராகவனே! தாலேலோ!

////////

கண்ணபுரத்துக்கருமணியே அரங்கத்தில் துயிலும் கண்மணியே!
அருள்வாய் அனைவர்க்கும் உனைச்
சரண் என்றே அடைந்தோமே!

இன்று இதை அளித்த என் சகோதரமணியே!

வாழ்க வாழ்க,பல்லாண்டு இனியே!

ஷைலஜா said...

படங்கள் கொள்ளை அழகு!

Raghav said...

என்னுடைய இன்னமுதே ராகவா..பிறந்த நாள் வணக்கங்கள்..

Raghav said...

ஸ்ரீராமபாரதி.. பெயரிலேயே அவன் திருநாமத்தைக் கொண்டிருப்பதால்.. அருமையாகத் தாலாட்டுகிறார்.. இப்போ தான் மாதவிப்பந்தலில் அழுத கண்களுடன் இங்கே வந்தால்.. ஆனந்தமாக தாலாட்டி விட்டீர்கள்.. நன்னி ராதா..

Raghav said...

படங்கள் மிக அருமை.. மூன்றாவது படத்தில்..வில்லும், அம்பும்.. அழகான கெளபீனமும்... நீல வண்ணத் திருமேனியும்.. முத்தாரமும்.. முடிந்து வைத்த திருமுடியும், பச்சைப்பட்டும்.. புன்முறுவலும்.. எங்கள் இன்னமுதத்தை.. மனத்துக்கினியானை என் கண் முன்னே நிறுத்துகின்றன..

Radha said...

அக்கா, உங்க பாட்டை உங்க சகோதரமணிகள் ரவியும் ராகவும் கேட்காமே போறாங்க பாருங்க.
விடாதீங்க. பிடிங்க. :)

ராகவ்,
உங்களுக்கு பிடித்த அந்தப் படம் உங்க அண்ணன் கொடுத்தது. அவருக்கு முக்கியமா நன்றி சொல்லுங்க. :)

Rajewh said...

நன்றி .

பிறந்த நாள் நல்வாழ்துக்கள் ஸ்ரீ ராமா!
Enjoy every body.. hanuman , & all bakthaas

குமரன் (Kumaran) said...

பாசுரத்துடன் அக்கா பாடிய 'ராமா ராகவா' பஜனும் நன்றாக இருக்கிறது.

ஷைலஜா said...

//Radha said...
அக்கா, உங்க பாட்டை உங்க சகோதரமணிகள் ரவியும் ராகவும் கேட்காமே போறாங்க பாருங்க.
விடாதீங்க. பிடிங்க. :)

////////


பரவால்ல ராதா! அவங்கள்லாம் சுசீலாம்மா ஜானகிம்மா சின்னக்குயில்சித்ரான்னாதான் கேட்பங்கபோல்ருக்கு ஆனா குமரன் தங்கத்தம்பி. மணியானதம்பி அதான் சொல்லிருக்கார் நன்றி குமரன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அடேய் ராதா,
தாலேலோ பதிவுல வந்து கோளேலோ சொல்றியா நீயி? :)

அக்கா...ராதாவை நம்பாதீங்க...உங்க முழுப்பாட்டும் கேட்டு...பதிவில் இவன் எழுதியதைத் திருத்தம் வேற பண்ணேன்!

ஷைலஜா பாடும் பாட்டு-ன்னு போட்டிருந்தான்!
நான் தான் பஜன் பேரும் சேர்த்து - ராமா ராகவா ஜெய சீதா நாயகா-ன்னு பாடறாங்க-ன்னு மாத்தினேன்!
என்னிக்கும் உங்கச் செல்லத் தம்பி நான் மட்டுமே! சத்யம் சத்யம் புன சத்யம்! :))

ஷைலஜா said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
அடேய் ராதா,
தாலேலோ பதிவுல வந்து கோளேலோ சொல்றியா நீயி? :)

அக்கா...ராதாவை நம்பாதீங்க...உங்க முழுப்பாட்டும் கேட்டு...பதிவில் இவன் எழுதியதைத் திருத்தம் ”வேற ”பண்ணேன்! >>>>>>


இந்த ‘வேற’ மட்டும் இடம் மாறி இருந்தா நொந்தே போயிருப்பேன்:):)



//ஷைலஜா பாடும் பாட்டு-ன்னு போட்டிருந்தான்!
நான் தான் பஜன் பேரும் சேர்த்து - ராமா ராகவா ஜெய சீதா நாயகா-ன்னு பாடறாங்க-ன்னு மாத்தினேன்!
என்னிக்கும் உங்கச் செல்லத் தம்பி நான் மட்டுமே! சத்யம் சத்யம் புன சத்யம்! :))///

10:38 AM, March 25, 2010
/////


ஐயோ செல்லமே அன்புத்தம்பியே!
அதானே பாத்தேன் ! மானசீகமா நீங்க பாராட்டினதை நானும் கேட்டேன் ரவி ! நன்றி சுபுத்ர! ஆயுஷ்மான் பவ!

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP