Friday, February 26, 2010

அருள் பாடும் பறவை - பக்த மீரா


ராகம்: கமாஸ்

மறைந்த கூண்டில் இருந்து விடுதலை பிறந்த பறவை விரைந்தோடுதே !
நிறைந்த வெளி நீல வானிலே தன்னை மறந்து இறைவன் அருள் பாடுதே ! - மடை
திறந்த வெள்ளம் போல் என் உள்ளம் கண்ணனின் மலர்ந்த கருணை கழல் நாடுதே !
பிறந்த பயன் இன்றடைந்த மீராவின் உயிர் உவந்து ஆனந்த கடலாடுதே !

பாடல் பின்னனி:
பக்த மீரா அரண்மனை வாழ்வைத் துறந்து, கண்ணனைத் தேடும் ஆனந்த பயணத்தைத் தொடங்கும் கட்டம். இந்தப் பாடல் சோகத்தையும் ஆனந்தத்தையும் ஒருங்கே தர வல்லது. பாடல் தரும் அனுபவம் கேட்பவர் மனநிலையைப் பொருத்த விஷயம். :)

பாடலை எம்.எஸ் அவர்களின் தேன் போன்ற  குரலில் இங்கே கேட்கலாம்.
~
கிரிதாரியின்,
ராதா

17 comments :

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஹே...இது எப்போ போட்டீங்க?

அப்பறம் அந்தப் படத்தில் உள்ள அந்தக் கோலக் கிளி நான் தான்! :)
மதுரை மீனாட்சியம்மனைப் பார்க்க, விடியற்காலை கூண்டில் இருந்து பறந்து போயிக்கிட்டு இருக்கேன்!
அப்பறம் மதியம் போல...திருமாலிருஞ்சோலை அழகர் கோயிலுக்குப் பறந்து போயிருவேன்!

அழகரைப் பார்க்கவா? உம்ம்ம்ம்...சரி பாத்துக்கலாம்...ஆனா ஆனா ஆனா...அந்த நூறு தடா அக்கார அடிசில்! :)
அதுக்குத் தான்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அக்கார அடிசில் சாப்பிட்டுப் பார்த்தேனா...பரவாயில்லை...ஓக்கே தான்! கூட அழகர் கோயில் பிட்சா பிரசாதம் வேற கொடுத்தாங்க! ஆனா அதைத் தோசை-ன்னு சொல்லணும்-ன்னு சொல்லிட்டாங்க! சரி "கல்லு" தோசை-ன்னு சொல்லீறலாம் :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஆனா நான் கீசுகீசு வென்று இன்னும் அழகர் மலைக்கு மேல பறந்து போவேன்.....
ஏன்னா
ஏன்னா
ஏன்னா
அங்கே இதை விடத் தித்திப்பான அக்கார அடிசில் ஒன்னு இருக்கு. கையில் வேல் வச்சிக்கிட்டு! :)

கீசுகீசு என்று அங்கேயே இருந்துருவேன்!
அத்தைத் தின்று அங்கே கிடப்பேன்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பாடல் தரும் அனுபவம் கேட்பவர் மனநிலையைப் பொருத்த விஷயம். :)//

கேட்டேன் ராதா!
சோகானந்தம்!
கிளிப்படம் பார்த்தவுடனேயே என்னமோ போல் இருந்துச்சி!
பாட்டைக் கேட்டவுடன்.....

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பறவை விரைந்தோடுதே !
அருள் பாடுதே !
கழல் நாடுதே !
ஆனந்தக் கடலாடுதே !

அருமையான வரிகள்!
எழுதியவர் யாரோ?

குமரன் (Kumaran) said...

எனக்கும் மிகவும் பிடித்த பாடல் இராதா.

jeevagv said...

இராதா சார்,
படம் அருமை!

Radha said...

//பறவை விரைந்தோடுதே !
அருள் பாடுதே !
கழல் நாடுதே !
ஆனந்தக் கடலாடுதே !

அருமையான வரிகள்!//

அதே தான் நானும் சொல்கிறேன். :)

//எழுதியவர் யாரோ?//
சரியாக தெரியவில்லை.
பாபநாசம் சிவன் அல்லது கல்கி.

Radha said...

//எனக்கும் மிகவும் பிடித்த பாடல் இராதா.//
எனக்கும்.:)

Radha said...

//இராதா சார்,
படம் அருமை!//
நண்பன் ஒருவன் மதுரை மீனாக்ஷி அம்மன் கோயில் படங்களை மின்னஞ்சல் செய்திருந்தான்.
பாடலுக்கு பொருத்தமான படம் என்று உடனே பதிவு இட்டு விட்டேன். :)

Radha said...

//அந்த நூறு தடா அக்கார அடிசில்! :)
அதுக்குத் தான்! :)//

//அழகர் கோயில் பிட்சா பிரசாதம் வேற கொடுத்தாங்க! ஆனா அதைத் தோசை-ன்னு சொல்லணும்-ன்னு சொல்லிட்டாங்க! சரி "கல்லு" தோசை-ன்னு சொல்லீறலாம் :)//

எனக்கு கல்லு தோசையை விட அக்கார அடிசல் தான் ரொம்ப பிடிக்கும். :)
அதைவிட அக்காரக் கனி இன்னும் பிடிக்கும். :)

suria said...

Dear Radha, Very nice keep it up. Pls post more

இரா. வசந்த குமார். said...

மிக அழகான மதுரைப் படம்...

மெளலி (மதுரையம்பதி) said...

ரொம்ப நாட்கள் கழித்து இப்பக்கம் வந்தேன்...பாடலும் அருமை, எங்க ஊரு பெரிய வீட்டுப் படமும் அருமை...சுட்டு வைத்துக்கொண்டேன் ராதா சார்.

Radhamohan said...

ஆம் வசந்த். பார்த்த உடன் மனதை கவர்ந்த படம் தான். :)

Radhamohan said...

//எங்க ஊரு பெரிய வீட்டுப் படமும் அருமை //

ஆஹா ! இந்த மாதிரி எனக்கும் பெருமை அடிச்சிக்கனும்னு ஆசையாக தான் இருக்கு.:)

நீங்கள் குமரன் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள் தான். :)
~
ராதா

Radha said...

Dear Suria,
Thanks for your kind words ! :)
~
Radha

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP