ஆரா அமுதனைப் பாடிப் பற !
"முடியொன்றி மூவுலகங்களும் ஆண்டு உன்
அடியேற்கு அருள்" என்று அவன் பின் தொடர்ந்த
படியில் குணத்துப் பரத நம்பிக்கு அன்று
அடிநிலை ஈந்தானைப் பாடிப் பற !
அயோத்தியர் கோமானைப் பாடிப் பற !!
காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு அவன்
நீள்முடி ஐந்திலும் நின்று நடம் செய்து
மீள அவனுக்கு அருள் செய்த வித்தகன்
தோள்வலி வீரமே பாடிப் பற !
தூமணி வண்ணனைப் பாடிப் பற !!
மாயச் சகடம் உதைத்து மருது இறுத்து
ஆயர்களோடு போய் ஆநிரை காத்து அணி
வேயின் குழல் ஊதி வித்தகனாய் நின்ற
ஆயர்கள் ஏற்றினைப் பாடிப் பற !
ஆநிரை மேய்த்தானைப் பாடிப் பற !!
காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு
ஓராதான் பொன்முடி ஒன்பதோடு ஒன்றையும்
நேரா அவன் தம்பிக்கே நீள் அரசு ஈந்த
ஆரா அமுதனைப் பாடிப் பற !
அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற !!
ஓராதான் பொன்முடி ஒன்பதோடு ஒன்றையும்
நேரா அவன் தம்பிக்கே நீள் அரசு ஈந்த
ஆரா அமுதனைப் பாடிப் பற !
அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற !!
மேலே உள்ள பெரியாழ்வார் பாசுரங்களை எம்.எஸ் அவர்களின் தெய்வீகமான குரலில் இங்கே கேட்கலாம். பாசுரங்களின் பொருளை இங்கே காணலாம்.
~
கிரிதாரியின்,
ராதா
20 comments :
இனிய பா-சுரங்கள் ராதா!
அதுவும் எம்.எஸ்.அம்மா குரலில்!
இது my all time childhood favorites! :)
ஜாலியாப் பாடிப் "பறந்து" இருக்கேன்...தூக்கத்தில்! பாட்டியின் விசிறி என்னைப் பதம் பார்த்து...உஷ் சத்தம் போடாம தூங்குடா என்று சொல்லும் வரை! :)
சரி, பாட்டு போட்டுட்டீங்க? பொருள் யார் சொல்றதாம்? குமரன் பின்னூட்ட விதி தெரியும்-ல்ல? :)
பாடிப் பற, பாடிப் பற என்ற என் நெடுநாள் சந்தேகத்தை ஆச்சும் தீர்த்து வைங்க! எப்படிப் பாடிக்கிட்டே பறக்க முடியும்? :)
ஒரு வேளை பாடிப் "பர"-வா?
பாடிப் பரவினேன்-ன்னு வருமே! பராவி வைத்தேன்-ன்னு வருமே! அது போலவா? :)
Kumaran will provide the meaning. :)
இனிமை இனிமை.. இப்போது தான் முதல் முறையாகக் கேட்கிறேன்.. இன்னைக்கு முழுதும் நிறைய இசை அமுதம் என் காதுக்கும்.. மனதுக்கும்.
அருமை ராதா சார் - சரி, அது ஏன் பாட்டுல பாதி இராமர், பாதி கண்ணன் என்று பாதிப் பாதியா இருக்கு?
//ஜீவா (Jeeva Venkataraman) said...
அது ஏன் பாட்டுல பாதி இராமர், பாதி கண்ணன் என்று பாதிப் பாதியா இருக்கு?//
ஜீவா, எப்படி இருக்கீங்க?
இந்தப் பாசுரம் ஒரு விளையாட்டுப் பாட்டு!
ஒரு பெண் இராமனைப் புகழ்ந்து உந்தீ பறப்பாள்!
இன்னொரு பெண், அவளுக்குப் போட்டியா, கண்ணனைப் புகழ்ந்து, பதில் உந்தீ பறப்பாள்!
அதான் பாசுரம் அப்படியான அமைப்பில் இருக்கு! உந்தீ பற விளையாட்டில் இதெல்லாம் சகஜம்! :)
its too good. easyly understanding
// அருமை ராதா சார் -//
ஜீவி சார்,
பாடல் அருமை என்று சொல்லி இருந்தாலும், "அருமையான ராதா" என்ற பொருளில் சொல்லி இருந்தாலும் நன்றி. :)
~
ராதா
//ஜீவா (Jeeva Venkataraman) said...
அது ஏன் பாட்டுல பாதி இராமர், பாதி கண்ணன் என்று பாதிப் பாதியா இருக்கு?//
Ravi said...
//இந்தப் பாசுரம் ஒரு விளையாட்டுப் பாட்டு!
ஒரு பெண் இராமனைப் புகழ்ந்து உந்தீ பறப்பாள்!
இன்னொரு பெண், அவளுக்குப் போட்டியா, கண்ணனைப் புகழ்ந்து, பதில் உந்தீ பறப்பாள்!//
"உந்தி பறத்தல்" என்பது கால் விரல்கள் மட்டும் பூமியில் படுமாறு (பின்னங்கால்களை மேல் தூக்கியவாறு) குதித்து மகிழும் ஒரு விளையாட்டு என்று கேள்விப்பட்டு உள்ளேன். கூடவே கைகளை இரு பக்கமும் நீட்டிக் கொண்டு, சிறகுகள் என்ற பாவனையில் அசைத்து, பறப்பது போல நினைத்துக் கொண்டு சந்தோஷம் கொள்வர். நான் எனது பள்ளி நாட்களில் games period -ல் இது போல குதித்து உள்ளேன். :)
திருவாசகத்திலும் இது போல சில பதிகங்கள் உள்ளன. சமீப காலத்தில் சொல்ல வேண்டுமெனில் பகவான் ரமணர் இது போல சில பாடல்களை அருளியுள்ளார்.
போட்டி விளையாடல்களில் "சாழல் விளையாட்டு" என்று ஒரு வகை உண்டு. பின்னால் இன்னொரு சமயம் சாழல் பாசுரம் கண்ணன் பாட்டில் வரும். :)
~
ராதா
//பாடிப் பற, பாடிப் பற என்ற என் நெடுநாள் சந்தேகத்தை ஆச்சும் தீர்த்து வைங்க! எப்படிப் பாடிக்கிட்டே பறக்க முடியும்? :)//
அப்போ பறந்துகிட்டே பாடுங்க ! :)
அடுத்த பாடலும் கிட்டதிட்ட இதே மாதிரி தான் - பாடிப் பறக்க போவது பக்த மீரா.
//நான் எனது பள்ளி நாட்களில் games period -ல் இது போல குதித்து உள்ளேன். :)//
இது பெண்கள் ஆடும் ஒரு விளையாட்டு ஆச்சே! :)
இந்தக் காலத்தில் இது "சில்லி ஆடுதல்" என்று மாறிப் போச்சுது!
8X2 வரிசையில் குதிச்சி குதிச்சி வரணும்! சில்லியைக் கட்டத்தில் போட்டுக் காலால் நெம்பி எடுக்கணும்! கடைசிக் கட்டத்தில் ரெண்டு காலும் கீழே வச்சிக்கலாம்! ரெஸ்ட் ஏரியா! :)
கண் மூடிப் பறத்தல், கண் திறந்து பறத்தல்-ன்னு நிறைய வகை இதுல!
கிராமத்தில் பொண்ணுங்க ஆடும் போது, சில்லியைக் காலால் நெம்பக் கஷ்டப்பட்டு, என்னையும் ஆட்டத்துக்கு கூப்பிடுவாய்ங்க! சேச்சே இதெல்லாம் பொண்ணுங்க ஆட்டம்-ன்னு கொஞ்ச நேரம் பிகு பண்ணிட்டு, அப்பறம் தோழர்களிடம், சரிடா பாவம், ஹெல்ப் பண்ணலாம்-ன்னு சொல்லிக் கலந்துக்குவோம்! :)
//பின்னால் இன்னொரு சமயம் சாழல் பாசுரம் கண்ணன் பாட்டில் வரும். :)//
அப்படியே பல விளையாட்டுப் பாசுரங்கள் எல்லாம் இங்கே இடுங்க ராதா...
சாழல், அம்மானை, கூடல் இழைத்தல்...etc etc
//அப்போ பறந்துகிட்டே பாடுங்க ! :)//
அப்போ நீங்க பறபற பாடி-ன்னு பாட்டை மாத்திப் பாடுங்க! :)
பெரியாழ்வார், பல பிற்காலத் தமிழ் இலக்கியங்களுக்கு முன்னோடியா இருந்திருக்கார்!
அவர் காலத்தில் பிள்ளைத் தமிழ்-ன்னு தனியா கிடையாது!
ஆனால் அவர் தான் பிள்ளையாகப் பாவித்து - செங்கீரை, முத்தம்-ன்னு தமிழில் முதலில் பாடியது!
அவர் பொண்ணு, என் தோழி, ஒரு படி மேலே போய்...
கூடல், அம்மானை, ஏற்றப் பாட்டு, டூயட் போன்ற மக்கள் அளவிலான வாழ்வியலைத் தமிழ் இலக்கியத்தில் கொண்டு சேர்த்தாள்! கண்ணாலம், கீச்கீச், எலே, கிரிசை-ன்னு நாட்டுப்புறச் சொற்களை எல்லாம் தமிழ் இலக்கியத்தில் ஆளத் துவங்கிய ஆண்டாள் அவள்!
மாணிக்கவாசகர் காலத்தில் சாழல், அம்மானை, உந்தி என்று பல விளையாடல்கள் இலக்கியத்தில் தளும்பி மகிழ்வூட்டத் துவங்கி விட்டன!
ஆகா! பெரியாழ்வார் பாசுரங்கள், M.S. இன் தேன்மதுர குரலில், அருமை.
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ஆகா! பெரியாழ்வார் பாசுரங்கள், M.S. இன் தேன்மதுர குரலில், அருமை.
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
நன்றி முகுந்த் அம்மா ! பகிர்ந்து கொள்வதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சியே. :)
நன்றி ராஜேஷ் சார்.
அடியவர்களின் ஆணைப்படி, பெரியவாச்சான் பிள்ளையின் உரையை அடிப்படையாகக் கொண்டு இப்பாசுரங்களுக்குப் பொருளை கூடலில் எழுதியிருக்கிறேன்.
http://koodal1.blogspot.com/2010/02/blog-post_24.html
ஆரா அமுதனுக்கு பாடி பறக்கனும்.
.உருத்திரநாதனுக்கு உந்தி பற
சைவத்துக்கும்
வைணவத்துக்கும்
என்றுமே joint account ..
..சித்ரம்
பெரியாழ்வார், பல பிற்காலத் தமிழ் இலக்கியங்களுக்கு முன்னோடியா இருந்திருக்கார்! அவர் காலத்தில் பிள்ளைத் தமிழ்-ன்னு தனியா கிடையாது! ஆனால் அவர் தான் பிள்ளையாகப் பாவித்து - செங்கீரை, முத்தம்-ன்னு தமிழில் முதலில் பாடியது! அவர் பொண்ணு, என் தோழி, ஒரு படி மேலே போய்... கூடல், அம்மானை, ஏற்றப் பாட்டு, டூயட் போன்ற மக்கள் அளவிலான வாழ்வியலைத் தமிழ் இலக்கியத்தில் கொண்டு சேர்த்தாள்! கண்ணாலம், கீச்கீச், எலே, கிரிசை-ன்னு நாட்டுப்புறச் சொற்களை எல்லாம் தமிழ் இலக்கியத்தில் ஆளத் துவங்கிய ஆண்டாள் அவள்! மாணிக்கவாசகர் காலத்தில் சாழல், அம்மானை, உந்தி என்று பல விளையாடல்கள் இலக்கியத்தில் தளும்பி மகிழ்வூட்டத் துவங்கி விட்டன!