100: கிருஷ்ணா நீ பேகனே, வாராய்! - மலைநாடான், குமரன், KRS குரலில்!
கண்ணன் பாட்டு வலைப்பூவின் 100-வது பதிவு இதோ! 100-ஆம் பாடல், மிகவும் பிரபலமான பாடல்!
கிருஷ்ணா நீ பேகனே, பாரோ!
தமிழ் வடிவில், கிருஷ்ணா நீ வேகமாய், வாராய், என்று தந்துள்ளோம்!
மங்கள இசையுடன் துவங்கலாமா? ஷேக் சின்ன மெளலானா அவர்கள் இதே பாட்டை வாசிப்பதை இங்கு கேட்டு மகிழுங்கள்!
இன்னிக்கு பல பதிவர்களின் குரலை எல்லாம் ஒன்னாக் கேக்கப் போறீங்க! இது நாள் வரை அவர்கள் எழுத்தை மட்டுமே படித்த பலருக்கும், இன்னிக்கி பதிவர்களின் குரலைக் கேக்கப் போற அபாயம்! எனவே எச்சரிக்கை! நில், கவனி, பின்னூட்டு! :-)
கிட்டத்தட்ட அதே மெட்டில், தமிழாக்கி உள்ளேன்! அந்தத் தமிழை, மலைநாடான் ஐயாவும், குமரனும் அடியேனும் பாடி உள்ளோம்! இந்த நூறாம் பதிவை, வழி நடத்திச் செல்லப் போவது, நம் ஷைலஜா அக்கா! அவர் பாட்டுக்குத் தரும் முன்னுரை இதோ! Over to Shylaja!
வாராய் நீ வாராய்!- இந்த திரைப் பாடல் எல்லோருக்கும் தெரியும்.
ஆனால் இப்படிக் கடவுளை வாராய் நீ வேகமாக வாராய் என்றார் ஒரு பக்தர்! யார் அவர்?
அதற்கு முன், கண்ணனைப் பெரியாழ்வார் எனும் பெரும்பக்தர் எப்படி அனுபவித்துப் பாடினார் என்பதைப் பார்ப்போமா?
கண்ணன், அழகான குழந்தை வடிவோடு பெரியாழ்வாருக்கு சேவை தந்தாராம். அந்த அழகான குழந்தையின் முகம் பார்த்ததும், குழந்தைக்குத் தொட்டில் போட அவருக்கு ஆசை வந்ததாம்.
மாணிக்கங்கட்டி வயிரம் இடைகட்டி ஆனிப்பொன்னால் செய்த வண்னச் சிறுதொட்டில் என்று பாட்டில் அதைச் செய்தார்!
தொட்டிலில் கண்ணனைக் கிடத்தி அவனுடைய பாதக் கமலங்கள் காண வாரீரே என்று பாசுரம் பாடுகிறார்! - 'வையம் அளந்தானே தாலேலோ!' வையம் அளந்த கால் அது!
முத்தும் மணியும் வயிரமும் நன் பொன்னும் தத்திப் பதிந்துத் தலைப் பெய்தாற்போல் எங்கும் பத்து விரலும் மணிவண்னனின் பாதங்கள், ஒத்தி இருந்தவா காணீரே!
ஒத்தார் போலிரூக்கும் விரல்கள்! அந்தப் பாத அழகு! கண்ணனின் திருவடியில் மனம் சரணடைவதை பெரியாழ்வார் இப்படிச் சொன்னார் என்றால் கண்ணன் திருவடி எண்ணுக மனமே என்கிறார் பாரதியும்.
கிருஷ்ணா நீ பேகனே-விலும், அந்த திருவடியைத் தான் வியாசராயர் தன் பாடலில் முதலில் சொல்கிறார் பாருங்கள்!
வியாசராயர் பெரிய மகான். மத்வ மடாதிபதி!
மன்னர் கிருஷ்ண தேவராயரின் அரசவையில் மந்திரியாக விளங்கியவர். ஒரு சமயம் குஹு யோகத்தின் பலனாக மன்னரின் உயிருக்கு ஆபத்து நேர்ந்த போது வியாசராயரே சிம்மாசனம் ஏறி மன்னரின் உயிரைக் காப்பாற்றினாராம்.
"ஸ்ரீக்ருஷ்ண" என்னும் கன்னட முத்திரையுடன், கன்னட மொழியில் பல பதங்களை இயற்றி உள்ளார். இந்த வியாசராயரிடம் தீட்சை பெற்றவர் தான் புரந்தர தாசர்.
வியாசராயா எழுதிய கன்னட மொழிப்பாடல் இந்தக் கிருஷ்ணா நீ பேகனே!
நாமெல்லாம் கடவுளை நோக்கிச் செல்ல விரும்புவோம்! ஆனால் இவரோ க்ருஷ்ணனை வா வேகமாய் வா என்று அன்புக் கட்டளையிடுகிறார்.
அவருடைய மனக்கண்ணில்....
முனியே நான்முகனே முக்கண்ணப்பா!
நம் கண்ணன் குழந்தைக்கு, பெருமாளாகவும்-சிவசக்தியாகவும் அலங்காரம்!
என்னப்பன், பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், தன்னொப்பார் இல்லப்பன்! - அவனே நம் கண்ணன்!
அவனுக்குப் பாடிக் கொடுத்தோம் நற் பாமாலை!
பூமாலை சூடிக் கொடுத்தோமைச் சொல்லு!
மலைநாடான் பாடுகிறார்!
குமரன் பாடுகிறார்!
கேயாரெஸ் குரலில்!
கிருஷ்ணா நீ பேகனே பாரோ
கிருஷ்ணா நீ வேகமாய், வாராய்!
பேகனே பாரோ முகவன்னு தோரோ
வேகமாய் வாராய், திருமுகம் தாராய்!
(கிருஷ்ணா நீ வேகமாய் வாராய்!)
காலாலந்திகே கெஜ்ஜே நீலாத பானவுலி
நீலவர்ணனே நாட்யம் ஆடுத பாரோ
காலிலே கிண் கிணிகள்! கையில் மணிக் கங்கணங்கள்!
நீல வண்ணக் கண்ணா, நடனம் நீ ஆடி வாராய்!
(கிருஷ்ணா நீ வேகமாய், வாராய்!)
ஒடியல்லி ஒடிகெஜ்ஜே பெரலல்லி ஒங்குர
கொரலல்லி ஹாகித வைஜயந்தீ மாலே
இடுப்பிலே ஒட்டியானம், விரல்களில் மோதிரங்கள்
கழுத்திலே தவழ்ந்திடும் வைஜயந்தி வனமாலை!
(கிருஷ்ணா நீ வேகமாய், வாராய்!)
காசி பீதாம்பர கையல்லி கொலாலு
பூசித ஸ்ரீகந்த மையல்லோ லாகம்மா
காசிப் பீதாம்பரமும் கையில் புல்லாங் குழலும்
பூசிய சந்தனம் உன், மேனி எங்கும் மணக்க
(கிருஷ்ணா நீ வேகமாய், வாராய்!)
தாயிகே பாயல்லி ஜகவன்னு தோரித
ஜகதோத் தாரக நம்ம உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா
வாயினில் வையத்தைத் தாயிற்கே காட்டியவா
உலகத்தின் காவலா, நம்ம உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா
(கிருஷ்ணா நீ வேகமாய், வாராய்!)
ராகம்: யாமுன கல்யானீ
தாளம்: சாபு
வரிகள்: வியாசராய தீர்த்தர்
மொழி: கன்னடம்
Back to Shylaja...
வியாசராயரின் மனக்கண்ணில்....
குழந்தைக் கண்ணன் யசோதை வீட்டின் கூடத்தில் தவழ்ந்து ஓடிக் கொண்டிருக்கிறான்.
குழந்தைக்கு எத்தனை சுறுசுறுப்பு! ஓரிடத்தில் இல்லாமல் தவழ்ந்து நகர்ந்து நீஞ்சிச் செல்கிறது.
வியாசராயரால் அவனைப் பிடிக்க முடியவில்லை. அந்தத் திருமுகத்தை அருகில் பார்க்க ஆவலாகிறார்! ஆகவே க்ருஷ்ணா நீ வேகமாய் வா அப்பா என்று கெஞ்சுகிறார்.
வந்தால் மட்டும் போதாதாம்! வேகமாய் நீ வந்து உன் திருமுகத்தைக் காட்டுவாய் என்கிறார்.
முகம் கண்டவுடனேயே மனம் கண்ணனின் திருவடிக்கே செல்கிறது. அங்கே காலில் கொலுசைப் பார்க்கிறார்!
காற்சலங்கையை இங்கு முதலில் குறிப்பிடுவது நம் தாயகத்தில்!
இதற்கு ஓரு கதை உண்டு! சதங்கை மணிஒலி அதிர்ஷ்ட வரவின் அறிகுறி. அந்த ஒலி கேட்டு கெட்டவைகள் ஓடிவிடுமாம்.
கைகளில் நீலமணி கொண்ட கங்கணங்கள் பிடித்துக் கிடக்கிறதாம்..இடுப்பில் ஒட்டியாணம்! கையில் மோதிரம்!
அந்தக் கையால் அருளோ அன்றி குட்டோ அதே பாக்கியம் அல்லவா?
வைஜயந்தி மாலை! அது பாற்கடலில் பள்ளி கொள்ளும் பரந்தாமனின் வெற்றி மாலை!
பக்தனின் இதயத்திலும் அதே வெற்றி உணர்வு ,அதைப் பார்த்த மாத்திரத்தில் வந்து விடாதோ?
காசி! உலகின் பழைய நகரம்! புண்ணீய நகரம். காசிக்கு பனாரஸ் என்றும் பெயர் உண்டு.
பனாரஸ் பட்டு உசத்தியானது, அதைக் கடவுளுக்கு அணியவைத்து அழகு பார்க்கிறார். சிவப்பு நிறப்பட்டு அண்ணலுக்கு உகந்த உடை. அந்த சிவந்த ஆடை, தன் சிந்தையைக் கவந்ததை திருப்பாணாழ்வாரும் அனுபவித்துப் பாடி இருக்கிறார்.
அடுத்து புல்லாங்குழல்!அதன் இன்னிசை ஒலி காற்று வெளியில் அமைதியை பரப்பி மனதை வருடி அங்கே தூய்மையை நிரந்தரமாக்குவது!
சந்தன மரம்! தியாகத்தின் மறுவடிவம். தன்னை அழித்து மணம் தருவது.
பக்தியின் உச்சமே தன்னை மறப்பதும் இழப்பதும் தானே? அதற்கு சந்தனத்தை விட வேறு உதாரணம் சொல்லவும் இயலுமோ? அத்தகைய சந்தனம் மணக்கும் மேனி அழகன்,கண்ணன்!
வாயில் தன் தாயினுக்கு உலகத்தையேக் காட்டியவன் !
உலகத்தைக் காத்து ரட்சிக்கும் நம் உடுப்பி ஸ்ரீகிருஷ்ணனே!
வாராய் நீ வேகமாக வாராய்! - எங்களின்
நூறாவது பதிவிற்கு வாராய்!
தாராளமாய் அருள் வெள்ளம், ஏராளமாய் இங்கு வரும்
பாரோர்க்குத் தாராய்!
சர்வம் க்ருஷ்ணார்ப்பணம்!
- திருவரங்கப்ரியா (எ) ஷைலஜா
சக பதிவர்களின் வாழ்த்துச் சேதி இதோ:
மதுரையம்பதி (எ) மெளலி அண்ணா:
உடுப்பி-ன்னா கிருஷ்ணன் மட்டுமா? உடுப்பி ஓட்டலும் கூடத் தான்! :-)
சுடச்சுடத் தோசை! அம்பியின் ஆசை!
மக்களே, கண்ணன் பாட்டை இன்னும் பாங்காகக் கொண்டு செல்ல உங்கள் யோசனைகளை அறியத் தாருங்கள்!
இது நாள் வரை, நீங்கள் அத்தனை பேரும் காட்டி வந்த அன்புக்கும், ஆதரவுக்கும், எங்கள் பத்து பேரின் மகிழ்ச்சியையும் நன்றியையும் ஒரு சேரத் தெரிவித்துக் கொள்கிறோம்!
என்றும் வேண்டும், உங்கள் இன்ப அன்பு!
- இப்படிக்கு, கண்ணன் பாட்டுக் குழுவினர்
* தி. ரா. ச.(T.R.C.)
* வெட்டிப்பயல்
* மடல்காரன்
* மலைநாடான்
* Raghavan
* "முருகனருள்" கோ.இராகவன்
* dubukudisciple
* குமரன் (Kumaran)
* ஷைலஜா
* kannabiran, RAVI SHANKAR (KRS)
Colonial Cousins, ஹரிஹரன் மற்றும் லெஸ்லி லூயிஸ் சேர்ந்து, அனைத்துச் சமய நல்லிணக்கம் வேண்டிப் பாடுகிறார்கள்! இடையிடையே அருமையான ஆங்கில வரிகள் ! இதோ!
So Come down and help us, Save all the little ones
They need a teacher, And you are the only one
Come back as Jesus, Come back and save the world
We need a teacher, and You are the only one
Come back as Rama, Forgive us for what we've done
Come back as Allah, Come back for every one.......
ஒரே நிறுத்தக் கடையாக (One Stop Shop)
இதோ...அதே பாடல், பலப்பல வடிவங்களில்!
* சாக்சபோன்-கத்ரி கோபால்நாத்
* புல்லாங்குழல்-என்.ரமணி
* வீணை-காரைக்குறிச்சி சகோதரர்கள்
* Fusion
* ஜான் ஹிக்கின்ஸ்
* மகராஜபுரம் சந்தானம்
* எம்.எல்.வசந்த குமாரி
* யேசுதாஸ்
* சித்ரா
* இந்துஸ்தானி இசையில் ஹரிஹரன்...
கண்ணனின் இனிமை காசினிக்கே இனிமை சேர்க்கட்டும்!
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்!
(கண்ணன் பாட்டு வலைப்பூவின் அன்பர், திரு. மலைநாடான் ஐயாவின் அன்புத் தந்தையாருக்கு
இவ்வமயத்தில் அஞ்சலிகள் செலுத்தி, அவர் இன்னுயிர் அமைதி பெற, இறைவன் எம்பெருமானை வேண்டிக் கொள்கிறோம்!)
65 comments :
பதிவை பார்த்துக்கொண்டே, பாடலையும் கேட்டவுடன் ஏதோ உடுப்பி கிருஷ்ணனுக்கு டோலோர்ச்சவமே செய்து பார்த்தது போன்ற ஓர் உணர்வு....
எனக்கு முதலில் தெரிந்த பாடல்களுக்கான முதல் வலைப்பூ இதுதான். இதன் 100 என்பது, எனக்கும் ஏதோ நானே மதுரையம்பதியில் (இன்னும் 50 கூட போடல்லன்னு பலர் திட்டறது கேட்குது) 100ஆவது பதிவு போட்ட திருப்தி தருகிறது என்றால் மிகையல்ல...
மீண்டும் ஒரு முறை இந்த பூவில் பதிவிடும் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
இதுவரை இதை எழுதியது வியாசராயர் அப்படின்னு தெரியாது...தேவர் நாமன்னுதான் நினைச்சுருந்தேன்.
//ஒரு சமயம் குஹு யோகத்தின் பலனாக மன்னரின் உயிருக்கு ஆபத்து நேர்ந்த போது வியாசரே சிம்மாசனம் ஏறி மன்னரின் உயிரைக் காப்பாற்றினாராம்.//
மேலே வியாச ராயர் அப்படின்னு வந்திருக்கணுமுன்னு நினைக்கிறேன்.
பதிவு ப்யூட்டி!
ஹரிஹரனின் இரண்டு வீடியோவும் ஜூப்பர்.
நீங்க ரெண்டு பேர் பாடினதும், கொஞ்சம் கஷ்டம்தான்.
குமரன் யாருக்கும் தெரியாமா கமுக்கமா பாடினா மாதிரி இருக்கு? வீட்ல்ல தெரிஞ்சா ஒத விழுமா?
அசத்திட்டீங்க, குமரனும், கண்ணனும்! கிருஷ்ணனே தவழ்ந்து வந்துட்டான், என்னோட சேர்ந்து பாடல் கேட்க!
ஒரு விஷயம் - உடுப்பி கிருஷ்ணன் என்னமோ சொல்ல வரான், என்னன்னுதான் தெரியல. எங்க பார்த்தாலும் அவன்தான் இருக்கான், இந்த வாரம் பூரா. அவனைப் பார்க்க முடியலயேன்னு நினைச்சுக்கிட்டிருந்தப்ப அவன் படத்தைக் காணக் கொடுத்ததுக்கு நன்றி!
பதிவுகள்ல மட்டும் இல்ல. எங்க நடனப் பள்ளியில இருந்து ஒரு பொண்ணு இந்தப் பாடலுக்கு போன வாரம்தான் அபிநயம் பிடிச்சா. அப்ப உடுப்பியைப் பற்றி நிறைய பேச்சும் வந்தது. "என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்" பாடலுக்கு இந்த சனிக்கிழமை அபிநயம் பிடிக்கிறோம். அதுலயும் அவன் வர்றான். அதனாலதான் சொன்னேன்.
3-வது படம் ரொம்ப பிடிச்சிருக்கு!
விர்ஜீனியா ரசிகர் மன்றத்துல இருந்து கண்ணன் பாடல் குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
சொல்ல மறந்துட்டேன். தமிழ் வெர்ஷன் ரொம்ப அழகு :)
@மெளலி அண்ணா
முதல் வாழ்த்துக்கு மிக மிக நன்றி! மகிழ்ச்சி! :-)
ஊஞ்சல் ஊற்சவம் தானே! செஞ்சிருவோம்!
பதிவில் வியாசர் என்று அக்கா செல்லமாய்க் கூப்பிட்டதை, வியாசராயர் என்று ஃபுல்நேமுக்கு நீங்க சொன்ன வண்ணம் செய்து விட்டேன்!
உங்க ஆடியோ வாழ்த்துச் செய்தியும் அருமை! குறும்புஊஊஊஊஊஊ:-)
சர்வேசன் அண்ணாச்சி
டேங்கீஸ்:-)
நாங்க பாடினோமா? நல்லாப் பாருங்க! கேயாரெஸ் குரலில்-னு தான் இருக்கும்!
எங்களால் முயன்ற கூட்டு முயற்சி, Little Drops of Water அண்ணாச்சி! வேற ஒன்னும் பெருசா இல்ல! ஸோ, கொஞ்சம் கஷ்டப்பட்டு கேளுங்க! :-))
@கவி அக்கா
தமிழ் வெர்ஷன் புடிச்சி இருந்துச்சா! ஜூப்பரு! நன்றீஸ்!
//ஒரு விஷயம் - உடுப்பி கிருஷ்ணன் என்னமோ சொல்ல வரான், என்னன்னுதான் தெரியல. எங்க பார்த்தாலும் அவன்தான் இருக்கான், இந்த வாரம் பூரா//
ஹிஹி!
ஆமா! ஆசார்ய ஹ்ருதயம் பதிவிலும் அவன்! இங்கும் அவன்! அங்கும் அவன்! உங்க நடனப் பள்ளியிலும் அவன்!
கண்ணன் எங்கு தான் இல்லை! வாரம் பூரா கண்ணனைப் பாத்த கவிநயா கொடுத்து வச்சவங்க! :-)
மூனாம் படம் நல்லா இருந்துச்சா? எது கண்ணன் சிவசக்தி அலங்காரமா?
//மூனாம் படம் நல்லா இருந்துச்சா? எது கண்ணன் சிவசக்தி அலங்காரமா?//
அதுவும்தான் :) ஆனால் நான் சொன்னது அடுத்ததை. 4-வது?
முதலில் நூத்துக்கு நூறு வாழ்த்து(க்)கள்.
எல்லாரும் ஜமாய்ச்சுட்டீங்க. சூப்பர்.
இந்தப் பாட்டை நம்ம யேசுதாஸ் அவர்கள் பாட, அதுக்கு அபிநயம் பிடிச்ச பத்மினியம்மா ன்னு மனசுலே ஒரு காட்சி மணை போட்டு உக்காந்துருக்கு.
இன்னும் 'உடுப்பி'க்கு போக முடியலையேன்னும் தவிக்கிறேன்.
மௌலி, இறைப்பாடல்களுக்கே என்று முதன்முதலில் தொடங்கப்பட்டது முருகனருள் பதிவு. அந்தப் பதிவு நன்றாகச் செல்லவும் இரவிசங்கர் 'நாம் கண்ணனுக்கும் ஒன்று தொடங்கலாமா?' என்று கேட்டார். நான் 'சரி தொடங்கிடலாம்' என்று சொன்ன போது 'என்ன தலைப்பு?' என்று அவர் கேட்க 'நம்மையுடையவன் நாராயணன் நம்பி' என்று சொல்ல அதை விட எளிமையா 'கண்ணன் பாட்டு'ன்னு வைக்கலாம்ன்னு வைச்சார். ஆனால் அடியேனும் சொன்ன தலைப்பு இந்தப் பதிவில் ஒரு முதன்மையான இடத்தில இருக்கு. பார்த்திருக்கிறீர்களா?
முருகனருளும் கண்ணன் பாட்டும் நல்லா போறதைப் பார்த்துட்டுத் தான் அடுத்தடுத்து இன்னும் இரண்டு கூட்டுப் பதிவுகளைத் தொடங்கினோம். :-)
வீட்டுல தினமும் குழந்தைகளுக்கு இந்தக் குரலில் தான் தாலாட்டு சர்வேசரே. தினமும் கேட்டு வீட்டுல கஷ்டப்பட்டாச்சு. உதை குடுக்குற காலம் எல்லாம் தாண்டியாச்சு. குழந்தைங்க உங்க குரலைக் கேட்டு மயங்கித் தூங்குறாங்களோ பயந்து போய் தூங்குறாங்களோ எப்படியோ சீக்கிரமா படுத்தாம படுத்துர்றாங்க. அது போதும்ன்னு சொல்லிட்டாங்க. :-)
100க்கு வாழ்த்துகள். பாடினது எல்லாம் கேட்கலை. (இன்னும் என்ற ஒரு சொல் விட்டுப் போச்சே!!) :))
//பதிவில் வியாசர் என்று அக்கா செல்லமாய்க் கூப்பிட்டதை//
ஆரம்பிச்சுட்டாங்கய்யா, ஆரம்பிச்சுட்டாங்கய்யா....
செல்லம் வெல்லமுன்னுக்கிட்டு...எங்கே ஷைல்ஸக்காவை காணோம்...:-)
கன்னடப்பாடல் மொழி பெயர்ப்பு நன்றாக வந்திருக்கிறது.
எனக்கு ஓரளவு கன்னடம் தெரியும்...
இந்த பாடலைப் பலமுறைக் கேட்டு இருக்கிறேன். இது கன்னடப்பாடல் என்று தற்பொழுதுதான் தெரியும்.
:)
//மௌலி, இறைப்பாடல்களுக்கே என்று முதன்முதலில் தொடங்கப்பட்டது முருகனருள் பதிவு. அந்தப் பதிவு நன்றாகச் செல்லவும் இரவிசங்கர் 'நாம் கண்ணனுக்கும் ஒன்று தொடங்கலாமா?' என்று கேட்டார். நான் 'சரி தொடங்கிடலாம்' என்று சொன்ன போது 'என்ன தலைப்பு?' என்று அவர் கேட்க 'நம்மையுடையவன் நாராயணன் நம்பி' என்று சொல்ல அதை விட எளிமையா 'கண்ணன் பாட்டு'ன்னு வைக்கலாம்ன்னு வைச்சார். ஆனால் அடியேனும் சொன்ன தலைப்பு இந்தப் பதிவில் ஒரு முதன்மையான இடத்தில இருக்கு. //
ஆக மொத்தம் இந்த வலைப்பூவுக்கு முருகனருள் தான் முன்னிருந்திருக்கு...ஜீராண்ணா ஓடிவாங்க....:-)
ஆமாம் குமரன், நீங்க சொன்ன வரிகள் படத்துக்கு கீழே இருக்கு பார்த்தேன். :-)
/முருகனருளும் கண்ணன் பாட்டும் நல்லா போறதைப் பார்த்துட்டுத் தான் அடுத்தடுத்து இன்னும் இரண்டு கூட்டுப் பதிவுகளைத் தொடங்கினோம்.//
புரியுது நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு...கவலைப்படாதீங்க, தம்பி கேஆரெஸ் அங்கும் சைவக்கொழுந்தாக வருவார்....இன்னொரு இடத்தில் "யாதுமாகி நின்றாய் காளி" பாட்டும் பாடுவார்...
சரிதானே கே.ஆர்.எஸ்?...
கண்ணன்களே.....!
பாடியதைக் கேட்க முடியவில்லை. அலுவலகத்தில் உணவு இடைவேளையில் கேட்க முடியும் என நினைக்கிறேன்.
100க்கு வாழ்த்துகள் !...
அதில் ஒன்றாக இருக்கும் (75 ஆவது இடுகை) கோவி.கண்ணன் எழுத்தில் K.வீரமணி - ராதா குழுவின் பார்த்த சாரதி பாடல் பற்றிய இடுகை...அதற்கு வாய்பளித்த கண்ணபிரானுக்கு நன்றி !
:)
100 கண்ட கண்ண தாசர்களுக்கு வாழ்த்துக்கள், ஒலிப்பதிவை வீடு போய்த்தான் கேட்கணும், நன்றி
பதிவு அருமை.
பாடல்கள் கேட்டேன். பாடலின் தமிழாக்கம் மிக அருமை. மீட்டரில் அமையும்படி எளிமையாகவே எழுதப்பட்டிருக்கிறது.
குமரன் கேஷுவலாக பாடியிருக்கிறார். கேஆரெஸ் கொஞ்சம் சிரமப்பட்டு தாளம் எல்லாம் போட்டு பாடியிருக்கிறார். கொத்தனார் இன்னும் கேகலையாம். நல்லதுன்னு நினைச்சுக்கலாம் :-)).
பெங்களூரு கிளை சார்பில் வாழ்த்துகள் வந்தாகிவிட்டது. புதுமையாக குரல் வடிவில் பதிந்திருக்க்கிறார்கள், மௌலி அண்ணாவும், அம்பி அண்ணாவும், அம்பியின் தம்பி அண்ணாவும் :-).
கண்ணன் பாடல்கள் என்று 100 பதிவுகள் என்பது சாதாரண காரியம் அல்ல. அதற்கு இந்த 100வது பதிவிற்கான உழைப்பே சாட்சி. தொடர்ந்து தொய்வில்லாமல் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள். :-)
மதுரையம்பதி said...
//பதிவில் வியாசர் என்று அக்கா செல்லமாய்க் கூப்பிட்டதை//
ஆரம்பிச்சுட்டாங்கய்யா, ஆரம்பிச்சுட்டாங்கய்யா....?
செல்லம் வெல்லமுன்னுக்கிட்டு...எங்கே ஷைல்ஸக்காவை காணோம்...:-)
>>>>>>>>>>>>>>>>>>>இதோ வந்துட்டேஏஏஏஏன்...:):) விவரமா எழுதணும்..பாட்டு கேட்டு வரேன்..வெயிட்டீஸ்!!!
அருமை, அற்புதம்.... குமரனும், ரவி அண்ணாவும் பாடியது அருமை... அற்புதம் என்னன்னு கேக்குறீங்களா ?
18 அத்தியாயங்கள் உடைய கீதை சொன்ன, நீல மேனி வண்ண கண்ணன், கண்ணன் பாடல்கள் வலைப்பூ
ஆரம்பித்து 18வது மாதத்தில் அனைவர் அழைப்பின் பேரில், வேகமாக வந்து விட்டான்.
பாரெல்லாம் புகழ்ந்திடும் ஓர் சாரதி
அவன் பார்த்தனுக்கு தேரோட்டும் சாரதி..
எங்கள் சாரதி பார்த்தசாரதி
பெங்களூர் பரமனின் பரம ரசிகன்
மௌலி அண்ணா நீங்க தான் தலைமை ஏற்கனும்..
முதல்வனை முத்தமிழிலால் ஆராதித்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.
நீவிர் அனைவரும் நீங்காத செல்வம்( இம்மை மற்றும் மறுமை) பெற்று நிறைந்தேலோ ரெம்பாவாய்.
குமரன்,ரவி ஆனந்த மயமான வாழ்த்துகள்.
இரு குரல்களும் கண்ணனுக்கு இழை போட்டு வரவேற்கின்றன.
//இன்னும் 'உடுப்பி'க்கு போக முடியலையேன்னும் தவிக்க்றேன்//
துளசி நாம் எல்லாம் மங்களூரு போனா என்ன.
அந்தக் கனகதாசருக்கு வழி காட்டின மாதிரி இந்த உடுப்பிக் கிருஷ்ணனும் கூப்பிட மாட்டானோ நம்ம!!
இந்தச் சிறு குழந்தைகள் இவ்வளவு முயற்சி எடுத்து அதற்குத் தமிழிலும் அர்த்தம் கொடுத்து ஒரு பிரம்மாண்டமான படைப்பாக கண்ணன்பாட்டை நமக்குக் கொடுத்து இருக்கிறார்கள்.
அதற்கு அனந்த கோடி நம்ஸ்காரம்.
நீங்களும் உங்களுடைய குடும்பங்களும் நீடுழி வாழணும் இந்த கண்ணன் சேவையில்.
அருமையான விளக்கக் கட்டுரை, பாட்டு இன்னும் கேட்கமுடியவில்லை, கேட்டுட்டுச் சொல்றேன், எனினும் இந்தப் பதிவின் ஒவ்வொரு பாடலும்,அதை ஒட்டிய கருத்துக்களும், பின்னூட்டங்களும் மிக மிக அருமை, அமர்க்களமாய்க் கொண்டாட்டங்கள் நடக்கவும் வாழ்த்துகள்.
குழுவினர் அனைவருக்கும் இனிய 100-ம் பதிவு வாழ்த்துகள்.
//பெங்களூர் பரமனின் பரம ரசிகன்
மௌலி அண்ணா நீங்க தான் தலைமை ஏற்கனும்//
ராகவன், யாருங்க அது பெங்களூர் பரமன்...எனக்கு தெரியலயே?...நீங்கதானோ அது அப்படின்னு ஒரு சந்தேகம்...புதசெவி :)
நூறுக்கு வாழ்த்துக்கள்...
அருமையான பதிவு... மற்றும் பாட்டு..
இன்னும் 'குரல்'களை கேட்கவில்லை.
உடுப்பியில் இரண்டு நாள் இருந்து கண்ணனை தரிசித்த நாட்கள் நினைவுக்கு வருகின்றது.
அற்புதமான தலம், சின்னக்கண்ணனை நாள் முழுவதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
'பாகிலனு தெரது சேவயனு கொடு ஹரியே...'....
மௌலி அண்ணா, பரமனின் பரம ரசிகன், பெங்களூர்னு மாத்திக்கங்க... பரமன் யார்னு உங்களுக்கு
தெரியாதா?
பதிவு படிக்கும் போதே ஏதோ ஒரு பரவசம் வருகிறது. இரண்டாம் முறை படிக்கிறேன் இப்போ.
குரல் எல்லாம் வீட்டுல போய் கேக்கறேன்.
100க்கு வாழ்த்துக்கள்.
ரெண்டு முறை உடுப்பி(கோவில் தான், ஓட்டல் இல்லை)காணும் பாக்யம் கிடைத்தது. இன்னொரு முறை போகனும்.
நல்லா வந்திருக்கு, அதஹ்ற்கும் நூறுக்கும், இன்னும் பலவிற்கும் வாழ்த்துக்கள்!
முக்கியமான ஒருவரை விட்டுட்டேன்.. ஷைலஜா அக்கா.. என்ன சொல்றதுன்னே தெரியலே..
நம்ம எல்லாரையும், கையப் பிடிச்சு, கதை சொல்லிக்கிட்டு.. மாயக்கூத்தனின் பாடல்களை அடியவர்களின்
குரலால் பாடச் செய்து.. கண்ணனை காட்டும் அழகினை என்னவென்று சொல்வது..
அன்புள்ள கண்ணன் பாட்டு குழுவினர்க்கு,
நூறாவது பதிவு காண்பது அதுவும் ஒரே ’கண்(ணன்)ணோட்டத்தில்’ இடுவது என்பது மிகப்பெரிய செயல்! அருமையாக் சிந்தித்து, நிதானமாக, எளிமையாக, இட்ட பாங்கு அருமை!.
அதுவும் நூறாவது பதிவு மிக மிக அருமை!
நூறு காணும் நின் குழு
இரு(ந்து) நூறுகாணவும் - பின்னது
முன் நூறுகாணவும்
நா(மணக்க) நூறுகாணவும்
ஐந்(தவித்தான்) நூறுகாணவும்
அற(வழி வாழ்) நூறுகாணவும்,
ஏழ்(உலகில்) நூறு காண்டு
என்(சிந்தையில்) நூறு காணவும்
ஒன்பது (சுவைகளில்) நூறுகாணவும்
ஆயிரம் பதிவுகண்ட முதன்மை ஆன்மீக குழுவாக உருவெடுக்கவும்
மாயோனை வேண்டுகிறேன்.
//முக்கியமான ஒருவரை விட்டுட்டேன்.. ஷைலஜா அக்கா.. என்ன சொல்றதுன்னே தெரியலே..
நம்ம எல்லாரையும், கையப் பிடிச்சு, கதை சொல்லிக்கிட்டு.. மாயக்கூத்தனின் பாடல்களை அடியவர்களின் குரலால் பாடச் செய்து.. கண்ணனை காட்டும் அழகினை என்னவென்று சொல்வது.. //
ரிப்பீட்டேய்.... :)
Have you seen Bala Saraswati's
dance video for this song?
Satyajit Ray directed this piece.
I have always wanted to see this!
Thank you!
குமரனும் ரவியும் பாடினதை கேட்டேன்
அடடா ஸ்டார்ட் மூஜிக் அப்றோம் கைல என்ன சலங்கையா ஜால்ராவா ரவி? இசைந்து வருதே ஜோரா!
குமரன் ! உங்க க்ருஷ்ணன் நிதானமா நடந்தாலும் அழகான தெளிவான குரல் அழைச்ச உங்களுக்கு!
ஆக 2பேரும் அசத்திட்டீங்க!
Raghavan said...
முக்கியமான ஒருவரை விட்டுட்டேன்.. ஷைலஜா அக்கா.. என்ன சொல்றதுன்னே தெரியலே..
நம்ம எல்லாரையும், கையப் பிடிச்சு, கதை சொல்லிக்கிட்டு.. மாயக்கூத்தனின் பாடல்களை அடியவர்களின்
குரலால் பாடச் செய்து.. கண்ணனை காட்டும் அழகினை என்னவென்று சொல்வது..
>>>நன்றி ராகவன். எல்லாம் கேஆர் எஸ் எனும் என் செல்லத்தம்பி பின்னாலிருந்து கொடுக்கும் ஊக்கம்!
ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்குப்பின்னாலும்......:)
கவிநயா said...
//முக்கியமான ஒருவரை விட்டுட்டேன்.. ஷைலஜா அக்கா.. என்ன சொல்றதுன்னே தெரியலே..
நம்ம எல்லாரையும், கையப் பிடிச்சு, கதை சொல்லிக்கிட்டு.. மாயக்கூத்தனின் பாடல்களை அடியவர்களின் குரலால் பாடச் செய்து.. கண்ணனை காட்டும் அழகினை என்னவென்று சொல்வது.. //
ரிப்பீட்டேய்.... //
>>>>>> அடியவர்களா:):)அடி! (டீ இங்க சொல்றதுக்கு மன்னிக்க)(கவிநயா)!அவர்கள் குரல்கள்எப்படி?:)
பட்டுவிடபோகுது கண்ணடி!
எல்லாப் புகழும் அரங்கனு......
சாரி அரங்கப்ரியாவுக்கே!
:-)))
100வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பரே.. :)
மதுரையம்பதி said...
//ஒரு சமயம் குஹு யோகத்தின் பலனாக மன்னரின் உயிருக்கு ஆபத்து நேர்ந்த போது வியாசரே சிம்மாசனம் ஏறி மன்னரின் உயிரைக் காப்பாற்றினாராம்.//
மேலே வியாச ராயர் அப்படின்னு வந்திருக்கணுமுன்னு நினைக்கிறேன்.//
மதுரையம்பதி நினச்சா அதுல தப்பு இருக்குமா என்ன? இப்ப உங்கள நான் அப்பபோ மதுர ன்னு கூப்பிட்றமாதிரி வியாசராயரையும் வியாசர்ன்னு எழுதிட்டேன்:)(மன்னிப்பை கஸ்தூரி கன்னடத்துல மானசீகமா கேட்டுக்கறேன் அவர்கிட்ட!
ஷமிஸிரீ வியாசராயரு அவரே!
ambi said...
பதிவு படிக்கும் போதே ஏதோ ஒரு பரவசம் வருகிறது. இரண்டாம் முறை படிக்கிறேன் இப்போ.
குரல் எல்லாம் வீட்டுல போய் கேக்கறேன்.
100க்கு வாழ்த்துக்கள்.
ரெண்டு முறை உடுப்பி(கோவில் தான், ஓட்டல் இல்லை)காணும் பாக்யம் கிடைத்தது. இன்னொரு முறை போகனும்.//
>>அம்பி இன்னொருமுறை போறப்போ மதியபூஜைஆனதும் கரெக்டா மடாதிபதிகளோட சாப்பாட்டு அறைபோயிடுங்க..அங்க உங்க ஃபேவரிட் கேசரியோட 28வகை பதார்த்தங்கள் சுவையா போடுவாங்க....ஒரு மார்கழி மாசத்தில் மார்கழித்திங்கள்பாசுரம் மட்டும் பாடி நான் நைசா உள்ளபோய் அந்த சாப்பாடு சாப்ட்டேன்!!!
சிவமுருகன் said...
அன்புள்ள கண்ணன் பாட்டு குழுவினர்க்கு,
நூறாவது பதிவு காண்பது அதுவும் ஒரே ’கண்(ணன்)ணோட்டத்தில்’ இடுவது என்பது மிகப்பெரிய செயல்! அருமையாக் சிந்தித்து, நிதானமாக, எளிமையாக, இட்ட பாங்கு அருமை!.
அதுவும் நூறாவது பதிவு மிக மிக அருமை!
நூறு காணும் நின் குழு
இரு(ந்து) நூறுகாணவும் - பின்னது
முன் நூறுகாணவும்
நா(மணக்க) நூறுகாணவும்
ஐந்(தவித்தான்) நூறுகாணவும்
அற(வழி வாழ்) நூறுகாணவும்,
ஏழ்(உலகில்) நூறு காண்டு
என்(சிந்தையில்) நூறு காணவும்
ஒன்பது (சுவைகளில்) நூறுகாணவும்
ஆயிரம் பதிவுகண்ட முதன்மை ஆன்மீக குழுவாக ..//
நன்றி சிவமுருகன்.முருகனென்ற பேர் வந்தாலே தமிழும் இப்படி மயில் நடனம் புரிந்து அழகாய் மிளிருமோ?
ரசித்தேன் எல்லா வரிகளையும் ..கோடி நன்றி அதற்கு!
அவ்வ்வ்வ். நான் கார்த்தாலே போட்ட பின்னூட்டம் இன்னும் இங்கே வரலே....
பின்னூட்டம்... நீ பேகனே பாரோ.......
@ச்சின்னப் பையன்
வால் பையன் தானே நீங்க? பின்னூட்டம் நீ பேகனே-வா? அடிங்க! :-)
இது என்னவாம்?
//ச்சின்னப் பையன் said...
நூறுக்கு வாழ்த்துக்கள்...
அருமையான பதிவு... மற்றும் பாட்டு..
இன்னும் 'குரல்'களை கேட்கவில்லை.
உடுப்பியில் இரண்டு நாள் இருந்து கண்ணனை தரிசித்த நாட்கள் நினைவுக்கு வருகின்றது.
அற்புதமான தலம், சின்னக்கண்ணனை நாள் முழுவதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
'பாகிலனு தெரது சேவயனு கொடு ஹரியே...'....
ச்சின்னப் பையா
//'பாகிலனு தெரது சேவயனு கொடு ஹரியே...'....
//
இது என்ன-ன்னு கொஞ்சம் பின்னூட்டத்துல பாடிக் காட்டலாம்-ல?
சிரிக்கும் ச்ச்சின்னப் பையனே - பாரோ! :-)
ஹிஹி... நாந்தான் சரியா பாக்கலேன்னு நினைக்கிறேன்...
அவ்வ்வ். டைப்பிக்காட்டறேன்....
கனகதாசர் உடுப்பிக்கு வந்திருந்தபோது, அவரை கோயிலுக்குள் விடாமல் தடுத்ததால், கோயிலுக்கு வெளியே நின்று மனமுருகி கிருஷ்ணரைப் பாடினார் "கதவைத் திறந்து எனக்கு தரிசனம் தருவாய்..."... Main door பார்த்து நின்றிருந்த கிருஷ்ணர், கனகதாசருக்காக திரும்பிவிட்டார். அதனால், இன்றும் நாம் உடுப்பியில் கிருஷ்ணரை ஒரு ஜன்னலிலிருந்துதான் பார்க்கமுடியும்..
கிருஷ்ணா, கிருஷ்ணா....
http://en.wikipedia.org/wiki/Kanakadasa
//வியாசராயரின் மனக்கண்ணில்....
குழந்தைக் கண்ணன் யசோதை வீட்டின் கூடத்தில் தவழ்ந்து ஓடிக் கொண்டிருக்கிறான்.
குழந்தைக்கு எத்தனை சுறுசுறுப்பு! ஓரிடத்தில் இல்லாமல் தவழ்ந்து நகர்ந்து நீஞ்சிச் செல்கிறது.
வியாசராயரால் அவனைப் பிடிக்க முடியவில்லை. அந்தத் திருமுகத்தை அருகில் பார்க்க ஆவலாகிறார்! ஆகவே க்ருஷ்ணா நீ வேகமாய் வா அப்பா என்று கெஞ்சுகிறார்.
வந்தால் மட்டும் போதாதாம்! வேகமாய் நீ வந்து உன் திருமுகத்தைக் காட்டுவாய் என்கிறார்.
முகம் கண்டவுடனேயே மனம் கண்ணனின் திருவடிக்கே செல்கிறது. அங்கே காலில் கொலுசைப் பார்க்கிறார்!
காற்சலங்கையை இங்கு முதலில் குறிப்பிடுவது நம் தாயகத்தில்!
இதற்கு ஓரு கதை உண்டு! சதங்கை மணிஒலி அதிர்ஷ்ட வரவின் அறிகுறி. அந்த ஒலி கேட்டு கெட்டவைகள் ஓடிவிடுமாம்.
கைகளில் நீலமணி கொண்ட கங்கணங்கள் பிடித்துக் கிடக்கிறதாம்..இடுப்பில் ஒட்டியாணம்! கையில் மோதிரம்!
அந்தக் கையால் அருளோ அன்றி குட்டோ அதே பாக்கியம் அல்லவா?//
பதிவு அருமை...
படிக்கும் போது கண்ணனே மனக்கண்ணில் வந்து மறைந்தான்.
100வது பதிவிற்கு வாழ்த்துகள்!!!
கண்ணன் பாடல்கள் வலைப்பூக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
கிருஷ்ணா நீ வேகமாய் வாராய் என்ற பாடல் பிள்ளைக்கன்னட வகையில் எழுந்தது. அட நம்மூர்ல பிள்ளைத்தமிழ்னா கருநாடகத்தில் பிள்ளைக்கன்னடமாத்தானே இருக்கனும்.
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று...குற்றங்களை மறந்துவிடும் மறந்தால் ஒன்று என்றார் கவியரசர் கண்ணதாசன். அதனால்தானோ என்னவோ கந்தக் கடவுளையும் கண்ணனையும் குழந்தை வடிவில் கண்டு....அறிந்தும் அறியாமலும் செய்த குற்றங்களை மறந்து விட்டு ஏற்கச் சொல்லும் வழமை வந்ததோ!
ஒரு நல்ல பாடலை உங்கள் அனைவரின் குரலிலும் கேட்க நேர்ந்தது மிக்க மகிழ்ச்சி. தேர்ந்த இசைக்கலை பயிலாமலும் சேர்ந்த இசைக்கருவி ஒலிக்காமலும் நேர்ந்த தாளங்கள் கிளம்பாமலும் என்றும் சார்ந்த கடவுள் அன்பை மட்டுமே கொண்டு பாடிய பாக்கள் மதிப்பிற்குரியவை. பாராட்டுகள்.
ஆகா! கண்ணன் என்னும் காந்தத்தை வைத்து எத்தனை செப்பிடி வித்தை!! மிக, மிக மகிழ்வாக உள்ளது. பெருமாளின் முக உல்லாசத்திற்காகத்தான் இந்த லீலா விபூதியே! அதை, இதை விட அழகா மின்வெளியில் செய்து விட முடியுமா?
கண்ணன் கழனினை எண்ணுக மனமே!
வாழ்க, வாழ்க!! ஆயிரம் பல்லாண்டு!!
மீ தி 50?!!
வாழ்த்துக்கள் 100வது பதிவுக்கு.
வளரும் இது இன்னும் பல 100 ஆக
கண்ணனின் கணிவு பாடலிலும் பதிவிலும்
இதை புத்தகமாகவும் ஒலிப் பேழையாகவும் வெளியிடலாம்.
இப்பதிவில் பின்னூட்டமிட்ட,
பதிவிட்ட, பார்த்த, கேட்டு மகிழ்ந்த அனைத்து நெஞ்சங்களுக்கும்
பாராட்டுக்கள். நன்றிகள்.
KRS. special thanks and wishes.
மன்னிக்கனும். வேலை நிமித்தமாக கொஞ்சம் பிஸி..!
இலவசக்கொத்தனார் said...
மீ தி 50?!!
>>>>>
மீதி 48 கொத்ஸ்!
மலைநாடான் ஐயா தனி மடல்!
பாட்டு பாடி அனுப்பித்து இருக்கார்!
மிகவும் நன்றி ஐயா!
ஊருக்கு வந்தாச்சா?
மலைநாடான் to me
show details Jun 27 (1 day ago) Reply
இரவி!
கண்ணன் பாட்டு 100க்கு என் வாழ்த்துக்கள். உங்கள் துயர் பகிர்தலுக்கு நன்றிகள். கண்ணன் பாட்டு 100க்கு என் பங்களிப்பு இத்துடன் உள்ளது.
நட்புடன்
மலைநாடான்.
Kirushna.MP3
1756K Play Download
வாழ்த்துக்கள்...
தொடர்ந்து கலக்குங்க...
//ஷைலஜா said...
குமரனும் ரவியும் பாடினதை கேட்டேன்
அடடா ஸ்டார்ட் மூஜிக் அப்றோம் கைல என்ன சலங்கையா ஜால்ராவா ரவி? இசைந்து வருதே ஜோரா!//
ஜால்ராவா?
அதைப் போடவே மாட்டேன்-ரொம்ப அடம் புடிப்பேன்! :-)
அக்கா,
அது தொலைபேசியை Tap செஞ்சிக்கிட்டே பாடியது!
We recorded this over gabcast site on the toll free telephone number!
//குமரன் ! உங்க க்ருஷ்ணன் நிதானமா நடந்தாலும் அழகான தெளிவான குரல் அழைச்ச உங்களுக்கு!//
குமரன் கலக்கல்! குமரன் நிதானமாப் பாடினதும் ஒரு காரணத்துக்காகத் தான் அக்கா!
குழந்தை வேகமா வா-ன்னு கூப்புட்டா மெள்ளமாத் தான் வரும்!
அது தானா ஓடியாரும் போது தான் வேகம் காட்டும்! :-)))
மலைநாடனா சங்கர் மஹாதேவனா ?நிஜமா அருமையா பாடி இருக்காரே மலைநாடான்! துயர சூழ்நிலையிலும் தனது பங்கினை இங்கு அளித்த அவருக்கு பாராட்டுக்கள்!
மலைநாடான் அவர்களின் பாடலும் மிக இனிமை!
நூறுக்கு வாழ்த்து!
மலைநாடன் பாடல் சூப்பரோ சூப்பர்!
மிகவும் உணர்ந்து பாடியிருக்கிறார் மனுஷர்!
100 பாட்டுக்களுக்கு ஆயிரம் வாழ்த்துக்கள். தமிழாக்கம் ஜோர். இதே பாட்டை திருமதி. ஸ் ஜானகி அவர்கள் தமிழில் பாடியிருக்கிறார். கேஆர்ஸ்,குமரன்,மலைநாடன் முன்பு உங்களின் நாமாம் கேடென் இன்று குரல் கேட்டேன் .நன்றி
kannan paattu kuzhuvanarkalukku vaazhthukkal... :-)
வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பர்களே!
ஹரிஹரன் பாடல் இனிமை... ஆக்கபூர்வமான செய்தியை பொறுப்புணர்ச்சியோடு சொல்லியிருக்கிறார்கள்
நல்லபதிவுக்கு எங்கள் பாராட்டுக்கள்
உங்கள்
ஆக்கம்தான் இதுவரை படித்தேன் இன்றுதான் நீங்கள் பாடிய பாடல் கேட்டேன் வாழ்த்துக்கள்
http://www.youtube.com/watch?v=axuq7ncvjYE&feature=related
-BALASARASWATHI/RAY