Thursday, July 17, 2008

மாமனை மறந்த மருகன் அடியார்கள்...



" என்ன இது... பெருமாள் தனியாக இருக்கிறாரே?! "

ஸ்ரீதேவி, பூமிதேவி, நீளாதேவி, ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள், முனிவர்கள், தேவாதி தேவர்கள் உனது தாள் தொழ.. கமலக் கண்ணாடி கண்டருளும்.. எங்கள் கண்ணா, கார்மேக வண்ணா..

இன்றோ உன்னை விட்டு எக்கணமும் பிரிந்திராத ஆதிசேஷன் மட்டும் இருக்க, மலர்மாலை கூட இல்லாமல் இருப்பதன் காரணம் என்னவோ.. ??


ஆதிசேஷனே, நீ மீண்டும் ஒருமுறை முருகனருள் சென்று விட்டு வாயேன்.. என் மருகனுக்கு பாம்பு-அணியாய் இருந்து விட்டு வரலாம்.


அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகா!,
"சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரஅடியாம் நீள்கடலுள்- என்றும்
புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்
அணையாம் திருமாற்கு அரவு"
என்றிருக்க நான் எப்படி உங்களை விட்டு விலக முடியும்.. வேண்டுமானால் நாம் இருவரும் செல்வோம்..
இப்படி உரையாடிக் கொண்டிருந்த கண்ணன், வேறொருவர் குரல் கேட்டு திரும்புகிறான்..

சரி கதையை தொடரும் முன் சிறு விண்ணப்பம்.. அடியேன் இராகவன்.. ரவி அண்ணாவுக்கு மட்டும் ராகவ். கண்ணன் பாட்டு நூறை தொட்டு இரண்டு வாரம் ஆகி விட்டது. முருகனருளும் நூறை தொட்டு விட்டது. கண்ணன் பாட்டின் 101வது பாடலாக.. இந்த கந்தவடி பதிவு.
சரி கதைக்கு வருவோம். முருகனருளின் 100 வது பதிவை அனைவரும் சேர்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு விட்டு, பெருமாள் மட்டும் வைகுண்டம் திரும்பி விட்டார். தற்போது தொடருவோம்..
"பெருமாளே ஏன் இந்த கோலம்? .. நாடு தோறும் வீடு தோறும் .. உன்னைத்தேடி ஓடி வந்துள்ளேன்.. அருள் புரிய வேண்டும். "




பக்தனே யார் நீ? என் மருகன் 100 வது பதிவு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வரும் வழியில் பாதை மாறி வந்து விட்டாயா?



இல்லை பரந்தாமா. .உன் மருகன்.. இந்த பித்தன் முருகதாஸனை, உன்னை சந்தித்து வரத்தான் இங்கு அனுப்பியுள்ளான். உலகத்தின் எல்லா ஜீவராசிகளுக்கும் படியளக்கும் பரந்தாமன் நீ..
உன்னை அலங்காரப்பிரியன் என்றல்லவோ பூஜிக்கிறோம். இன்று தாங்கள் தனியே, மலர்மாலை கூட சூடாமல் இருப்பதன் காரணம் தெரியவில்லை.



முருகதாஸா, நான் உட்பட அனைவரும் என் மருகன், முருகனின் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டோம். உலக ஷேமத்திற்காக நான் விரைவில் வந்து விட்டேன். தேவியர்களுக்கு இன்னும் அங்கிருந்து வர மனமில்லை.. என்ன இருந்தாலும் தமிழர் விருந்தோம்பலில் சிறந்தவன். அது தான் அனைவரும் அங்கேயே உள்ளனர்.
ஆறுமுகத்தானின் கொண்டாட்டத்திற்கு நிறைய மலர்கள் தேவை, அதனால் தான் எனக்கு கூட மாலை இல்லா பற்றாக்குறை
.




கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெருமாயா, "பூமாலைக்கு பதிலாக என் பாமலையை சூட்டிக்கொள்ள வேண்டுகிறேன்."








ம்ம்.. முன்பெல்லாம் பொன் வைக்கும் இடத்தில் பூ வைக்கலாம் என்பர்... இன்று அதுவும் போய்.. பூமாலை வைக்கும் இடத்தில் பாமாலை வைக்கிறாய்.

சரி இந்த அலங்கார பிரியனுக்கு உன் பாடல்களே அழகு சேர்க்கட்டும்.


நாடே நாடாய் வீடே வீடாய் நாடி தேடினேன் கண்ணா!
நாளும் உன்னை பாடிப்பாடி நானோர் பைத்தியம் ஆனேன் கண்ணா !
நாடே நாடாய் வீடே வீடாய் நாடி தேடினேன் கண்ணா!
நாளும் உன்னை பாடிப்பாடி நானோர் பைத்தியம் ஆனேன் கண்ணா !


கண்ணா.... கண்ணா....கண்ணா....கண்ணா...

கூடிக் குலாவ குதித்தே வந்தேன்!
கூடிக் குலாவ குதித்தே வந்தேன்!
கொஞ்சியே உன்னோடு ஆட வந்தேன்.


கூடிக் குலாவ குதித்தே வந்தேன்!
கொஞ்சியே உன்னோடு ஆட வந்தேன்.


வேடிக்கை உலக மாயையினாலே
வேடிக்கை உலக மாயையினாலே
வேதனை கண்ணீர் ஒன்றே கண்டேன்..


நாடே நாடாய் வீடே வீடாய் நாடி தேடினேன் கண்ணா!
நாளும் உன்னை பாடிப்பாடி நானோர் பைத்தியம் ஆனேன் கண்ணா !
நாடே நாடாய் வீடே வீடாய் நாடி தேடினேன் கண்ணா!


கண்ணா.... கண்ணா....கண்ணா....கண்ணா...

குழலினால் இனிய கானம் இசைத்தாய்
கண்ணா கீதையும் உன் அருள் தானே
கண்ணா கீதையும் உன் அருள் தானே


மழலை பேசி மகிழ்வாய் வருவாய்
மழலை பேசி மகிழ்வாய் வருவாய்
மாதவனே எனை ஆண்டிட வேண்டும்..



நாடே நாடாய் வீடே வீடாய் நாடி தேடினேன் கண்ணா!
நாளும் உன்னை பாடிப்பாடி நானோர் பைத்தியம் ஆனேன் கண்ணா !
நாடே நாடாய் வீடே வீடாய் நாடி தேடினேன் கண்ணா!



கண்ணா.... கண்ணா....கண்ணா....கண்ணா..



Get this widget Track details eSnips Social DNA


சர்வம் கிருஷ்ணார்ப்பணம்..

காத்திருக்கோம் காத்திருக்கோம் கமலக் கண்ணா வா வா!
பார்த்திருப்போம் உன் வரவை குழழ்ஊதி வா வா!
கால் சிலம்பு கொஞ்சிடவே கமலக் கண்ணா வா வா!
கானக்குரல் கேட்க வேண்டும் கமலக் கண்ணா வா வா!

31 comments :

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கண்ணன் பாட்டில் உங்க முதல் இடுகையா? சூப்பரு!
வாழ்த்துக்கள் ராகவ்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//என் மருகனுக்கு பாம்பு-அணியாய் இருந்து விட்டு வரலாம்//

ஆகா அப்பவே நகை எல்லாம் கொடுக்கல் வாங்கலா?
இது இரண்டு வீட்டுத் தங்கமணிக்களுக்குத் தெரியுமா? :-)

//இல்லை பரந்தாமா. .உன் மருகன்.. இந்த பித்தன் முருகதாஸனை, உன்னை சந்தித்து வரத்தான் இங்கு அனுப்பியுள்ளான்//

இந்தப் பதிவுலக முருகதாசன் யாருங்கோ? :)

//தேவியர்களுக்கு இன்னும் அங்கிருந்து வர மனமில்லை//

மாமியார் மெச்சிய மருமகனா எப்போ ஆன ராகவ்? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நாடே நாடாய் வீடே வீடாய் நாடி தேடினேன் கண்ணா!//

அருமையான வரிகள்!

இந்தப் பாட்டை எழுதியது யார்? பாடியவர் தெரிகிறது! இசை யார்? என்ன ஆல்பம்? தகவல்கள் ப்ளீஸ்!

பி.கு:
மலர் மாலை இல்லாத சயனப் பெருமாள் முதல் ஃபோட்டோ - எந்த ஊருப்பா?

Raghav said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
கண்ணன் பாட்டில் உங்க முதல் இடுகையா? சூப்பரு!
வாழ்த்துக்கள் ராகவ்!
//

முகம் கொடுத்தவரிடமிருந்து முதல் வாழ்த்து.. வணங்குகிறேன் ரவி அண்ணா..

Raghav said...

//மலர் மாலை இல்லாத சயனப் பெருமாள் முதல் ஃபோட்டோ - எந்த ஊருப்பா?
//

பரமக்குடி அருகே, எமனேஸ்வரம் என்னும் சிற்றூரில், வைகை வளநதி(??)யின் கரையில் வரம் அருள எழுந்தருளி இருக்கும்
ஸ்ரீபெருந்தேவி நாயகி ஸமேத ஸ்ரீவரதராஜ பெருமாள்.

Kavinaya said...

நடையைப் பார்த்தா கண்ணனோடது மாதிரியே இருந்தது! (ஜிரா கவனிக்க: எழுத்து நடையைத் தான் சொன்னேன் :) படங்களும் வெகு அழகு.

//காத்திருக்கோம் காத்திருக்கோம் கமலக் கண்ணா வா வா!
பார்த்திருப்போம் உன் வரவை குழல்ஊதி வா வா!
கால் சிலம்பு கொஞ்சிடவே கமலக் கண்ணா வா வா!
கானக்குரல் கேட்க வேண்டும் கமலக் கண்ணா வா வா!//

இதுவும் ரொம்ப நல்லாருக்கு.

முதல் பதிவுக்கு வாழ்த்துகள், ராகவ் (நானும் ராகவ்னு சொல்லிட்டேன், பரவாயில்லையா? :)!

மலைநாடான் said...

ராகவ்!
ஆஹா பித்துக்குளியார் பாடலா?
அருமை. இதுவரை கேட்காத பாடல்.
தந்மைக்கு நன்றி.

தி. ரா. ச.(T.R.C.) said...

முதல் பதிவுக்கு வாழ்த்துக்கள்.

@ரவி ""யாரென்று ராகவனை எண்ணினீர் ரவி. அதைஅறிந்து சொல்லப்போமோ""

Raghav said...

//நடையைப் பார்த்தா கண்ணனோடது மாதிரியே இருந்தது!//

நடை பழகியது அவரிடமிருந்து தானே..
வரதன், அழகன் அதான் அவரோட போட்டோவும் சூப்பரா இருக்கு..

Raghav said...

//முதல் பதிவுக்கு வாழ்த்துகள், ராகவ் (நானும் ராகவ்னு சொல்லிட்டேன், பரவாயில்லையா? :)!
//

வாழ்த்துக்களுக்கு வணக்கங்கள்.. தாராளமா, ராகவ்னு கூப்புடுங்க.. இல்ல வெறும் "ரா" னு கூப்புட்டாலும் வருவேன்..

Raghav said...

//தி. ரா. ச.(T.R.C.) said...
முதல் பதிவுக்கு வாழ்த்துக்கள்.
//

உங்ககிட்டருந்து வாழ்த்து வாங்க என்ன தவம் செய்தேனோ..

//மலைநாடான் said...
ராகவ்!
ஆஹா பித்துக்குளியார் பாடலா?
அருமை. இதுவரை கேட்காத பாடல்.
தந்மைக்கு நன்றி
//

நன்றி ஐயா, இப்பாடல் நந்தலாலா என்னும் ஆல்பத்துக்காக் பித்துக்குளி முருகதாஸ் அவர்களே இயற்றி பாடியது..

Anonymous said...

Thambi udaiyaan padaikku anjaan, apdinnu solluvaanga.

Inimel paattukkum anja vendaam.

Puriyalaiyaa, Thambi Raagavanai thaan solren.

Sundar

மெளலி (மதுரையம்பதி) said...

super...முதல் பதிவுக்கு வாழ்த்துக்கள்...

பாடலை முதல் முறையா கேட்டேன். நன்றி.

:-)

Raghav said...

//மதுரையம்பதி said...
super...முதல் பதிவுக்கு வாழ்த்துக்கள்...

பாடலை முதல் முறையா கேட்டேன். நன்றி.
//

நன்றி மெளலி அண்ணா. கண்ணன் பாடல்கள் திக்கெட்டும் பரவ வைக்கும் கண்ணன் பதிவு அன்பர்களுக்கு ராமருக்கு உதவிய அணிலின் (நாந்தேன்) மண் துகள்களாக என் பதிவுகள் இருக்கும்..

குமரன் (Kumaran) said...

கமலக் கண்ணாடி கண்டருள்கிறாரா? கமலாவின் திருமுகமே இவனுக்குக் கண்ணாடியாயிற்றா? அருமை இராகவ்.

அடடா. இரவிசங்கருக்கு மட்டும் தான் இராகவ்-ஆ? அப்ப நானும் இராகவ்னு கூப்புட்டுட்டேனே. தப்போ?

முருகதாசருக்கும் பெருமாளுக்கும் நடக்கும் உரையாடல் மிகச் சுவை. என் நண்பர்கள் இருவர் இருக்கிறார்கள் - ஒருவர் முருகதாஸர் இன்னொருவர் கண்ணன் - இவர்களும் இப்படித் தான் பேசிக் கொள்வார்கள். நீங்களும் அந்த உரையாடல்களைக் கேட்டுவிட்டீர்களோ? :-)

நான் இது வரை பரமகுடிக்கோ எமனேஸ்வரத்திற்கோ சென்றதில்லை இராகவ். ஆனால் இங்கே ஊருலாத் திருவுருவத்தைப் பார்க்கும் போதும் உங்கள் பதிவில் கருவறைத் திருவுருவத்தைப் பார்த்த போதும் பல நாட்கள் பார்த்தவர்கள் போல் உள்ளே ஏதோ ஒன்று நகர்கிறது. நீங்கள் சொல்வதற்கு முன்னரே இந்தப் படத்தில் சயனித்திருப்பவர் எமனேஸ்வரம் அருளாளப் பெருமாள் என்று உணர்ந்து கொண்டேன். ஏதோ விட்ட குறை தொட்ட குறை போல் தோன்றுகிறது.

Raghav said...

//குமரன் (Kumaran) said...
அடடா. இரவிசங்கருக்கு மட்டும் தான் இராகவ்-ஆ? அப்ப நானும் இராகவ்னு கூப்புட்டுட்டேனே. தப்போ?
//

உங்களுக்கு இல்லாத உரிமையா?. தாராளமா கூப்புடுங்க.. எமனேஸ்வரம் வரதராஜனை, 60 வருடம் முன்பு ஒரு கால்வாய் தோண்டும் போது கண்டெடுத்து, அவருக்கு சிறப்பான முறையிலே கோவில் கண்டவர்கள் செளராஷ்ட்ரா சமூகத்தினர். எங்கிருந்தோ இருந்து என் தாத்தாவின் அப்பாவை அர்ச்சகராக நியமித்து இன்று வரை எனது குடும்பத்தின் அனைத்து தேவைகளையும், தங்கள் குடும்பமாக கருதி செய்து வருகின்றனர். நான் படிப்பதற்கு பண உதவி செய்தவர்கள். நான் இருவருக்கு நன்றிக் கடன் பட்டுள்ளேன். அருளாளன் வரதராஜன், மற்றும் எமனை வாழ் செளராஷ்ட்ரா மக்கள்.

மதுரை வாழ் மக்களும் இக் கோவிலின் வளர்ச்சிக்கு உதவியவர்கள் தான். கண்டிப்பாக நீங்களும் பங்கேற்றிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

அப்பேரருளாளின் சரித்திரத்தையும், எமனை மக்களின் வாழ்க்கை முறையையும் எழுத ஆரம்பிக்க வேண்டும். பெருமாள் அருள் கூடிய விரைவில் கிட்ட, உங்கள் போன்ற பெரியவர்கள் தான் ஆசீர்வதிக்க வேண்டும்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@குமரன்
//கமலக் கண்ணாடி கண்டருள்கிறாரா? கமலாவின் திருமுகமே இவனுக்குக் கண்ணாடியாயிற்றா?//

உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை - விவாதம் ஞாபகம் இருக்கா குமரன்? :)))

கமலையின் வதனத்தில் அவன் வதன பிம்பம்!

//ஒருவர் முருகதாஸர் இன்னொருவர் கண்ணன்//

ஆகா, இன்னொருவர் கண்ணனே-வா? :))

//உங்கள் பதிவில் கருவறைத் திருவுருவத்தைப் பார்த்த போதும் பல நாட்கள் பார்த்தவர்கள் போல் உள்ளே ஏதோ ஒன்று நகர்கிறது//

குமரன்
இந்தப் பதிவில், பெருமாள் திருமுக மண்டலத்தின், அண்மைக் காட்சியை (close-up) பார்த்தீங்களா? தயா சிந்து மோவாயில் துலங்க....அதற்கு மேல் ஒரு குமிழ் சிரிப்பு துலங்க....

திருமலையப்பன் திருமுகத்தை
மிகவும் அண்மையில் கண்டு பல மணித் துளிகள் சேவித்துள்ளேன்....This pic is very very close....

Divyapriya said...

//கூடிக் குலாவ குதித்தே வந்தேன்!
கொஞ்சியே உன்னோடு ஆட வந்தேன்.//

என்ற வரிகள் ரொம்ப நல்லா இருக்கு...

வரிகள் வெள்ளி அன்றே படித்து விட்டேன்...ஆனா, பாட்டு கேக்க முடியலை :( என்ன பிரச்சனைன்னு தெரியல...

குமரன் (Kumaran) said...

ஓஓ. இப்போது அந்த விட்ட குறை தொட்ட குறை பிடிபடுகிறது இராகவ். நான் எமனேஸ்வரம் கோவிலின் வளர்ச்சியில் ஈடுபட்டதில்லை. ஆனால் என்னுடன் ஆத்ம தொடர்போ குருதித் தொடர்போ பெற்றவர்கள் ஈடுபட்டிருக்கலாம். அதனால் தான் அந்த உணர்வு எழுந்தது என்று நினைக்கிறேன்.

பேரருளாளன் பெருமைகளை விரைவில் எழுதுங்கள். படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

இரவிசங்கர். நீங்கள் சொன்ன பின்னர் தயாசிந்துவைத் தரிசித்தேன். நன்றி. :-)

Raghav said...

அடுத்த பாடல் நாயகனே, வரதராஜன் தான் குமரன்.. "ஆடி வருவார் ஓடி வருவார் அழகழகாய் அசைந்து வருவார் வரதராஜ பெருமாள்.."

குமரன் (Kumaran) said...

அருளாளப் பெருமாளின் அருளப்பாட்டைக் காணவும் பாட்டைக் கேட்கவும் காத்திருக்கிறேன் இராகவ்.

ramesh sadasivam said...

100 பதிவுகள் கடந்து வெற்றி நடை போடும் கண்ணன் பாட்டு தள நண்பர்களுக்கு என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். கிருஷ்ணா நீ வாராய் நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

Raghav said...

//shri ramesh sadasivam said...
100 பதிவுகள் கடந்து வெற்றி நடை போடும் கண்ணன் பாட்டு தள நண்பர்களுக்கு என் இதயப்பூரவமான வாழ்த்துக்கள். கிருஷ்ணா நீ வாராய் நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்
//

மிக்க நன்றி.. அந்தக் கண்ணனாகவே ஆக விரும்பும் எண்ணம் கொண்ட உங்களை அவரது பாடல்கள் ஆட்கொள்ளாமல் என்ன செய்யும். அடிக்கடி வாருங்கள்.

முகுந்தன் said...

அற்புதம் ... பேரின்பம் ...

Raghav said...

நன்றி முகுந்தன் சார். உங்க கண்ணன் கேசவனை ரொம்ப கேட்டதா சொல்லுங்க...

Unknown said...

en arumai Ragav, really good one. Rombavey nalla irunthathu da. Athuvum avan pugal pada nam pirapu pothathu. keep it up da.

By Sathish Devanathan

Raghav said...

//Devanathan said...
en arumai Ragav, really good one. Rombavey nalla irunthathu da. Athuvum avan pugal pada nam pirapu pothathu. keep it up da.
//

வா சதீஷ். எதிர்பார்க்காத வரவு. "அருமை ராகவ்"னு சொல்ல வந்தியா இல்லை "அருவை ராகவ்" னு சொல்ல வந்தியா.. :)

அடிக்கடி வா.. தம்பியுடையான் பாட்டுக்கு அஞ்சான்.

Unknown said...

Raghav naan enada aruvai endru solla pogirean, unmayile ARUMAI, NO TAMIL FONT AH SO NOT ABLE TO TYPE CLEARLY DA.

கோவை விஜய் said...

பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

உலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்


ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்

இறுதி வெற்றி நமதே


மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.

இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.


கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

Lee said...

//நடையைப் பார்த்தா கண்ணனோடது மாதிரியே இருந்தது!// நடை பழகியது அவரிடமிருந்து தானே.. வரதன், அழகன் அதான் அவரோட போட்டோவும் சூப்பரா இருக்கு..

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP