பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கமே!!!
பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கமே
காண்பவர்க்கு என்றென்றும் ஆனந்தமே (பூலோக)
காவிரி தாலாட்ட கொள்ளிடம் சீராட்ட
ரங்கனின் ஆனந்த சயனம் இங்கே
ஸ்ரீரங்கனாதனின் பாதாரவிந்தத்தைக்
கண்டபின் வேறென்ன வேண்டுமிங்கே (பூலோக)
முப்பத்து முக்கோடி தேவர்கள் சூழ்ந்திட
திக்கெட்டும் கேட்குது வேத கோஷம்
நாபிக்கமலத்தில் நான்முகன் வீற்றிட
நாரதன் வீணையில் தேவகானம் (பூலோக)
ஆயர்ப்பாடியிலே ஓடித் திரிந்ததால்
நோகும் திருவடி என்றறிந்து
மாயக்கண்ணனவன் ரங்கன் திருப்பாத
சேவை செய்யுமதால் லக்ஷ்மி இங்கே (பூலோக)
ஆதிச் சேஷனவன் அண்ணல் திருமேனி
தாங்கிடும் அற்புத கோலமிங்கே
சந்திர சூரியர் நின்று வணங்கிட
பல்லாண்டு பாடிடும் கோஷ்டி இங்கே (பூலோக)
ரங்க ராஜனவன் கைத்தலம் பற்றிய
ரங்க நாயகியின் சன்னிதியே
அந்தரங்கம் தன்னின் அந்த ரங்கன் வாழ
என்றும் அருள் செய்யும் ஸ்ரீநிதியே (பூலோக)
16 comments :
Where is the explanation Kumaran?
ஆகா...குமரன் மார்கழி உற்சவத்துக்கு ரெடியாயிட்டாரு போல! :-)
அழகான பாடல் குமரன்! யாரு எழுதிப் பாடியிருக்காங்க-ன்னு தெரியலை!
//ஸ்ரீரங்கனாதனின் பாதாரவிந்தத்தைக்
கண்டபின் வேறென்ன வேண்டுமிங்கே //
அச்சுவை பெறினும் வேண்டேன்-தான் நினைவுக்கு வருகுது!
//அந்தரங்கம் தன்னின் அந்த ரங்கன் வாழ//
நல்ல சொல் விளையாட்டு.
C.சரோஜா, C.லலிதா குரலில் பாடியது என நினைக்கிறேன்!
நல்ல ரசனையான பாடல்!
கிஷோர்.
விளக்கம் சொல்லத் தேவையில்லாத எளிதான பாடல் தானே?! எதற்கு விளக்கம் வேண்டும் என்று சொல்லுங்கள்.
எனக்கும் யார் எழுதிப் பாடினதுன்னு தெரியாது இரவிசங்கர். யூ ட்யூபில் கிடைத்தது.
எனக்கும் நீங்கள் சொன்ன இடங்கள் பிடித்திருந்தன.
பாடியவர்கள் யார் என்று சொன்னதற்கு மிக்க நன்றி எஸ்.கே.
இனிமையான பாடல்.....
என்னக்கு பிடித்த பாடல்.....
மாயக்கண்ணனவன் ரங்கன் திருப்பாத
சேவை செய்யுமதால் லக்ஷ்மி இங்கே
சேவை செய்யுமதால் லக்ஷ்மி (சேவை செய்யும் மஹாலக்ஷ்மி இங்கே)
என்பது சரியான வார்த்தை.
மிகவும் அருமை
இது என்ன ராகம் என்பதை தயவுசெய்து தெரிவிக்கவும்
இனிமையான பாடல் இனிமையான குரல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
Inimai inimai inimai. No. Comments
Which ragam,.?
இந்த அற்புத பாடல் என்ன ராகம் என்று கேட்டதற்கு யாரும் பதில் தரவில்லை. யாருக்கும் தெரியவில்லை போலிருக்கு..
மோகன ராகம்
மோகனம்