Friday, December 28, 2007

78. சீர்காழி சீரங்கம் பாடுவாரா? - காவிரி சூழ்பொழில்!

மார்கழி மாசக் குளிர்ல நல்ல தூக்கம் போட்டிருந்த என்னை தட்டி எழுப்பிட்டாரு நம்ம கண்ணன்..

இப்போ ஸ்ரீரங்கத்து கண்ணன பார்ப்போம்..

இதுக்கு குரல் கொடுத்தவர் சீர்காழி கோவிந்தராஜன்,
வரி கொடுத்தவர் உளூந்தூர்பேட்டை சண்முகம்,
இசை கொடுத்தவர் குன்னக்குடி வைத்தியநாதன்.

பாடலை கேட்க இங்கே சொடுக்கவும்..காவிரி சூழ்பொழில் சோலைகள் நடுவினில் கருமணி துயில்கின்றது
கண்ணனின் நித்திரை வண்ணங்கள் காட்டிடும் ஸ்ரீரங்கம் தெரிகின்றது..ஸ்ரீரங்கம் தெரிகின்றது..


மாவிலை தோரணம் வாயில்கள் தாண்டிட கோயில் ஒளிர்கின்றது
மத்தளம் மேளங்கள் கொட்டி முழக்கிட மண்டபம் மலர்கின்றது
மணி மண்டபம் மலர்கின்றது..


பாரெங்கும் சுற்றினும் அவனருள் கிட்டிடும் ஓர் இடம் ஸ்ரீரங்கமே
அந்தரங்கம் யாவும் அந்த ரங்கன் அறிவான் அவன் தான் வைகுந்தமே
போனது போகட்டும் இனி யாகிலும் நெஞ்சம் புனிதம் ஆகட்டுமே..
புன்னகை புரிந்திடும் மன்னவன் பொற்பாதம் கண்கள் காணட்டுமே..

அனைவருக்கும் இனிய புத்தாண்டாக பூக்கட்டும்.

அன்புடன், கி.பாலு

9 comments :

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

பாடலுக்கு நன்றி பாலு அண்ணா.

//அந்தரங்கம் யாவும் அந்த ரங்கன் அறிவான்//

சொல் விளையாட்டா? :-)

Dr. உளுந்தூர்பேட்டை சண்முகம் சினிமாப் பாடல்கள் பல பிரபலமானவை! மதுரை அரசாளும் மீனாட்சி, சின்னஞ்சிறு பெண் போலே...ன்னு பல பாடல்கள்!

சீர்காழியார், பல திருமால் பாடல்கள் பாடியுள்ளார்! திருமலை தென்குமரி, திருமால் பெருமை என்ற பல படங்களில் கண்ணன் ஹிட்ஸ் கொடுத்திருக்காரு!

R. said...

அன்பரே,

ஆறெங்கும்
சரியல்ல.

பாரெங்கும் என்று மாற்றப்படவேண்டும்

அன்புடன்
ராதாகிருஷ்ணன்

sury said...

அழகான கவிதை
//ஆறெங்கினும் சுற்றினும்" //

ஆறு திசைகளைக்குறிக்கின்றதாகும். வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு, (so far two dimensional)
மேலே, கீழே சேர்த்துக் கொள்ளுங்கள். ( Becomes Three dimensional )

நிற்க.
ஆறு என்ற வார்த்தைக்கு வழி, பாதை எனவும் பொருள் உண்டாம்.

எந்தெந்த வழியெலாம் சென்றாலும், கடைசியில் திருவரங்கம் தான் சேரவேண்டிய இடம்.
அதனையும் உணர்த்துவது போலவும் தோன்றுகிறது.

கண்ணனும் கீதையில் அதுவே சொல்கிறான்.
சர்வ தேவ நமஸ்காரஹ கேசவம் பிரதி கச்சதி.

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ஆசிகள்.

சிவ.சூ. நா.
சென்னை.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//R. said...
பாரெங்கும் என்று மாற்றப்படவேண்டும்//

பாலு அண்ணா பிசி போல!
நானே மாற்றி விட்டேன்!
நன்றி ராதாகிருஷ்ணன்

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//sury said...
அழகான கவிதை
//ஆறெங்கினும் சுற்றினும்" //

ஆறு திசைகளைக்குறிக்கின்றதாகும். வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு, (so far two dimensional)
மேலே, கீழே சேர்த்துக் கொள்ளுங்கள். ( Becomes Three dimensional )//

அட,
சூரி சார் சொல்வதிலும் மறைபொருள் இருக்கே!
நன்றி சார்.
ஆனால் பாட்டில் பாரெங்கும் என்று வருவதால், அப்படியே மாற்றி விட்டேன், பாலு (மடல்காரன்) சார்பாக!

//சர்வ தேவ நமஸ்காரஹ கேசவம் பிரதி கச்சதி//

மிகவும் அழகான கீதை சுலோகம்.
உங்களுக்கும் கண்ணன் பாட்டினரின் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ஆசிக்கு நன்றி சூரி சார்!

மடல்காரன் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்.
திருத்தத்திற்கு நன்றி.

அன்புடன், கி.பாலு

ARUNSANKAR said...

காலஞ்சென்ற கவிஞர் திரு.உளுந்தூர்பேட்டை சண்முகம் அவர்களின் ஒரு பாடல் எங்களுக்கு பத்தாம் வகுப்பில் தமிழில் பாடமாக இருந்தது. என்ன கவிதை என்று மறந்து விட்டது. ஆனால் அதனிடையே வரும் "இல்லையென்ற பெரும்சொல்லே எத்திக்கும் நிலைத்திருக்கும்" என்ற வரி ஏனோ ஏன் மனதில் வெகு...வெகு ஆழமாக பதிந்து விட்டது. இவ்வரிகள் ஏனோ அடிக்கடி நினைவுக்கு வருகிறது.

sathya.oct said...

sir pls upload this song in youtube

செல்லா said...
This comment has been removed by the author.
Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP