56. இதோ, சிவாஜி பாடிய கண்ணன் பாட்டு!
தலைவர் படம் ரிலீஸ் ஆவ சொல்ல, கண்ணன் பாட்டில் மட்டும் தலைவரின் கொண்டாட்டம் இல்லைன்னா எப்படி?
என்ன பாட்டு போடறது-ன்னு, கொஞ்ச நேரம் பிச்சிக்கிட்டது தான் மிச்சம்!
வா ஜி வா ஜி...சிவா ஜி -யை,
வாரும் ஐயா, வாரும் ஐயா, சிவனின் ஜீவனே
- என்று ஏதாச்சும் உல்டா பண்ணி, இதுவும் கண்ணன் பாட்டு தான்னு போட்டுறலாம்! :-) ஆனா வெட்டிப்பயல் இந்த சமயம் பாத்து ஊரில் இல்லை!
இல்லீன்னா, சஹானா, சஹாரா-ன்னு சிவாஜி பாட்டுக்களைப் பிரிச்சு மேய்ந்திடலாம்!
சரி, மெய்யாலுமே தலைவர் படத்தில் வந்த ஒரு நல்ல கண்ணன் பாட்டைப் போடலாம்-னு தோணியது! கண்ணன் பாட்டு - ராமன் பாட்டு எல்லாமே ஒண்ணு தானே!
தலைவரின் நூறாவது படம்...நூறு நாள் தாண்டியும் ஓடியது!
ரஜினியைத் திரையில் இப்படியும் பாக்க முடியுமா? ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா?
சண்டைக் காட்சிகள் ஒன்று கூட இல்லாமல்....
தலைவர் ஸ்டைல் ஒன்று கூட இல்லாமல்...
பஞ்ச் டயலாக் ஒன்று கூட இல்லாமல்...
கதாநாயகி-தலைவர் குறும்புகள் இல்லாமல்...
அதுவும் குறிப்பா, ஒரு வில்லி இல்லாமல்....
இப்படியொரு ரிஸ்கை நூறாவது படத்தில் தானா செய்ய வேண்டும்?
வசன உச்சரிப்புகளில் ஒரு மகானின் வாடை வீசா விட்டாலும்...படம் என்னவோ ஹிட் தான்!
பொதுவாத் தலைவரை நடிப்புக்கு இலக்கணம் என்றெல்லாம் சொல்ல முடியாது-ன்னு ஒரு சாரார் குறை சொல்வார்கள்....
ஆனால் தில்லு முல்லு, மற்றும் அவரது இந்த நூறாம் படத்தைப் பார்த்தவர்கள், கொஞ்சம் அசந்து தான் போவார்கள்!
அன்று இளைஞர் ரஜினிகாந்த், படம் முழுதும் தாத்தா வேடத்தில் நடித்தார்!
இன்று தாத்தா ஆகி விட்ட சந்தோஷ ரஜினிகாந்த், இளைஞர் வேடத்தில் பட்டைய கெளப்ப தயாராகி விட்டார்!
இதோ...டோட்டல் கெட்டப் சேஞ்சில், தலைவர்...
ஸ்ரீ ராகவேந்திரா படத்தில் வரும் எசப் பாட்டு ஒன்று!
இனிமையான பாட்டு, இசைப் பாட்டு, எசப் பாட்டு, கேட்க சொடுக்குங்கள் இங்கே!
ராம நாமம் ஒரு வேதமே
ராக தாளமொடு கீதமே
மனம் எனும் வீணை மீட்டிடுவோம்
இசை எனும் மாலை சூட்டிடுவோம்
(அருள்மிகு...ராம நாமம் ஒரு வேதமே)
அவன் தான் நாரணன் அவதாரம்
அருள் சேர் ஜானகி அவன்தாரம்
கெளசிக மாமுனி யாகம் காத்தான்
கெளதமர் நாயகி சாபம் தீர்த்தான்
(ராம நாமம் ஒரு வேதமே)
ஓர் நவமி் அதில், நிலவெலாம் புலர, நினைவெலாம் மலரவே - உலகு புகழ்
தாய் மடியில் ஒரு மழலையாய் உதிக்க, மறை எலாம் துதிக்கவே - தயரதனின்
வம்சத்தின் பேர் சொல்ல, வாழ்த்துக்கள் ஊர் சொல்ல - விளங்கிய திருமகனாம்
ஜனகர் மகள் வைதேகி பூச்சூட, வைபோகம் கொண்டாட, திருமணம் புரிந்தவனாம்
மணிமுடி இழக்கவும் மரவுரி தரிக்கவும்
அரண்மனை அரியணை துறந்தவனாம்
இனியவள் உடன்வர இளையவன் தொடர்ந்திட
வனங்களில் உலவிடத் துணிந்தவனாம்
ஸ்ரீ... ராம சங்கீர்த்தனம்
நலங்கள் தரும் நெஞ்சே...
மனம் இனிக்க, தினம் இசைக்க, குலம் செழிக்கும்...
தினம் நீ சூட்டிடு பாமாலை
இது தான் வாசனைப் பூமாலை
இதைவிட ஆனந்தம் வாழ்வினில் ஏது
இசைத்தே நாமமே நாளும் ஓது
(ராம நாமம் ஒரு வேதமே)
இசைஞானி இளையராஜா போட்ட அக்மார்க் மரபிசைப் பாடல் இது...
சந்தங்கள் கொஞ்சும் பாடல்....மாய மாளவ கெளளை ராகத்தில்...வேகமான பாட்டு.
கூடவே சேர்ந்து பாடினால், இன்னும் இனிக்கும்!
ராகம்: மாய மாளவ கெளளை
படம்: ஸ்ரீ ராகவேந்திரா
வரிகள்: வாலி
குரல்: ஜேசுதாஸ்
இசை: இளையராஜா
10 comments :
ரவி... நீங்களும் ஜோதியில் கலந்தது உண்மை என்றாலும் இது ஆன்மிக ஜோதி !
:)
நல்ல பாட்டு ஒன்றை இத்தருணத்தில் ஆறுதலாகத் தந்தமைக்கு நன்றி ரவி!!
இதை ஒத்துக்கொள்ளவே முடியாது. இந்தப் பாடலில் வாணி ஜெயராம், வலம்புரி சோமநாதன் ஆகியோரும் பாடியிருக்கிறார்கள். நீங்கள் முழுப் பெருமையையும் சிவாஜிக்குக் கொடுப்பது சரியாகாது. என்னைக் கேட்டால் ரஜினிக்குப் பதிலாக சிவாஜி (உண்மையான சிவாஜிங்க) ராகவேந்திரராக நடித்திருந்தால் படம் ஓடியிருக்கும்.
மற்றபடி எனக்குப் பாடல் மிகவும் பிடிக்கும். இனிமையான இசை, சந்தம், குரல் ஆகிய காரணங்களுக்காக.
ரொம்ப நல்ல பாட்டு.
தான் வணங்கும் தெய்வத்தையே தன்னுள் காட்டும் படி ஆனது, அதுவும் நூறாவது படமாக, என்று பல முறை சொல்ல கேட்டுள்ளேன்.
//கோவி.கண்ணன் said...
ரவி... நீங்களும் ஜோதியில் கலந்தது உண்மை என்றாலும் இது ஆன்மிக ஜோதி !//
தலைவரின் ஜோதியில கலக்காம இருக்க முடியுங்களா GK?
அதான் தலிவர் மனசுக்குப் பிடித்தமான படத்தில் இருந்து ஒரு பாட்டு! :-)
//இலவசக்கொத்தனார் said...
நல்ல பாட்டு ஒன்றை இத்தருணத்தில் ஆறுதலாகத் தந்தமைக்கு நன்றி ரவி!! //
உங்களுக்கு இந்தப் பாட்டு பிடிக்கும்னு தெரியும் கொத்ஸ்!
சரி, அது என்ன //இத்தருணத்தில் ஆறுதலாக//? - சிவாஜி டிக்கெட் கிடைக்கலயா? :-)
//G.Ragavan said...
இதை ஒத்துக்கொள்ளவே முடியாது. இந்தப் பாடலில் வாணி ஜெயராம், வலம்புரி சோமநாதன் ஆகியோரும் பாடியிருக்கிறார்கள்//
ஜிரா...இது என்ன சிவாஜி ரிலிஸ் போது இப்படி எல்லாம் நீங்க எக்ஸ்ட்ராவா ரிலிஸ் பண்ணறீங்க?:-)
வாணி ஜெயராம் - குழந்தை சிவாஜியின் குரல்
வலம்புரி சோமநாதன் - சிவாஜியின் குரவின் குரல்
இப்படி எல்லாமே சிவாஜி மயம் தான் தலீவா! :-)
ஆம்ஸ்டர்டாம் போயி படம் பாத்தாச்சா?
//மற்றபடி எனக்குப் பாடல் மிகவும் பிடிக்கும். இனிமையான இசை, சந்தம், குரல் ஆகிய காரணங்களுக்காக.//
எனக்குத் தெரியுமே! :-)
//சிவமுருகன் said...
ரொம்ப நல்ல பாட்டு.
தான் வணங்கும் தெய்வத்தையே தன்னுள் காட்டும் படி ஆனது, அதுவும் நூறாவது படமாக, என்று பல முறை சொல்ல கேட்டுள்ளேன்//
ஆமாம் சிவா.
ரஜினிக்கு அவரு மனசு போலவே அமைந்து விட்டது இந்தப் படம்!
இந்தப் பாட்டும் படத்தின் முதல் பாட்டு-னு நினைக்கிறேன்...நல்ல ஹிட்!
// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஜிரா...இது என்ன சிவாஜி ரிலிஸ் போது இப்படி எல்லாம் நீங்க எக்ஸ்ட்ராவா ரிலிஸ் பண்ணறீங்க?:-)
வாணி ஜெயராம் - குழந்தை சிவாஜியின் குரல்
வலம்புரி சோமநாதன் - சிவாஜியின் குரவின் குரல்
இப்படி எல்லாமே சிவாஜி மயம் தான் தலீவா! :-) //
இருந்துட்டுப் போகட்டும். ஆனாலும் பாட்டோட தொடர்புள்ளவங்க பேர்கள் எல்லாத்தையும் குடுக்கனும்ல ;) அதுதான் நான் சொல்றது! :)
// ஆம்ஸ்டர்டாம் போயி படம் பாத்தாச்சா? //
ஆம்ஸ்டர்டாம்ல படம் இல்லை. வேற ஏசன், ஆரெம், அல்மீரா, டென்ஹாரென்னு நாலு ஊருல ஓடுது. இங்க இருந்து இன்னைக்குப் பெரிய கூட்டமே பொறப்பட்டுப் போயிருக்கு. நாளைக்கொரு கூட்டம். மிச்சம் மீதி மிஞ்சுனவங்கள்ளாம் ஞாயிறு போறாங்க. அதுல நான் போனாலும் போவேன். I am not so keen on Sivaji. But friends want to watch the movie. Just accompanying them.
சிவாஜி படத்துல இந்த மாதிரி பாட்டு எல்லாம் போட முடியுமா? :-)
இருந்தாலும் நல்ல பாட்டு தான்!