Friday, June 22, 2007

57. "தல" அஜீத் படத்தில் "ரண்டக்க" பாடும் கண்ணன் பாட்டு!

"தல" அஜீத்குமார், லைலா நடித்து வந்த படம் பரமசிவன்!
பி.வாசு நம்ம தல-ய இயக்குகிறார்!

கல்யாணி மேனன் - இவங்க ஏற்கனவே மார்னிங் ராகா படத்துல பிரபலமாகி இருந்தாங்க! அலை பாயுதே பாட்டில் அலை பாயுதே-ன்னு இவங்களும் பாடுவாங்க!
சைந்தவி-இவங்க நான் கேள்விப்பட்ட வரைக்கும் +2 மாணவி...
இதுக்கு மேல விவரமானவங்க வந்து சொல்லுங்கப்பூ!
இவங்க ரண்டக்க ரண்டக்க பாட்டின் பிரபலம்!


இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து பாடும் பாட்டு!
ஒரு கண்ணன் பாட்டு...
சின்னப் பாட்டு தான் என்றாலும் சிறப்பான பாட்டு...உங்களுக்கும் பிடிக்கும், கேட்டுப் பாருங்க!

மலைநாடான் ஐயாவுக்குப் பிடித்தமான பாடல் என்று நேற்று பேசும் போது சொன்னார்!
மாயன் கண்ணன் முல்லை நாட்டின் தெய்வம்.
முல்லைத் திணை வைத்த பதிவருக்கு, இதோ கண்ணன் பாட்டிலே நேயர் விருப்பம்! - இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா!

கேட்டு மகிழ இதோ சுட்டி

பாட்டைப் பார்க்கணுமா? இந்தாங்கோவ்!


playing-vinaகண்ணன் மணி வண்ணன் - அவன் அருமை சொல்லப் போமோ!
மன்னன் மழை வண்ணன் - அவன் மகிமை எளிய தாமோ!

ஆயன் அலங் காரன் - கடல் பாயில் துயிலானோ
மாயன் மலர் தூயன் - என் இசைக்கே இசையானோ

(கண்ணன் மணி வண்ணன்)

பாற்கடலில் அவன் இருக்க
பாம்பணையாய் நான் இருப்பேன்
துவாரகையில் அவன் வசிக்க
துளசி வனம் ஆயிருப்பேன்


கீதையினை அவன் விதைக்க
பாதையிலே விழுந்திருப்பேன்
யமுனை நதி தீரத்திலே
ராதை எனக் காத்திருப்பேன்


வெண்ணைய் திருடும்
பூவிரல் என்னைத் தழுவ
ஆசையில் கன்னம் மிளிர
மாணவன் இன்னல் புரிய

நடந்தது கனவா நனவா
மயக்கத்தில் கிடந்த நான்
இன்னும் என்ன சொல்ல ஆ....

(கண்ணன் மணி வண்ணன்)


படம்: பரமசிவன்
வரிகள்: Dr. க்ருதியா
குரல்: கல்யாணி மேனன், சைந்தவி, லக்ஷ்மி ரங்கராஜன்
இசை: வித்யாசாகர்

25 comments :

CVR said...

கண்ணன் பாட்டுல பாடகிகள் போட்டோ ரொம்ப முக்கியமா?? அவிங்க ப்ளஸ் 2 படிச்சா உங்களுக்கு என்ன,எத்திராஜ்ல படிச்சா உங்களுக்கு என்ன???

என்னமோ போங்க!! அண்ணி ஊருல இல்லைங்கறது மட்டும் தெளிவா தெரியுது!!! :-P

பாட்டு மிக அருமை KRS. பதிவிட்டதற்கு நன்றி! (பாட்டை!!) :-D

மலைநாடான் said...

ரவி!

அன்புக்கு நன்றி. பாடலுக்கும்தான்.

சைந்தவி பற்றிய உங்கள் விபரங்கள் சரியே. ஆயினும், இந்தப்பாடலில் குரல் தந்துள்ள கல்யாணி மேனன் வேறு. நீங்கள் குறிப்பிட்டுள்ளவர் வேறு என்று நினைக்கின்றேன். நான் நினைப்பது சரியானால், இக்குரலுக்குரிய கல்யாணிமேனன், பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனனின் தாயார். இவர் முத்து படத்தில் வரும் குலுவாலுல்லே பாடலில் இடையே வரும் மலையாள வரிகளைப் பாடியிருப்பார். சொக்கவைக்கும் இந்தக் குரலை, தமிழ்திரையிசைக்கு அழைத்து வந்தவர், ஏ.ஆர். ரகுமான்.

என் தகவல் தவறாயின் மன்னிகவும்.

நன்றி.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//CVR said...
கண்ணன் பாட்டுல பாடகிகள் போட்டோ ரொம்ப முக்கியமா??//

பின்னே! அன்புருகிப் பாடும் கோபிகைகள் இல்லை என்றால் கண்ணன் தான் எங்கே!
பாடகிகள் புகைப்படமும் பரந்தாமன் புகைப்படமும் சேர்ந்ததே கண்ணன் பாட்டு!
புகைப்படத்தில் உங்களுக்கு என்ன புகை? :-)

//அவிங்க ப்ளஸ் 2 படிச்சா உங்களுக்கு என்ன,எத்திராஜ்ல படிச்சா உங்களுக்கு என்ன???//

ச்சே...சும்மா ஒரு ஜெனரல் நாலேட்ஜை வளத்துக்க வுடமாட்டாங்களே!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//என்னமோ போங்க!! அண்ணி ஊருல இல்லைங்கறது மட்டும் தெளிவா தெரியுது!!! //

யோவ் யோவ்...உரக்க சொல்லாதய்யா! நீ வேற! அப்புறம் நீங்களே உங்க ஆள வுட்டு என்னைய ஊருக்குப் போகச் சொல்லறீங்களா-ன்னு எல்லாம் கேள்வி வரும்!
உங்கள் அன்பு நண்பன் அல்லவா நான்! போட்டுக் கொடுக்காதீங்க...எது வேணும்னாலும் கேட்டு வாங்கிக்கங்க :-)

//பாட்டு மிக அருமை KRS. பதிவிட்டதற்கு நன்றி! (பாட்டை!!) :-D//

நீர் பாட்டுக்குன்னு, பாட்டுக்குத் தான் உண்மையாலுமே நன்றி சொல்றீரா...இல்லை அதுக்கா....என்று இந்த ஊருக்கே தெரியுமே! துர்கா தேவி...கொஞ்சம் வாங்க ப்ளீஸ்! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

// மலைநாடான் said...
சைந்தவி பற்றிய உங்கள் விபரங்கள் சரியே. ஆயினும், இந்தப்பாடலில் குரல் தந்துள்ள கல்யாணி மேனன் வேறு. நீங்கள் குறிப்பிட்டுள்ளவர் வேறு என்று நினைக்கின்றேன்//

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா!
நமக்கும் சினிமாவுக்கும் எப்பவுமே நல்ல பொருத்தம்! :-)
நண்பனைக் கேட்டேன்.
நீங்கள் சொல்வது தான் சரி!

கல்யாணி மேனன் (சீனியர்) தான் இப்பாடலைப் பாடியுள்ளார்!
அவரு தான் அலை பாயுதேவில் அலை பாயுதே பாட்டும், மார்னிங் ராகா படத்திலும், மற்றும் பல ஹிட் பாடல்கள் பாடியுள்ளார்.
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் ஐஸ்வர்யாவுக்கு மியூசிக் டீச்சராய் வருவதும் இவங்களே-ன்னு நண்பன் சொல்லுறான்!

கல்யாணி மேனன் (ஜூனியர்) இப்ப வந்த பார்த்திபன் கனவு, பட்டியல் படங்களில் பாடியவர்...வித்யாசாகர் அறிமுகம்!
என்ன செய்ய என்ன செய்ய பைய பையக் காதல் செய்ய பாட்டு பாடியவரும் இவரே!

தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி! பதிவில் திருத்தி விடுகிறேன்!
ஹூம்...அப்ப அவுங்க ஃபோட்டோவை எடுத்து விடணுமா? மனசு கேட்கலையே! :-)

CVR said...

/உங்கள் அன்பு நண்பன் அல்லவா நான்! போட்டுக் கொடுக்காதீங்க...எது வேணும்னாலும் கேட்டு வாங்கிக்கங்க :-)//

இந்த ஒரு வார்த்தைக்காக தானே காத்துக்கிட்டு இருந்தேன்!!
என் கையில வசமா மாட்டிக்கிட்டீங்க!!!

//நீர் பாட்டுக்குன்னு, பாட்டுக்குத் தான் உண்மையாலுமே நன்றி சொல்றீரா...இல்லை அதுக்கா....என்று இந்த ஊருக்கே தெரியுமே! //

நான் அப்பவிங்கறதுதான் நாடறிஞ்ச விஷயமாச்சே!! அதெல்லாம் இப்போ எதுக்கு??

/துர்கா தேவி...கொஞ்சம் வாங்க ப்ளீஸ்! :-) //
அக்காவ எதுக்கு தேவை இல்லாம தொந்தரவு செஞ்சிகிட்டு???அவங்களை நிமதியா இருக்க விடுங்க!! :-P

CVR said...

//தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி! பதிவில் திருத்தி விடுகிறேன்!
ஹூம்...அப்ப அவுங்க ஃபோட்டோவை எடுத்து விடணுமா? மனசு கேட்கலையே! :-) //

பாடகிகள் புகைப்படமும் பரந்தாமன் புகைப்படமும் சேர்ந்ததே கண்ணன் பாட்டு!
புகைப்படத்தில் உங்களுக்கு என்ன புகை? :-)


நம்பிட்டேன்!!! :-P

Anonymous said...

The song was good. The video in which the whole family sings is very good too.
Thanks for posting the nice melody
- Dr. Balu

G.Ragavan said...

பாடல் அருமையாக இருந்தது. மிகவும் ரசித்தேன்.

கல்யாணி மேனனுக்கு இப்படியா அறிமுகம் கொடுக்குறது? மார்னிங் ராகால பாடுனது சுதா ரகுநாதன்.

கல்யாணி மேனன் பாடிய பெரிய ஹிட் பாட்டு எது தெரியுமா?

நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்

அது சுஜாதாங்குற படத்துல. அப்புறம் சவால் படத்துல "தண்ணியப் போட்டா சந்தோசம் பிறக்கும்..தள்ளாடி நடந்தா....ஓ பார்வதி...பார்வதியல்ல தேவதாஸ்..சந்திரமுகி நான் சந்திரமுகி"ங்குற பாட்ட கமலஹாசனோடச் சேந்தும் பாடியிருக்காங்க. நான் மேல சொன்ன ரெண்டு பாட்டும் மெல்லிசை மன்னர் இசையில். இளையராஜா இசையிலையும் ஒரு பாட்டு பாடியிருக்காங்க. எதுன்னு நெனைவில்லையே....நல்லதொரு குடும்பத்துல வரும் "செவ்வானமே பொன்மேகமே..." பாட்டுன்னு நெனைக்கிறேன். ஆமா. அதுதான். ஜெயச்சந்திரன், டி.எல்.மகராஜன் கூட சேந்து பாடியிருப்பாங்க.

சைந்தவி, சென்னை ஆழ்வார்ப்பேட்டை செட்டிநாடு வித்யாஷ்ரம்ல படிச்ச பொண்ணு. அந்தப் பள்ளிக்கூடத்த இந்தப் பொண்ணு நல்லாப் பாடுறான்னு ஊக்குவிச்சிருக்காங்க. அதனுடைய பலன்..இந்த மாதிரி வாய்ப்புகள். சைந்தவி +2 எழுதி முடிச்சிப் பாசாகியாச்சுங்க.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//Anonymous said...
The song was good. The video in which the whole family sings is very good too.
Thanks for posting the nice melody
- Dr. Balu //

நன்றி Dr. Balu.
வீடியோவில் கவனித்தீர்களா? அஜீத் மட்டும் அந்தப் பூஜைக் காட்சியில் தனியாக சிரித்துக் கொண்டு இருப்பார்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//மார்னிங் ராகால பாடுனது சுதா ரகுநாதன்.//

கல்யாணி மேனனும் கூடப் பாடியிருப்பாய்ங்க ஜிரா!

//அப்புறம் சவால் படத்துல "தண்ணியப் போட்டா சந்தோசம் பிறக்கும்..தள்ளாடி நடந்தா....ஓ பார்வதி...பார்வதியல்ல தேவதாஸ்..//

ஆகா...இதுக்குத் தான் கண்ணன் பாட்டுல ஜிரா வேணுங்கிறது! என்சைக்கிளபிடியா மாதிரி இவ்வளவு தகவல்கள் அள்ளித் தெளிச்சிருக்கீங்க! நன்றி ஜிரா!

//சைந்தவி +2 எழுதி முடிச்சிப் பாசாகியாச்சுங்க//

ஆகா....அவுங்களுக்கு நீங்க தான் ட்யூஷன் சொல்லிக் கொடுத்தீங்கன்னு காத்து வாக்கிலே ஒரு சேதி வந்துச்சே! இவ்வளவு விபரம் சொல்றீங்கன்னா... சேதி உன்மை தான் போல கீது!...CVR Note this point! :-)

வல்லிசிம்ஹன் said...

கல்யாணிமேனனின் நீ வருவாயென பாட்டு 80களீல் மிகவும் பிரசித்தம்.

இன்னோரு கண்ண்ன் பாட்டுசீர்காழியோடது. ராமு படத்தில் ஜெமினி கணேசன் பாடுவது போல வரும்.
சீர்காழியும் டி.எம்.எஸும் பாடுவார்கள்.
"நம்பினார் கெடுவதில்லை நான்கு மறைத்தீர்ப்பு " என்று ஆரம்பிக்கும்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//வல்லிசிம்ஹன் said...
இன்னோரு கண்ண்ன் பாட்டு சீர்காழியோடது. ராமு படத்தில் ஜெமினி கணேசன் பாடுவது போல வரும்//

கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்...ஏழைக் கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான் பாட்டு தானே வல்லியம்மா...அடுத்த பதிவில் போட்டு விடுகிறோம்:-)

ஜீவா (Jeeva Venkataraman) said...

ரொம்ப நல்ல பாட்டு இல்லையா, இந்த மாதிரி பாட்டெல்லாம் வருவது அரிதாகி விட்ட நேரத்தில், ஆச்சரியம்தான் மிஞ்சுகிறது!

ஷைலஜா said...

ரவி!பாட்டு மனசை அள்ளுகிறது.
சைந்தவிக்கு வளமான குரல். 'குங்குமம் வாங்க குங்குமம் படிக்க...'இதுவும் சைந்தவியின் குரல்தான்!

கோவி.கண்ணன் said...

//கல்யாணி மேனன் - இவங்க ஏற்கனவே மார்னிங் ராகா படத்துல பிரபலமாகி இருந்தாங்க! அலை பாயுதே பாட்டில் அலை பாயுதே-ன்னு இவங்களும் பாடுவாங்க!//

நீ வருவாயென நான் இருந்தேன்,
ஏன் மறந்தாயென நான் அறியேன்...

கல்யாணி மேனன் பாடிய பாடல், அவர்களது குரல் இனிமைக்காக என்றென்றும் நினைவில் நிற்கும் பாடல், இன்று ஏனொ அந்த பாடல் நினைவுக்கு வந்தது, உங்கள் பதிவை திறந்தால் கல்யாணி மேனன் !

நன்றி இரவிசங்கர்.

Anonymous said...

small song aanalum ovvoru character rum athai paadi varumpothu, presentation nantaga irunthathu except Laila - because she is always laughing without any seriousness - good girl but ithula ottala - naala rasikireenka Mr.KRS
baskar

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஜீவா (Jeeva Venkataraman) said...
ரொம்ப நல்ல பாட்டு இல்லையா, இந்த மாதிரி பாட்டெல்லாம் வருவது அரிதாகி விட்ட நேரத்தில், ஆச்சரியம்தான் மிஞ்சுகிறது!//

ஆமாம் ஜீவா!
கண்ணன் தனக்குத் தேவையான போது அத்தி பூத்தாற் போல் அவனே பாட்டு வாங்கிக் கொள்கிறானோ! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஷைலஜா said...
ரவி!பாட்டு மனசை அள்ளுகிறது.
சைந்தவிக்கு வளமான குரல்//

ஆமாம் ஷைலஜா! மலைநாடான் ஐயா தொலைபேசும் போது இவர்களைப் பற்றிச் சொன்னார்!

//'குங்குமம் வாங்க குங்குமம் படிக்க...'இதுவும் சைந்தவியின் குரல்தான்!//

ஆஅகா...அப்படியா!
Best கண்ணா Best! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

// கோவி.கண்ணன் said...
நீ வருவாயென நான் இருந்தேன்,
ஏன் மறந்தாயென நான் அறியேன்...
//

ஆகா...இதுவும் சூப்பர் பாடல் GK!

//இன்று ஏனொ அந்த பாடல் நினைவுக்கு வந்தது, உங்கள் பதிவை திறந்தால் கல்யாணி மேனன்!//

அப்படிப் போடுங்க!
சிங்கைக் கண்ணனின் அவாவை
சிங்காரக் கண்ணன் தீர்த்து வைத்தான் பாருங்க! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//Anonymous said...
small song aanalum ovvoru character rum athai paadi varumpothu, presentation nantaga irunthathu//

மிகவும் உண்மை பாஸ்கர்! எல்லாரும் சிறப்பாச் செஞ்சிருக்காங்க!

//except Laila - because she is always laughing without any seriousness//

ஆகா...லைலா மேல் லைட்டா கோபம் போல உங்களுக்கு! :-)

//naala rasikireenka Mr.KRS
baskar//

CVR
கேட்டுக்குங்க பாஸ்கர் சொல்றதை!
ரசனை, ரசனை, ரசனை ஐயா!
அதை விடுத்து, பாடகிகள் போட்டோ ஏன் என்று கேட்டீரே! அடுக்குமா? :-)

குமரன் (Kumaran) said...

நல்ல இனிமையான பாடலை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி இரவிசங்கர். பாடல் வரிகளும் இனிமை. பாடியவர்களும் இனிமையாகப் பாடியிருக்கிறார்கள்.

இராமநாதன் said...

இன்போர்மேஷன் இஸ் வெல்த் இல்லியா??? :))

//லக்ஷ்மி ரங்கராஜன்//
இவங்க கர்நாடக சங்கீதப் பாடகி. இவங்களோட ஹஸ்பண்ட்தான் மனநல மருத்துவர் டாக்டர் இரங்கராஜன். யாருன்னா இந்த சுபிக்ஷா மெடிக்கல்ஸ் க்ரூப் இருக்கே.. அதோட ஓனரு.

இறைமலை said...

சைந்தவி.. வளர்ந்து வரும் ஒரு திரையிசை மற்றும் தென்னிசை பாடகி. இவர், இசையமைப்பாளர் G.V. ப்ரகாஸ் அவர்களின் வருங்கால மனைவி.

இறைமலை said...

சைந்தவி.. வளர்ந்து வரும் ஒரு திரையிசை மற்றும் தென்னிசை பாடகி. இவர், இசையமைப்பாளர் G.V. ப்ரகாஸ் அவர்களின் வருங்கால மனைவி.

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP