Friday, June 21, 2013

பெரியாழ்வார் பிறந்தநாள்: பல்லாண்டு பல்லாண்டு!

"பல்லாண்டு பல்லாண்டு" = இந்தப் பாட்டு தெரியுமா?

ஓ... ஆழ்வார் படத்தில், தல அஜீத் பாடுவாரே! அந்தச் சினிமாப் பாட்டு தானே?

அதே அதே!
* ஆனா பாட்டுக்குத் தலை அசைத்தது மட்டுமே = தல!
* மத்தபடி, பாட்டைப் பாடினது = தல-யை விடப் பெரிய தல!:)

பெரிய "தல" = பெரிய ஆழ்வார்
இயற்பெயர்: விட்டு சித்தன்; தெக்கத்தி வில்லிபுத்தூர்க்காரரு; simpleஆச் சொல்லணும்-ன்னா..
நம்ம தோழி ஆண்டாளோட (வளர்ப்பு) அப்பா! = தன் மகளைச் "சான்றோள்" எனக் கேட்ட தந்தை!

என் காதல் முருகனையும் பாடிய சில ஆழ்வார்களுள் ஒருவர் - வள்ளி கொழுநன்;
"டேய் கண்ணா, ஒழுங்காத் தேய்ச்சிக் குளி; இல்ல, உன் ஆளு ஒன்னையப் பாத்துச் சிரிப்பா"-ன்னு பயமுறுத்தியவரு:) = நப்பின்னை காணில் சிரிக்கும்


அவரோட பிறந்த நாள் தான் இன்னிக்கி - ஆனியில் சுவாதி (Jun 20)
ஆனி மாசம் சுவாதி = அவரு; ஆடி மாசம் சுவாதி = நானு:)

சரி... அவருக்கு ஒரு வாழ்த்தைச் சொல்லீருவோம்; "ஒரு குறையும் இல்லாம, நல்லா இரு" -ன்னு ஆண்டவனையே வாழ்த்துனவரு ஆச்சே!
*Happy Birthday Periazhwar!
*இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பெரியாழ்வாரே!

வாழ்த்த வயதில்லை; வணங்குகிறேன் -ன்னு... இன்னிக்கி அவனவன் வயசைக் கொறைச்சிக்கிறான்:)
ஆனா வாழ்த்த = "வயசு" தேவையில்ல; "மனசு" தான் தேவை!

அதான், ஆண்டவனை விட.. வயசில், கல்வியில், செல்வத்தில், அதிகாரத்தில்..
எல்லாத்திலுமே சின்னவரான ஆழ்வார்,
பெரியவரான இறைவனையே = "நல்லா இரு" -ன்னு வாழ்த்துறாரு!

ஆனா... இறைவனை விட ஒன்றே ஒன்றில் மட்டும் இவரு பெரியவரு; எதில்? = அன்பில்!
(... -பொங்கும், 
பரிவாலே வில்லிபுத்தூர் பட்டர்பிரான் பெற்றான்
பெரியாழ்வார் என்னும் பெயர்)


"பல்லாண்டு பல்லாண்டு" = இந்த 1000 yr song, பலருக்கும் தெரிஞ்சிருக்கும்! ஆனா, இதே பாட்டை..
*சினிமா,
*Dance
*தமிழ்ப் பண்ணிசை,
*கோயில் ஓதல்,
* SPB -ன்னு, பலப்பல குரலில் கேட்போம் இன்னிக்கி!
----------

* AP Nagarajan இயக்கிய திருமால் பெருமை படத்தில், சீர்காழியார்


இசை: கேவி. மகாதேவன்
குரல்: சீர்காழி கோவிந்தராஜன்
படம்: திருமால் பெருமை
வரிகள்: பெரியாழ்வார்

பல்லாண்டு பல்லாண்டு! பல்லாயிரத்தாண்டு! 
பலகோடி நூறாயிரம்!!
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் 
சேவடி செவ்வி திருக்காப்பு!!
(உன் தோள் வலிமை = மல் (எ) வலிமை; 
ஆனா உனக்கும்-எங்களுக்கும், காப்பு = தோள் அல்லதிருவடிகளே!)

அடியோமோடும் நின்னோடும் 
பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு! = (நானும் நீயும்)
வடிவாய் நின் வல மார்பினில்       
வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு! = (அன்னை திருமகளும்)

வடிவார் சோதி வலத்து உறையும்      
சுடர் ஆழியும் பல்லாண்டு! = (சக்கரமும்)
படை போர் புக்கு முழுங்கும் - அப்
பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே!! = (சங்கும்)

* ஆழ்வார் படத்தில்... (உன்னி கிருஷ்ணன் & செந்தில் தாஸ்; Music by Srikanth Deva)
வடைமாலை கோக்கும் போது, அஜீத் தங்கை நைசா ஒரு வடை உருவ,
சாமிக் குத்தம் -ன்னு அஜீத் அவளை ஓங்கித் தட்டிட்டு, Sideல தான் வாயில் லபக்கும் காட்சி - so cute Ajeeth!:)
  

*தமிழ்ப் பண்ணிசை வடிவில்....
 

* SPB குரலில் (album) கேட்க, இங்கே

* "அரையர் சேவை" வடிவில் - அரையர் ஸ்ரீராம பாரதி & துணைவியார்
 

* கோயிலில் வேதம் ஓதும் "தொனியில்"... தமிழ் ஓதல்
 


* பல்லாயிரத்தாண்டு = x1,000
* பல கோடி = x10,000,000
* நூறாயிரம் = 100,000

சுவைக் குறிப்பு (Tid bits):

1. தமிழில், "லட்சம்" (இலட்சம்) என்ற சொல் இல்லை; நூறாயிரம் என்பதே சரி

2. திவ்ய பிரபந்தம் என்ற பெயர் பின்னாளில் வந்தது; ஆழ்வார்கள் யாரும் அந்தப் பெயரை வைக்கவில்லை;
திவ்ய பிரபந்தம் = "அருளிச் செயல்" என்பதே தூய தமிழ்ப் பெயர்;

3. காலத்தால் மூத்த முதலாழ்வார் (பொய்கை ஆழ்வார்), "உலகம்" -ன்னு வச்சி தொடங்குன பாட்டு தான், முதல் பாசுரம் (வையம் தகளியா வார்கடலே) !
ஆனா, எல்லாப் பாசுரங்களையும் பின்னாளில் வரிசைப்படுத்தும் போது, "பல்லாண்டு" -ன்னு மங்களகரமா வரிசைப்படுத்தியதால்...

பெரியாழ்வாரின் இந்தக் கவிதையே, திவ்யப் பிரபந்தத்தில், முதல் பாட்டாக அமைந்து விடுகிறது!

(எப்படி வேதத்துக்கு = "ஓம்" என்பது துவக்கமோ,
தமிழ் வேதத்துக்குப் = "பல்லாண்டு" என்பது துவக்கம்!
வேதத்துக்கு ஓமென்னுமாப் போலே, உள்ளதுக்கெல்லாம் சுருக்காய். தான் மங்கலம் ஆதலால்..ன்னு அருளிச் செயல் ஈடு!)


After a year looong gap, writing in Kannan Songs;
TMS triggered it; Dank u புல்லாங்குழல் குடுத்த TMS குரலே!

8 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான பாடல்கள்... நன்றி...

வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் said...

Submit செய்ய மட்டும் முடிகிறது...

வை.கோபாலகிருஷ்ணன் said...

அழகான படைப்பு. பாராட்டுக்கள்.

jeevagv said...

>>வடிவாய் நின் வல மார்பினில்
வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு!<<

இதுதான் எனக்குப் பிடிச்ச வரிகள் கே.ஆர்.எஸ்.

"பெருந்தாயைப் பிரிந்தறியாப் பெரியோன்" என்ற சொல்லாடலும் உண்டல்லவா! முதலில் அடியோமோடும் பிரிiவின்றி என்று சொல்லிவிட்டு, அதற்கு உவமையாக பெருந்தாயைக் காட்டுகிறார் போலும்! பெருந்தாயைப் போலவே என்னையும் பிரியாது இருப்பான்!

அப்புறம், "அடியோம்" என்பதற்கு "நான்" என்பதை விட "நாம்" என - அனைத்து ஜீவாத்மாக்களையும் கொள்ளலாம். (இரண்டாக இருந்தால் தானே பிரிவு ;-)

கானா பிரபா said...

நிறையத் தெரியாத விடையங்கள், ரசித்தேன் வாழிய நீர் பல்லாண்டு பல்லாண்டு

குமரன் (Kumaran) said...

Happy Birthday Ravi!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@kumaran
Birthday for Periazhwar only - this month:)

குமரன் (Kumaran) said...

Well....

அப்போதைக்கிப்போதே சொல்லிவைத்தேன்!

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP