முத்தம் தாடா கண்ணா!
சின்னச் சின்னச் சின்னக் கண்ணா
கன்னம் மின்னும் மணி வண்ணா
கன்னங் கரு விழி கள்ள விழியாக
வெண்ணெயுண்ட கண்ணா வாடா, வந்து
வெல்ல முத்தம் ஒன்று தாடா!
கற்றைக் குழல் காற்றை அளைய, அதில்
ஒற்றைக் குழல் நெற்றி தயங்க
தோகை மயிற் பீலி வாகாய் அசைந்திட
நேராய் என்னிடத்தில் வாடா, வந்து
ஜோராய் முத்தம் ஒன்று தாடா!
பாதச் சதங்கைகள் கிணுங்க, அதில்
ஏழு ஸ்வரங்களும் மயங்க
மார்பில் தவழ்கின்ற ஆரம் அசைந்திட
மானைப் போலத் துள்ளி வாடா, வந்து
வாயில் முத்தம் ஒன்று தாடா!
தேவர் அசுரரும் வணங்க, அன்னை
யசோதையோ கொஞ்சிப் பிணங்க
ஏழுலோக முன்றன் வாயில் காட்டிய
பின்
ஓடி என்னிடத்தில் வாடா, வந்து
கோடி முத்தங்களைத் தாடா!
-கவிநயா
-கவிநயா
9 comments :
ஆகா... ஆகா... என்ன அழகான வரிகள்...!
வாழ்த்துக்கள்...
தமிழ்மணத்தில் உங்கள் பதிவை submit செய்ய முடியவில்லை... கவனிக்கவும்... நன்றி...
குட்டிக் கிருஷ்ணனை நினைத்து அழகான பாடல். அருமை. பாராட்டுக்கள்.
படமும் அழகு. வாழ்த்துகள்.
அருமையான வரிகள்
அன்புச் சகோதரன்
2013 ல் தெரிவான குறும்படங்களின் மேலான ஒரு பார்வை
நன்றி தனபாலன் :)
தமிழ் மணத்தில் கண்ணனே இணைச்சிட்டான்(ர்) போல! நன்றி :)
// வை.கோபாலகிருஷ்ணன் said...
குட்டிக் கிருஷ்ணனை நினைத்து அழகான பாடல். அருமை. பாராட்டுக்கள்.
படமும் அழகு. வாழ்த்துகள்.//
மிக்க நன்றி ஐயா.
// ♔ம.தி.சுதா♔ said...
அருமையான வரிகள்//
மிக்க நன்றி சகோ :)
சின்ன சின்ன கண்ணன் மனதை கொள்ளை கொண்டான்.
பாடல் அற்புதம்.
மிகவும் நன்றி கோமதி அம்மா.