Monday, August 20, 2012

பாலக்ருஷ்ணனுக்குத் தாலாட்டு


பாலக்ருஷ்ணனுக்குத் தாலாட்டு

(subbusir sings:
http://www.youtube.com/watch?v=sQgyPEYPuHo&feature=em-share_video_user )

வெண்ணையுண்ணும் கண்ணனது கண்ணிரண்டும் சொக்குதடி.
மண்ணைத்தின்னும் மன்னனிவன் கண்ணுறங்கும் நேரமடி.
மீராவின் கிரிதரனைத் தாலாட்ட வாருங்கடி!
"ஆராரோ ஆரிரரோ ஆராரோ" பாடுங்கடி!

[ஆராரோ ஆரிரரோ ஆராரோ ]

தொட்டிலினை அதிராமல் மெதுவாக ஆட்டுங்கடி!
கொட்டாவி விடும்போது கிட்டவந்து பாருங்கடி!
யசோதை கண்டுசொன்ன காட்சிதனைக்காணுங்கடி!
கேசவன் கண்துயிலத் தாலாட்டுப்பாடுங்கடி!

[ஆராரோ ஆரிரரோ ஆராரோ ]


குழலை இவன் ஊதக்கேட்டக் குயிலும் குனியுதடி!
அழகைக்கவிபாட தமிழும் திணறுதடி!
பட்டுக்கன்னம் தொட்டநெஞ்சம் தட்டாமலை ஆடுதடி!
மொட்டவிழ்ந்த அதரம் ஒருமெட்டுப்பாடத்தூண்டுதடி!

[ஆராரோ ஆரிரரோ ஆராரோ ]

14 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான தாலாட்டு பாடல்...
பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...

வை.கோபாலகிருஷ்ணன் said...

தலாட்டுப்பாடல் மிகவும் அழகாக உள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றிகள். VGK

Lalitha Mittal said...

1)தனபாலன் ஜி,
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

2)VGK ஜி,
வந்து ரசித்து பின்னூட்டமளித்தற்கு நன்றி

Kavinaya said...

அழகான தாலாட்டும்.. படமும் :) நன்றி அம்மா.

Rathnavel Natarajan said...

அருமை.

sury siva said...

மிகவும் சுகமாக நீலாம்பரி ராகத்தில் பாட இயல்கிறது எனினும்
"அழகைக் கவிபாட தமிழும் திணறுகிறது"
என்ற வரி எனக்கு கொஞ்சம் இடிக்கிறது.

தமிழ் மொழி திணறுமா என்ன? அவன் அழகை வர்ணிக்க நம்மிடம் வார்த்தைகள் இல்லை.
அது தானே நீங்கள் நினைக்கிறீர்கள் ?

மன்னுபுகழ் கோசலைதன் மணி வயிறு வாய்த்தவனே என்று குலசேகர ஆழ்வார் பாடினாரே..
தமிழில் வார்த்தைகளுக்கா பஞ்சம்.?

எனினும் பாடுவேன். ( அந்த வார்த்தைகளை தவிர்த்து )

சுப்பு ரத்தினம்.

Lalitha Mittal said...

சுப்புசார்,

"தமிழும்"என்பதில்"உம்"="தமிழ்கூட"
அதாவது சொல்வளம் மிக்க தமிழ்கூட
அவனழகை வருணிக்கத் தகுந்த வார்த்தைகிடைக்காமல் தவித்துத் திணறுகிறது என்ற பொருளில் எழுதினேன்;பக்தியோடு பாடும் உங்கள் மனத்திற்கு எது சரின்னு படுதோ அப்படி மாத்திக்குங்க சார்;நன்றி!

Lalitha Mittal said...

கவிநயா,

நேரம் கிடைக்கும்போது சுப்பு சார் நீலாம்பரியில் பாடியிருப்பதையும்
கேட்டு ரசிக்க வா.

Lalitha Mittal said...

ரத்னவேல்ஜி,
வருகைக்கு நன்றி.

நாடி நாடி நரசிங்கா! said...

குழலை இவன் ஊதக்கேட்டக் குயிலும் குனியுதடி!
அழகைக்கவிபாட தமிழும் திணறுதடி!//

so cute lines:)

நாடி நாடி நரசிங்கா! said...

நன்றி :)

Lalitha Mittal said...

ராஜேஷ்,

வந்து,ரசித்து பின்னூட்டியதற்கு நன்றி !

Sankar said...

லலிதா அம்மா!! நலமா?
தாலாட்டு மிக அருமை.. :)
தலைவனின் புகழ் பாடதமிழும் திணறித் தானே ஆகவேண்டும்.. :)

S.L. Chandrasekaran said...

Thalattu lyric Sokkuthadi. Manamam Bala Krishnanidam thulludhadi. Here singular language is to be ignored. The content makes one to express it such manner. This is really a very very excellent composition.

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP