Sunday, April 15, 2012

முத்தம் ஒன்று தந்தால் என்ன?



சுப்பு தாத்தா கேட்டவுடனேயே கானடா ராகத்தில்  பாடித் தந்து விட்டார்! மிக்க நன்றி தாத்தா!


முத்தம் ஒன்று தந்தால் என்ன, ஆகாதோ? - என்
சித்தம் எல்லாம் நீயேதானே தெரியாதோ?
பித்துக் கொண்டேன் உன்மேல் என்று அறியாயோ? - என்
பக்திப் பூவைச் சூடிக் கொண்டால் ஆகாதோ?

கண்ணால் உன்னைப் பார்த்துப் பார்த்து
காதால் புகழைக் கேட்டுக் கேட்டு
நெஞ்சச் சிறையில் உன்னை வைத்தேன் அறியாயோ? - உனையே
தஞ்சம் என்று கொண்ட என்னை மறந்தாயோ?

உன்றன் பட்டுப் பாதம் கொஞ்சம்
என்னைத் தொட்டால் துயரம் தீரும்
பற்றை விட்டேன் உன்னைப் பற்ற அறியாயோ?
சற்றே என்றன் அருகில் வந்தால் ஆகாதோ?

--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.radhagopaljiutempel.com/srikrishnasriradhe.htm

11 comments :

Rathnavel Natarajan said...

மிகவும் அருமையாக இருக்கிறது.
எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பாட்டு நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள்

NAGARAJAN said...

பாடல் மிக அருமை.

இப்பாடலின் இசை வடிவம் உள்ளதா?

Kavinaya said...

//Rathnavel Natarajan said...

மிகவும் அருமையாக இருக்கிறது.
எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி.//

மிக்க நன்றி ஐயா!

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். ஊரில் இல்லை.

Kavinaya said...

//T.N.MURALIDHARAN said...

பாட்டு நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள்//

மிகவும் நன்றி முரளிதரன்.

Kavinaya said...

//NAGARAJAN said...

பாடல் மிக அருமை.

இப்பாடலின் இசை வடிவம் உள்ளதா?//

இல்லையே :( யாராச்சும் பாடத் தெரிஞ்சவங்க பாடித் தந்தால் உண்டு :) ரசித்தமைக்கு நன்றி.

In Love With Krishna said...

Beautiful! :) So nice to be back here after such a long time!

Kavinaya said...

மிக்க நன்றி, ILWK. நலம்தானே? :)

Radha said...

// பற்றை விட்டேன் உன்னைப் பற்ற அறியாயோ?
சற்றே என்றன் அருகில் வந்தால் ஆகாதோ? //
இப்படி நானும் கேட்டேன். கண்ணன் நான் பொய் சொல்கிறேன் என்றுவிட்டான் :-) நல்ல பாடல்...

Kavinaya said...

//இப்படி நானும் கேட்டேன். கண்ணன் நான் பொய் சொல்கிறேன் என்றுவிட்டான் :-) நல்ல பாடல்...//

ஹாஹா :) ஆனா நான் பொய் சொல்லலைப்பா! :)

வாசிச்சதுக்கு நன்றி ராதா.

Kavinaya said...

//NAGARAJAN said...

பாடல் மிக அருமை.

இப்பாடலின் இசை வடிவம் உள்ளதா?//

சுப்பு தாத்தா பாடித் தந்ததைச் சேர்த்திருக்கிறேன். கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி.

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP