நகுமோமு கநலேனி - 2
ராகம்: ஆபேரி
நகுமோமு கநலேநி நாஜாலி தெலிஸி
நன்னுப்ரோவ ராதா ஸ்ரீ ரகுவர நீ
நகராஜ தரநீது பரிவாருலெல்ல
ஒகிபோதன ஜேஸேவார லுகாரே அடுலுண்டுதுரே நீ
ககராஜூ நீயானதி விநிவேக சனலேடோ
ககநாநி கிலகு பஹூ தூரம் பனி நாடோ
ஜகமேலே பரமாத்ம எவரிதோ மொறலிடுது
வகஜூபகு தாளனு நந்நேலுகோரா த்யாகராஜனுத நீ (நகு)
[பொருள்]
ஸ்ரீ ரகுவீர ! உனது புன்னகை தவழும் முகத்தைப் பார்க்க இயலாத என் மனத்துயரைத் தீர்க்கலாகாதா? கிரிதாரியே ! உன் சேவகர்கள் என்னைப் பற்றி அவதூறு சொல்ல மாட்டார்களே ! வெகு தூரம் வர வேண்டும் என்று சொல்லி கருடன் உனது கட்டளைக்கு இணங்கவில்லையா? பரமாத்ம ! அகிலாண்டவா ! எவரிடம் முறையிடுவேன் ! தாமதம் செய்யாமல் இந்த அடிமையைக் காத்தருள்வாய் !
11 comments :
மிகவும் கம்பீரமான பாடல். அதுவும் எனக்கு பிடித்த எம்.எஸ். அவர்கள் குரலில். மனமுருகி கேட்டேன். இந்த பாடலை எந்த இசை கருவியில் கேட்டாலும் இனிமை கொட்டும். அப்பேற்பட்ட பாடல் இது. மிகவும் ரசித்தேன். நன்றி!
// ஜகமேலே பரமாத்ம எவரிதோ மொறலிடுது// இந்த வரிகளை கேட்கும்போதெல்லாம் கண்கலங்கி விடும்.எவ்வளவு மனமுருகி பாடி இருக்கிறார். அதுவும் இந்த வரிகளை எம்.எஸ். அவர்கள் உருகி உருகி பாடுவதை கேட்கும்போதெல்லாம் மெய்மறந்து அனுபவிப்பேன்.
பாடலை அப்படியே தமிழில் மொழி பெயர்திருப்பதும் நன்று. நன்றி!
Thanks Radha for the post; Eppdi irukka?
//நன்னுப்ரோவ "ராதா"// - Thatz why u like this song so much??:)
தியாகராஜரின் மகோன்னதமான பாடல் இது!
ஆபேரி ராகத்தில் அழுவும் தியாகராஜர்!
அந்த மெட்டு மாறாமல், கீழே தமிழாக்கம்!
பொருந்தி வருதா-ன்னும் பாருங்க! நன்றி!
-------------------
பல்லவி:
நகுமுகம் காணாமல் நான்படும் துயர்கண்டும்
ரகுவீரா எனைக்காக்க வருவாயோ? விரைவாயோ?
(நகுமுகம் காணாமல்)
அனுபல்லவி:
மலைதாங்கி நீயன்றோ? தமியேனின் தவிப்பை-உன்
குலமாந்தர் குறியாரோ? குறைதீர்க்க நவிலாரோ?
(நகுமுகம் காணாமல்)
சரணம்:
புள்ளரசன் ஆணையிட்டும் மெள்ளவே பறந்தானோ?
கொள்நிலமும் வைகுந்தமும் வெகுதூரம் என்றானோ?
பரமாத்மா எவரிடம்-போய் என்-முறையீட்டைச் சொல்வேனோ?
தரவேதும் கேளாது-நீ தியாகராஜனைக் கொளவேணும்
(நகுமுகம் காணாமல்)
RADHA,and
K.R.S,
அருமையான பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி!
ரவி,
கண்ணன் அருளால் அனைவரும் நலமே...
தமிழாக்கம் நன்றாக இருக்கிறது...ஆனாலும் ஏதோ குறைகிறது...என்ன என்று சொல்லத் தெரியவில்லை...
@மீனாக்ஷி (அம்மா/அக்கா), நீங்கள் சொன்ன பிறகு தான் பாடலில் உள்ள கம்பீரம் புரிகிறது....இத்தனை நாள் வரை உரிமையுடன் கூடிய ஒரு கெஞ்சல்...அந்த பாவம் மட்டுமே புரிந்திருந்தது...நன்றி. பாடல் பொருள் த்யாகராஜர் கீர்த்தனைகள் என்ற புத்தகத்தில் இருந்து காப்பி அடித்தது. :-)
//தமிழாக்கம் நன்றாக இருக்கிறது...ஆனாலும் ஏதோ குறைகிறது...என்ன என்று சொல்லத் தெரியவில்லை...//
எம்.எஸ்.அம்மாவை விட்டுத் தமிழாக்கத்தைப் பாடச் சொல்லு ராதா...அப்போ ஏதோ குறைகிறது-ன்னு தோனவே தோனாது:)))
oops..எம்.எஸ் அம்மா பாடக் கூட வேணாம்! தமிழாக்கத்தைப் பேசிக் குடுத்தாலே போதும்! குறையும் நிறையும்! :)
எனக்கு மிகவும் பிடித்தமான பாடல் எம் எஸ் ஸின் குரல் ஸ்வரங்களுக்குள் கட்டுப்படாதது என்பது என் கருத்து அதாவது ஸ்வரங்களை கண்டுபிடிப்பது கஷ்டம் அவ்வளவு தெய்வீக இனிமை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத இனிமை
இது போன்ற பாடல்கை பள்ளிகளில் கற்று தரவேண்டும் என்பது என் அவா
ஏர்வாடி என் சுப்பிரமணியன்
எனக்கு சங்கீதமும் தெரியாது.தெலுங்கும் தெரியாது.ஆனால் இப்பாடல் ஏன் மனதை உருக்குகிறது.