நகுமோமு கநலேனி - 1
டிஸ்கி: இது ஒரு மிகப் பழைய ரெக்கார்டிங்க். பத்து நிமிடங்கள் முழுமையாக ஒதுக்கிவிட்டு பொறுமையாக கேட்க வேண்டிய ஒன்று. அவசர கதியில் கேட்டோம் என்றால் பிடிக்காமல் போகலாம். பதிவிட்டவர் மேல் கோபம் வரலாம். :-)
ஸத்குரு ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி அவர்கள் அருளிய "நகுமோமு கநலேனி" என்கிற கீர்த்தனையை பல்வேறு இசைக் கலைஞர்களும் பாடியுள்ளனர். வெகு நாட்களுக்கு முன்னர், முசிறி சுப்ரமணியம் அவர்கள் பாடிய பழைய ரெக்கார்டிங்க் ஒன்று கிடைத்தது. இரவின் அமைதியில் கேட்டால் மனத்தூய்மை ஏற்படுத்தும் ஒரு மிக அற்புதமான ஆலாபனை...இதனைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு இப்பொழுது தான் அமைந்தது. எத்தனை பேருக்கு பிடிக்கும் என்று தெரியவில்லை. ஆனாலும் இது ஒரு பொக்கிஷம் என்று தோன்றியது. பின்னாளில் எவருக்கேனும் இது பயன்பெறலாம்...
~
கிரிதாரியின்,
ராதா
4 comments :
ஸத்குரு ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி அவர்கள் அருளிய "நகுமோமு கநலேனி" என்கிற கீர்த்தனையை பல்வேறு இசைக் கலைஞர்களும் பாடியுள்ளனர். வெகு நாட்களுக்கு முன்னர், முசிறி சுப்ரமணியம் அவர்கள் பாடிய பழைய ரெக்கார்டிங்க் ஒன்று கிடைத்தது. இரவின் அமைதியில் கேட்டால் மனத்தூய்மை ஏற்படுத்தும் ஒரு மிக அற்புதமான ஆலாபனை...இதனைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு இப்பொழுது தான் அமைந்தது. எத்தனை பேருக்கு பிடிக்கும் என்று தெரியவில்லை. ஆனாலும் இது ஒரு பொக்கிஷம் என்று தோன்றியது. பின்னாளில் எவருக்கேனும் இது பயன்பெறலாம்...//
பொக்கிஷத்தை பகிர்ந்து கொண்டதற்கு மிக மிக மகிழ்ச்சி.
நிறைய பொக்கிஷங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
மனத்தூய்மை நிச்சியம் ஏர்படும்.
நன்றி.
//பொக்கிஷத்தை பகிர்ந்து கொண்டதற்கு மிக மிக மகிழ்ச்சி.//
நம்பிக்கையூட்டும் மகிழ்ச்சி.... :-) நன்றி...பாடல் வரிகளையும் எம்.எஸ் அம்மாவின் குரலில் பாடலையும் அடுத்த பதிவில் காணலாம்.
//பதிவிட்டவர் மேல் கோபம் வரலாம். :-)//
அட ராமா! இதுக்கெல்லாமா கோபம் வரும்? எனக்கு சங்கீத ஞானம் பூஜ்யம்னாலும், உண்மையிலேயே இந்தப் பாடல் கேட்க அப்படி ஒரு சுகமாக இருந்தது. மிக்க நன்றி ராதா.
happy & no mention !
// அட ராமா! இதுக்கெல்லாமா கோபம் வரும்? //
உலகம் தெரியாம இருக்கீங்களே...
லாஜிக் இல்லா கருணை மாதிரி லாஜிக் இல்லா கோபம் அப்படின்னு ஒன்னு இருக்கு... :-)