என் கண்ணனைக் கண்டாயா?
மண்ணே மரமே செடியே கொடியே
கண்ணனைக் கண்டாயா - என்
கண்ணனைக் கண்டாயா?
கண்ணனைக் கண்ட காரணத்தாலே
சமைந்து நின்றாயா – நீ
சமாதி கொண்டாயா?
புல்லே பூவே புதரே என்றன்
கண்ணனைக் கண்டாயா – என்
கள்வனைக் கண்டாயா?
கள்வனைக் கண்ட காரணத்தால்
மெய்சிலிர்த்துக் கொண்டாயா – புளகம்
அரும்ப நின்றாயா?
மலையே மடுவே குன்றே குடிலே
கண்ணனைக் கண்டாயா – என்
மன்னனைக் கண்டாயா?
மன்னனைக் கண்ட காரணத்தாலே
மலைத்து நின்றாயா – நீயும்
சிலையாய் ஆனாயா?
மழையே வெயிலே பனியே என்றன்
கண்ணனைக் கண்டாயா – அவன்
கனிமுகங் கண்டாயா?
கனிமுகங் கண்ட காரணத்தாலே
பனியெனக் கரைந்தாயா – உன்
மனதினை இழந்தாயா?
மயிலே குயிலே கிளியே வளியே
கண்ணனைக் கண்டாயா – என்
கண்ணனைக் கண்டாயா?
கண்ணனைக் கண்ட காரணத்தாலே
மயக்கம் கொண்டாயா – உன்னை
மறந்து நின்றாயா?
இன்னும் ஒருமுறை கண்ணனைக் கண்டால்
கொஞ்சம் இரக்கம் கொள்ளுங்கள் - உடனே
என்னிடம் சொல்லுங்கள்
கண்ணில் நீருடன் காத்திருக்கேனென
அவனிடம் சொல்லுங்கள்!
--கவிநயா
8 comments :
வானத்துநிலவே !நட்சத்திரமே!
மாயனைக்கண்டாயா?ராதை
நேயனைக் கண்டாயா?
"நான் இவன் கண்ணொளிமுன்
மின்மினியோ?"என்று நாணி
முகிலுக்குள் மறைந்தாயா?
அருமையான கவிதை.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.
வாங்க லலிதாம்மா. உங்க வரிகள் ரொம்ப அழகா இருக்கு :)
//அருமையான கவிதை.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.//
மிகவும் நன்றி ஐயா.
//
இன்னும் ஒருமுறை கண்ணனைக் கண்டால்
கொஞ்சம் இரக்கம் கொள்ளுங்கள் - உடனே
என்னிடம் சொல்லுங்கள்
கண்ணில் நீருடன் காத்திருக்கேனென
அவனிடம் சொல்லுங்கள்!//
So Beautiful!! <3
Thanku for posting this!!
Even nature is so cruel at times.
Everything u see reminds u of Him!! :((
Thank you ILWK. Glad you liked it.
//Even nature is so cruel at times.
Everything u see reminds u of Him!! :((//
so true! :(
Kavinaya akka: chance e illa.. :)
//இன்னும் ஒருமுறை கண்ணனைக் கண்டால்
கொஞ்சம் இரக்கம் கொள்ளுங்கள் - உடனே
என்னிடம் சொல்லுங்கள்
கண்ணில் நீருடன் காத்திருக்கேனென
அவனிடம் சொல்லுங்கள்..//
அவங்க எல்லாரும் சொன்ன உடனே என்னிடமும் சொல்லுங்கள்.. :)
//அவங்க எல்லாரும் சொன்ன உடனே என்னிடமும் சொல்லுங்கள்.. :)//
அது சரி :) அவசியம் சொல்றேன்!
//Kavinaya akka: chance e illa.. :)//
நன்றி சங்கர்.