Thursday, January 05, 2012

தேவகியின் புலம்பல்

யசோதாவையும், கிருஷ்ணனையும் நினைக்கும் போதெல்லாம், தேவகியையும் நினைக்காமல் இருக்க முடியாது. பரம்பொருளை குழந்தையாகப் பெறுகிற அளவு தவப்பலன் கொண்டவள், அவன் லீலைகளை அருகிலிருந்து அனுபவிக்க முடியாமல் போனது எவ்வளவு வருத்தமான விஷயம்?


பூப்போலச் சிரித்து மயக்கி
தேன்போலப் பேசி இனித்து
மான்போல குதித்துக் களிக்கும் கண்மணியே – உன்னை
காணாமல் கண்ணிரண்டும் உறங்கலையே…

காதோடு கதைகள் பேசி
மனதோடு கவிகள் பாடி
நீராடும் விழியில் ஆடும் கண்மணியே – உன்னை
காணாமல் கண்ணிரண்டும் உறங்கலையே…

வானோடும் நிலவைப் போல
மனதோடும் உன் நினைவு
தேயாமல் வளருதடா கண்மணியே – உன்னை
காணாமல் கண்ணிரண்டும் உறங்கலையே…

விழியோடு இமையைப் போல
கவியோடு பொருளைப் போல
என்னோடு நீ இருந்தால் கண்மணியே – என்
உயிர் தானாய் அமைதி கொள்ளும் கண்மணியே!


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.babyphotos.co.in/2010/09/baby-lord-krishna-photos.html. இங்கே இன்னும் அழகான படங்களும் இருக்கு.

18 comments :

K.s.s.Rajh said...

நல்ல பகிர்வு

Kavinaya said...

//K.s.s.Rajh said...

நல்ல பகிர்வு//

வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி.

Rathnavel Natarajan said...

அருமையான கவிதை.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.

Roaming Raman said...

புதிய குலசேகரன்???

சசிகலா said...

பூப்போலச் சிரித்து மயக்கி
தேன்போலப் பேசி இனித்து
மான்போல குதித்துக் களிக்கும் கண்மணியே – உன்னை
காணாமல் கண்ணிரண்டும் உறங்கலையே…
அருமையான வரிகள் பகிர்வுக்கு நன்றி

Lalitha Mittal said...

அருமை !

In Love With Krishna said...

//பூப்போலச் சிரித்து மயக்கி
தேன்போலப் பேசி இனித்து
மான்போல குதித்துக் களிக்கும் கண்மணியே – உன்னை
காணாமல் கண்ணிரண்டும் உறங்கலையே…//
:((

Romba azhaga irukku!!

Kavinaya said...

//அருமையான கவிதை.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.//

மிகவும் நன்றி ஐயா.

Kavinaya said...

//புதிய குலசேகரன்???//

ஆகா, ஏதோ சிற்றறிவில் தோன்றியது; அவ்வளவே :) வாசித்தமைக்கு நன்றி, ராமன்.

Kavinaya said...

//அருமையான வரிகள் பகிர்வுக்கு நன்றி//

நன்றி சசிகலா.

Kavinaya said...

//அருமை !//

நன்றி லலிதாம்மா.

Kavinaya said...

//:((

Romba azhaga irukk//

ஆமாம் :( நன்றி ILWK.

Sankar said...

தேவகி நெஜமாவே ரொம்ப பாவம்.. :(

rishvan said...

அழகான ஆழமான வரிகள்... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்

Kavinaya said...

//தேவகி நெஜமாவே ரொம்ப பாவம்.. :(//

:(

வாசித்ததற்கு நன்றி சங்கர்.

Kavinaya said...

//என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்//

விரைவில் வருகிறேன் :) வருகைக்கு நன்றி rishvan.

குமரன் (Kumaran) said...

இந்தப் பாட்டைப் பாடுனதாலத் தான் தேவகிக்கு உடுப்பி கிருஷ்ணர் சிலையை கண்ணன் தந்தானாம். உங்களுக்குத் தெரியுமா அது?

Kavinaya said...

//குமரன் (Kumaran) said...

இந்தப் பாட்டைப் பாடுனதாலத் தான் தேவகிக்கு உடுப்பி கிருஷ்ணர் சிலையை கண்ணன் தந்தானாம். உங்களுக்குத் தெரியுமா அது?//

தெரியாதே... சொல்லுங்களேன்...

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP