மேகங்களை கண்டு மிரள்கிறேன்
பல்லவி:
மேகங்களை கண்டு மிரள்கிறேன் - கண்ணா
தேகத்தை மட்டுமே நனைக்கவரும் - நீர்
(மேகங்களை)
அனுபல்லவி:
பாகனின் கட்டை மீறிய மதக்களிறென
வேகவேகமாய் வந்து சூழ்ந்திடும் - கரு
(மேகங்களை)
சரணங்கள்:
மின்னல்களே வேள்வித் தீயாக - அந்தப்
பேரிடிகள் மந்திரங்கள் தான் முழங்க
குளிர்காற்றே என்னை புகையாய்த் தழுவி
பலனாக பிரிவை மேலுமுணர்த்த வரும்
(மேகங்களை)
கூடும் பொழுதை எதிர்காணும் பேடைமுன்
ஆடும் மயிலின் அகவல் சத்தமும்
நாடும் நங்கையரின் கலியை தீர்த்திட
ஓடும் ஆடவரின் காலோசையும் தந்திடும்..
(மேகங்களை)
வெள்ளம் புரளும் யமுனைக் கரையில்
கள்ளன் வருகைக்கு காக்கக் கண்டு
வெள்ளை நிலவு எள்ளாத குறையை
முல்லை மலர்களே போக்கத் தூண்டும்
மேகங்களை கண்டு மிரள்கிறேன் - கண்ணா
தேகத்தை மட்டுமே நனைக்கவரும் - நீர்
15 comments :
கவிதை கடினமாக இருக்கிறது. :-)
"மேகங்களைக் கண்டு"
இரண்டாம் வேற்றுமையில் க, ச, த, ப மிகும்.
இப்படிக்கு,
கவிதை புரியாவிடிலும் பின்னூட்டம் இடுவோர் சங்கம். :-)
ராதா அண்ணா: //கவிதை கடினமாக இருக்கிறது. :-) & கவிதை புரியாவிடிலும் //
எந்த இடத்துலேந்து புரியல? இல்ல முழு கவிதையும் புரிலையா? :(
//"மேகங்களைக் கண்டு"
இரண்டாம் வேற்றுமையில் க, ச, த, ப மிகும்.//
பிழை நீக்கம் செஞ்சுடறேன். ஆனால் இரண்டு கவிஞர்களும் இந்த பிழையை சுட்டி காட்டவில்லை ஏன்?!
(அப்பாடி, நானும் ரெண்டு பேர மாட்டி விட்டுட்டேன். ஆனா அவங்க ரெண்டு பேரும் யாருன்னு மட்டும் சொல்ல மாட்டேன்.. :P)
திருத்தம் என்றால் மேலும் சில இடங்கள் உள்ளன சங்கர்...
[" என்னைப் புகையாய்", "பலனாகப் பிரிவை", "கலியைத் தீர்த்திட", "எள்ளாதக் குறையை"] ஒற்று மிகும் மிகாவிடங்கள் குறித்து இப்பொழுதெல்லாம் அவ்வளவாக யாரும் கண்டு கொள்வதில்லை. :-)
*****
கவிதை சுத்தமாகப் புரியவில்லை என்றில்லை. வருத்தம் வேண்டாம். :-)
//வெள்ளம் புரளும் யமுனைக் கரையில்
கள்ளன் வருகைக்கு காக்கக் கண்டு
வெள்ளை நிலவு எள்ளாத குறையை
முல்லை மலர்களே போக்கத் தூண்டும்
//
புரிய இரண்டாம் முறை படிக்க வேண்டி இருந்தது. அதான் கஷ்டமா இருக்குன்னு சொன்னேன்.
//இரண்டாம் வேற்றுமையில் க, ச, த, ப மிகும்//
சங்கர் எழுதியது இரண்டாம் ஒற்றுமை! அதுல மிகாது:)
இப்படிக்கு,
கவிதை புரிந்தாலும் பின்னூட்டம் லேட்டாய் இடுவோர் சங்கம். :-)
------------
இரண்டாம் முறை சாப்பிடக் கடினப்படாதவர்கள்...
இரண்டாம் முறை படிக்க மட்டும் கடினப்படுகிறார்கள்
#யாருக்கோ :))
பாடி இணைப்பாய் என்று காத்திருந்தேன்;ஏமாற்றிவிட்டாய்!
பாட்டு அருமை;மூணாவது சரணம் ரொம்ப அழகு!
இப்பத்தான் ராதா,கே ஆர் எஸ் பின்னூட்டங்களைப்படித்தேன்;ரசித்தேன்!
கவிதை புரியாவிட்டாலும் புரிந்ததுபோல் நடிக்கும் சங்கத்தைச்சேர்ந்த
லலிதாம்மா!(just joking)
KRS & ராதா அண்ணா: எனக்கு இரண்டாம் வேற்றுமை /ஒற்றுமை எல்லாம் school days ல் படிச்ச ஞாபகம்! இப்ப மறந்துட்டேன். ஆனால் திரும்ப படிக்கணும்.
லலிதாம்மா: பாடி இணைக்கனும்தான் ஆசை. ஏதாவது மழை தொடர்பான ராகத்தோட அமைச்சா நல்லா இருக்கும். மேகக்குறிஞ்சி, அம்ருதபெஹாக், அம்ருதவர்ஷினி.. ஆனா, இதுல ஒன்று கூட எனக்கு சரியாய் தெரியாது. :(
ஆனா வெகு விரைவில், கமாஸ்ல ஒரு பாட்டு வந்துட்டே இருக்கு. என் ஆராவமுதனை அழைத்தோடி வருகிறது.. :)
லலிதாம்மா, ராதா அண்ணா, KRS: அந்த கவிதைக்கு அதுக்குள்ள 3 ரசிகர் மன்றமா ?! கண்ணனின் கருணையே கருணை!! :) :)
வெள்ளம் புரளும் யமுனைக் கரையில்
கள்ளன் வருகைக்கு காக்கக் கண்டு
வெள்ளை நிலவு எள்ளாத குறையை
முல்லை மலர்களே போக்கத் தூண்டும்
romba naal iruku :)
சங்கரின் கவிதைகளே அப்படித்தான் :)
(இல்ல சங்கர், நான் அப்படி சொல்லலை!)
//இப்படிக்கு,
கவிதை புரிந்தாலும் பின்னூட்டம் லேட்டாய் இடுவோர் சங்கம். :-)//
இப்படிக்கு லேட்டாய் படித்தாலும் அதை விட லேட்டாய் பின்னூட்டம் இடுவோர் சங்கம் :)
கவிநயா அக்கா.. அப்படித்தன்னா ? எப்டி ? () வேற!! :)
நீங்களும் நல்ல யோசிக்கறீங்க ?! அடுத்த சங்கமா?
nandraaga ullana !