இராமன் கதை கேளுங்கள்! இராமா கனவேமிரா!
கண்ணன் பாட்டு நேயர்கள் அனைவருக்கும் இனிய இராம நவமி வாழ்த்துக்கள்!
இன்றைய கண்ணன் பாட்டு, இராமன் பாட்டு! இராகவன் பாட்டு! அதுவும் இசைஞானி இளையராஜா இசையில்...சிப்பிக்குள் முத்து (ஸ்வாதி முத்யம்) திரைப்படம் அனைவருக்கும் தெரியும்! அவ்வப்போது கமலஹாசனின் நடிப்புத் திறனை உண்மையாலுமே உரைகல்லால் உறைத்துக் காட்டும் சிலவே சில படங்களுள் இதுவும் ஒன்று! விஸ்வநாத் இயக்கம் அல்லவா!
* அன்று ஒரு இராகவன், வயிற்றில் லவ-குசர்களோடு அவளைக் காட்டுக்கு அனுப்பினான்!
* இன்று சினிமாவில், லவனோடு கூடிய இந்தச் சீதையை இராகவன் கைப்பிடிக்கிறான்!
சற்றே குன்றிய கமல், மகனுடன் விதவையாய் நிற்கும் ராதிகா - இவர்களுக்குள் என்ன பெருசா பொருத்தம் இருக்கு?
= பொருத்தம் இருந்து தானா காதல் வாழ்க்கை மலருது?
* சீதை இராமனை விட மூத்தவள் அல்லவா!
* அவள் பொன், இவன் கரி அல்லவா!
ஆனாலும் ராதிகா படும் துன்பங்களுக்காக, கமல், இராமனிடம் வேண்டுகிறான்(ர்), அல்லாவுக்குத் தீ மிதிக்கிறான்(ர்)! ஆனால் ஒன்றும் நடக்கவில்லை!
பாட்டி, அவளுக்கென்று ஒரு துணை வேண்டுமெனச் சொல்ல, ஒரு விவரமும் புரியாத கமல்...
எம்பெருமானுக்கும் தாயாருக்கும் நடக்கும் திருமாங்கல்ய தாரணத்திலே, அதே தாலியைப் பற்றி அந்தப் பேதைக்குச் சூட்டுவதும்...
இராகவன் சீதையை மணக்கும் காட்சி போலவே, கமல் ராதிகாவை மணக்கும் காட்சி, அழகாகச் சித்தரித்து வரும் சித்திரம்! தெலுங்கில் பாடல் இன்னும் இனிமையாக இருக்கு! = ராமா கனவேமிரா!
ஒரு கதாகாலட்சேபம், நாதஸ்வர-தவில், வில்லுப்பாட்டு, வீணை மட்டல் என்று பலவும் கலந்து, சினிமா இசை + மரபு இசை என்று இணைத்துக் கொடுத்திருப்பார் இளையராஜா!
அதைச் செவ்வனே செய்து முடித்திருப்பார் SPB! சிரிப்பு, சுயம்வரக் கேலி, பக்தி, உருக்கம், திருமாங்கல்ய தாரண ஏக்கம் என்று அத்தனையும் கலந்து...
இதோ, இராம நவமி அன்று அவள்-இராகவன் திருக்கல்யாண வைபோகத்தை...
பாட்டிலே பாவித்துப் பாருங்கள்! - பாவனை அதனைக் கூடில் அவனையும் கூடலாமே!
சாஸ்திர விரோதமான சினிமா என்றெல்லாம் எண்ணாமல்,
அதிலும் எம்பெருமானையே காணும் உள்ளம், அதுவே இராகவனைப் பற்றும் உள்ளம்...
இராமன் கதை கேளுங்கள்! இராமா கனவேமிரா!
(Telugu Version amidst Epic Scenes)
or
(Tamil Version just audio)
ராமன் கதை கேளுங்கள் - ஸ்ரீ
ரகுராமன் கதை கேளுங்கள்!(ராமன் கதை கேளுங்கள்)
அலங்காரச் சீதை, அழகு அரசாளும் கோதை
(ராமன் கதை கேளுங்கள்)
(சீதையின் சுயம்வரம் நிச்சயிக்கப்பட்ட நாளிலே,
ஜனகனின் மண்டபத்தில் மாலை ஏந்தி வந்த ஜானகியை,
வெண்ணிலா மண்ணிலா வந்ததென்று மன்னவரெல்லாம் பார்க்க,
ஸ்ரீ ராமசந்திர மூர்த்தி...
கண்ணெடுத்துப் பார்க்க மாட்டாரோ என்று கவலை கொண்டார்களாம் சீதாதேவியின் செல்லத்தோழிகள்)
ராமன் கதை கேளுங்கள் - ஸ்ரீ
(ராமன் கதை கேளுங்கள்)
புலிகளின் பலம் கொண்ட புருஷர்கள் வந்திருந்தார்
தோளில் மலையைத் தூக்கிய வீரர் வந்தார்
இடிகளைக் கையில் பிடிப்பவர் பலர் இருந்தார்விழி மலர்ந்தாள்...சபை அளந்தாள்
வரவு கண்டு, அவள் அழகு கண்டு சிவ
தனுசின் நாணும் வீணை போல அறுந்தது!வரவு கண்டு, அவள் அழகு கண்டு சிவ
(ராமன் கதை கேளுங்கள்)
வில்லொடிக்க அங்கு வந்த வேந்தர் தம் பல்லது உடைபட விழுந்தார் - சிலர் எழுந்தார்
தொடை தட்டி எழுந்தவர்கள் முட்டி தெறித்துவிட சட்டென்று பூமியில் விழுந்தார்காலும் நோக இரு கையும் நோக தம் தோளது நோகவே அழுதார்
சிலர் இடுப்பைப் பிடித்தபடி சுளுக்கு எடுத்தபடி ஆசனம் தேடி அமர்ந்தார்ஆஹா வீரமில்லையா, வில்லொடிக்க ஆண்கள் யாரும் இல்லையா?
ஆஹா வீரமில்லையா, வில்லொடிக்க ஆண்கள் யாரும் இல்லையா?(ராமாய ராம பத்ராய ராமச் சந்தராய நமஹ)
தசரத ராமன் தான் தாவி வந்தான்
சீதையை மறு கண்ணால் பார்த்து நின்றான்
மறு நொடியில் வில்லெடுத்து அம்பு தொடுத்தான்படபட படபட படபட படபட
அந்த ஒலியுடன் சிரித்தது அவள் மனசு!
ஜெயஜெய ராமா சீதையின் ராமாஜெயஜெய ராமா சீதையின் ராமா
தசரத ராமா ஜனகனும் மாமாதசரத ராமா ஜனகனும் மாமா
சீதா கல்யாண வைபோகமே - ஸ்ரீ
ராமா கல்யாண வைபோகமே!சீதா கல்யாண வைபோகமே - ஸ்ரீ
ராமா கல்யாண வைபோகமே!காணக் காண அழகாகுமே
இன்னும் ஆயிரம் கண் வேண்டுமேசீதா கல்யாண வைபோகமே - ஸ்ரீ
ராம கல்யாண வைபோகமே!ராமனே அதோ பாரப்பா.....
அலங்காரச் சீதை, அழகு அரசாளும் கோதை
அவள் விழிகண்டு, குடிகொண்டு, மணமாலை தந்தராமன் கதை கேளுங்கள்!
ராமன் கதை கேளுங்கள்!படம்: சிப்பிக்குள் முத்து
இசை: இளையராஜா
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் (SPB)
வரிகள்: வைரமுத்து
ராகம்: ரீதி கெளளை
* ஆயிரம் மனஸ்தாபங்கள் இருப்பது போல் தெரிந்தாலும்...
* அவனை விட இவள் மூத்தவளே என்றாலும்...
* அவன் இவளைப் புரிந்து கொண்டானோ, இவள் அவனைப் புரிந்து கொண்டாளோ...
* அவள் கற்பை இவன் சோதித்தானோ, அவன் கற்பை இவள் காத்தாளோ...
* இவள் காடேகினாளோ, இல்லை அவன் தனிமைக் காட்டுக்குள் வாழ்ந்தானோ...
அவனுக்கு இவள்!
இவளுக்கு அவன்!
இந்த இணை ஜோடி மயில்கள்...திவ்ய தம்பதிகள்...இவர்களுக்குப் பல்லாண்டு பல்லாண்டு!
8 comments :
பாட்டை எழுதியவருக்கும், இசையமைத்தவருக்கும், பாடியவருக்கும், படம் எடுத்தவருக்கும், நடித்தவர்களுக்கும், இடுகையை எழுதியவர் இன்னும் இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் வணக்கங்கள்! எந்தரோ மஹானுபாவலு!
குமரன்,
முந்தின பதிவின் பின்னூட்டம் பாத்தீங்களா?சிவமுருகன் முந்திட்டாரு!
இதில் என்ன சாஸ்திர விரோதம்?சீதையும் மண்ணில் கிடைத்த மாணிக்கம் தானே?
Great post! loved the song
@KRS: y is ur "welcome board" for me not working?
btw, when i started reading this post, i thought it was urs...then i scrolled down to see the name of the author...u and the author of this post have similar styles of writing...
//தசரத ராமன் தான் தாவி வந்தான்
வில்லையே ஒரு கண்ணால் பார்த்து நின்றான்
சீதையை மறு கண்ணால் பார்த்து நின்றான்
மறு நொடியில் வில்லெடுத்து அம்பு தொடுத்தான்//
When i was reading this, i dunno y...
but the imagery took me to aandal's "maari mulainjil..." from thirupaavai. :))
//அவள் கற்பை இவன் சோதித்தானோ, அவன் கற்பை இவள் காத்தாளோ...//
Rajaji says that the uttara kanda where the "sita in the forest" episode happened was not a part of Valmiki's original. Is that true?
ILWK, This is krs' post. Please see the label. No one else can write in that fluid style. I tried to imitate sometimes earlier but failed unrecoverably. :-)
அவனுக்கு இவள்!
இவளுக்கு அவன்!
இந்த இணை ஜோடி மயில்கள்...திவ்ய தம்பதிகள்...இவர்களுக்குப் பல்லாண்டு பல்லாண்டு!//
i read pallandu pallandu i like to comment pallandu pallandu
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல் கோடி நூறாயிரம்
மல்லாண்ட தின்தோள் மணிவண்ணா
உன் சேவடி செவ்வித்திருக்காப்பு
அடியோ மோடும் நின்னோடும்
பிரிவின்றி ஆயிரம்பல்லாண்டு
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற
மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதிவலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர் புக்குமுழங்கும்
அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே