Monday, April 11, 2011

பாப்பா ராமாயணம்


 பாப்பா ராமாயணம்
(பன்னிரண்டாம் பகுதி)

(ஸ்ரீராமநவமி எனும் புனிததினமான இன்று, முதல் பகுதியிலிருந்து இந்த பன்னிரண்டாவது பகுதிவரை ஒருவரிவிடாமல் ஒருமுறை படிப்பவர்கள், 1008 முறை ராமநாம உச்சாரணம் செய்த  திருப்தியையும் பெறலாம்)


யுத்தகாண்டம்


  விபீஷணர் வன்முறை வெறுப்பவராம்;
தர்மத்தைக்    கடை    பிடிப்பவராம்.

   அண்ணனைத் திருத்திட முயன்றனராம்;
      பாசத்தால்  பொறுமையாய் இருந்தனராம்.

நீதிநெறியை            நினைவூட்டினராம்;
சீதையை     விடுவிக்க வேண்டினராம்

தம்பியை தசமுகன் வெறுத்தனராம் ;
சீதையை        விடுவிக்க மறுத்தனராம்.

விபீஷணர் வேந்தனைத் துறந்தனராம;
ராமரைச்      சந்திக்க    விரைந்தனராம்.




நாயகனைப்    புகலடைந்தனராம்;
நடந்ததை அவருக்கு நவின்றனராம்.

   அனைவரும்    கற்கள் சுமந்தனராம்.      .
             பாலம்    அமைக்க  முனைந்தனராம்;                 


  அணிலாரும் மண் தந்து உதவினராம்.
அதன் செயலை ராமர் புகழ்ந்தனராம்.



அன்பாய்      அணிலைத்    தடவினராம்;
முதுகில் முக்கோடுகள் பதித்தனராம்.

அனைவரும் பாடுபட்டுழைத்தனராம்;
கடல்மேல்     பாலம்   அமைத்தனராம்.



சுலபமாய்க்     கடலைக் கடந்தனராம்;
லங்காபுரிதனை     அடைந்தனராம்.

  ராவணன் சேனையை அனுப்பினராம்;
  வானரருடன்     போர்  தொடுத்தனராம்.

     இந்த்ரஜித்  லக்ஷ்மனனைத் தாக்கினராம்;
    மூர்ச்சித்து லக்ஷ்மணன் சாய்ந்தனராம்.



மருத்துவர்     நாடியைப்  பார்த்தனராம்;
  சஞ்சீவினி      மூலிகை  வேண்டினராம்.

அனுமன்       வடதிசை       பறந்தனராம்;.
   சஞ்சீவினிமலை  கொண்டு வந்தனராம்.

லக்ஷ்மணன்   புத்துயிர்       பெற்றனராம்;
         கொடியோரைப் போரிட்டுக் கொன்றனராம்.

   தசமுகன்  தலைகள்   தாழ்ந்தனராம்.
   தாளாத்   துயரத்தில்  ஆழ்ந்தனராம்.

     சினத்துடன்   போர்க்களம் புகுந்தனராம்;
     ராமருடன்   கடும்போர்  புரிந்தனராம்.

     ராமர்   பாணமழை    பொழிந்தனராம்;
     ராவணன்   வலிமை   இழந்தனராம்.




தீயோனை    ராமர்       வீழ்த்தினராம்;
தூயரை இன்பத்தில் ஆழ்த்தினராம்.

   ஜானகி பதியோடிணைந்தனராம்.        
                    ஆனந்தக்  கடலில் நீந்தினராம்.                          



           விபீஷணனை   ராமர்  அழைத்தனராம்;
          இலங்கையின் வேந்தனாயமர்த்தினராம்;

அனைவரும் இலங்கை துறந்தனராம்;
அயோத்தி   நோக்கிப்    பறந்தனராம்.




       பரதன்  அண்ணனை அணைத்தனராம்;
   அரச பொறுப்பை ஒப்படைத்தனராம்.

ராமரை வசிஷ்டர் அழைத்தனராம்;
            அரியணையில் சீதையோடமர்த்தினராம்.

பட்டாபிஷேகம் செய்வித்தனராம்;
அனைவரும் கண்டு களித்தனராம்.





 ராமர் ஆட்சிப்பொறுப்பேற்றனராம்
    நீதிதவறாமல்      நாடாண்டனராம்.      

          மக்களும் குறையின்றி வாழ்ந்தனராம்;
           'ராம ராஜ்யம் '   என்று புகழ்ந்தனராம்.     

ராம ராம ஜெய ராஜாராம்;
  ராம ராம ஜெய சீதாராம்.

ராம ராம ஜெய ராஜாராம்;
ராம ராம ஜெய சீதாராம்.
----------

22 comments :

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்!
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி!

கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ? என்ற மாறன்மொழி சிறக்க பன்னிரெண்டு தொகுதியாய் வந்த பாப்பா இராமாயணம், கண்ணன் பாட்டுக்கு ஒரு தனித்த கருவூலம்! நன்றி லலிதாம்மா!

சிறிய திருவடிகள் திருவடிகளே சரணம்!
சீதை-இராகவனாகிய அவளுக்கும் அவனுக்கும் பல்லாண்டு பல்லாண்டு!

Radha said...

லலிதாம்மா, அருமையா கலக்கிட்டீங்க ! :-)
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !

Srikala B said...

Ram Ram
Thanks for the Divine work.

நாடி நாடி நரசிங்கா! said...

சிறிய திருவடிகள் திருவடிகளே சரணம்!
சீதை-இராகவனாகிய அவளுக்கும் அவனுக்கும் பல்லாண்டு பல்லாண்டு!//


பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல் கோடி நூறாயிரம்
மல்லாண்ட தின்தோள் மணிவண்ணா
உன் சேவடி செவ்வித்திருக்காப்பு
அடியோ மோடும் நின்னோடும்
பிரிவின்றி ஆயிரம்பல்லாண்டு
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற
மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதிவலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர் புக்குமுழங்கும்
அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே

நாடி நாடி நரசிங்கா! said...

அனைவருக்கும் ஸ்ரீ ராம நவமி நல் வாழ்த்துக்கள் :)

நாடி நாடி நரசிங்கா! said...

Lalitha mital said:

எனக்கு ஒரு பெரிய ப்ராப்ளம் வந்தப்ப என் தாய் சுந்தரகாண்டம் படிக்கச்சொன்னா.என்னாலே முழு மனசா கான்சென்ட்ரெட் பண்ணமுடியாம போகவே ''இப்படி குழந்தைகளுக்காக எழுதினா மனசு அதிலே லயிக்கும்''ன்னு தோணித்து;அப்போ இந்த சுந்தர காண்டம் மட்டும் [ஏழுவருடம் முன்] எழுதிவச்சேன் .வந்த பிரச்னை வந்த அடையாளம் கூடத் தெரியாதபடி ஆஞ்சநேயர் விரட்டிவிட்டார்! எம். எஸ்.இன் ''சுத்தப்ரம்ம'' எனக்கு ரொம்பப் பிடித்த பாட்டானதால் அதே மீட்டரில் அதே ராகத்தில் எழுதி இருந்தேன்.அதிலும் ராம் என்று ஒவ்வொரு வரியும் முடியுதே;அதனாலே இதையும் அப்படி முடியராப்லே எழுதினேன்!

//

உண்மைதான் . அதிலும் சுந்தரகாண்டம் Highlight

படிக்கும்போதே ஒரு வித இனிமையான சாந்தி நிலவுது

நல்ல Prepare பண்ணி இருக்கீங்க!

இதற்க்கு நிச்சயம் ராமாரின் அருள் இருந்ததால்தான் இவ்வளவு அருமையாக வந்திருக்கிறது

தங்களின் இனிய பதிவிற்கு மிக்க நன்றி :)

நாடி நாடி நரசிங்கா! said...

ஸ்ரீ ராமச் சந்திரனுக்கு ஜெய மங்களம் - நல்ல
திவ்யமுகச் சந்திரனுக்கு சுப மங்களம்
மாராபி ராமனுக்கு மனு பரந்தாமனுக்கு
ஈராறு நாமனுக்கு ரவிகுல சோமனுக்கு..(ஸ்ரீ ராம)

கொண்டல்மணி வண்ணனுக்கு கண்ணனுக்கு மங்களம்
கோசலைக் குமாரனுக்கு வீரனுக்கு மங்களம்
புண்டரீகத் தாளனுக்கு பூச்சக்ர வாளனுக்கு
தண்டுளவத் தோளனுக்கு ஜானகி மணாளனுக்கு..(ஸ்ரீ ராம)

சிவமுருகன் said...

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே!
ஸஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே!



ஸீதாராம் தொ3ளர் ஸெய்லெ ராம்
ஸேவொ மொகொ தூ தீ3டெ3 ராம்
ஏ ஜெகதுர் தொ2வி கே2ள் கெந்நொக ராம்
ஏ ஜென்மு க2ட3ன் ஸெக்காநி ராம் [ஸீ]

சீதா ராமா எம்மை பார் ராமா,
சேவை எனக்கு தந்திடு ராமா,
இந்த உலகில் என்னை வைத்து விளையாடாதே ராமா,
இந்த பிறவி பினி தாங்க முடியவில்லையே ராமா.

ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகள்

ராமன் கதை கேளுங்கள் ஸ்ரீ ரகு ராமன் கதை கேளுங்கள்
அலங்காரச் சீதை அரசாளும் கோதை
விழி கண்டு குடி கொண்டு மணமாலை தந்த
ராமன் கதை கேளுங்கள்
ஸ்ரீ ரகு ராமன் கதை கேளுங்கள்

வசனம்: சீதையின் சுயம்வரம் நிச்சயிக்கப்பட்ட நாளிலே
ஜனகனின் மண்டபத்தில் மாலை ஏந்தி வந்த ஜானகியை.....
வெண்ணிலா மண்ணிலா வந்ததென்று மன்னவரெல்லாம் பார்க்க.....
ஸ்ரீ ராம சந்திரமூர்த்தி கண்ணெடுத்து பார்க்க மாட்டாரோ...
என்று கவலை கொண்டனர்களாம்....
சீதா தேவியின் செல்லத் தோழிகள்

புலிகளின் பலம் கொண்ட புருஷர்கள் வந்திருந்தார்
மதயானையின் பலம் கொண்ட வேந்தர்கள் அங்கிருந்தார்....
தோளிருமலைதனை தூக்கிய வீரர்கள் வந்தார்
இடிகளை கையில் பிடிப்பவர் பலர் இருந்தார்...
ஆகா நடந்தாள் சீதை நடந்தாள்....
விழி மலர்ந்தாள் சபை அளந்தாள்.....
வரவு கண்டு அவள் அழகு கண்டு சிவதணுசு
நாணும் வீணை போல அதிர்ந்தது
ராமன் கதை கேளுங்கள்
வில்லொடிக்க அங்கு வந்த வேந்தர் தம் பல் அது ஒடிபட விழுந்தார்
சிலர் எழுந்தார்
தொடைதட்டி எழுந்தவர் முட்டி தெறித்துவிட
சட்டென்று பூமியில் விழுந்தார்
காலும் நோக இருகையும் நோக..... தம் தோளது நோகவே அழுதார் சிலர் இடுப்பை பிடித்தபடி சுளுக்கு எடுத்தபடி ஆசனம் தேடி அமர்ந்தார்....
ஆஹா வீரம் இல்லையா....
வில்லை ஒடிக்க ஆண்கள் யாருமில்லையா.....

ராமாய ராபத்ராய் ராமசந்த்ராய நமஹ

தசரதராமன் தான் தாவி வந்தான்
சிவதனுசை ஒரு கண்ணால் பார்த்திருந்தான்
சீதையை மறுகண்ணால் பார்த்திருந்தார்
மறுநொடியில் வில்லெடுத்து அம்பு தொடுத்தார்....
பட பட பட பட பட பட பட பட ஒலியுடன் முறிந்தது சிவதணுசு
ஒலியுடன் சிரித்தது அவள் மனசு
ஜெய ஜெய ராமா ஜெய ஜெய ராமா....
தசர ராமா ஜனகன் மாமா.....
சீதா கல்யாண வைபோகமே


ஸ்ரீ ராம கல்யாண வைபோகமே
காணக்கண் அழகாகுமே.....
இன்னும் ஆயிரம் கண் வேண்டுமே....
ஸ்ரீராமா அதோ பாரப்பா
அழகான சீதை விழி அரசாளும் கோதை
விழி கண்டு குடி கொண்டு மணமாலை தந்த

ராமன் கதை கேளுங்கள் ஸ்ரீ ரகு ராமன் கதை கேளுங்கள்

Lalitha Mittal said...

கே.ஆர். எஸ்,
ராதா ,
உங்களுடைய பாராட்டுக்களை சிறிய திருவடிகள் திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன்.எல்லாம் அவன் செயல்

Lalitha Mittal said...

ந.நா
ரசித்து அனுபவித்ததுடன் அழகாக மங்களம் பாடியது ஆனந்தம் அளிக்கிறது.நன்றி

Lalitha Mittal said...

சிவமுருகன்,
அடுத்த பதிவு பாத்தீங்களா?குமரனை நீங்க முந்திட்டீங்க!

குமரன் (Kumaran) said...

அம்மா,

அது குமரன் எழுதுன பதிவு இல்லை. எல்லாம் வல்ல எம்பிரான் கண்ணபிரான் இரவிசங்கர் எழுதுனது. இங்கே பதிஞ்சது மட்டுமே அடியேன். :-)

In Love With Krishna said...

Thanks for this work...i loved each and every one of the 12 posts...
When i would visit PSP temple everyday evening for raamar utsavam, ur words would be running in my mind. :)

Lalitha Mittal said...

ilwk,
பன்னிரண்டு பகுதிகளையும் நீ படித்து ஆனந்தமடைந்ததை எண்ணி மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் பா.சா.பெருமாளின் பேரருள் என்றென்றும் உனக்குக் கிட்ட பிரார்த்திக்கிறேன்.தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

VSK said...

தாமதமாகத்தான் இந்த இழைக்கு வர முடிந்தது. ஒவ்வொன்றாகப் படித்துவிட்டு, என் வணக்கத்தைச் சமர்ப்பிக்கின்றேன் அம்மா! ராம்ராம்!

Anonymous said...

yadhavabhyudhayam.wordpress.com/

Anonymous said...

DEar kumaran,KRS, and lalitha, கலக்கிட்டீங்க.
மன்னு புகழ் கோசலையின் மணிவயிறு வாய்த்தவனுக்கு தமிழால் ஒரு இன்சுவை திருமாலை சார்த்திட்டீங்க. ப்ரமாதம்.

சஞ்சீவ ஸ்ரீவத்சன்

Srinivasan said...

மிகப்பிரமாதம்.
விவராமாக்ப் பின்னர்.
அன்பில் ஸ்ரீனிவாஸன்,
சென்னை.

Lalitha Mittal said...

vsk,
thanks for visiting

Lalitha Mittal said...

sanjeeva srivatsan,
thanks for yr nice comments

Lalitha Mittal said...

அன்பில் ஸ்ரீனிவாசன்,
தாமதமாக கிடைத்தபோதிலும் உங்கள் பின்னூட்டம் கிடைத்து மகிழ்ந்தேன்;
''விவரமாகப் பின்னர்''?
சஸ்பென்ஸ்?ஆவலுடன் காத்திருக்கேன்.

S.L. Chandrasekaran said...

Very good composition. Easy to read. Difficult to compose. You have understood each and every line meticulously worked out. In an abridged manner, you have spoon fed Ramayana essence of all the Kandams. Ramar has showered His blessings to you and your family. Let it continue for ever. Also the readers will also be blessed. Jai Sri Ram. Jai Hanuman. Namaskarams to your parents.

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP