Sunday, April 10, 2011

பாப்பா ராமாயணம்


பாப்பா ராமாயணம்
(பதினொன்றாம் பகுதி) 

சுந்தரகாண்டம் (பாகம்-8 )

சர்க்கம்-49 முதல் - 68 வரை
அரக்கனை அனுமன் ஏறிட்டனராம்;
    வலிமையுணர்ந்து வியப்புற்றனராம்.

           ப்ரஹஸ்தன் அனுமனை அணுகினராம்;
''ஏன் வந்தாய்?'' என வினவினராம்.

மாருதி மன்னனை நோக்கினராம்;
    தன் நிலையைத் தெளிவாக்கினராம்.

          ராமரின் பெருமையைப் பகர்ந்தனராம்;
அவரது வீரத்தைப் புகழ்ந்தனராம்.

''சீதையின் பதி''எனக் கூறினராம்;
      சீதையை விடுவிக்கக் கோரினராம்.

                 மோஹத்தால் மன்னன் மதி கெட்டனராம்;
                    ''குரங்கைக்கொல்''என்றாணை இட்டனராம்.   

     தசமுகன் தம்பி விபீஷணராம் ;           
    ''தவறு தூத வதம்''என்றனராம்  .           

  நீதிதனை நினைவூட்டினராம்;              
                  நன்மொழியால் மனம் மாற்றினராம்.               

                      அரக்கன்  சினம் சற்று தணிந்தனராம்;                 
                    மரணதண்டனையைக் குறைத்தனராம்.           

                         தீச்சொல்லால் அனுமனைத் தூற்றினராம்;           
                வாலினைக் கொளுத்திடக் கூறினராம்.          

               அரக்கரும் அனுமனைப் பிடித்தனராம்;           
         வாலைத் தீஇட்டுக் கொளுத்தினராம்.       

       மாருதி கட்டைக் களைந்தனராம்;              
            எரிந்திடும் வாலுடன் அலைந்தனராம்.          


      லங்காபுரிதனைக் கொளுத்தினராம்;
      கிஷ்கிந்தா செல்லக் கிளம்பினராம்.

தாயை எண்ணித் தயங்கினராம்;
       ''தீயுண்டதோ?''எனக் கலங்கினராம்.

             அன்னையை தரிசிக்கத்துடித்தனராம்;
         அசோகவனத்துக்கு விரைந்தனராம்.

நாயகியைக் கண்ணுற்றனராம்;
       நிம்மதிப் பெருமூச்சு விட்டனராம்.

''தீயைத்தீ சுடுமோ?'' என்றனராம்;
நெஞ்சார வாழ்த்தி நின்றனராம்.

       அன்னையிடம் விடை பெற்றனராம்;
            அண்ணலைக்காணப் புறப்பட்டனராம்.


கடலைத் தாவிக் கடந்தனராம்;
நண்பரைநோக்கி நடந்தனராம்.

வானரத்தோழரைக் கூடினராம்;
           சீதையைக் கண்டதாய்க் கூறினராம்.

                கூட்டமாய்     ராமர்முன் சென்றனராம்;
          ''கண்டேன் சீதையை!'' என்றனராம்.

               ராமரின்   மகிழ்ச்சியைக் கண்டனராம்;
                  அளவில்லா ஆனந்தம் கொண்டனராம்.

             நடந்ததை விவரமாய் விளக்கினராம்;
   சீதை கூறியதை உரைத்தனராம் .

        சூடாமணிதனைக் கொடுத்தனராம்;
             ராமர் அதைக்கையில் எடுத்தனராம்.

            மார்புடன் அதனை அணைத்தனராம்;
               சீதையைக்கண்டாற்போல் களித்தனராம்.
                                                                                                                   

              அன்புடன் அனுமனைத் தழுவினராம்;
               கண்ணீரால் அவனுடல் கழுவினராம்.




                        சீதையின் நிலையெண்ணிக் கலங்கினராம்;
     பேதையை மீட்கக் கிளம்பினராம்.

(ராம ராம ஜெய.....சீதாராம்)
       

8 comments :

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//'கண்டேன் சீதையை!' என்றன ராம்
சூடாமணி தனைக் கொடுத்தன ராம்
மார்புடன் அதனை அணைத்தன ராம்
பேதையை மீட்கக் கிளம்பின ராம்//

வாழி அன்பர் தம் ஆஞ்சநேயன் வாழி!
வாழி் எங்கள் சுந்தர காண்டம் வாழி!
வாழி அவள் தம் காதல் உறுதி வாழி!
வாழி இராகவன் நெஞ்சம் வாழி வாழியவே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பாப்பா இராமாயணத்தின் பகுதியாக, சுந்தர காண்டத்தை விரிவாகச் சொல்லியமைக்கு நன்றி லலிதாம்மா!
அன்று திருவரங்கத்து மேட்டு அழகியசிங்கர் மண்டபத்தில் பாட்டு ஏறியது போல்...
இன்று கண்ணன் பாட்டு என்னும் இந்த வலைப்பூவிலும் சுந்தர காண்டம் அரங்கேறியது மிகவும் மகிழ்ச்சி! அடியவர் அனைவரின் சார்பாகவும் இதை அரங்கேற்றிய தங்களை வணங்கிக் கொள்கிறேன்!

அஞ்சிலே ஒன்று பெற்றான், அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக, அண்ணலுக்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு, அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான், அவன் எம்மை அளித்துக் காப்பான்!

நாடி நாடி நரசிங்கா! said...

KRS நன்றியெல்லாம் சொல்றாரே ராமாயணம் முடிஞ்சிடிச்சா!!

Lalitha Mittal said...

தானாகவே முன் வந்து பாடிக்கொடுத்து உத்சாகப் படுத்தியதுமட்டுமில்லாமல் அதற்காக எனக்கு வணக்கம் தெரிவிக்கும் பெருந்தன்மையுள்ள கே. ஆர் எஸ்,ராதா போன்றவர்களை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது.இதெல்லாம் அந்த அஞ்சனி மைந்தனின் அருளலால் தான் நடக்கிறது என்பது ப்ரத்யக்ஷம் ஸ்ரீராமஜெயம்

Lalitha Mittal said...

ந.நா,
நாளை பட்டா பிஷேகத்தொடு பாப்பா ராமாயணம் முடிவடையும்.சுந்தரகண்டம் இதன் பெரும்பகுதியாக அமைத்திருக்கிறேன்.அதை கே.ஆர்.எஸ் பாடிக்கொடுத்திருக்கிறார்.எட்டுபகுதிகளையும் கேட்டு ரசித்தீர்களா?
ச்பீகர் சரியாயிடுத்தா?

சி.பி.செந்தில்குமார் said...

ம் ம்

Lalitha Mittal said...

செந்தில் குமார்,
இந்த்த்தடவையாவது இந்த ம்.ம் மின் மர்மத்தை அவிழ்த்துவிடுங்கள்.புரியவில்லை சஸ் பென்சா இருக்கு!

சிவமுருகன் said...

ரொம்ப நல்லா இருக்கு! பாலம் கட்டும் நேரத்திற்க்காக காத்திருக்கிறேன்

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP