Saturday, April 09, 2011

பாப்பா ராமாயணம்-(பத்தாம்பகுதி)


பாப்பா ராமாயணம்-(பத்தாம்பகுதி)

சுந்தரகாண்டம்-(பாகம்-7 )

சர்க்கம்-43  -முதல் - 48 - வரை


  அஞ்சனிமகன் மனம் மகிழ்ந்தனராம்;
மண்டப   உச்சியில்  அமர்ந்தனராம்.

''மாருதி நான்''   என  முழங்கினராம்;
     ''வாயுவின் மகன்''  என விளக்கினராம்.

பேருரு    எடுத்துத் தோன்றினராம்;
    ''ராமர்க்கே ஜெயம்''எனக் கூவினராம்.

காவலர் கூவலைக் கேட்டனராம்;
கேசரிமைந்தனைத்  தூற்றினராம்.

பலபெருமாயுதம்   ஏந்தினராம் ;       
         அனுமனை முற்றிலும் சூழ்ந்தனராம்.      

ஆயுதங்கொண்டு   தாக்கினராம்;         
           மாருதி தூண் ஒன்றைத்தூக்கினராம்.         

  வேகமாய்ச் சுழற்றியடித்தனராம்;          
         பகைவரைக் கொன்று ஒழித்தனராம்.          

                     ப்ரஹஸ்தனின் மகனிதை கண்டனராம்;               
          'ஜம்புமாலி'    என்பதவன் பெயராம்.             

                       அனுமன்மேல் பாணமழை பொழிந்தனராம்;           
                  அஞ்சனிமகன் வெகுண்டெழுந்தனராம்.             

              இரும்புலக்கையொன்றை வீசினராம்;            
         எதிரியைக்கொன்று வீழ்த்தினராம்.             

      செய்திகேட்டு வேந்தன் சீறினராம்;             
ஏழு  அரக்கர்களை ஏவினராம்.               

   ஏழ்வரும்   மந்திரி புத்திரராம்;                 
            மழையென அம்புகள் பெய்தனராம்.                

                வானரர் வலிமையைக் காட்டினராம்;                
                       அனைவரையும் அடித்துப் போட்டனராம்.               

                      கொடியோரைக் கொன்று குவித்தனராம்;               
            தகவலறிந்த மன்னன் தவித்தனராம்.             

       தசமுகன் துயரத்திலாழ்ந்தனராம்;               
            படைத்தலைவர்களைக் கூட்டினராம்.           

             அவர்களில் ஐவரைத் அழைத்தனராம்;            
                குரங்கைப்பிடித்துவரப் பணித்தனராம்.              

       ஐவரும் படையுடன் கிளம்பினராம்;         
       அனுமனைப்பிடிக்க முயன்றனராம்.          

     பாய்ந்து படுகாயப் படுத்தினராம்;              
      மாருதி கடும்போர் தொடுத்தனராம்.         

ஐவரையும் வதம் செய்தனராம்;            
தோரணவாயில்       எய்தினராம்.           

                  தசமுகன்  நிலைகுலைந்தலைந்தனராம்;            
           தன்மகன்  அக்ஷனை அழைத்தனராம்.            

                     அனுமனை வதம் செய்யப் பணித்தனராம்;             
                  அக்ஷனும்          ஆயுதமெடுத்தனராம்.                


வானரருடன்  போர் புரிந்தனராம்;       
       பாணங்கள் சரமாரிப் பொழிந்தனராம்.     

        வாயுபுத்திரன் கொதித்தெழுந்தனராம்;      
                 அக்ஷனைக் கால்களிடைப் பிடித்தனராம்.      

கைகளால் உயரத்தூக்கினராம் ;        
பலமுறை சுழற்றி வீசினராம்.           

       விழுந்த அரக்கன்மகன்  மாண்டனராம்;       
மாருதியும்  வாயில் மீண்டனராம்.      

     அறிந்தமன்னன் மனம்பதைத்தனராம்;  
          அதிர்ச்சியால் செயலற்றிருந்தனராம்.      

இந்திரஜித் அவனது புத்திரராம்;        
                 இந்திரனைப் போரில் ஜெயித்தவராம்.             

                     ராவணன்      மகனை      அழைத்தனராம்;          
                          அனுமனை       அழித்திட       அனுப்பினராம்.            

            இந்த்ரஜித் ஆயுதங்கள் எடுத்தனராம்;       
                  அனுமனைவதம் செய்யத் துடித்தனராம்.      

                 ப்ரம்மாஸ்திரந்தனைத் தொடுத்தனராம்;      
  வாயுபுத்ரன்மேல் விடுத்தனராம்       

           அனுமன் கட்டுண்டு விழுந்தனராம்;         
              பொறுமையாய் கட்டுபட்டிருந்தனராம்.      


                  கட்டவிழ்வதை அவர் உணர்ந்தனராம்;     
     கட்டுண்டதுபோல் நடித்தனராம்.    

              மன்னர்முன் சமர்ப்பிக்கப் பட்டனராம்;
    ''யார்?''என வினவப்பெற்றனராம்.

          ''தூதன் நான் ''என்றவர் நவின்றனராம்
        ''சுக்ரீவர்   அனுப்பினர் '' என்றனராம்.

(ராம ராம ஜெய...சீதாராம்)

7 comments :

In Love With Krishna said...

ஸ்ரீராமஜெயம்!

In Love With Krishna said...

இதை படிக்கும்போது ஒன்னு தோனுச்சு: ஒரு-ஒரு line end-இல் "ராம்" அப்படின்னு வருதே! :))
மராமரம் கதை மாதிரி இருக்கே! :))
இந்த மாதிரி எழுதுவது தான் usual method-ஆ இல்ல நீங்க தான் இவ்வளவு அழகா யோசிச்சு பன்னிருகீங்களா?

Lalitha Mittal said...

எனக்கு ஒரு பெரிய ப்ராப்ளம் வந்தப்ப என் தாய் சுந்தரகாண்டம் படிக்கச்சொன்னா.என்னாலே முழு மனசா கான்சென்ட்ரெட் பண்ணமுடியாம போகவே ''இப்படி குழந்தைகளுக்காக எழுதினா மனசு அதிலே லயிக்கும்''ன்னு தோணித்து;அப்போ இந்த சுந்தர காண்டம் மட்டும் [ஏழுவருடம் முன்] எழுதிவச்சேன் .வந்த பிரச்னை வந்த அடையாளம் கூடத் தெரியாதபடி ஆஞ்சநேயர் விரட்டிவிட்டார்! எம். எஸ்.இன் ''சுத்தப்ரம்ம'' எனக்கு ரொம்பப் பிடித்த பாட்டானதால் அதே மீட்டரில் அதே ராகத்தில் எழுதி இருந்தேன்.அதிலும் ராம் என்று ஒவ்வொரு வரியும் முடியுதே;அதனாலே இதையும் அப்படி முடியராப்லே எழுதினேன்!

சிவமுருகன் said...

பட்டாபிராம் பட்டாபிராம்
துஷ்டநிக்ர ஹரி பட்டாபிராம்
பட்டாபிராம் பட்டாபிராம்
ஸிஷ்டபரிபாலன பட்டாபிராம்
பட்டாபிராம் பட்டாபிராம்
அஷ்டாக்ஷரப் பட்டாபிராம்

ஸ்ரீமந் நடனகோபால சுவாமிகள்!

Lalitha Mittal said...

சிவமுருகன்,
சுவாமிகளின் பாட்டுக்கள் எளிமையாகவும் குழந்தைகளும் சுலபமாக பாடக்கூடியதாகவும் இருப்பது ஒரு தனி அழகு !நன்றி!

சிவமுருகன் said...

ஒரு சிறு உதவி "ஸ்ரீராம நவமி நாளை கொண்டாடுங்கள்" ன்னு ஒரு அருமையான பாடல் இருக்கிறது, தயவுசெய்து தங்களிடம் இருந்தால் பதிக்கவும், அத்தகைய பாடல்கள் கேட்டு - படித்து 5-6 வருடங்கள் ஆகின்றன!

இணையத்தில் தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை. உங்களிடம் இருக்கலாம் என்று கேட்டு வைக்கிறேன்.

நன்றி

Radha said...

ஸ்ரீ ராம ஜெயம் !

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP