பாப்பா ராமாயணம்-(மூன்றாம்பகுதி)
பாப்பா ராமாயணம்-(மூன்றாம்பகுதி)
ஆரண்யகாண்டம்--(பாகம்-2)
மாரீசன் மாயத்தில் தேர்ந்தவராம்;
பொன்மான் வேடத்தில் போந்தனராம்.
சீதையின் அண்மையில் ஓடினராம்;
துள்ளித்துள்ளி விளையாடினராம்.
மான்கண்டு சீதை வியந்தனராம்;
மாயத்தில் தன்னை மறந்தனராம்.
மாயத்தில் தன்னை மறந்தனராம்.
ராமர்க்கு மானினைக் காட்டினராம்;
பிடித்துக் கொடுக்கும்படிக் கேட்டனராம்.
சீதையைக் காத்திடப் பணித்தனராம்.
பொன்மானைப் பின்தொடர்ந்தனராம்;
மாயமானென்று உணர்ந்தனராம்
வில்லை நன்றாய் வளைத்தனராம்;
முடிவினை மாரீசன் உணர்ந்தனராம்;
சாவிலும் தன்பணி மறந்திலராம்.
ராமனின் குரலில் கதறினராம்;
"லக்ஷ்மணா!சீதா!"என்றலறினராம் .
செவியுற்ற சீதை கலங்கினராம்;
கணவனின் குரலென மயங்கினராம்.
உதவிட லக்ஷ்மணனை அனுப்பினராம்;
விதியின் சதியால் தனித்தனராம்.
வாய்ப்பினை இராவணன் உணர்ந்தனராம்;
வயோதிக வேடத்தில் நெருங்கினராம்.
சீதையைக் கடத்திப் பறந்தனராம்;
பேதையோ கதறி அழுதனராம்.
பறவை ஜடாயு பார்த்தனராம்;
அரக்கனால் வெட்டுண்டு வீழ்ந்தனராம்;
ராமர்க்குரைக்க உயிர் வாழ்ந்தனராம்.
தசமுகன் இலங்கை அடைந்தனராம்;
அசோக வனத்துக்கு விரைந்தனராம்.
வைதேகியை சிறை வைத்தனராம்;
அரக்கியர் காவல் புரிந்தனராம்.
ராமர் குடிலுக்குத் திரும்பினராம்;
சீதையைக் காணாது கலங்கினராம்.
மனைவியைத்தேடி அலைந்தனராம்;
ஜடாயு ராமரை அழைத்தனராம்.
நடந்ததை நவின்றுயிர் நீத்தனராம்;
ராமலக்ஷ்மணர்கள் துடித்தனராம்.
ஈமச்சடங்குகள் செய்தனராம்;
ஜடாயு சுவர்க்கம் எய்தினராம்.
இருவரும் தென்திசை ஏகினராம்;
அரக்கனின் இருப்பிடம் தேடினராம்.
(ராம ராம ஜெய.......சீதாராம்)
................................................................................................
கிஷ்கிந்தாகாண்டம்
இருவரும் வனம்பல கடந்தனராம்;
கிஷ்கிந்தாவனம் அடைந்தனராம்.
வானரரொருவரைக் கண்டனராம்.
அவரே அனுமன் என்பவராம்.
ராமரின் பெருமை புரிந்தவராம்;
தரிசித்துப் பரவசமடைந்தனராம்.
நிகழ்ந்ததை ராமர் நவின்றனராம்;
அனுமன் நெஞ்சம் நெகிழ்ந்தனராம்.
தலைவர் சுக்ரீவர்க்கு உரைத்தனராம்;
சுக்ரீவர் உள்ளம் உருகினராம்.
வானரப்படைதனை விளித்தனராம்;
வைதேகியைத்தேடப் பணித்தனராம்.
அனுமனை ராமர் அழைத்தனராம்;
கணையாழிதனை கொடுத்தனராம்.
விடைபெற்றனுமன் விரைந்தனராம்;
இலங்கை நோக்கிப் பறந்தனராம்.
வழியினில் பெருங்கடல் கண்டனராம்.
செய்வதறியாமல் நின்றனராம்.
அனைவரும் கவலையில் ஆழ்ந்தனராம்;
தாண்டிடும் வழிதனை ஆய்ந்தனராம்.
(ராம ராம ஜெய.........சீதாராம்)
------------------------------------------------------------------------------------
(சுந்தரகாண்டம் நாளை ஆரம்பம் )
(சுந்தரகாண்டம் நாளை ஆரம்பம் )
9 comments :
அனுமார் - ராமர் படம் அருமை.
திரும்பி பார்பதற்குள் கதை சுந்தர காண்டத்திற்கு வந்து விட்டது. :-)
ராம ராம ஜெய ராஜா ராம்
ராம ராம ஜெய சீதா ராம் !
lalitha
excellent work
I feel we can teach this to kindergarten children with a simple tune.
ராமன் எத்தனை ராமனடி அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி - தேவன்
ராமன் எத்தனை ராமனடி
கல்யாணக் கோலம் கொண்ட கல்யாண ராமன்
காதலுக்கு தெய்வம் அந்த சீதாராமன்
அரசாள வந்த மன்னன் ராஜாராமன்
அலங்கார ரூபன் அந்த சுந்தராமன்
ராமன் எத்தனை ராமனடி அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி - தேவன்
ராமன் எத்தனை ராமனடி
தாயே என்தெய்வம் என்ற கோசலராமன்
தந்தை மீது பாசம் கொண்ட தசரதராமன்
வீரமென்னும் வில்லை ஏந்தும் கோதண்டராமன்
வெற்றி என்று போர் முடிக்கும் ஸ்ரீஜெயராமன்
ராமன் எத்தனை ராமனடி அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி - தேவன்
ராமன் எத்தனை ராமனடி
வம்சத்திற் கொருவன் ரகுராமன்
மதங்களை இணைப்பவன் சிவராமன்
மூர்த்திக்கு ஒருவன் ஸ்ரீராமன்
முடிவில்லாதவன் அனந்தராமன்
ராமஜயம் ஸ்ரீராமஜயம்
நம்பிய பேருக்கு ஏது பயம்?
ராமஜயம் ஸ்ரீராமஜயம்
ராமனின் கைகளில் நான் அபயம்!
ராம் ராம் ராம் ராம்
ராம் ராம் ராம் ராம்
ராம் ராம் ராம் ராம்
ராம் ராம் ராம் ராம்
ராமன் எத்தனை ராமனடி அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி - தேவன்
ராமன் எத்தனை ராமனடி
கல்யாணக் கோலம் கொண்ட கல்யாண ராமன்
காதலுக்கு தெய்வம் அந்த சீதாராமன்
அரசாள வந்த மன்னன் ராஜாராமன்
அலங்கார ரூபன் அந்த சுந்தராமன்
ராமன் எத்தனை ராமனடி அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி - தேவன்
ராமன் எத்தனை ராமனடி
தாயே என்தெய்வம் என்ற கோசலராமன்
தந்தை மீது பாசம் கொண்ட தசரதராமன்
வீரமென்னும் வில்லை ஏந்தும் கோதண்டராமன்
வெற்றி என்று போர் முடிக்கும் ஸ்ரீஜெயராமன்
ராமன் எத்தனை ராமனடி அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி - தேவன்
ராமன் எத்தனை ராமனடி
வம்சத்திற் கொருவன் ரகுராமன்
மதங்களை இணைப்பவன் சிவராமன்
மூர்த்திக்கு ஒருவன் ஸ்ரீராமன்
முடிவில்லாதவன் அனந்தராமன்
ராமஜயம் ஸ்ரீராமஜயம்
நம்பிய பேருக்கு ஏது பயம்?
ராமஜயம் ஸ்ரீராமஜயம்
ராமனின் கைகளில் நான் அபயம்!
ராம் ராம் ராம் ராம்
ராம் ராம் ராம் ராம்
ராம் ராம் ராம் ராம்
ராம் ராம் ராம் ராம்
பாடலைப் படித்து முடித்த உடனே
மனம் மழலையாகி விட்டது
வாழ்த்துகள்
ராதா,மூணு நாளிலே நாலு காண்டத்தைத் தாண்டவச்ச ஆஞ்சநேயர் சுண்டரகாண்டத்திலே மட்டும் எட்டுநாள் சுத்தவச்சி சீதை பட்ட அவஸ்தை எல்லாம் காட்டி அதை அவள் எப்படித்தாங்கினான்னு எப்படித்தாண்டினான்னு படம்பிடிச்சிக்காட்டிட்டுத்தான் அடுத்த காண்டத்துக்குப் போக அனுமதிச்சான்!
கலா,என்னோட ஐடியாவே அதுதான்!அந்த ஆஞ்சநேயர் நினைத்தால் எதையும் முடித்துக்கொடுப்பான்!
சிவமுருகன்,இனிமையான பாட்டை சரியான சமயத்தில் லட்டுமாதிரி எழுதிக்கொடுத்துட்டிங்க !இன்னி முழுக்க இந்தப்பாட்டுதான் மனசுலே ஓடின்றுக்கும் !
திகழ்,மூன்று பகுதிகளையும் ஒரே நாளில் படிச்சுட்டு,ஒவ்வொரு பகுதிக்கும் பொறுமையாக பின்னூட்டம் கொடுத்திருக்கீங்க! மிக்க மகிழ்ச்சி!நன்றி!