Friday, October 29, 2010
Subscribe to:
Post Comments
(
Atom
)
பாடல் வரிகள், பாடல் இசை, பாடல் காட்சி!
முத்தமிழால் முதல்வனைக் கொண்டாடி மகிழ!
கன்னங் கருத்த வண்ணனவன்
கன்னங் குழியும் மன்னனவன்
முன்னஞ் செய்த வினைப்பய னாயென்
உள்ளங் கவர்ந்த கள்வனவன்.
சுருளும் கற்றைக் குழலழகன்
மருளும் மானின் விழியழகன்
உருளும் சகடம் உதைத்தனவன்
அருளும் தீனதயா ளனவன்.
குழலூதும் கனி வாயழகன்
குன்றேந்தும் நுனி விரலழகன்
தழல்போலே உள் ஒளிர்வனவன்
கழல்பணிய மனங் குளிர்வனவன்!
--கவிநயா
Posted by
Kavinaya
Labels:
tamil
,
அன்பர் கவிதை
,
கவிநயா
வருகைக்கு நன்றி! உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்!
நேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே!
© Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008
Back to TOP
8 comments :
Beautiful poem!!!!
Enakku romba piditha lines:
//கன்னங் கருத்த வண்ணனவன்
கன்னங் குழியும் மன்னனவன்
முன்னஞ் செய்த வினைப்பய னாயென்
உள்ளங் கவர்ந்த கள்வனவன்.//
Nam ullathil avan niraindhiripadhu kooda avan seyal-aga irukka, avan thirupadam thavira veru gathi edhu???
//In Love With Krishna said...
Beautiful poem!!!!//
மிகவும் நன்றி :)
//Nam ullathil avan niraindhiripadhu kooda avan seyal-aga irukka, avan thirupadam thavira veru gathi edhu???//
ரொம்ப சரியா சொன்னீங்க!
அருமையான படம் அக்கா !
//முன்னஞ் செய்த வினைப்பய னாயென்
உள்ளங் கவர்ந்த கள்வனவன்//
"நதியெங்கு செல்லும் கடல்தன்னைத் தேடி
பொன்வண்டோடும் மலர் தேடி
என் வாழ்வில் நீ வந்தது விதியானால்
நீ எந்தன் உயிர் அன்றோ !"
... என்ற கண்ணதாசன் பாடல் வரிகள் நினைவிற்கு வருகின்றன.
//மருளும் மானின் விழியழகன் //
கண்ணன் கண்களில் ராதை தெரிகிறாள் போலும். :-)
//அருமையான படம் அக்கா !//
ஆம் ராதா. எனக்கும் ரொம்பப் பிடிச்ச படம் :)
அழகான பாடல் உங்க நினைவுக்கு வந்திருக்கே... பாடல்கள் பாசுரங்கள் எல்லாமே 'நினைவின் நுனியில்' வச்சிருப்பீங்க போல! :)
//கண்ணன் கண்களில் ராதை தெரிகிறாள் போலும். :-)//
பின்னே... கண்ணன் வேறே, ராதா வேறேயா :)
pl. i need one help.
kannan thaalatu padal ondru iruku
( mazhindhethuthu balaganai madithanil ittu yasodha muthamitu balaganuku oru puthiyuraithal,yenada krishna ithani dhushtathanam) endra paadal adhu aarario thaalatu padal
epdiyadhu kandu pidithu kondugalen pl.pllllllllease
oru thaayin request
நினைவில் இருத்த எந்த சிரமும் பட தேவை இல்லை அக்கா.
"மூன்றாம் பிறை" பாட்டெல்லாம் தினமும் இரவு பத்து மணிக்கு மேல் எதாவது ஒரு F.M-ல வரும். :-)
குழலூதும் கனி வாயழகன்
குன்றேந்தும் நுனி விரலழகன்...
....கழல்பணிய மனங் குளிர்வனவன்:)
அருமை தங்கள் கவி திறன்.
வம்மின் புலவீர் நும் மெய் வருத்தி கை செய்து துய்ம்மினோ
இம்மண் உலகில் செல்வர் இப்போது இல்லை நோக்கினோம்
நும் இன் கவி கொண்டு நும் நும் இட்டா தெய்வம் ஏத்தினால்
செம்மின் சுடர் முடி என் திருமாலுக்கு சேருமே!
முருகன் , அம்மன் . பஜனை . கண்ணன் பாடல்கள் என்று தங்கள் கவி திறனை நம்மாழ்வார் சொல்வது போலவே பயன்படுத்தி இருக்கிறீர்கள். மிக்க நன்றி.
நீங்கள் ரசித்த வரிகள் எனக்குமே பிடித்தவை.
//முருகன் , அம்மன் . பஜனை . கண்ணன் பாடல்கள் என்று தங்கள் கவி திறனை நம்மாழ்வார் சொல்வது போலவே பயன்படுத்தி இருக்கிறீர்கள்.//
அப்படியே தொடர அவங்கதான் அருளணும் :)
மிக்க நன்றி ராஜேஷ்.