பரிவதில் ஈசனைப் பாடி...
ஹரி பஜனை
[ ராகம்: நாத நாமக்ரியா]
ஹரி பஜனம் ! ஹரி பஜனம் !
ஹரி பஜனம் ! ஒன்றே
கலி யுகத்தில் நம்மை காக்கும்
ஹரி பஜனம் ! ஒன்றே.
நாராயண ! நாராயண !
நாராயண ! நாதா !
நாராயண ! நாராயண !
நாராயண ! நாதா ! - திரு
நாராயண ! நாராயண
நாராயண ! நாதா !
பரிவதில் ஈசனைப் பாடி
விரிவது மேவல் உறுவீர் !
பிரிவகை இன்றி நன்னீர் தூய்,
புரிவதுவும் புகை பூவே.
மதுவார் தண் அம் துழாயான்
முது வேத முதல்வனுக்கு
எது ஏது என் பணி என்னாது
அதுவே ஆட்செய்யும் ஈடே.
[ ராகம்: நாத நாமக்ரியா]
ஹரி பஜனம் ! ஹரி பஜனம் !
ஹரி பஜனம் ! ஒன்றே
கலி யுகத்தில் நம்மை காக்கும்
ஹரி பஜனம் ! ஒன்றே.
நாராயண ! நாராயண !
நாராயண ! நாதா !
நாராயண ! நாராயண !
நாராயண ! நாதா ! - திரு
நாராயண ! நாராயண
நாராயண ! நாதா !
பரிவதில் ஈசனைப் பாடி
விரிவது மேவல் உறுவீர் !
பிரிவகை இன்றி நன்னீர் தூய்,
புரிவதுவும் புகை பூவே.
மதுவார் தண் அம் துழாயான்
முது வேத முதல்வனுக்கு
எது ஏது என் பணி என்னாது
அதுவே ஆட்செய்யும் ஈடே.
(திருவாய்மொழி 1-6-1, 1-6-2)
மேலே உள்ள நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களை இங்கே கேட்கலாம்.
பாடியுள்ளோர்: சென்னை [பள்ளிக்கரணை] திருநாரணன் கோவிலின் திவ்ய பிரபந்த பாடசாலை குழுவினர்
38 comments :
Seekers of infinite joy, do not give up ! Sing of the faultless Lord, offer flowers, incense and pure water.
(Thiruvaimozhi 1-6-1)
The cool fragrant tulasi-wearing Lord is the Lord spoken of in the Vedas. Whole-heartedness in devotion alone is the qualification to serve Him. (Thiruvaimozhi 1-6-2)
அதுவே ஆட்செய்யும் ஈடே என்றால் அன்பே தகுதி என்று பொருளா இராதா?
அலோ ராதா,
நான் விமானத்தில் இருக்கும் சமயமாப் பார்த்து, இந்தப் பாசுரங்களை இட்டாயா? இவன் எப்படியும் jetlag-ல்ல தூங்கிருவான், சோர்வா இருக்கும் அப்படி-ன்னு எண்ணமா?
அதெல்லாம் நம்ம கிட்ட நடக்காது! பசி நோக்கார், கண் துஞ்சார், ஓடியாந்துருவோம்-ல்ல? :))
இது வேத மயமான பாசுரம்! தமிழ் வேதம் என்னும்படிக்கு, அப்படியே வேத சாரத்தை, எளிய மக்களுக்கும் வெளிப்படையாக முன் வைக்கும் பாசுரம்!
இதைக் கொண்டாடி, மாமுனிகள் ஒரு தனிப் பாடலே பாடி இருக்கார்!
பரிவதில் ஈசனைப் பாடி, பண்புடனே பேசி
அரியன் அல்லன் ஆராதனைக்கு என்று
உரிமை உடையான் ஓதி அருள் மாறன், ஒழிவித்தான் இவ்வுலகில்
பேதையர்கள் தங்கள் பிறப்பு!
அதாச்சும் எம்பெருமானுக்குத் தனியாக ஆராதனையே தேவையில்லை என்று சொல்லும் பாசுரம் :)
அவாப்த சமஸ்த காமான் என்னும் வேத வாக்கியத்துக்கு ஈடான தமிழ் வேத வரிகள்!
பரிவதில் ஈசனை = பரிவது இல்லா ஈசனை,
எம்பெருமான் பரிவே இல்லாதவன், அப்படித் தானே? :)
மேவல் உறுவீர் = இருந்தாலும் அவன் மேல் மேவல் (ஆசை) இருக்கிறவங்க...
பிரிவகை இன்றி = அவனிடம் ஏதோ வாங்கிக் கொண்டுப் பிரிந்து செல்லுதல், பின்பு மீண்டும் வருதல் இல்லாத "பிரிவகை" இன்றி...
நன்னீர் தூய், புரிவதுவும் புகை பூவே = வாசனை இல்லாத ஏதோ ஒரு நீரோ, மணக்காத புகையோ, மணம் இல்லாப் பூவோ...எதுவாகினும் கையில் கொண்டு, பாடி விரித்து, மேவல் (ஆசை) மட்டும் கொண்டு கொண்டே இருப்பார்கள்!
பரிவதில் ஈசனை = பரிவே இல்லாதவன் - இதுக்கு மட்டும் நீங்க விளக்கம் கொடுத்துருங்க! ஏன்னா எனக்குத் தெரியலை!
ஆனால் அவன் பரிவே இல்லாதவன் என்பது உண்மை போலத் தான் தெரியுது! :)
குமரன்,
உங்களிடம் இருந்து ஒரு முக்கியமான கேள்வியை எதிர்பார்த்தேன். அமலனாதிபிரான் பாசுரம் பற்றி நாம் முன்பு பேசிக் கொண்டிருந்த பொழுது, ஒருவர்க்கு வரும் கேள்வி மற்றொருவர்க்கு வர வேணும் என்று இல்லை என்று பேசிக் கொண்டிருந்தது நினைவு இருக்கலாம்.
உங்களுக்கு நாளைக்குள் நான் எதிர்பார்க்கும் கேள்வி தோன்றவில்லை எனில் நானே கேள்வியைக் கேட்டு பதிலையும் சொல்லிவிடுவதாக உத்தேசம். :-)
விஷயம் என்னன்னா எனக்கு இந்த முறை பதில் தெரியும். :-))
~
ராதா
//அதனால் தான் அந்தாதி முறையில் திருவாய்மொழி அமைந்திருந்தாலும், இந்த இரண்டு பாட்டில் அப்படி "முறை" வைக்கவில்லை! //
இது அநியாயம் அக்கிரமம். நான் ஒத்துக் கொள்ளவே மாட்டேன். :-(
இதனை ஒரு கேள்வியாக குமரன் கேட்டு ஒரு முறையேனும் பதில் சொல்லலாம் என்று இருந்தேனே !! :-)
:-)
Will come back later.
//Radha said...
இது அநியாயம் அக்கிரமம். நான் ஒத்துக் கொள்ளவே மாட்டேன். :-(
இதனை ஒரு கேள்வியாக குமரன் கேட்டு ஒரு முறையேனும் பதில் சொல்லலாம் என்று இருந்தேனே !! :-)//
ஹைய்யோ! Sorry Radha! :)
இது ஒரு கேள்வியாகவும் வருமா-ன்னு நான் யோசிக்கவே இல்ல!
கைங்கர்யத்தில் முறைகள் இல்லை-ன்னு சொல்வதற்காக, அதை எடுத்துக் காட்டினேன்!
Wait, lemme delete that comment, you post that answer!
The pleasure of adiyavar like u is "also" a kainkaryam :)
//குமரன் (Kumaran) said...
அதுவே ஆட்செய்யும் ஈடே என்றால் அன்பே தகுதி என்று பொருளா இராதா?//
:)
குமரனுக்கே சந்தேகமா?
அன்பே தகுதி என்பது இங்கு நேரடிப் பொருளில்லை குமரன் அண்ணா! அதான்...எது பணி, என் பணி என்று இருக்கவே கூடாது என்கிறாரே! :)
எது ஏது, என் பணி, என்னாத அதுவே = எது பணி?, என் பணி எது? என்று என்னாத அதுவே...
அதாச்சும் தகுதியான கைங்கர்யம் எது, அதில் எந்தக் கைங்கர்யத்தை நான் செய்வது, என்றெல்லாம் கொள்ளாமல் இருப்பதே...
= அதுவே அவனுக்கு "ஆள் செய்யும் ஈடு"! :))
அதாச்சும் கைங்கர்யம் பத்தி யோசிக்கத் தேவையே இல்லை-ன்னு சொல்ல வராரா? ஹிஹி! அப்படியில்லை!
"என்" பணி, "எது" பணி? என்றெல்லாம் ஞான பூர்வமாகவோ, கர்ம பூர்வமாகவோ, "ஆராய்ச்சி" செய்யாமல், "விசாரணை" செய்யாமல்...
* கைங்கர்யத்தில் "தன்னை" ஒழித்து,
* "அவனுக்கு என்றே" இருப்பது தான்,
* அவனுக்கு ஆள் செய்யும் ஈடு, அடிமை செய்யும் முறைமை!
எது பணி? = கோயில்ல ஆயிரம் நெய் விளக்கு ஏற்றுதல் தான் பணி! கோடி அர்ச்சனை செய்வது தான் பணி! "நான்" அவனைப் பற்றிய ஞானம் அடைய வேண்டும்! அவனுக்கு இன்னின்ன கர்மாக்களைச் செய்ய வேண்டும் என்றெல்லாம் "கணக்கு போடாது"...
எதுவாகிலும், அவனுக்கு என்றே இருப்பது = அதுவே ஆட்செய்யும் (அடிமை செய்யும்) முறைமை!
எது ஏது, என் பணி, என்னாத அதுவே = ஆட் செய்யும் ஈடு!
முந்தைய பாட்டு = எம்பெருமானுக்குப் பொருள் நியதி கிடையாது என்பது!
இந்த பாட்டு = அதிகாரி நியதியும் கிடையாது என்பது!
//பரிவதில் ஈசனை = பரிவே இல்லாதவன் - இதுக்கு மட்டும் நீங்க விளக்கம் கொடுத்துருங்க! //
இதற்கு முந்தைய பாசுரம் "இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே" என்று முடிகிறது.
இங்கே "பரிவது இல்லை" => "யாதொரு துக்கமும் இல்லை" என்று உரையாசிரியர்கள் பொருள் சொல்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து "பரிவதில் ஈசன்" பாசுரம்.
"பரிவது இல் ஈசன்" => "துன்பப்படுவது என்பது இல்லாத ஈசன்", "துயரத்தின் சாயலே இல்லாத ஆனந்த மயமானவன்" என்று பொருள் சொல்கிறார்கள்.
"ஈசனைப்பாடி விரிவது பரிவதில் மேவல் உறுவீர்" என்று கூட்டிப் படித்தால் ? இதுவும் சரியாகத் தான் மனதிற்கு படுகிறது.
இராதா, நீங்கள் எதிர்பார்த்த கேள்வி என்னன்னு இப்ப தெரிஞ்சிருச்சு. எனக்கு அந்த கேள்வி வந்திருக்காது என்று நினைக்கிறேன். இது ஒரே பாசுரமென்று நினைத்தேன். இரு பாசுரங்கள் என்பது கூட கவனத்தில் வரவில்லை. அதனால் அந்தாதியாக இல்லை என்பது கவனத்தில் வந்திருக்காது. :-)
இன்று காலையில் இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு, நீங்கள் பின்னூட்டத்தில் தந்திருந்த பொருளைப் படித்துவிட்டு அப்போது எழுந்த கேள்வியைக் கேட்டுவிட்டுச் சென்றுவிட்டேன்.
இந்தப் பாசுரத்தைப் படித்திருக்கிறேன். பொருளும் படித்திருப்பேன் என்று நினைக்கிறேன். மறந்துவிட்டேன்.
அமலனாதிபிரான் பாசுரத்தின் போது என்ன பேசினோம் என்றும் நினைவில்லை. என் நினைவுத்திறன் அப்படி. :-)
விளக்கத்திற்கு நன்றி இரவி. நீங்கள் இரு முறை சொன்னதால் நான் பலமுறை படித்துப் பார்க்கிறேன். அப்போதாவது புரிகிறதா என்று. :-)
இன்று காலை மின் தமிழில் படித்தேன் என்று நினைக்கிறேன். யாரோ ஒரு வித்வான் உடையவரிடம் விளக்கம் கேட்டுவிட்டு 'இந்த அர்த்த விஷேசம் புரிகிறது. ஆனால் அதனை விட்டு இதில் எனக்கு ருசியில்லை' என்றாராம். உடனே உடையவர் 'வித்வானாகையால் அர்த்தத்தை ஒத்துக்கொண்டாய். பகவத் கடாக்ஷம் கிடைக்காததால் ருசி பிறக்கவில்லை' என்றாராம்.
எந்த 'முறை'யும் கிடையாது என்பதால் இங்கே அந்தாதி என்ற 'முறை' இன்றி பாசுரம் எழுதிவிட்டார் என்பது தான் விளக்கமா இராதா? இரவி?
சத்சங்கம் அருமை :)
ஹரி பஜனம் ! ஹரி பஜனம் !
ஹரி பஜனம் ! ஒன்றே
கலி யுகத்தில் நம்மை காக்கும்
ஹரி பஜனம் ! ஒன்றே:
நாராயண ! நாராயண !
நாராயண ! நாதா !
நாராயண ! நாராயண !
நாராயண ! நாதா !
:)
தனியா Mp3-la கேட்பதை விட இந்த பாடலை 4 ,5 பேர் கும்மியடிச்சி பாடினா தூக்கிட்டு போவும் .
அருமையான இசை . மிக்க நன்றி
பாசுர விரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி KRS:)
தமிழ் தெரியாதவர்களுக்கு English explain. thanks Radha
மணக்காத புகையோ, மணம் இல்லாப் பூவோ...எதுவாகினும் கையில் கொண்டு, :)
.. அதுக்காக யாரும் சிகரட்டை கையில வெச்சிக்க கூடாது.சொல்லிட்டேன்.:)
// எந்த 'முறை'யும் கிடையாது என்பதால் இங்கே அந்தாதி என்ற 'முறை' இன்றி பாசுரம் எழுதிவிட்டார் என்பது தான் விளக்கமா //
இது நம்ம ரவி கொடுத்த விளக்கம். ரசமான விளக்கம். எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. :-)
//Radha said...
இது நம்ம ரவி கொடுத்த விளக்கம். ரசமான விளக்கம். எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. :-)//
அச்சீச்சோ! ராதா இப்படி சொல்லுவான்-ன்னு தெரிஞ்சிருந்தா, அந்தக் கமென்ட்டை டிலீட் பண்ணி இருக்கவே மாட்டேனே! இப்போ அந்தப் பின்னூட்டம் காணலையே! யாராச்சும் திருப்பிக் கொடுங்கப்பா! :))
அக்கா, சத்சங்கம் இன்னும் நிறைவு பெறவில்லை. :-)
இதற்கு அடுத்த பதிவில் வரும் பாசுரம் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். :-)
வாங்க ராஜேஷ். அலுவலகம் செல்லும் அவசரத்தில் இருந்ததால் ஆங்கிலத்தில் பொருள் இட்டுவிட்டு சென்றேன்.
அதுவும் ஒரு புத்தகத்தில் இருந்து காப்பி தான். :-)
// எதுவாகினும் கையில் கொண்டு, :)
.. அதுக்காக யாரும் சிகரட்டை கையில வெச்சிக்க கூடாது.சொல்லிட்டேன்.:) //
முடியல... :-)
//மணக்காத புகையோ, மணம் இல்லாப் பூவோ...எதுவாகினும் கையில் கொண்டு, :)
.. அதுக்காக யாரும் சிகரட்டை கையில வெச்சிக்க கூடாது.சொல்லிட்டேன்.:)//
ஹிஹி! ராஜேஷ் கலக்கிங்ஸ்! :)
இதில் ஒரு சூட்சுமம் இருக்கு! ஆழ்வார் உள்ளத்தை "ஆழ்ந்து" தான் நோக்கணும்!
சிகரெட் புகையை ஒருவன் எம்பெருமானுக்குக் காட்டினால்???
ஆழ்வார் சொன்னபடித் தானே அவனும் செய்கிறான் - எது ஏது, என் பணி, என்னாது....அதுவே ஆட் செய்யும் ஈடே!!
அப்போ சிகரெட் புகையை மட்டும் கூடாது-ன்னு சொல்ல நமக்கு என்ன உரிமை இருக்கு? :)
அதாச்சும், பொதுமக்கள் கூடும் கோயிலில், ஒருவன் மட்டும் சிகரெட் புகையை எம்பெருமானுக்குக் காட்டினால், அப்போ அது தவறு! சக அடியார்களுக்கு இடைஞ்சல் செய்தவன் ஆகிறான்! "தன்" முறையை மட்டுமே கருதி, பிறர் கைங்கர்யத்தைப் புறக்கணிக்கிறான்!
ஆனால், இதையே, அவன் தனிப்பட்ட முறையில் செய்தால்?
சும்மா கற்பனைக்குத் தான்! அவன் வீட்டில் உள்ள பெருமாளோடவே வாழறான்-ன்னு வச்சிக்கோங்களேன்! சிகரெட் பழக்கம் உடலுக்குக் கேடு-ன்னாலும் அவன் கிட்ட ஒட்டிக்கிச்சி! ஆனால் எந்தப் பேதா பேதமும் இல்லாமல், தான் வேறு-இறைவன் வேறு-ன்னு இல்லாமல், சிகரெட் புகையை எம்பெருமானுக்கும் காட்டுகிறான் என்றால்???
எது ஏது, என் பணி, என்னாது - அவன் செய்யும் சிகரெட் புகைக் கைங்கர்யம் என்பதும் எம்பெருமானுக்கு உவப்பே! இராகவனுக்கு, குகன் கள்ளைப் படைக்கவில்லையா?
இப்படி "ஆழ்ந்து" ஆழ்வாரைப் படித்தால், ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளலாம்! அபிமான பாத்திரமாகச் செய்யப்படும் ஒன்றுக்கு "முறை" கிடையாது! அப்படி "முறை மீறியதாக", உலக வழக்கத்துக்குத் தென்பட்டாலும், அவனை "வெறுத்தல் என்பது கூடாது"!
பகவத் குணானுபவத்தில் நோக்கமே முக்கியம்! முறைகள் அல்ல!
நம் முறைக்கு, அவன் மாறுபட்டு இருக்கிறானே என்பதற்காக, அவனை வெறுத்தல் என்பது மட்டும் கூடவே கூடாது! சிகரெட் புகையைத் தன்னளவில் எம்பெருமானுக்குக் காட்டி விட்டு புகைக்கும் அவனும் அடியவனே! அவன் உடல் நலத்தில் அக்கறை இருந்தால் எடுத்துச் சொல்லலாம்! அல்லது எம்பெருமானே ஆட்கொள்வான்! ஆனால் அவனைப் பழித்துப் பேசுவதும், வெறுப்பதும் எம்பெருமானிடத்தில் "ஆழ்ந்தவர்கள்", ஒரு போதும் செய்ய மாட்டார்கள்!
எது ஏது,
என் பணி,
என்னாது....
அதுவே ஆட் செய்யும் ஈடே!
சிகரெட் புகைக்கும் சிக்கும் சீரார் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்!
அண்ணங்கராசாரியர் உரையில் இருந்து:
"அந்தாதித்தொடையான இப்பிரபந்தத்தில் "பூவே என்று கீழ்ப்பாட்டில் முடித்துவிட்டு அங்குள்ள சொல்லையோ எழுத்தையோ இங்குக் கொள்ளாமல் மதுவார் என்று தொடங்கி இருப்பது அந்தாதித்தொடைக்கு எப்படி பொருந்துமெனில்; இங்குச் சொற்றொடை அந்தாதியாகக் கொள்ளாமல் பொருட்தொடை அந்தாதியாகக் கொள்ளலாம்;
அதாவது - கீழ்ப்பாட்டில் முடித்த பூவுக்கும் இப்பாட்டில் தொடங்குகிற மதுவுக்கும் சேர்த்தியுண்டாதலால் [ அதாவது - பூவும் தேனும் விட்டுப் பிரியாதிருத்தலால்]
இப்படிப்பட்ட பொருட்சேர்த்தியையிட்டு அந்தாதித்தொடை பொருந்தலாம் என்பது ஒரு வகை நிர்வாஹம்."
முடியல ! முடியல ! முடியல...கண்ணை கட்டுதே, தலை சுத்துதே ! சிகரட் புகைக்குள் இவ்வளவு விஷயங்களா ?? யாராவது என்னை வந்து காப்பாத்துங்களேன்... :-))
காஞ்சிபுரம் பிரதிவாதி பயங்கரத்தின் நிர்வாஹமும் சரி நியூஜெர்சி பிரதிவாதி பயங்கரத்தின் நிர்வாஹமும் சரி ஏற்புடைத்தாகத் தான் இருக்கின்றன! :-)
இரண்டு பிரதிவாதி பயங்கரங்களுக்கும் அடியேனின் வணக்கங்கள்!
//அதாவது - பூவும் தேனும் விட்டுப் பிரியாதிருத்தலால்]
இப்படிப்பட்ட பொருட்சேர்த்தியையிட்டு அந்தாதித்தொடை பொருந்தலாம் என்பது ஒரு வகை நிர்வாஹம்."//
சூப்பரு! பிரதிவாதி பயங்கரம் அண்ணா அப்பவே கலக்கி இருக்காரு!
பூவும் தேனும் விட்டுப் பிரியாதிருத்தலால் = ஆனா வாடினா பிரிஞ்சிடுமே?
பூவே-ன்னு முடிஞ்சி, மதுவார் துழாய்-ன்னு வருவது துளசிக்கு! மற்ற பூ எல்லாம் வாடினால், தேன் போய் விடும்! ஆனால் துளசிக்குத் தான் வாட்டம் இல்லையே! அதான் இப்படி ஒரு நிர்வாகம் போல PB அண்ணா செய்தது!
//சிகரட் புகைக்குள் இவ்வளவு விஷயங்களா ?? யாராவது என்னை வந்து காப்பாத்துங்களேன்... :-))//
ஹா ஹா ஹா!
ராதா - பயப்படாதே! யாமிருக்க பயம் ஏன்? :)
//குமரன் (Kumaran) said...
காஞ்சிபுரம் பிரதிவாதி பயங்கரத்தின் நிர்வாஹமும் சரி நியூஜெர்சி பிரதிவாதி பயங்கரத்தின் நிர்வாஹமும் சரி ஏற்புடைத்தாகத் தான் இருக்கின்றன! :-) //
என்னாது! நியூஜெர்சி பிரதிவாதி பயங்கரமா? என்னைப் பார்த்தா பயங்கரவாதி மாதிரியா தெரியுது? மீ ஒன் அப்பாவிச் சிறுவன்! செளலப்பியமானவன்! :) குமரன் அண்ணாவின் இப்படியான நிர்வாஹம் எனக்கல்ல-ன்னு சொல்லிக்கறேன்-ப்பா! :)
இராதா, இந்தப் படங்களைக் கூட பொருத்தம் பார்த்துத் தேடி இடுகிறீர்களா? நேற்று முதன்முதலில் பார்க்கும் போது 'எதற்காக இந்திரனும் ஐராவதமும் வந்து வணங்கும் படத்தை இட்டிருக்கிறார்?' என்று கேள்வி வந்தது. நன்னீர் தூய் என்றதால் ஐராவதம் நீர் ஊற்றும் படத்தை இட்டீர்களோ என்று தோன்றியது. கேட்க மறந்துவிட்டேன்.
//அதாவது - கீழ்ப்பாட்டில் முடித்த பூவுக்கும் இப்பாட்டில் தொடங்குகிற மதுவுக்கும் சேர்த்தியுண்டாதலால் [ அதாவது - பூவும் தேனும் விட்டுப் பிரியாதிருத்தலால்]//
ஆஹா. இது நல்லாருக்கே.
தம்பிகளின் சத்சங்க கலாட்டாவை ரசித்தபடி... நானு...:)
//நன்னீர் தூய் என்றதால் ஐராவதம் நீர் ஊற்றும் படத்தை இட்டீர்களோ என்று தோன்றியது. //
ஆஹா ! கண்டே பிடித்துவிட்டீர்கள் குமரன். :-) முதலில் தாமரைப் பூ ஏந்திய கஜேந்திர மோக்ஷம் இடலாம் என்று தோன்றியது. அதை விட (தாமரை சிறப்பான மலர் !?) இந்தப் படம் இடுவது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது.
:-)
இப்பாசுரத்தை பராசர பட்டர் உபந்யஸிக்கும் போது நடந்த ஒரு ரசமான உரையாடல்.
'புரிவதுவும் புகை பூவே' என்பதற்கு பட்டர், 'இவ்விடத்திலே அகில் புகை என்றாவது கருமுகைப் பூ என்றாவது சிறப்பித்துச் சொல்லாமையாலே ஏதேனும் ஒரு புகையும் ஏதேனும் ஒரு பூவும் எம்பெருமானுக்கு அமையும். செதுகையிட்டுப் புகைக்கலாம். கண்டகாலிப் பூவும் சூட்டலாம்' என்று சொன்னாராம்.
இதைக் கேட்டு அவர் சிஷ்யரான நஞ்சீயர், 'கண்டகாலிப் பூவை எம்பெருமானுக்குச் சாத்தலாகாது என்று சாஸ்திரம் மறுத்திருக்க, இப்படி நீங்கள் விளக்கம் தரலாமோ?' என்று வினவினாராம்.
இதற்கு பட்டர் தந்த ரசமான சமாதானம்: 'சாஸ்திரம் மறுத்தது மெய் தான். ஆனால் அது கண்டகாலிப் பூ பகவானுக்கு ஆகாது என்பதனால் அல்ல. அடியார்கள் அப்பூவை பறித்தால் முள் பாயுமே என்று பக்தர்கள் பக்கலில் தயையினால்; எம்பெருமானுக்கு ஆகாத பூ எதுவுமில்லை' என்றாராம்.
ஆஹா ! என்ன ஒரு விளக்கம் ! :-)
//'சாஸ்திரம் மறுத்தது மெய் தான். ஆனால் அது கண்டகாலிப் பூ பகவானுக்கு ஆகாது என்பதனால் அல்ல. அடியார்கள் அப்பூவை பறித்தால் முள் பாயுமே என்று பக்தர்கள் பக்கலில் தயையினால்; எம்பெருமானுக்கு ஆகாத பூ எதுவுமில்லை' என்றாராம்//
Wow!
I like parasaara bhattar :)
Radha, Can you arrange for a meeting with him? :)
//ஆஹா ! கண்டே பிடித்துவிட்டீர்கள் குமரன். :-)//
அப்பாடி, குமரன் கேட்டு, அதுக்கு ராதா பதில் சொல்லும் ஆசை நிறைவேறி விட்டதே! சூப்பரு! :)
KRS நீங்கள் கூறியது மிகவும் சரியே!
முன்பு ஒரு பக்தனுக்காக இரவோடு இரவா வந்து தாயம் விளையாடிவர் ஆயிற்றே திருப்பதி ஏழுமலையான்.:)