Sunday, September 19, 2010

மீரா இதயம் கோவில் கொண்டான்

பக்த மீரா படத்தில் வரும் ஓர் இனிய பாடல்.
அமரர் கல்கி எழுதிய  இந்தப் பாடலை எம்.எஸ் அவர்கள் பாடி இங்கே கேட்கலாம்.



லீலைகள் செய்வானே - கண்ணன்
மாயைகள் புரிவானே!
லீலைகள் செய்வான் பாலகோபாலன்
நீலமுகில் மணிவண்ணன் - கண்ணன் (லீலைகள்)

கானக மடுவில் காளியன் தலையில்
களிநடம் புரியும் பாதன் !
வானவர் வாழ மாநிலம் மீது
ஆனிரை மேய்த்த என் நாதன் - கண்ணன் (லீலைகள்)

ஆயர் மனையில் வெண்ணைய் திருடுவான்
அகமும் கவர்ந்திடுவானே !
மாய புன்னகை செய்து மயக்கும்
மீராவின் ப்ரபு தானே ! - கண்ணன் (லீலைகள்)

ப்ரேம நதியின் தீரமதனில்
மீரா ப்ரபுவும் வருவான் !
திருமுகம் அதனில் குறுநகை மலர
அகமும் புறமும் நிறைவான் - கண்ணன் (லீலைகள்)

மாயனைக் காண மாமுனியோர்கள்
பாற்கடல் தேடியே வந்தார் !
ஆலிலை மேலே துயில் கொள்ளும் அமுதை
காண்கிலம் என்று வியந்தார் !

சங்கரன் வந்தான் இந்திரன் வந்தான்
சந்திர சூரியர் வந்தார் !
அங்குமிங்குமாய் ஐயனைத் தேடி
ஆயர் மனைதனில் கண்டார் !

மீரா ஹிருதயம் கோவில் கொண்டான் !
மீளா அடிமை கொண்டான்  - பேதை
மீரா ஹிருதயம் தனில் - அடியாள் மீரா...
 
மீரா ஹிருதயம்  கோவில் கொண்டான் !
மீளா அடிமை கொண்டான் !
மாறி மாறி வரும் பிறவிகள் தனிலும்
மாறா ப்ரேமையைத் தந்தான் - கண்ணன் (லீலைகள்)

 

10 comments :

குமரன் (Kumaran) said...

அதிகாலை நன்கு விடிந்தது எனக்கு இந்தப் பாடலைக் கேட்டு! நன்றி இராதா!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கல்கி எழுதிய பல பாடல்கள், இசைப் பாடல்களாகவே இருக்கும்! நல்ல சந்தம்! பொன்னியின் செல்வன் படிக்கும் போதே, "அலைகடலும் ஓய்ந்திருக்க, அகக் கடல் தான் பொங்குவதேன்" பாட்டு வாசகர் உள்ளத்தை வசப்படுத்தி விடும்! அது போல் இருக்கு, கல்கியின் இந்தப் பாட்டும்!

//அகமும் புறமும் நிறைவான் - கண்ணன்//

அகத்தில் (மனதில்) நிறைவது புரிகிறது!
புறத்தில் நிறைவது-ன்னா என்ன இராதா? :)

Radha said...

குமரன், அதிகாலையில் எழுந்து விடும் பழக்கம் உடையவரா நீங்கள்? மிக நல்ல பழக்கம்.அந்த ஒரு பழக்கத்தை கடைபிடிக்க ஏழு ஆண்டுகள் முயற்சித்து வருகிறேன். இன்னமும் எட்டு மணிக்கு குறைந்து கண் திறக்க முடியவில்லை. :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இன்னமும் எட்டு மணிக்கு குறைந்து கண் திறக்க முடியவில்லை. :-)//

appo, why giridhaari-kku mattum 5:00 clock, suprabaatham?
enna oru aaNaathikkam? err..I mean bhakthaathikkam? :)

Radha said...

புறத்தில் நிறைவது என்றால் என்ன என்று தெரியாதா ரவி?
எங்கே பார்த்தாலும் கண்ணன் தென்படுவான். அப்படியே நமக்கு கண் பனித்து, உடலில் ஒவ்வோர் அணுவிலும் இறை உணர்வு நிரம்பி இருக்குமாம். மேனியில் தாமரை வாசம் வீசும். இது தான் புறத்தில் நிறைவது. :-) இப்படி எங்க சொல்லி இருக்கு அப்படின்னா...எங்கயும் சொல்லலை. நானா தான் சும்மா அள்ளி விடறேன். ;-)
பாடல் பதிவு செஞ்சா அழகா ஜாலியா கேட்டு ரசிக்கணும். ரொம்ப கேள்வி கேட்டா எனக்கு பதில் சொல்ல தெரியாது. :-) சாப்பாடு எப்படி சீரணம் ஆகுதுன்னு யோசிச்சி யோசிச்சா சாப்பிடறோம்? :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//சாப்பாடு எப்படி சீரணம் ஆகுதுன்னு யோசிச்சி யோசிச்சா சாப்பிடறோம்? :-)//

ஆனா,
அது என்ன சாம்பார், இது என்ன ரசம், இந்தக் கூட்டு என்ன ஸ்பெஷல்-ன்னு "கேட்டுக் கேட்டுத்" தானே சாப்பிடறோம்?
அப்ப தான் உண்பவர்களுக்கும் திருப்தி, ரசனையோடு சாப்பாடு போடறவங்களுக்கும் திருப்தி! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//புறத்தில் நிறைவது என்றால் என்ன என்று தெரியாதா ரவி?
எங்கே பார்த்தாலும் கண்ணன் தென்படுவான். அப்படியே நமக்கு கண் பனித்து, உடலில் ஒவ்வோர் அணுவிலும் இறை உணர்வு நிரம்பி இருக்குமாம்//

அடச்சே! இது தானா? நான் என்னமோ புறத்தில் நிறைவது = உடம்போடு வந்து ஒட்டிக்குவான்-ஓருடல் ஓருயிர்-ன்னு நினைச்சேனே! என்ன முருகா! கிக்-ஆவே இல்ல! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மேனியில் தாமரை வாசம் வீசும். இது தான் புறத்தில் நிறைவது. :-)//

இதுக்குப் பாசுரம் கொடுத்துட்டு தூங்கப் போ இராதா!
இல்லாக் காட்டி, உன் கனவில்,சிம்பு அப்பா டி.ராஜேந்தர் வந்து பஞ்ச் டயலாக் பேசக் கடவதாகுக! :)))

Radha said...

அட ராமா ! இந்த சாபம் தானா நேற்று பலித்தது?
"கண் பாதம் கை கமலம்
நேரா வாய் செம்பவளம் ! "
சொன்னாரு நம்ம ஆழ்வாரு
முதல்ல கும்பிடு தாயாரு - அப்புறம்
வேகமா நீ மலை ஏறு
வெங்கடேசா எங்க வெங்கடேசா
வெச்சுடு அவன் மேல நேசம் லேசா
அறுந்துடும் பந்த பாசம் - உன் மேல
வீசிடும் துளசி வாசம் !
...
...
அப்படின்னு கனவுல ஜாம்பவான் கணக்கா யாரோ வந்து சொல்லிட்டு போனாங்க. :-)

Kavinaya said...

:)))

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP