Sunday, September 26, 2010

பணியாளாய் என்னைப் பணித்திடுவாய் !எனக்கு மிகவும் பிடித்த ஒரு இனிய மீரா பஜன் (ஹிந்தி பாடல்). உங்களுக்கும் பிடிக்கும் என்று இங்கே பகிர்ந்து கொள்கிறேன். :-)
கலைமகள் மகள் எம்.எஸ் அவர்கள் இந்தப் பாடலைப் பாடுவதை இங்கே கேட்கலாம்.


[மீரா பஜனை]

சாக்கர் ராகோ ஜி ! மனே சாக்கர் ராகோ ஜி !

சாக்கர் ரஹஸூ பாக் லகாஸு நித உட் தர்சன பாஸூ
ப்ருந்தாவன கீ குஞ்சகலின் மே தேரீ லீலா காஸூ

மோர முகுட பீதாம்பர ஸோஹ கல பைஜந்தி மாலா
ப்ருந்தாவன மே தேனு சராவே மோஹன முரளி வாலா

யோகி ஆயா யோக கரண கோ, தப கரணே சன்யாசி
ஹரி பஜன கோ சாது ஆயா, ப்ருந்தாவன கே வாசி

மீரா கே ப்ரபு கஹர கம்பீரா ஹ்ருதய தரோ ஜீ தீரா
ஆதிராத ப்ரபு தரசன தேன்ஹே ப்ரேம நதீ கே தீரா[பொருள்]

வைராக்யம் வாய்ந்த தீரர்கள் தங்கள் இதயத்தில் வைத்துப் போற்றும் மீராநாதன் அளவிட முடியாத ஆழமானவன் ! கம்பீரமானவன் ! தீரர்களுக்கு எல்லாம் தீரன் ! இவன் வைஜயந்தி மாலை அணிந்தவனாக, மயிற்பீலி அலங்கார கிரீடம் தரித்தவனாக, பீதாம்பரனாக, புல்லாங்குழல் வாசித்துக் கொண்டு பிருந்தாவனத்தில் மாடுகள் மேய்ப்பவன். காண்போர் மனதை மயக்கும் அழகன்.

மோஹன கிருஷ்ணா ! பணியாளாய் என்னைப் பணித்திடுவாய் ! உன் தரிசனத்தை தினமும் பெறுவேன். கொடி மண்டபங்கள் நிறைந்த பிருந்தாவன தெருக்களில் எல்லாம் உன் லீலைகளைப் பாடி செல்வேன். உனது சேவையாக ஒரு தோட்டம் அமைப்பேன். அந்தத் தோட்டத்திற்கு பிருந்தாவன வாசிகள் பலரும் வருகை புரிவர். யோகம் செய்ய யோகிகள் வருவர். தவம் செய்ய சன்யாசிகள் வருவர். ஹரி பஜனை செய்ய சாது ஜனங்கள் வருவர். அமைதியான இரவில் உள்ளத்தில் அன்பு பொங்கும் வேளையில் நீயும் வருவாய். அனைவருக்கும் உன் இன்ப தரிசனம் தருவாய். ஐயே ! பணியாளாய் என்னைப் பணித்திடுவாய் !

38 comments :

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

Happy Birthday Radha :)
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்னுமொரு நூற்றாண்டு இரு(ம்)!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

இது மீரா பஜனா? ராதா பஜனா? :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//உனது சேவையாக ஒரு தோட்டம் அமைப்பேன்//

பணியாளாய் உன்னைப் பணித்தேன், ராதா!
எங்கே என் தோட்டம்? :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ராமாவரம் தோட்டமா? கிருஷ்ணாவரம் தோட்டமா?
எது-ன்னாலும் எனக்கு ஓக்கே தான்!

மொதல்ல பத்திரம் எழுதிடலாம்! அப்பாலிக்கா, அதுக்கு முருகாவரத் தோட்டம்-ன்னு பேரு மாத்தக்கிடறேன்! :))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//சாக்கர் ராகோ ஜி !
மனே சாக்கர் ராகோ ஜி !//

அருமையான பாடல் ராதா! பொருள் எல்லாம் முதலில் படிக்கலை! எம்.எஸ் பாடும் போதே பிடிச்சிப் போயிருச்சி! அப்பறமா கீழே நீ கொடுத்த பொருளை வாசிச்சேன்! அருமை!

மனத் தோட்டம் = மனத்து ஓட்டம்

அந்தத் தோட்டத்தில் அடியார்கள் பலர் ஒவ்வொருவராய்க் குழும...
அழகிய மயில்களும் குயில்களும் குழும...
மாதவிப் பந்தல் மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்!

இப்படிக் குழுமக் குழும, அவனும் அங்கே ஏகாந்தமாகக் குழுமுகின்றான்!

என்ன? ஏகாந்தமா? இத்தனை பேர் குழுமினார்களே?

அத்தனை பேரும் அவனில் கரைய...
அவனும் அவன் அன்பு மட்டுமே அந்தப் பொழில் நறுந் தோட்டத்தில் மணம் பரப்ப...
ஏகாந்தம், ஏகாந்தம்,
இனிது இனிது ஏகாந்தம் இனிது!

இனியது கேட்கும் எரிதவழ் வேலோய்
இனிது இனிது ஏகாந்தம் இனிது!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

மீண்டுமொரு முறை இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

கைப்பேசி அடிச்சிச்சின்னா எடுத்துப் பேசணும்! பொறந்த நாள் அதுவுமா ஒன்பது மணிக்கெல்லாம் தூங்கப் போனா எப்படி? எத்தனை முறை தான் ட்ரை பண்ணறதாம்? :)

அக்காரக்கனி In Honey said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Radha said...

Thanks Ravi !:-) This is Meera Bhajan but they say only Radha was born as Meera. :-)

Radha said...

இருந்த சொத்து பத்து, இனிமேலும் சம்பாதிக்கும் பொருள் எல்லாமும் "கண்ணபிரானுக்கு" அப்படின்னு எழுதி கொடுத்துட்டேன். அவர் மூலமா உங்களுக்கு வரும். :-)

Radha said...

Thanks Rajesh ! :-)

Radha said...

ஆமாம் ரவி. எம்.எஸ் அம்மாவின் தெய்வீக குரல் பொருள் புரியாமலேயே பாடலை பிடிக்க வைத்துவிடும். பல ஆண்டுகளாக கேட்டு வரும் பாடல் இது. ஆனால் இந்த வாரம் பாடலை பதிவு செய்ய முயன்ற பொழுது தான் பொருள் என்ன என்று தெரிந்து கொண்டேன் ரவி. :-) ஹிந்தி தெரிந்த ஒரு பெரியவர் பொருள் சொல்லி உதவி செய்தார்.

குமரன் (Kumaran) said...

பாடலின் அறிமுகத்திற்கு நன்றி இராதா. திரண்ட பொருளைக் கூறியதோடு வரிக்கு வரி பொருளும் சொல்லியிருக்கலாம். எந்த வரி எந்த பொருளைச் சொல்கிறது என்று தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. மீரா பிரபுவைத் தேடுவது போல!

Radha said...

ஆமாம் குமரன். வரிக்கு வரி பொருள் சொல்லி இருக்கலாம். ஆனால் பாடலின் பொருளினை கேட்டு சில நாட்கள் ஆனதால் திரண்ட பொருள் மட்டுமே நினைவில் இருந்தது. சில பதங்கள் நினைவில் உள்ளன.
சாக்கர் - வேலைக்காரர்
மனே சாக்கர் ராகோ ஜி => ஐயா, பணியாளாய் என்னை பணித்திடுவாய்
பாக் - தோட்டம்
பாக் லகாஸு => தோட்டம் அமைப்பேன்.
நித உட தரசன பாஸு => தினம் எழுந்தவுடன் உன் தரிசனம் பெறுவேன்.
குஞ்ச கலின் மே => பந்தல்/கொடி மண்டபங்கள் நிறைந்த தெருக்களில்
தேரீ லீலா காஸூ => உன்னுடைய லீலைகளை பாடுவேன்.
மோர முகுட பீதாம்பர சோஹே => மயிற்பீலி அலங்கார கிரீடனாக பீதாம்பரம் தரித்தவனாக
கல பைஜந்தி மாலா => கழுத்தில் வைஜயந்தி மாலை அணிந்தவனாக
தேனு சராவே மோகன முரளி வாலா => மோகன வேணுகோபாலன் என்று சொல்ல வேண்டுமா? :-)
கஹர => ஆழமான
"கண்ணன் லீலைகள் செய்வானே" பாடலும் (முந்தைய பதிவு) இந்தப் பாடலும் ஒரே ராகத்தில் இருப்பது போல இருக்கும்.
"ப்ரேம நதியின் தீரமதனில் மீரா ப்ரபுவும் வருவார்" என்று கல்கி அழகாக இயற்றி/பெயர்த்து இருக்கிறார்.
"ஆதிராத/ஆதீராத" என்றால் நடுநிசி என்று நினைக்கிறேன். சரியாக நினைவு இல்லை.
மீரா பஜன் சூர்தாஸ் பஜன் போன்றவை ப்ரஜ் பாஷை என்பதால் ஹிந்தி தெரிந்தவர்களும் சற்றே தடுமாறுகின்றனர். மொழியே தெரியாது என்பதால் திரண்ட பொருள் மட்டும் சொல்லி தப்பித்து கொள்ள எண்ணினேன். :-)

Radha said...

//கைப்பேசி அடிச்சிச்சின்னா எடுத்துப் பேசணும்! பொறந்த நாள் அதுவுமா ஒன்பது மணிக்கெல்லாம் தூங்கப் போனா எப்படி? எத்தனை முறை தான் ட்ரை பண்ணறதாம்? :) //
மிக்க நன்றி. :-) பிறந்த நாள் அன்று ஒரு உத்வேகம் பிறந்து சீக்கிரம் தூங்கி விடுவேன். :-)
அதாவது இனிமேலாவது காலை எட்டு மணி வரை தூங்கக் கூடாது; இரவு நேரமாக தூங்கி காலை விரைவில் எழ வேண்டும் என்று எண்ணமிட்டு வருடா வருடம் செய்வது. இந்த வருடமாவது ஒழுங்காக கடைபிடிக்கிறேனா பார்க்க வேண்டும். :-)

குமரன் (Kumaran) said...

துவாரகையில் கண்ணன் காலத்தில் பேசப்பட்ட சௌரசேனியின் வழி வந்தது சௌராஷ்ட்ரம். வ்ரஜ பாஷையும் கொஞ்சம் பக்கத்தில் வருகிறது போல. அது தான் இதுவோ? :-)

பாடலின் பொருளை வரிகளில் தேடும் போது இந்த 'ஹிந்திக்கும்' சௌராஷ்ட்ரத்திற்கும் பொதுவான சில சொற்கள் வருவது போல் தோன்றியது. இப்போது வரிக்கு வரி சொன்ன பின்னர் இன்னும் அந்த தொடர்பு நன்கு தெரிகிறது. நன்றி இராதா. :-)

V.Radhakrishnan said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Radha said...

ஆஹா ! குமரன், பிருந்தாவன பாஷை தான் கிட்ட திட்ட உங்கள் தாய் மொழியா? நெஞ்சு பொறுக்குதில்லையே. :-)

Radha said...

ராதாகிருஷ்ணன் ஐயா! மிக்க நன்றி ! :-)

குமரன் (Kumaran) said...

ரொம்ப எல்லாம் தொடர்பு இல்லை இராதா. தேடிப் பார்த்தால் தெரிகிறது. தேடிப்பார்த்தால் தமிழுக்கும் விரஜ பாஷைக்கும் தொடர்பு இருப்பது தெரியும்! :-)

In Love With Krishna said...

@Radha:
Thanku soo much for this post! :)

Unga post-kku word-by-word meaning, (as far as i know Braj)...

மனே= ennai
சாக்கர்= Velai karan/dasan (inga dasi)
ராகோ = Vachikko
ஜி != aiyya

(Yes, vachikko aiyya ... ippadi "padhi respect" kuduthu only wife will talk to husband)

சாக்கர் ரஹஸூ= dasi=yai iruppen
பாக்= nandavanam
லகாஸு= iduven
நித= daily
உட்= un
தர்சன = darisanam
பாஸூ = kidaikkum enakku

(Enudaya daily wages un darisaname) :))

ப்ருந்தாவன கீ= vrindavana- thudaya
குஞ்ச=கலின்= chedi-kodi niraindha naadu

மே= adhil
தேரீ= unnudaya
லீலா = leelaigal
காஸூ = paaduvene!!!


மோர முகுட= mayil iragu soodiya kreedam
பீதாம்பர= peelaha+ ambara= manjal nira udai
ஸோஹ= anindha/ adhal alangarikka pattu
கல= kaluthu (kaluthil)
பைஜந்தி மாலா = vaijayanthi mala

ப்ருந்தாவன மே= vrindavanatthil
தேனு= maadu
சராவே= meippan
மோஹன முரளி வாலா= mann-mohana, murali (kuzhal) vaithiruppavanயோகி = yogi
ஆயா= vandhan (but here, it is varuvan)
யோக= yoga
கரண கோ= seyya

தப= thavam
கரணே = seiyvan
சன்யாசி

ஹரி பஜன கோ= hari bhajan- kku
சாது
ஆயா= vandhan (varuvan)
ப்ருந்தாவன கே வாசி = braj vasi

(yogi varuvar yoga seiyya, sadhukkal varuvar, sannyasigal varuvar, brindhavanatthu vaasigalum varuvar andha nandhavanathukku)

மீரா கே ப்ரபு = meera- vin nathan

கஹர கம்பீரா ஹ்ருதய தரோ ஜீ தீரா
i can see this meaning in 2 ways, and can't tell which one:
1) aazhamana gambheera nenjam konda nathane...
2) nenje, gambeerama iru..avan (meera ke prabhu) varuvan

ஆதிராத= nadu rathiriyil

ப்ரபு= nathane!
தரசன தேன்ஹே= darisanam thandhuvidu!
ப்ரேம=kaadhal
நதீ கே= nadhiyin
தீரா= karai

(aadhirathiriyil, enakku kaadhal nadhi karaiyil darisanam thandhuvidu)

Radha said...

Dear Ravi, I think I lost your number. Please send it to my gmail id. Will return your call this weekend.

Radha said...

In love with Krishna,
Many thanks for the word-by-word meaning.
Gives me great confidence for posting more hindi bhajans. :-)

குமரன் (Kumaran) said...

அற்புதம் In Love with Krishna! நன்றி!

In Love With Krishna said...

@Radha: Hope u will post more...i loved this song :))
btw, belated happy birthday!! :)

In Love With Krishna said...

@Kumaran: Thanks. :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

கள்வனின் காதலி...அதாங்க In Love with Krishna கொடுத்த பொருளுரை தான் இப்போ எனக்கு Inspiration! :)

தோழி கோதையின் ஞாபகமாக இந்த இந்திப் பாட்டை, தமிழில் சொல்லிப் பார்த்துக் கொள்கிறேன்! :)

என்னை உன் ஆளாய் வைச்சிக்கோ!
வைச்சிக்கோ ஐயா வைச்சிக்கோ!
வைச்சிக்கோ அருகில் வைச்சிக்கோ!
வைச்சிக்கோ நினைவில் வைச்சிக்கோ!

தோட்டங்கள் அமைப்பேன் உனக்கு! - மன
ஓட்டங்கள் அமைப்பேன் எனக்கு!

துளசீ வனமோ, பிருந்தா வனமோ
செடி கொடி எல்லாம் மணக்கும்!
ஆசையில் கண்ணா என்றே இந்தப்
பெண் கொடி வாயும் மணக்கும்!

மயிலிற குழல் மேல் மோகம்
மஞ்சள் பட்டாடை உன் தேகம்
வனமாலை விளங்கும் பாகம்
வனிதைக்கு அங்கே தாகம்!

அடியவர் பூங்கா வருவார்!
அரி அரி எனப் பல சொல்வார்!
யோகிகள் பூங்கா வருவார்!
யோ யோ கண்ணா என்பார்!

ஆயர்கள் பூங்கா வருவார்!
அவருடன் நானும் உனக்கு
நேயர்கள் ஆவேன் கண்ணா!
நேராய்ப் பூங்கா வாடா!

காதலின் கரையில் கண்ணா
காரிருள் தன்னில் கண்ணா
ஓரிரு வார்த்தை சொன்னால்
ஆறிரு யுகமாய் வாழ்வேன்!

பேச்சினுள் வாடா கண்ணா - என்
மூச்சினுள் வாடா கண்ணா
பேதையின் நெஞ்சகம் ஏங்கும் - உன்
பேரே என்னையும் தாங்கும்! - உன்
பேரே என்னையும் தாங்கும்!

Radha said...

பாடல் நன்றாக இருக்கிறது ரவி. :-)
//உன் பேரே என்னையும் தாங்கும்! //
இந்த வரி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. பதிவு செய்த நேரம் திருவல்லிக்கேணியான் உடனே வேலை தருகிறான். :-)

In Love With Krishna said...

@KRS: Engayo poyteenga!!

Meera, Hindi-yil Kannan-ai 'Aandal'!!!

Kothai- mattum dhaan kannan-in echil suvaiyyai virumbinaal endral, (parthasarathy-yin panjachanyame) meera padra (muralidharan-in murali):

bansi ban jaaungi...in hoton ki ho jaaoongi...
(kuzhalai, avan udhadugalukke sondham aavene!!!)

Kothai "Sodi kudutha sudar kodi" endral meera "bag lagaasu!"

Kaadhal mozhi ondru dhaano???

Radha said...

In love with Krishna,
Thanks for the wishes ! :-)
"கஹர கம்பீரா..." என்ற வரிக்கு இரண்டு வகையாக பொருள் கண்டது அருமை. கிரிதாரியின் அருளால் இன்னும் நிறைய பஜனை பாடல்கள் பதிவு செய்ய எண்ணம்.
உங்களைப் போன்றவர்கள் மொழி பெயர்ப்பில் தவறுகளைத் திருத்த உதவிடுவர் என்ற நம்பிக்கை இருக்கிறது. :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//Kaadhal mozhi ondru dhaano???//

ஆமாம்!
ஒரே மொழி!

எம் மொழியில் எழுதினாலும் காதலனின் பேர் ஒன்று தானே!
அதான், "உன் பேரே என்னைத் தாங்கும்! உன் பேரே என்னைத் தாங்கும்!"

தனிமையில் தவிக்கும் போது...
நினைப்பிலேயே ஏங்காமல்...
ஆள் அருகில் இல்லையென்றாலும்...
அவன் பேரைக் கூப்பிட்டுப் பாருங்கள்!
இன்பம் தானே தெரியும்! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//@KRS: Engayo poyteenga!!//

:)
வேறெங்கும் அல்ல! அவனிடம் தான் போனேன்! :)
அந்த லூசு பேரை ஆழ நினைத்தாலே போதும் நல்ல கவிதை சுரக்கும்! :)

//Kothai "Sodi kudutha sudar kodi" endral meera "bag lagaasu!"//

பாக் லகாசு மீரா திருவடிகளே தஞ்சம்!
சூடிக் கொடுத்த பொண்ணே, ஆண்டாள் திருவடிகளே சரணம்!

Radha said...

கோதையின் தோழனும் வன் தொண்டனுமான கே.ஆர்.எஸ் திருவடிகளே சரணம். :-)
ரவி, "பேரே என்னையும் தாங்கும்" நிறைய தாக்கத்தை ஏற்படித்தி விட்டது.
"பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்." பாசுரம் கேட்டு கொண்டிருக்கிறேன். :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ரவி, "பேரே என்னையும் தாங்கும்" நிறைய தாக்கத்தை ஏற்படித்தி விட்டது//

:)

ஏற்கனவே ஏற்பட்ட தாக்கம் தான் அப்படி வார்த்தையாய் வந்து விழுந்துது! - உண்மையை என் வாயால் பிடுங்குகிறாயே ராதா! :)

* பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்

* சேரும்தண் அனந்தபுரம் சிக்கெனப் புகுதிராகில்
"பேரும்" ஓராயிரத்துள் ஒன்றுநீர் பேசுமினே!

* பந்து ஆர் விரலி உன் மைத்துனன் "பேர்" பாட

* கோ.விந்தன் என்பதோர் "பேர்" எழுதி
கடல்வண்ணன் என்பதோர் "பேர்" எழுதி
அவனுக்கு என்னை விதிக்கிற்றியே
அவனுக்கு என்னை விதிக்கிற்றியே!

In Love With Krishna said...

@Radha:
//பதிவு செய்த நேரம் திருவல்லிக்கேணியான் உடனே வேலை தருகிறான்.//
Haiyyo!!!PARTHASARATHY PERUMAL-aaa????
My sweetheart. :))))

In Love With Krishna said...

@KRS:
//அந்த லூசு பேரை ஆழ நினைத்தாலே போதும் நல்ல கவிதை சுரக்கும்! //
Thitreengla? Pugalreengla??
i just don't get it! :)))


//தனிமையில் தவிக்கும் போது...
நினைப்பிலேயே ஏங்காமல்...
ஆள் அருகில் இல்லையென்றாலும்...
அவன் பேரைக் கூப்பிட்டுப் பாருங்கள்!
இன்பம் தானே தெரியும்! //

Idhu KRS solvadhaa kannan solvadhaa-nnu enakku oru doubt... :))

Kannan solvadhaaga irundhaal:
1)Thanimaiyil thavikka vittadhu nee dhaane?
2) Nee aruge illai endraal paravaillai....koodave irundhukkittu maraindhu iruppavargalai enna solvadhaam?
3) Nee "thiraiyin pin nindral" enakku ingu inbam edhu? "Kurai ondrum illai" endru paadinaalum adhu sad-song dhaane???
4) Nee enna vilaiyaadinaalum "un peyar-ai dhaan paaduvom" endru nee "advantage" eduthukondaal ...even the game is not fair....:(

KRS solvadhu endraal:
Ungal alavu bhakti illaiye ellorkkum...kandippa enakku illaiye...avan maraindhu nindru vilaiyaadinaalum avanai full determination-udan paaduvadharkku?! :(
On the other hand, i am irritated now...bcoz even if i try t get "angry" on Him, i end up "angry" with myself...
Krishna!!!! ippadi vilaiyaaduvadhu sariyaaaaaa????????????

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

@கள்வனின் காதலி
//அந்த லூசு பேரை ஆழ நினைத்தாலே போதும் நல்ல கவிதை சுரக்கும்! //
Thitreengla? Pugalreengla??
i just don't get it! :)))//

:)
என்னைக்காச்சும் ஒரு மனைவியோ, காதலியோ அவர்களுடைய அவனை ஊரறிய புகழ்ந்து இருக்காங்களா? :)

இன்னொன்னு...கண்ணன், கண்ணன்-ன்னு வர இடத்தில் எல்லாம் முருகனைச் சொன்னதாப் படிக்கவும்! கண்ணன்-ன்னு சொல்லுறது என் தோழி சார்பாகத் தான்! ஆனா என்னோடு லூசு முருகன் தான்! :)

உங்க கிட்ட பேசினா உண்மையெல்லாம் வெளியே வந்துரும் போல இருக்கே! So me the quiet boy! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//Nee "thiraiyin pin nindral" enakku ingu inbam edhu?//

நீ தொட்ட திரையில் உன் மணம் கமழ்வதால், அதையும் உடலில் சுற்றிக் கொள்வேன்! உன்னைச் சுற்றிக் கொண்டது போலவே இருக்கும்! திரை இன்பம்=தீண்டும் இன்பமாய் மாறி விடும்!

//Ungal alavu bhakti illaiye ellorkkum...kandippa enakku illaiye...//

தாகம் எடுத்தா தானே தண்ணி குடிக்கப்படும்! :)
தண்ணி இப்போ அவ்ளோவா தேவை இல்லை-ன்னா, தாகம் எடுக்கல-ன்னு அர்த்தம்! இல்ல முருகா? :)

In Love With Krishna said...

KRS:
//நீ தொட்ட திரையில் உன் மணம் கமழ்வதால், அதையும் உடலில் சுற்றிக் கொள்வேன்! உன்னைச் சுற்றிக் கொண்டது போலவே இருக்கும்! திரை இன்பம்=தீண்டும் இன்பமாய் மாறி விடும்!//

:))))))))))))))

Andha thirai avanai paarkudhu....when the world cannot...
Adhai ennai pondravargal loosu maadhiri thitinaalum avanukku seiyya vendiya sevai-yai thavaraamal seyyudhu...

Avan eppo kadhavai thirappan???'
Seri...avan-aga thirakkavillai endral:
1) i'll knock the door
2) i'll praise the watchmen (His devotees) and ask them to open
3)Then i'll make small talk with His mother, His father, and His brother
4) Then, i'll request His wife to open the doors for me
5) i'll ask her to convince Him...

Happa....aandal-e!!!
Nee azhagai un kannan-idam sendru vitaay....
Enakkum, un route-il oru entry pleez...

Unakke kadhavu thirakkaadha avan, enakk-a thirakka poraan?

Avanidam nee thaan eduthu solla vendum... :))

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP