மறவேனே எந்நாளிலுமே...
பக்த மீரா படத்தில் வரும் ஒரு பாடல். மீராவின் பக்தியைப் புரிந்து கொள்ளாத சிலர் அவளைக் கொல்ல சதி செய்வர். மீராவிற்கு விஷம் கலந்த பால் கொடுக்கப்படும். அவள் அதனைக் குடித்தவுடன், அருகில் உள்ள கிருஷ்ண விக்ரகத்தின் முக நிறம் மாறிவிடும். (அதே நேரத்தில் த்வாராகாவில் உள்ள கண்ணன் கோயில் கதவுகள் தானே அடைத்து கொள்ளும்.)
மீராவிற்கு விஷம் கலந்த பால் கொடுத்த உறவுக்காரப் பெண் உண்மையை சொல்லிவிடுவாள். மீரா விஷம் தன்னை ஒன்றும் செய்யவில்லை என்பதையும், தனக்கு எந்த ஒரு துன்பமும் வராமல் அவள் வணங்கும் கிரிதர கோபாலன் அருள் செய்ததையும் உணர்கிறாள். அந்த நேரத்தில் பொங்கி வரும் பாடல் இது.
படத்தில் எம்.எஸ் அவர்கள் பாடிய பாடலை இங்கே கேட்கலாம்.
மறவேனே எந்நாளிலுமே - கிரி
தாரி உனதருளே - கிரி
தாரி உனதருளே !
நஞ்சை நீ உண்டனையோ - இந்தப்
பஞ்சையைக் காத்தனையோ - ஒரு
விஞ்சை புரிந்தனையோ !
ஆரங்கள் சூடிடுவேன் - அலங்
காரங்கள் செய்திடுவேன் - பல
கீதங்கள் பாடிடுவேன் !
கண்ணா என் கண்மணியே - முகில்
வண்ணா எந்தன் துரையே - உன்னைப்
பண்ணால் துதித்திடுவேன் !
மறவேனே எந்நாளிலுமே !
ஜெய மீரா ப்ரபு கிரிதாரி !!
ஜெய மீரா ப்ரபு கிரிதாரி !!
7 comments :
Beautiful song!
//அருகில் உள்ள கிருஷ்ண விக்ரகத்தின் முக நிறம் மாறிவிடும்//
என்னவாய்?
கண்ணனே கரு-நீலம்! விடமுண்ட கண்ணன் முகம் என்னவாய் மாறும் ராதா?
youtube காணொளி இருந்தால் இடுங்களேன்!
அப்பறம் எனக்கு ரொம்ப நாளா இவன் "பேர்ல" ஒரு சந்தேகம்! :)
//தாரி உனதருளே - கிரி
தாரி உனதருளே !//
கிரி தாரி என்றால் என்ன பொருள்? :)
இந்தப் படம் black & white படம். :-)
வேண்டுமென்றால் சொல்லுங்க.
Bhaktha Meera (1942) DVD அனுப்பறேன்.
கிரிதாரி அப்படின்னா என்னன்னு தெரியாதா? இதை நாங்க நம்பணுமா? :)
யமுனா தீர விஹாரி
ப்ருந்தா வன சஞ்சாரி
கோவர்த்தன கிரிதாரி
கோபால கிருஷ்ண முராரி
ராதா சேதோ ஹாரி
ப்ரேம ஹ்ருதய சஞ்சாரி
கோவர்த்தன கிரிதாரி
கோபால கிருஷ்ண முராரி
//கிரிதாரி அப்படின்னா என்னன்னு தெரியாதா? இதை நாங்க நம்பணுமா? :)//
அட, அதுக்கு கேக்கலை!
கிரி+தாரி = கிரியைத் தரித்து இருப்பவன் (சுமந்து இருப்பவன்) என்பதால் கிரிதாரியா?
"தாரி" என்றால் என்ன? கபடதாரி, வேடதாரி, சூத்ரதாரி....ன்னு தாரிக்கு ஒரே வசவா-ல்ல இருக்கு?
எளிமையா மனப்பாடம் ஆகும் வரிகள். அதுவும் எம்.எஸ். அம்மாவின் குரலில் இன்னும் எளிது. தானே மனத்தில் ஓடிக் கொண்டிருக்கும் வரிகள்.
கேஆர்ஸ் தாரா தாரி என்பது வடமொழிச்சொல் த்ரு தரா என்றால் எடுத்துக் கொள்ளுதல், தரித்தல். வேஷங்களை தரிப்பவன் வேடதாரி. அவதாரங்களை எடுப்பவன் அவதாரன்.மழை தடுக்க கோவர்த்தன கிரி குடை பிடித்த திண்தோளன் தயாளந்தான் கிரிதாரி