Wednesday, September 01, 2010

அப்பாவும் பொண்ணும் போட்டிப் பாட்டு! கண்ணன் பாட்டு!

கண்ணன் பிறந்த நாளில், இங்கு நியூயார்க்கின் இரவிலே...
மாலையில் மருத்துவரிடம் ஓடி, இல்லம் வந்து சோர்ந்து தூங்கி, பிட்சாவையே பலகாரமாய் உண்டு...
இதோ இரவு பத்து மணிக்கு, தம்பி பாலாஜி நினைவுபடுத்த, அவசரம் அவசரமாக...
நெற்றியில் என்றுமில்லாத திருநாளாய், ஒற்றைக் கீற்றில் நாமம் தரித்து, அதைக் கண்ணாடியில் சரி பார்த்து :) ...
பால் பொங்கி, திடீர்ப் பாயசம் செய்து, வெண்ணெய் உருட்டி, ஒரே ஒரு பழைய ஆப்பிளொடு..
கை வலிக்க மணி ஒலிக்க முடியாது, தம்பி பாலாஜி மெல்லொலி ஒலிக்க, கருமைச் சுருள் இரவிலே, கேண்டில் விளக்கிலே, பச்சைக் கர்ப்பூர ஒளி ஜொலிக்க...

மாணிக்கம் கட்டி, மணி வைரம் இடைக் கட்டி,
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத் தொட்டில்
பேணி உனக்கு நாங்கள் விடு தந்தோம்
மாணிக் குறளனே தாலேலோ!
வையம் அளந்தானே தாலேலோ!

பிறந்த உடனேயே நல்லாத் தூங்கி விடு கண்ணா!
இதோ சற்று நேரத்தில் இடம் மாறப் போகிறாய்! இனி உனக்குத் தூக்கமே போச்சு! உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது வல்லவன் வகுத்ததடா கண்ணா! அதற்கு நீயும் விதிவிலக்கு அல்லடா!



இதோ முத்தாய்ப்பாக ஒரு காட்சி! அப்பாவும் பொண்ணும் போட்டி போட்டு பாடும் கண்ணன் பாட்டு!
இந்தப் பாட்டின் வேகம்... கேட்கும் போதெல்லாம் என்னை என்னமோ பண்ணும்!
இந்தப் பாட்டின் காட்சி... பார்க்கும் போதெல்லாம் என்னை என்னமோ பண்ணும்!

அப்பாவாக = நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
சின்னப் பொண்ணாக = குட்டி பத்மினி
பெரிய பொண்ணாக = கே.ஆர்.விஜயா

வரிகள் போட்டி போட்டுக் கொண்டு வந்து விழுகின்றன! கண்ணனின் தாசனான கண்ணதாசன் தூரிகையில்!
TMS ஒரு பாய்ச்சல் பாய்ஞ்சா, சுசீலாம்மா எட்டு பாய்ச்சல் பாயறாங்க!

சிறுமி கோதைக்கு குரல் கொடுப்பது: மாஸ்டர் டி.எல்.மகாராஜன் (ஆண் குரல் நல்லாத் தெரியுது, சின்னப் பொண்ணு கோதை ஒரு வேளை ஆம்பிளைப் புள்ளை போல் ரொம்ப பிடிவாதமோ? அதான் ஆம்பிளைக் குரலோ? :)

பெரியவள் கோதைக்கோ குரல் கொடுப்பது: பி.சுசீலா
இந்தப் பாட்டைக் கேட்டு, சுசீலாம்மாவிடம், நீங்க தான் அந்தக் கடவுள்-ன்னு யாரோ சொல்ல, அவர்கள் புன்னகையுடன் மறுத்தார்களாம்! :)
http://psusheela.org/fans/subbu_pothigai.html

இதோ: அரி அரி கோகுல ரமணா உந்தன் திருவடி சரணம் கண்ணா!



அரி அரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா
அரி அரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா

பாரத தேவா பாண்டவர் நேசா
பதமலர் பணிந்தோமே - உன்
பதமலர் பணிந்தோமே
(அரி அரி கோகுல ரமணா)

ஞான மலர்க் கண்ணா, ஆயர்க் குல விளக்கே
வானமும் கடலும் வார்த்து எடுத்த பொன் உருவே
கானத்தில் உயிர் இனத்தைக் கட்டுவிக்கும் கண்ணா

தானே உலகாகி தனக்குள்ளே தான அடங்கி
மானக் குல மாதர் மஞ்சள் முகம் காத்து
வாழ்விப்பாய் என்றும் மலர்த்தாள் கரம் பற்றி
நானும் தொழுதேன் நம்பி பரந்தாமா - உன்
நாமம் உரைக்கின்ற நல்லோர் நலம் வாழியவே!

அரி அரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா!

படம்: திருமால் பெருமை
வரிகள்: கண்ணதாசன்
குரல்: TMS, பி.சுசீலா, டி.எல்.மகாராஜன்
இசை: கே.வி.மகாதேவன்



புறம் போல் உள்ளும் கறுத்துப் போன கண்ணா!
இவளுக்கு எப்படி அறிமுகம் ஆனாயோ, அப்படியே இருந்து விடேன்!
வெண்ணைய்க்காடும் பிள்ளையாய்!
அனைவரும் விரும்பும் PoRkki பிள்ளையாய்!

* கம்ச வதம், சிசுபால தண்டனை எல்லாம் வேறு தெய்வங்கள் பார்த்துக் கொள்ளட்டும்!
* பாஞ்சாலி மானம் வேறு தெய்வம் காத்துக் கொள்ளட்டும்!
* பகவத் கீதை, வேறு எவனோ உளறிக் கொள்ளட்டும்!

* போலிச் சடங்குகளை/இந்திர பூசையை வேறு ஒருவர் வந்து தடை செய்யட்டும்!
* துவரைப்பதிக்கு, பொது மக்களை வேறு யாரோ ஒருவர் வழிநடத்தட்டும்!
* புறக்கணிக்கப்பட்ட திருநங்கைகளை உன் தேரில் தானா ஏற்ற வேண்டும்? வேறு ஒரு புரட்சியாளர் வந்து அவர்களுக்கு மதிப்பு ஏற்படுத்தட்டும்!

பாரதப் போரில், திறமையால் போரிடாமல், வரம் வாங்கிப் போர் புரிவார்களை எதிர்த்து, வேறு யாராவது மாயங்கள் செய்து கொள்ளட்டுமே! உனக்கு எதுக்குடா வீண் சாபமும், பொல்லாப்பும்?
பிறந்த நாள் காணும் போலிப் பண்பாளா!
மகரந்த வாசம் வீசும் மாதவா! ராகவா!
பிறந்தநாள் வாழ்த்துக்கள்! பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

கள்ளமில்லாத கள்ளக் குழந்தையாய்,
பல அனாதைக் குழந்தைகளோடு ஆடி விளையாடி,
நீ எப்பமே நல்லா இருக்கணும்!

ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளிந்து...
பல்லாண்டு பல்லாண்டு, எம்மோடு பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு!



எங்கள் முழு"முதல்" தெய்வமே...
தொன்மைத் தமிழ்க் குடிக்கு...மாயோன் மேய மைவரை உலகே...

என் பால் நோக்காயே ஆகிலும்...
தரு துயரம் தரினும்...
ஆராய்ந்து அருள்வதாகச் சொல்லி அருளா விடினும்...

உன் மார்பில் அகலகில்லேன் என்று இருப்பவள் போலே
நானும் என் நெஞ்சில் அகலகில்லேன் என்று என் முருகனை இருத்தி
அவனோடு பல்லாண்டு பல்லாண்டு...

அரி அரி கோகுல ரமணா, உந்தன் திருவடி சரணம் கண்ணா!
அரி அரி கோகுல ரமணா, உந்தன் திருவடி சரணம் கண்ணா!

அப்பா! எங்கள் பெருமாளே!
புகல் ஒன்றில்லாப் பேதை...
இரு கரம் தூக்கினேன்! ஏலோர், ஏலோர்!

அரி அரி கோகுல ரமணா, உந்தன் திருவடி சரணம் கண்ணா!
அரி அரி கோகுல ரமணா, உந்தன் திருவடி சரணம் கண்ணா!
திருவடி சரணம் கண்ணா!
திருவடி சரணம் கண்ணா!

7 comments :

சிவமுருகன் said...

கண்ணன் என் அழகன்
கண்ணன் என் ஆசான்
கண்ணன் என் இறைவன்
கண்ணன் என் ஈசன்
கண்ணன் என் உற்றான்
கண்ணன் என் ஊரான்
கண்ணன் என் எதிரி
கண்ணன் என் ஏகாந்தன்
கண்ணன் என் ஐயன்
கண்ணன் என் ஒளி
கண்ணன் என் ஓவியம்
கண்ணன் என் ஔஷதம்
அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்

குமரன் (Kumaran) said...

நல்ல பாடல்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

என்ன சிவா, ஒரே ஆத்தி சூடி இஷ்டைல் பின்னூட்டம்? :)

//கண்ணன் என் எதிரி//

ஆமாம்! எனக்கும் என் தோழனுக்கும் அப்படித் தான்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@குமரன்
பாடலைப் பதிவிடும் போது உங்களையும் உங்கள் பொண்ணையும் தான் நினைச்சிக்கிட்டேன்! சபாஷ் சரியான போட்டி! :)

கோவி.கண்ணன் said...

குட்டி பத்மினி கேஆர்விஜயாவாக பரிணமிக்கும் இந்தப் பாடல்களை அடிக்கடி முன்பு சன்னில் பார்த்து இருக்கிறேன். சிவாஜி அக்மார்க் ஐயங்காராகவே மாறி இருப்பார்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கோவி.கண்ணன் said...
குட்டி பத்மினி கேஆர்விஜயாவாக பரிணமிக்கும்//

என்ன பரி"நாம" வளர்ச்சியா கோவி அண்ணா? :)

//சிவாஜி அக்மார்க் ஐயங்காராகவே மாறி இருப்பார்//

அக்மார்க் எல்லாம் டால்டா-ன்னா? அவாள்ல்லாம் ஒன்லி சுத்தமான நெய்-ன்னா பயன்படுத்துவா? நீங்க அக்மார்க்-ங்கிறேள்? :)

In Love With Krishna said...

Haiyyo!!!
Mobile Caller Tune-il kettu rasitha pattu! :)))
Ivvalavu azhagana picturisation and backdrop irukku-nnu unga post solludhe...thanku!!

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP