தவ தாஸோஹம் தாசரதே...
இராமரை உயிராகக் கொண்ட த்யாகராஜர் அவர்கள் அருளிய கீர்த்தனை ஒன்று. எனக்கு மிகவும் பிடித்தமானது. உங்களுக்கும் பிடிக்கலாம் என்று இங்கு பகிர்ந்து கொள்கிறேன். :-)
[பாடலும் பொருளும் "ஸத்குரு ஸ்ரீ த்யாகராஜ ஸ்வாமி கீர்த்தனைகள்" என்ற புத்தகத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டுள்ளது.]
ராகம்: புந்நாக வராளி
ப.
தவ தாஸோஹம் தவ தாஸோஹம்
தவ தாஸோஹம் தாசரதே...
ச.
1. வர ம்ருதுபாஷ விரஹித தோஷ
நரவரவேஷ தாசரதே...
2. ஸரஸிஜ நேத்ர பரமபவித்ர
ஸுரபதி மித்ர தாசரதே...
3. நிந்நுகோரிதிரா நிருபம சூர
நந்நேலுகோர தாசரதே...
4. மனவினி விநுமா மறவ ஸமயமா
இனகுலதனமா தாசரதே...
5. கனஸமநீல முநிஜனபால
கனகதுகூல தாசரதே...
6. தரநீவண்டி தைவமு லேதண்டி
சரணநுகொண்டி தாசரதே...
7. ஆகமவிநுத ராக விரஹித
த்யாகராஜநுத தாசரதே...
[பொருள்]
ஓ தசரத குமாரா ! இனிமையாக பேசுபவனே ! குற்றமற்றவனே ! உத்தம மானிட வேடம் தரித்தவனே ! தாமரைக் கண்ணனே ! பரிசுத்தமானவனே ! (தேவர் தலைவனான) இந்திரனின் நண்பனே ! உன்னையே அண்டினேன். ஒப்பிலா வீரனே ! என்னை ஆட்கொள் ! எனது வேண்டுகோளைக் கேட்பாயாக ! இது நீ என்னை மறக்கும் சமயமா? சூர்யவம்சத்தின் செல்வமே ! மேக நிறத்தவனே ! முனிவர்களின் பாதுகாவலனே ! கனகாம்பரனே ! இப்புவியில் உன்னைப் போல தெய்வமுண்டோ ! உன்னைச் சரணடைந்தேன் ஐயா ! வேதங்களாலும் த்யாகராஜனாலும் போற்றப்பெறும் ராமா ! ஆசைகள் அற்றவனே ! நான் உனது அடிமை ஐயா !
பாடலை எம்.எஸ் அம்மாவின் குரலில் இங்கே கேட்கலாம்.
8 comments :
வணக்கம் ராதா...எம்.எஸ் அம்மா குரலில் மெல்லிய சுண்டி இழுப்பில் சொக்கிப் போனேன்! தட்டித் தட்டிப் பாடுறாப் போல இருக்கு இந்தப் பாட்டு!
இது தெலுங்கா? வடமொழிக் கீர்த்தனையா?
தாசோஹம்-ன்னா தசரத குமாரன் என்று பொருளா, இல்லை அடியேன் (தாசன்) என்ற பொருளா?
ராதா...
மெட்டுடன் கூடிய தமிழாக்கம் இதோ! பொருந்தி வருதா-ன்னு பாடிப் பார்த்துச் சொல்லுங்க! :)
நான் உன் அடியேன், நான் உன் அடியேன்
நான் உன் அடியேன் தாசரதீ!
1. இனித்திடும் மொழியாய், இல்லாப் பழியாய்,
மனித்தப் பிறவி கொள் தாசரதீ!
2. குமுத விழியாய், குறையொன்றும் இல்லாய்,
அமுதம் அமரர்க்கு அருள் தாசரதீ!
3. வீற்றிடும் வீரா, போற்றினேன் உன்னை,
ஏற்றுக் கொள் என்னை தாசரதீ!
4. மனத்தால் விழைந்தேன், மறப்பதும் முறையோ-உன்
இனமுறை இதுவோ தாசரதீ?
5. காரிருள் மேனியில் பொன் பட்டாடை,
பார்முனிவர் தொழும் தாசரதீ!
6. தரணியில் உனைப்போல், தெய்வமும் உண்டோ,
சரணம் சரணம் என் தாசரதீ!
7. ஆகமம் போற்றும், ஆசைகள் மாற்றும்,
தியாக ராஜன் கண்ணே தாசரதீ!
நான் உன் அடியேன், நான் உன் அடியேன்
நான் உன் அடியேன் தாசரதீ!
அன்பு ரவி, வணக்கம்...இது தெலுங்கு கீர்த்தனை.
உண்மை என்னவெனில் எனக்கு தெலுங்கு தெரியாது. :-)
மஹான்கள் அருளிய மொழிகளுக்கு ஒரு ஏற்றம் உண்டு என்ற நம்பிக்கை எனக்கு மிகுதியாக உண்டு. ஆதலால் முடிந்த வரையிலும் அந்த அந்த மொழியிலேயே கேட்டு பழக்கப் படுத்திக் கொள்வேன்.
என்னுடைய புரிதல் கீழ் கண்டவாறு. தவறாக இருக்கலாம்.
மொழி வல்லுனர்கள் யாரேனும் சரி பார்த்து சொன்னால் நாம் இருவரும் நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வோம். :-)
"தாசரதே" என்ற பதம் "தசரத குமாரா" என்ற பொருளைத் தரும்.
தாஸோஹம் என்பது "நான் அடிமை" என்ற பொருளை தரும்.
இந்தச் சுட்டியில் ஆங்கிலத்தில் பொருள் சொல்லியுள்ளார்கள்.
http://sahityam.net/wiki/Thava_Dasoham
"ஸரஸிஜ நேத்ரே" என்பதற்கு "தாமரைக் கண்ணா!" என்று பொருள் சொல்லியுள்ளார்கள்.
"இனகுலதனமா" என்பதற்கு "சூர்ய குல செல்வமே" என்று பொருள் சொல்லியுள்ளார்கள்.
"ராக விரஹித" என்பதற்கு "ஆசைகள் இல்லாதவன்" என்று பொருள் சொல்லியுள்ளார்கள்.
Thanks
மிக அருமையான பாடல் இராதா. அறிமுகத்திற்கு நன்றி.
ராஜேஷ் (அ) அக்காரக்கனியின் தேனே, :)
பாடல் பிடித்திருந்ததால் தான் நன்றி சொன்னீர்கள் என்று எடுத்துக் கொண்டு மேலும் தெலுங்கு கீர்த்தனைகளையே பதிவு செய்ய உத்தேசித்துள்ளேன். :-)
நன்றி குமரன். இந்தப் பாடல் உங்களுக்கும் ரவிக்கும் மிகவும் பிடிக்கும் என்பது பதிவு இடும்பொழுதே தெரியும்.
அடியேன் பெரிய ஞானத்தன். :-)
தெலுங்கு கீர்த்தனை