ஜப்பானில் கமலஹாசன்: ராதே என் ராதே! வா-ராதே!
"கண்ணன் பிறந்தநாள் செப்-01 தேதி வருதுல்ல? கண்ணன் பாட்டில் தொடர் பதிவுகளாக, இன்னிக்கி ஜப்பானில் கல்யாணராமன் படத்தில் இருந்து, கண்ணன் பாட்டு பார்க்கலாமா?"
"அடப்பாவி, ஜப்பானில் கல்யாணராமன் படத்துல-ல்லாம் ஏதுடா கண்ணன் பாட்டு?"
"வா-ராதே! ஆசை தீ-ராதே!-ன்னு ரைமிங்-க்கா இருக்கே ஒரு கண்ணன் பாட்டு!"
"ஆகா! டகால்ட்டிக்கு ஒரு அளவே இல்லீயா? விட்டா கண்ணன், ஜப்பான்-ல தான் கீதையே சொன்னாரு-ன்னு சொல்லிருவ போல இருக்கே!"
"உஷ்ஷ்ஷ்...யக்ஞானான் ஜபான் யக்ஞோ-ன்னு கீதையில் வருது!
ஜபம் செய்யறது பத்தி சொல்ல வரும் சுலோகம்! அந்த ஜபான்-ஐ ஜப்பான் ஆக்கீட்டாப் போச்சு! :) அத அப்பறம் இன்னொரு நாள் வச்சிக்கலாம்! இன்னிக்கி பாட்டு மட்டும் பார்ப்போம்! வா!"
ராதே என் ராதே! வா ராதே!
வாராமல் ஆசை தீராதே!
- இது கண்ணன் பாட்டே தான்! கமல் கையில் புல்லாங்குழல் கூட இருக்கும்! கதாநாயகி பேரும் ராதா தான்! :)
கல்யாணராமன் படத்தில் இன்னிக்கும் ஞாபகம் இருக்கும் ஒரே பாட்டு, "ஆஹா வந்துருச்சி, ஆசையில் ஓடி வந்தேன்" தான்!
ரொம்ப இயல்பா, அழகா அந்தக் காட்சியைப் படமாக்கி இருப்பாய்ங்க! கமல் இடுப்பில் இருந்து பிட் எடுத்து ஸ்ரீதேவியிடம் காதலை ஒப்புவிக்கும் காட்சி!
பதினாறு வயதினிலே சப்பாணி கமலுக்கு அடுத்து, கல்யாணராமன் கமல்.....
சொத்துக்காக வெள்ளந்திக் கமல் கொலை செய்யப்பட...
அண்ணா கமலுக்காக, தம்பி கமல் பழி வாங்கக் கிளம்ப...
அண்ணா கமலின் "சைட்டான" ஸ்ரீதேவியை, தம்பி கமல் கரம் பிடிக்கிறார்! :)
அந்தக் காதலின் தொடர்ச்சியாக, ஜப்பானில் கல்யாணராமன் என்ற அடுத்த படம்!
ஸ்ரீதேவி இறந்து போக, அவர்கள் ஐந்து வயது மகன், அப்பா கமலை இன்னொரு கல்யாணம் பண்ணிக்கச் சொல்லுது! அடடா! கமல் ராசியே ராசி! ஸ்ரீதேவிக்கு அடுத்து ராதா! :)
அண்ணா கமலின் ஆவியும், அந்தப் பையனும் சேர்ந்து, கமல்-ராதாவை ஜோடி சேர்த்து வைக்கும் ஒவ்வொரு காட்சியும், தமிழ் சினிமாவின் அப்போதைய காலகட்டத்தில் புதுமையானது! வித்தியாசமானது! :)
சரி, வாங்க நாம கண்ணன் பாட்டைப் பார்ப்போம்!
ராதே என் ராதே! வா ராதே!
வாராமல் ஆசை தீராதே!
கண்ணே நீ கண்டால் காதல் வாராதா?
பெண்ணே உன் கண்கள் போதை தராதா?
ராதா ராதா என் தாகம் ஆராதா?
(ராதே என் ராதே)
முன் பக்கம் பின் பக்கம் ஏதோ
இன்பங்கள் தென்பட்டதோ!
தென் பட்ட அங்கங்கள் யாவும்
கண் பட்டு புண் பட்டதோ!
நீயும் தோளில் சாயலாம்!
காயம் கொஞ்சம் ஆறலாம்!
நோயும் தீரலாம்!
நீ கொடுக்கும் முத்தங்கள், நான் கொடுக்கும் சத்தங்கள்
மீண்டும் மீண்டும் வேண்ட,
ஆவல் காவல் தாண்ட!
ராதே உன் ராதே, நான் தானே!
கண்ணா நீ கொஞ்சும் நாள் தானே!
கண்ணா நீ கண்டால், காதல் வராதா?
மன்னா உன் கண்கள், போதை தராதா?
கண்ணா கண்ணா, நீ உண்ணும் தேன் நானா?
(ராதே உன் ராதே)
நேற்றந்தி நேரத்தில் பார்த்தேன்
ஆசைகள் வேர் விட்டதோ?
வேர்விட்ட ஆசைக்கு நீதான்
நீர்விட்ட நேரம் இதோ!
நீலம் பூத்த பார்வையில்,
காதல் பூத்த வேளையில்,
நாணம் தோன்றலாம்!
வாடை வந்து தொட்டுத் தான், வாய் வெடித்த மொட்டு தான்
வாசம் வீசும் போது,
அச்சம் மிச்சம் ஏது?
(ராதே என் ராதே)
படம்: ஜப்பானில் கல்யாணராமன்
குரல்: ரமேஷ், எஸ்.ஜானகி
இசை: இளையராஜா
வரிகள்: ?
முன் பக்கம் பின் பக்கம் ஏதோ, இன்பங்கள் தென்பட்டதோ! = அடடா, என்ன ஒரு பக்தி ரசம்! :)
நீ கொடுக்கும் முத்தங்கள், நான் கொடுக்கும் சத்தங்கள், கண்ணா கண்ணா, நீ உண்ணும் தேன் நானா?-ன்னு என் தோழி கோதை பாடுறாப் போலவே நினைச்சிக்குவேன்! :)
சரி, சரி, பிறந்தநாள் வாழ்த்து சொல்லீருவோம்!
ஆகா! யாருக்கு? கமலுக்கா? அட கண்ணனுக்குத் தாங்க! :)
3 comments :
//ராதே என் ராதே! வா ராதே!
வாராமல் ஆசை தீராதே!//
வாலி மாதிரி தெரியுது......
@கோவி..
//வாலி மாதிரி தெரியுது......//
:)
வா ராதே - தீ ராதே-ன்னு வந்தா வாலியா? :)
எப்படித் தான் இப்படிக் கரெக்ட்டா கண்டு புடிக்கறீங்கண்ணா? வாலியே தான்!
@கோவி.. //வாலி மாதிரி தெரியுது......// :) வா ராதே - தீ ராதே-ன்னு வந்தா வாலியா? :) எப்படித் தான் இப்படிக் கரெக்ட்டா கண்டு புடிக்கறீங்கண்ணா? வாலியே தான்!