MLV & S.ஜானகி: கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்!
கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் - இது பாரதியார் பாடல்-ன்னு பலருக்கும் தெரியும்!
ஆனால், சினிமாவில், இதை இரண்டு பெரும் பாடகிகள் பாடியுள்ளனர் என்று தெரியுமா? = எம்.எல்.வசந்தகுமாரி (ஸ்ரீவித்யா அவர்களின் தாயார்) & எஸ்.ஜானகி!
இருவரும், அவர்களுக்கே உரித்தான குரல் வெளிச் சோலைகளில்! கேட்டீங்க-ன்னா உங்களுக்கே தெரியும்! ஒன்று கம்பீரக் குரல், ஒன்று கண்ண்ணன்ன்ன் என்னும் மென் குரல்! :)
சரி, அது என்ன தங்கமே தங்கம்? யார் அது?
பாரதியார் யாரைத் "தங்கமே தங்கம்"-ன்னு கூப்பிடுகிறார்? = கண்ணனையா? ராதையையா?
ரெண்டு பேரையுமே இல்லை! யாரை-ன்னு சொல்லுங்க பார்ப்போம்!
இந்தப் பாட்டை, கண்ணன் பாட்டுக் குழுவில் ஒருவரான ராதாமோகன் அவர்களுக்குச் சமர்பிக்கின்றேன்! :)
அவரு தான் அடிக்கடி தங்கமே தங்கம்-ன்னு மின்னஞ்சல் போடுவாரு! நாங்க வெள்ளியே வெள்ளி-ன்னு பதில் போடுவோம்! சரி தானே இராகவ்? :)
படம்: ஏழை படும் பாடு / தெய்வத்தின் தெய்வம்
குரல்: எம்.எல்.வசந்தகுமாரி / எஸ்.ஜானகி
இசை: CR சுப்பராமன் / ஜிரா (எ) ஜி.ராமநாதன்
வரிகள்: சுப்ரமணிய பாரதியார்
MLV அம்மா பாடுவது:
ஜானகி பாடுவது:
கண்ண்ண்ண்ண்ண்ண்ணன்-ன்னு குழையும் போது, குழலோசை மட்டும் கேட்கும்! அப்படியே தந்தி இழுக்க...வீணை இசையைக் கேட்கத் தவறாதீர்கள்!
அதே போல், தங்கம்ம்ம்ம்-ன்னு முடிக்கும் போது, டொய்ங்க்-ன்னு ஒத்தை இழுப்பு வீணைத் தந்தியும் மறவாது கேளுங்கள்!
கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்
கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்
எண்ணம் உரைத்துவிடில் தங்கமே தங்கம் - பின்னர்
ஏதெனிலும் செய்வோமடி தங்கமே தங்கம்!
(கண்ணன் மனநிலையை..)
ஆற்றங்கரை அதனில் முன்னம் ஒருநாள் - எனை
அழைத்துத் தனி இடத்தில் பேசியதெல்லாம்
தூற்றி நகர் முரசு சாற்றுவேன் என்று
சொல்லி வருவாயடி தங்கமே தங்கம்!
(கண்ணன் மனநிலையை..)
சோரம் இழைத்து இடையர் பெண்களுடனே - அவன்
சூழ்ச்சித் திறமை பல காட்டுவ தெல்லாம்
வீர மறக் குலத்து மாதரிடத்தே
வேண்டிய தில்லையென்று சொல்லி விடடீ!
பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால் - மிகப்
பீழை இருக்குதடி தங்கமே தங்கம்
பண்ணொன்று வேய்ங்குழலில் ஊதி வந்திட்டான் - அதைப்
பற்றி மறக்கு தில்லை பஞ்சை உள்ளமே.
நேர முழுதிலும் அப்பாவி தன்னையே - உள்ளம்
நினைந்து மறுகுதடி தங்கமே தங்கம்
தீர ஒருசொல் இன்று கேட்டு வந்திட்டால்
பின்பு தெய்வம் இருக்குதடி தங்கமே தங்கம்!
(கண்ணன் மனநிலையை..)
மரபிசையில்...நித்ய ஸ்ரீ பாடுவது:
இவை பாரதியாரின் "கண்ணன் என் காதலன்" பாடல்கள்!
"தங்கமே தங்கம்" யாரு-ன்னு கண்டு புடிச்சாச்சா? அவள் தான், தூது செல்லும் உற்ற தோழி! அவள் பேர் என்ன?
தன் பாங்கியை (தோழியை) அனுப்பப் பார்க்கிறாள்! தோழியோ தயங்குகிறாள்!
"தங்கமே தங்கம்" என்று அவளைக் கெஞ்சி, சென்று, பார்த்து வரச் சொல்கிறாள்!
கண்ணனின் மனநிலை எப்படி இருக்கு என்று கண்டு வரச் சொல்கிறாள்!
அய்யய்யோ, கண்ணனோட மனநிலையா? மனநிலை சரியில்லாதவன் ஆயிட்டானா என்ன கண்ணன்?
ஹா ஹா ஹா!
அடிப் பாவி, நீ தான்டி மனநிலை சரியில்லாதவளா ஆயிட்ட!
ஒரு நாளைக்கு ஒரு வேளை - மதிய வேளை உணவு மட்டும் தான்!
உறக்கம் இல்லை! விழிப்பும் இல்லை! ஒப்புக்கு வாழ்ந்துகிட்டு இருக்க!
கண்களிலோ தினப்படிக்கு வற்றாத குற்றாலம்!
அவன் பழைய மடல்களை எல்லாம் தேடித் தேடி எடுத்துப் படிச்சிக்கிட்டு இருக்க!
இதுல உன் மனநிலையைத் தான் முதலில் செக் பண்ணனும்! நீ என்னடா-ன்னா கண்ணன் மனநிலையைக் கண்டு வரச் சொல்லுறியே! ஏய், இனி என்னடீ பண்ணப் போற நீயி?
தீர ஒருசொல்...இன்று...கேட்டு வந்திட்டால்...
பின்பு...தெய்வம் இருக்குதடி, தங்கமே தங்கம்!
முருகத் தெய்வம் இருக்குதடி, தங்கமே தங்கம்!
11 comments :
M.L. வசந்தகுமாரி பாடுன வரிகளை இங்கே போட மறந்துட்டீங்களா இரவி? அந்த வரிகளும் அருமையா இருக்கே.
மூன்று பேருமே நல்லா பாடுறாங்க. ஆனா பாட்டோட பாவனை கூட வேண்டுமென்றால் ஆங்காங்கே இன்னும் உணர்வு பூர்வமா பாடியிருக்கலாமோன்னு தோணுது.
MLVயும் ஜானகியும் பாடுனதை இன்னைக்கித் தான் முதன்முதலா கேக்குறேன்.
சுஜாதாம்மா பாடினது தான் எனக்குப் பிடிச்சது. :)
மிக்க நன்றி ரவி.
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் பாடல்கள் வரிசையில் "சிங்கார வேலனே", "தங்கமே தங்கம்"....ஜானகியின் குரல் இனிமையிலும் இனிமை.
ஆஹா ! இது பாரதி அல்லவா? எவ்வளவு உரிமையுடன் கண்ணனை அதட்டுகிறான் !
//குமரன் (Kumaran) said...
M.L. வசந்தகுமாரி பாடுன வரிகளை இங்கே போட மறந்துட்டீங்களா இரவி? அந்த வரிகளும் அருமையா இருக்கே.//
போட்டாச்சு குமரன்! அந்த வரிகளை அனுப்பியமைக்கு நன்றி! அப்போ வாஷிங்கடன்-ல அலுவல் விஷயமா ஒரு அரசு அலுவலகத்தில் இருந்தேன்! அதுனால என்னாலேயே ரொம்ப தேட முடியலை! and also was commenting in english all over the place! :)
//ஆனா பாட்டோட பாவனை கூட வேண்டுமென்றால் ஆங்காங்கே இன்னும் உணர்வு பூர்வமா பாடியிருக்கலாமோன்னு தோணுது//
அப்போ யாரு படி இருந்தா உணர்வு பூர்வமா இருந்திருக்கும்-ன்னு நினைக்கறீங்க? அதை சொல்லுங்க! :)
//MLVயும் ஜானகியும் பாடுனதை இன்னைக்கித் தான் முதன்முதலா கேக்குறேன்//
MLV-யோட அபூர்வமான முருகன் பாட்டு ரெண்டு கிடைச்சிருக்கு! அப்பறம் பதிவிடறேன்!
//Raghav said...
சுஜாதாம்மா பாடினது தான் எனக்குப் பிடிச்சது. :)//
சுஜாதாம்மா-வா? அவங்க இந்தப் பாட்டைப் பாடவே இல்லீயே? யாரை ராகவ் சொல்லுற நீயி?
//Radha said...
மிக்க நன்றி ரவி.
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் பாடல்கள் வரிசையில் "சிங்கார வேலனே", "தங்கமே தங்கம்"....//
அதை முருகனருள்-ல்ல போட்டாச்சு!
இதைக் கண்ணன் பாட்டுல போட்டாச்சு! :)
//ஜானகியின் குரல் இனிமையிலும் இனிமை//
:)
இன்-இசை அரசி-ன்னா சும்மாவா?
//Radha said...
ஆஹா ! இது பாரதி அல்லவா? எவ்வளவு உரிமையுடன் கண்ணனை அதட்டுகிறான் !//
என்ன இருந்தாலும் மானமிலாப் பன்றி, ஏலாப் பொய்கள் உரைப்பான்-ன்னு எல்லாம் அவ திட்டுனா மாதிரி திட்ட முடியுமா? மை தோழி இஸ் தி பெஸ்ட்! :)
நன்றி
எம்.எல்.வி பாட்டு தேனில் ஊறிய பலா...ஜானகி பாட்டு பலாவில் ஊறிய தேன்..
பனித்த கண்களுடன் படித்து மகிழ்ந்தேன்