யேசுதாஸ் & மலேசியா வாசுதேவன்: தேடினேன் தேவதேவா-தாமரைப் பாதமே!
காபி அண்ணாச்சி றேடியோஸ்பதி பதிவில் ஒரு புதிர் போட்டிருக்காரு!
அது சம்பந்தமான... ஆனால் புதிருக்கு விடை அல்லாத... பாட்டினை, இன்னிக்கி கண்ணன் பாட்டில் போட்டுருவோமா?
அதுவும் இராகவன் பொறந்த நாள் அதுவுமா, ஒரு பொருத்தமான படம், பொருத்தமான பாட்டு வரிகள்! - ராகவேந்திர ராகவேந்திர "ராகவா"! ராகவேந்திர ராகவேந்திர "ராகவா"! :) தேடினேன் தேவதேவா - தாமரைப் பாதமே!
படத்தில், பாடல் என்னவோ க்ளைமாக்ஸ் பாடல் தான் என்றாலும்,
பாடலின் வரிகளும், ராகமும் = "சுபமான" ஒன்று தான்! ராகம்: "சுப" பந்துவராளி! வைகறையில், வைகைக் கரையில், வந்தால் வருவேன் உன்னருகில் - என்ற மெட்டு போலவே இருக்கும்! தேடினேன் தேவதேவா - தாமரைப் பாதமே!
முன்பு, அதே ராகவேந்திரா படத்தில் வரும், இன்னொரு சூப்பரான பாட்டைக் கண்ணன் பாட்டிலே போட்டிருக்கோம்! = ராம நாமம் ஒரு வேதமே! ராக தாளமொடு கீதமே...
இன்னிக்கி அந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் பாடல்! யேசுதாஸின் மாயக் குரலில்! கூடவே மலேசியா வாசுதேவனும் பாடி இருக்காரு!
* யேசுதாஸ், பாடல் வரிகளில் தோய...
* மலேசியா, சரண வரிகளில் தோய்கிறார்! - குருவேஏஏஏஏஏ சரணம் என்று தோய்கிறார்!
நீ வாழும் இடம் வந்து, நான் சேர வேண்டும்! - என்று ஆழமான உணர்வுகளை, மெல்லிய முகத்தில், மெல்லீதாகக் காட்டி நடிப்பாரு நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! வாங்க பாட்டைப் பார்ப்போம்!
குரல்: யேசுதாஸ், மலேசியா வாசுதேவன்
இசை: இளையராஜா
வரிகள்: ?
படம்: ஸ்ரீ ராகவேந்திரா
அழைக்கிறான் மாதவன்! ஆநிரை மேய்த்தவன்!
மணி முடியும், மயில் இறகும்,
எதிர் வரவும், துதி புரிந்தேன்!
மாதவா கேசவா ஸ்ரீதரா ஓம்!
தேடினேன் தேவதேவா - தாமரைப் பாதமே!
வாடினேன் வாசுதேவா - வந்தது நேரமே!
ஞான வாசல் நாடினேன்!
வேத கானம் பாடினேன்!
கால காலம் நானுனை!
தேடினேன் தேவ தேவா - தாமரைப் பாதமே!
காதில் நான் கேட்டது - வேணு கானாம்ருதம்!
கண்ணில் நான் கண்டது - கண்ணன் பிருந்தாவனம்!
மாயனே நேயனே!
மாசில்லாத தூயனே!
ஆத்ம ஞானம்
அடைந்த பின்னும்
தேடினேன் தேவதேவா - தாமரைப் பாதமே!
குருவே சரணம்! குருவே சரணம்!
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா
குருவே சரணம்! குருவே சரணம்!
ஞானத் திருமேனி காண வர வேண்டுமே!
சீதப் பூவண்ணப் பாதம் தொழ வேண்டுமே!
பக்தன் வரும்போது பாதைத் தடையானதேன்?
காட்டுப் பெருவெள்ளம் ஆற்றில் உருவானதேன்?
தாயாகித் தயை செய்யும் தேவா!
தடை நீங்க அருள் செய்ய வாவா!
நான் செய்த பாவம், யார் தீர்க்கக் கூடும்?
நீ வாழும் இடம்வந்து, நான் சேர வேண்டும்!
குருவே சரணம்! குருவே சரணம்!
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா
குருவே சரணம்! குருவே சரணம்!
ராகவேந்திர ராகவேந்திர ராகவா! - குரு
ராகவேந்திர ராகவேந்திர ராகவா!
ராகவா! ராகவா! ராகவா! ராகவா!
பாடலைப் பிரிச்சி மேய்ஞ்சா, பல கருத்துக்கள் உள்ளடங்கி இருக்கும்!
குமரன் வந்து சொல்லட்டும்! சாம்பிளுக்கு ஒன்னு:
ஞான வாசல் நாடினேன்! வேத கானம் பாடினேன்!
ஆத்ம ஞானம் அடைந்த பின்னும் தேடினேன் தேவதேவா!
அதான் ஆத்ம ஞானம் அடைஞ்சாச்சே! அப்பறம் என்ன இன்னும் தேடினேன் தேடினேன்-ன்னு தேடுறது? - லாஜிக் இடிக்குதே-ன்னு பாக்கறீயளா? :)
அடுத்த வரியிலேயே விடையும் இருக்கு!
தேடினேன் தேவதேவா - தாமரைப் பாதமே! = திருவடிச் சரணம்! சரணாகதி!
என்ன தான் ஞான வாசல் நாடினாலும்,
வேத கானம் பாடினாலும்...
அவை, அவரவருடைய ஆத்ம அளவில் மட்டுமே=ஆத்ம சாஷாத்காரம்!
ஆனால் அவரவர் ஆத்மாவையும் தாண்டி...
அவரவர் ஆத்மாவுக்கு உள்ளேயும்....
அவரவர் ஆத்மாவுக்கு ஆதாரமாய்....
ஒன்னு இருக்கு!
அது ஆத்மாவுக்கு எல்லாம் ஆத்மா - அந்தராத்மா - பரமாத்மா!
என்ன தான் மாங்கு மாங்கு-ன்னு ஞான கர்ம யோகங்கள் செஞ்சாலும்...
அவை "நம் ஆத்மாவை" மட்டுமே நமக்கு உணர்த்திக் காட்டும்!
அதனால் தான், ஆத்ம ஞானம் அடைந்த பின்னும்...இன்னும் தேடினேன்-ன்னு பாடுறாரு!
ஆத்ம ஞானம் அடைஞ்ச பின்னால்?
அம்புட்டு தானா?
ஞான யோகம், கர்ம யோகம் தான் பரமா? முடிஞ்ச முடிவா?
இல்லை!
ஆத்ம ஞானம் அடைந்த பின்னும்...தேடினேன் தேவ தேவா....எதை?
தாமரைப் பாதமே!
தாமரைப் பாதமே!
சரணம் சரணம் என்னும் சரணாகதி! அதுவே நமக்கு கதி!
ஆத்ம ஞானம் அடைந்த பின்னும்...அந்த ஆத்மா "தான் தான்"-ன்னு அப்படியே தான் இருக்கும்!
அதை அவனுக்குச் சமர்ப்பணம் பண்ணி விடுவது தான் = ஆத்ம சமர்ப்பணம் = சரணாகதி!
என்ன தான் ஞான வாசல் நாடினாலும்...வேத கானம் பாடினாலும்...தேடிக்கிட்டே தான் இருப்போம்...
ஆத்ம ஞானம் "அடைந்த பின்னும் தேடினேன்"...
தேடினேன் தேவதேவா
தாமரைப் பாதமே!
தாமரைப் பாதமே!!
9 comments :
// ஞான வாசல் நாடினேன்! வேத கானம் பாடினேன்!
//ஆத்ம ஞானம் "அடைந்த பின்னும் தேடினேன்"!//
ஆத்ம ஞானம் அடைந்த்பின்னே அமைதி தானே .
புலன்கள், மனம், புத்தி, எல்லாமே அசலமாய் ஆன பின்
தேடுவது எங்கே ! எதை !
சுப்பு ரத்தினம்.
அருமை அருமை
//sury said...
ஆத்ம ஞானம் அடைந்த்பின்னே அமைதி தானே//
வாங்க சூரி சார்!
ஆத்ம ஞானம் அடைஞ்ச பின், அமைதி தான்! ஆனால் அமைதி = இறைவன் ஆகுமா? :)
அதான் தேடல் தொடர்கிறது போல...பாட்டும் அதையே சொல்கிறது! :)
//புலன்கள், மனம், புத்தி, எல்லாமே அசலமாய் ஆன பின்
தேடுவது எங்கே ! எதை !//
:)
இப்படி கஷ்டமான கேள்வியெல்லாம் அடியேனைக் கேட்டா எப்படி?
சினிமாப் பாட்டில் "ஆத்ம ஞானம் அடைந்த பின்னும் தேடினேன்"-ன்னு வருது! அதான் தெரியும்!
//கானா பிரபா said...
அருமை அருமை//
எல்லாம் ஒங்க புதிர் பதிவால் வந்த வினை காபி அண்ணாச்சி! :)
arumai
//LK said...
arumai//
நன்றி :)
கேள்விக்குப் பதிலைச் சொல்லுங்க LK!
தலைவர் பாட்டை இணைத்ததற்கு நன்றிகள்.
கண்ணனைக் கண்ணிலே காண்கிறாரே, ராகவேந்திரர் மேல் பொறாமையாக வருகின்றது. எப்போது நம் கண்களுக்கும் தெரிவானோ...
மேற்கூறிய கருத்துைர செய்திக்கு நன்றி . ஜோதிடத்தை பற்றி தெரிந்து கொள்ள www.yourastrology.co.in என்ற தளத்திற்கு சென்று பார்க்கலாம். இதில் கல்வி, திருமணம், வேலைவாய்ப்பு என உங்கள் எதிர்கால வாழ்கையை பற்றி தெரிந்து கொள்ளலாம். மேலும், 'ஜாமக்கோல் ஜோதிடம் சாப்ட்வேர்' இந்த தளத்தில் தான் முதன்மையாக வெளியிட பட்டுள்ளது.
திருவடி தீக்ஷை(Self realization)
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.
இது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.
Please follow
(First 2 mins audio may not be clear... sorry for that)
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo
Online Books
http://www.vallalyaar.com/?p=409
Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454