மனதார அழைக்கிறேன் நான் முகுந்தா
தன்னந்தனியாக அமர்ந்திருக்கும் போது தானாக வந்து விழும் வார்த்தைகளுக்கு ஒரு உருவம் தந்தால் எப்படியிருக்கும்? இதை கவிநயா அக்காவிடம் இரவிசங்கர் கண்ணபிரானிடமும் தான் கேட்கவேண்டும். அது போன்ற நிலை எப்போதாவது ஒரு முறை தான் அபராத சக்ரவர்த்தியான இந்தப் பித்தனுக்கு ஏற்படும்.
மொன்னு க3னி பொ4வரேஸ் மீ முகு3ந்தா – மொகொ3
மோக்ஷி தெ2வன் மொன்னு தோவி கோவிந்தா3
பொன்னா ஜா2ட் ஹிங்கி3 க2ளே மாத3வா - மொர
பொ3ன்னொ பு2ட்டி ஜேட3ரேஸ்ரே கேஸவா
மனதார அழைக்கிறேன் நான் முகுந்தா - எனக்கு
மோட்சம் தர மனம் வைப்பாய் கோவிந்தா
புன்னை மரம் ஏறி ஆடிய மாதவா - எனது
பானை உடைந்து போகின்றதே கேசவா
பாய்ம்பொடே3த் தூ ஹாத் சொட்னா அச்யுதா3 - தொர
பாயிர் பொடேஸ் ஹாத் தே3 ஸ்ரீ அனந்தா
மாய் பா3பு3ன் மொகொ3 தூஸ் ரே மாத3வா – ரெங்க3
ஸாயி மொகொ3 ஸாரே ஸ்ரீ கேஸவா
வணங்கினால் நீ கைவிடாய் அச்சுதா - உந்தன்
தாள் அடைந்தேன் கை கொடு ஸ்ரீ அனந்தா
தாய் தந்தை எனக்கு நீயே மாதவா - ரெங்க
சாயி என்னைப் பார்ப்பாய் ஸ்ரீ கேசவா
ராத் தீ3ஸுந் நாவ் மெனரெஸ் ராக3வா – தொகொ3
ராக் காய்ரே ராக் ஸோட்ரே ராக3வா
ஸாத் லோகு3ம் பொ4ரி ரியெஸி வாமனா - மொர
ஸாத் ரனோ மெல்லரேஸி உத்தமா
இராப்பகலாய் பெயர் சொல்கிறேன் இராகவா - உனக்கு
சினம் என்ன சினம் விடுவாய் இராகவா
ஏழுலகும் நிறைந்திருந்தாய் வாமனா - என்
உடனிருக்க வேண்டும் சொன்னேன் உத்தமா
***
திருமந்திரமாம் எட்டெழுத்து மந்திரத்திற்குப் பொருளுரைக்கும் ஒரு தொடரை எழுதி நிறைவு செய்து மாதவிப் பந்தலும் நிறைவு பெற்றது என்று அறிவித்திருக்கிறார் சிறு வயதிலேயே நிறைய பட்ட, எம்பெருமானாரின் இன்றைய தோற்றம் என்று சொல்லலாம்படியான, நம் நண்பர் இரவிசங்கர். எங்கே ஆனாலும் என்றைக்கு ஆனாலும் தொடர்ந்து அவருடைய் தொண்டு நிகழ்ந்து கொண்டு வரவேண்டும். அதற்கு என் கண்ணன் அருள் புரியவேண்டும்.
என்னை இப்படி தனியன் ஆக்கத் தானா இவன் மேல் தனியன் எழுதவைத்தாய் எம்பெருமானே?!
32 comments :
நன்றாக வந்திருக்கு குமரன்!
>>எனது
பானை உடைந்து போகின்றதே கேசவா<<
இவ்வரிகளுக்குப் பின்புலம் ஏதும் உண்டோ?
Kannan Varuvan Kathai solluvan , kalagathe nanbare.
Anbuan
Kannan Bakthan
பொதுவான புலம்பல் தான் ஜீவா.
நன்றி கண்ணன் பக்தரே.
அண்ணா,
பாட்டு அருமை!
//மாதவிப் பந்தலும் நிறைவு பெற்றது//
என்னது மாதவி பந்தல் நிறைவு பெற்றதா! அல்லது மாதவி பந்தலில் வந்த தொடர் முடிந்ததா?
KRS (ஆழ்வாரே) சொல்லுங்கோ!
மனதார அழைக்கின்றேன் வா முகுந்தா.. எனக்கு மோட்சம் தர மனம் வைப்பாய் கோ விந்தா கோவிந்தா ,/சிங்காரவேலனே வா வா அந்த மெட்டு பெருந்தி வந்தது .//சித்ரம் .//
எழுதி எழுதி பழகி வந்தேன்./எழுத்து கூட்டி பாடி வந்தேன் ./பாட்டுக்கு ள் ளே முகுந்தன் வந்தான் ./பாடு பாடு என்று சொன்னான் .//சி த்ரம்.//
அருமையான கண்ணன் படம்.. உங்கள் புலம்பலும் நெஞ்சைஉருக்குவதாக உள்ளது குமரன்..
//என்னை இப்படி தனியன் ஆக்கத் தானா இவன் மேல் தனியன் எழுதவைத்தாய் எம்பெருமானே?//
:(
நன்றி சிவமுருகன். பாடலுக்கு எண்களைப் போட்டுத் தந்ததற்கும் நன்றி.
நன்றி சித்ரம்
கண்ணன் படம் கூகிளார் தந்தது இராகவ். நன்றி.
ஆகா!
சரி...
நல்ல பாடல் குமரன்! உங்க பாட்டை வரிக்கு வரி பார்க்கும் போது எனக்கு இது தான் மனதில் ஓடியது....
ஊரிலேன்! காணி இல்லை!
உறவு மற்று ஒருவர் இல்லை!
பாரில் நின் பாத மூலம்
பற்றிலேன் பரம் மூர்த்தி!
காரொளி வண்ணனே! என்
கண்ணனே கதறுகின்றேன்!
யாருளர் களை கண் அம்மா,
அரங்க மா நகருளானே!
குட திசை முடியை வைத்து,
குண திசை பாதம் நீட்டி,
வட திசை பின்பு காட்டி,
தென் திசை இலங்கை நோக்கி,
கடல் நிறக் கடவுள் எந்தை,
அரவணைத் துயிலுமா கண்டு,
உடல் எனக்கு உருகு மாலோ?
என் செய்கேன் உலகத்தீரே?
என் செய்கேன் பதிவுலகத்தீரே!
//எனது பானை உடைந்து போகின்றதே கேசவா//
வெண்ணைய்ப் பானை-ன்னா கண்ணனிடம் உடையத் தானே செய்யும் குமரன்? :) என்சாய் மாடி!
//பாயிர் பொடேஸ் ஹாத் தே3//
ஹாத்தே-ன்னா கை தெரியுது!
திருவடிகளுக்கு செளராஷ்ட்டிரத்தில் என்ன?-ன்னு தெரிஞ்சிக்க ஆசை!
//இராப்பகலாய் பெயர் சொல்கிறேன் இராகவா - உனக்கு
சினம் என்ன சினம் விடுவாய் இராகவா//
:)
இதைப் படிக்கும் போது மட்டும் கொஞ்சம் சிரித்து விட்டேன்! காரணம் உங்களுக்கே தெரியும்! :)
//ஏழுலகும் நிறைந்திருந்தாய் வாமனா - என்
உடனிருக்க வேண்டும் சொன்னேன் உத்தமா//
வாமனா-உத்தமா-வா?
ஹிஹி!
1. ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி!
2. அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகளந்த
3. அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி!
- மூன்று அவிர்ப்பாகம் உத்தமனுக்குக் கொடுத்தாகி விட்டது யக்ஞத்தில்! நீங்க நைசா நாலாவதும் அவனுக்கே கொடுக்கறீங்க! :)
//இராப்பகலாய் பெயர் சொல்கிறேன் இராகவா(இரவி) - உனக்கு
சினம் என்ன சினம் விடுவாய் இராகவா(இரவி)//
மீண்டும் KRS ஐயா எழுத அந்த இராகவனே அருள் புரியட்டும். பிரார்த்தனை செய்வோம்.
//எம்பெருமானாரின் இன்றைய தோற்றம் என்று சொல்லலாம்படியான//
ஆகா! தவறு தவறு!
ஆதியான சேஷன் அவர்!
அற்பமான சேஷன் இவன்!
அடியேன் சேஷியின் சேஷன் மட்டுமே!
//என்னை இப்படி தனியன் ஆக்கத் தானா இவன் மேல் தனியன் எழுதவைத்தாய் எம்பெருமானே?!//
:(
:)
All thatz good, that the good lord sends...
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்! :)
----------------------------------
உலகு தனிற் பலபிறவி தரித்தற
உழல்வது விட்டு-இனி அடி நாயேன்
உனது-அடிமைத் திரள் அதனினுள் உட்பட
உபய மலர்ப் பதம் அருள்வாயே!
அலை புனலிற் தவழ் வளை நிலவைத் தரு
மணி திரு வக்கரை உறைவோனே!
அடியவர் இச்சையில் எவை எவை உற்றன
அவை தருவித்து அருள் பெருமாளே!
அவை தருவித்து அருள் பெருமாளே!
அன்பு ரவி,குமரன் பாடல் மிக நன்றாக இருக்கிறது. மாதவிப்பந்தல் ஏன் முடிய வேண்டும். புரியவில்லை.
நல்ல பாசுரங்கள் தான் மனத்தில் ஓடியிருக்கின்றன இரவி. எனக்கும் இப்படித் தான். கவிநயா அக்காவோட பாடல்களைப் படிக்கிறப்பவும் உங்க இடுகைகளைப் படிக்கிறப்பவும் முன்னோர் சொன்னவை நெஞ்சில் ஓடும்.
ஹாத் என்றால் கை; தே3 என்றால் கொடு. பாய்ன் என்றால் கால். போட் என்றால் விழு. பாய்ன்போட் --> பாய்ம்போட் என்றால் வணங்கு; தொழு. காலில் விழுதல் என்பது வணங்குதலும் ஒரு வார்த்தையாய் வந்தது அழகு. பாய்ம்பொடே3த் - வணங்கினால்; பாயிர் பொடேஸ் - காலில் விழுந்தேன்; இப்படி அந்த வார்த்தையின் அழகை இந்த வரிகள் சொல்கின்றன.
சினம் என்றால் சக்ரவர்த்தித்திருமகன் தான் மனத்தில் நிற்கிறான் போலும். சமுத்திரராசன் மேல் அளவுக்கு மீறி சினம் கொண்டானே அது மனத்தில் பதிந்து போய்விட்டது போலும். அதனால் சினம் ஏனடா சினம் விடடா என்னும் போது அவன் பெயரே முன்னிற்கிறது.
நீங்கள் எதற்காகச் சிரித்தீர்களோ அதே காரணத்திற்காக நானும் இந்த இடுகையில் எழுதும் போது சிரித்தேன் இரவி. அடடா வார்த்தைகள் இப்படி வந்து விழுந்திருக்கின்றனவே நம் இராகவனைச் சொல்வது போல் என்று. :-) இராகவனுக்கு என் மேல் எந்த கோவமும் இல்லை என்று நன்றாகத் தெரியும்.
வாமனா - உத்தமா தொடர்பை நீங்கள் சொன்ன பிறகு தான் பார்த்தேன். இன்னும் இப்படி நிறைய தொடர்புடைய திருப்பெயர்கள் வந்து அமைந்திருக்கின்றன.
மோட்சம் தர மனம் வைப்பாய் கோவிந்தா
வணங்கினால் நீ கைவிடாய் அச்சுதா
தாய் தந்தை எனக்கு நீயே மாதவா
இந்த வரிகளில் வரும் கருத்திற்கும் திருப்பெயர்களுக்கும் தொடர்பு இருப்பதைக் கவனித்தீர்களா இரவி?
பாடல் நன்றாக இருக்கிறது என்று சொன்னதற்காக நன்றி வல்லியம்மா. ஆனால் மாதவிப்பந்தல் ஏன் முடியவேண்டும் என்பதை நீங்கள் இரவியிடம் தான் கேட்டிருக்கிறீர்கள். அவர் தான் சொல்லவேண்டும்.
//பாய்ன் என்றால் கால்.
போட் என்றால் விழு.
பாய்ன்போட் --> பாய்ம்போட் என்றால் வணங்கு; தொழு.
காலில் விழுதல் என்பது வணங்குதலும் ஒரு வார்த்தையாய் வந்தது அழகு//
ஆகா! செளராட்டிரம் இப்படி ஒரு அழகிய நுண்ணிய மொழியா?
வணங்கல்-ன்னாலே திருவடி வணங்கல்-ன்னு பொருள் வந்துருச்சே! Wow! Awesome!
வேலை வணங்குவதே வேலை மாதிரி, பாய்ன்போட்-ஆ? ஐ லைக் இட்! :)
துயர் அறு,
சுடர் அடி,
தொழுது எழு,
என் மனனே!
// Kailashi said...
//இராப்பகலாய் பெயர் சொல்கிறேன் இராகவா(இரவி) - உனக்கு
சினம் என்ன சினம் விடுவாய் இராகவா(இரவி)//
ஹா ஹா ஹா!
குமரன் பாட்டைப் படிக்கும் போதே ஒரு முறை சிரித்தேன்!
இப்போ உங்கள் பின்னூட்ட அடைப்புக்குறி கண்டு இன்னும் இன்பமாய்ச் சிரிக்கிறேன்!
//சினம் என்றால் சக்ரவர்த்தித் திருமகன் தான் மனத்தில் நிற்கிறான் போலும்//
பாவம் எங்க ராகவன்!
கோவமே படாதவன் என்னைக்காச்சும் ஒரு நாள் கோவப்பட்டா, அது தான் ஊருக்கே பெருசா தெரியும் போல! அது போல எங்கள் ராகவன் கடலரசனைக் காய்ந்த ஒரு சில மணித்துளிகளால் இப்படி ஒரு பேரு வந்துருச்சா அவனுக்கு? நீ கவலைப்படாதே டா! நான் இருக்கேன் உன்னைய defend பண்ண! :)
அது தாடகை வதமோ, சூர்ப்பனகையோ, வாலி வதமோ, வீடண அடைக்கலமோ, சீதை தீக்குளிப்போ - நான் இருக்கேன்டா உன்னைய defend பண்ண! :) except அவளைக் காட்டுக்குத் தனியா அனுப்பிச்ச பாரு...அதைத் தவிர...
//குமரன் (Kumaran) said...
வாமனா - உத்தமா தொடர்பை நீங்கள் சொன்ன பிறகு தான் பார்த்தேன். இன்னும் இப்படி நிறைய தொடர்புடைய திருப்பெயர்கள் வந்து அமைந்திருக்கின்றன.//
கவனிச்சேன் குமரன்! ஆனால் "உத்தமனை" மட்டும் தோழியைப் போல் கொஞ்சம் வெளிப்படையாச் சிலாகிச்சேன்! :)
ஏன்-னா அவன் ஒருவனே திருவடிகளை எல்லாருக்கும் கொடுத்த "உத்தமன்" அல்லவா? இராமன் கூடப் பாதுகையை மட்டும் தான் கொடுத்தான்! திருவடிகளை அல்ல!
//மோட்சம் தர மனம் வைப்பாய் கோவிந்தா// => கோ+விந்தா = உயிர்களின் சரண்
//வணங்கினால் நீ கைவிடாய் அச்சுதா// => அச்சுதா = கை விடாதவா
//தாய் தந்தை எனக்கு நீயே மாதவா// => மா + தவா = தாயுமானவனே
இன்னும் சில...
//தாள் அடைந்தேன் கை கொடு ஸ்ரீ அனந்தா// = அன் + அந்தா = முடிவு என்பதே இல்லாத = நிறைந்து நிறைந்து நிறையாத = திருவடிகள்!
திருவடிகள் என்பதற்குத் தான் முடிவே இல்லை! ஊழிக் காலத்தில் அனைத்தும் ஒடுங்கி விட்டாலும் கூட, திருவடிகள் மட்டுமே எஞ்சி இருந்து, தனியாய் இருக்கும் அவனுக்கு, கால் கட்டை விரலால் வாய் அமுதம் ஊட்டி வாட்டம் போக்கும்!
அதை "அனந்தம்"-ன்னு இங்கு குறிப்பிட்டது ரொம்ப ரொம்ப பொருத்தம் குமரன்! - பாயிர் பொடேஸ் ஹாத் தே3 ஸ்ரீ அனந்தா!
* நாம இப்படி எல்லாம் யோசித்து எழுதா விட்டாலும்,
* தானாகவே வந்து அமையுது பாருங்கள்!
* எத்தனை மனிதர்கள் வந்தாலும் போனாலும்,
* காதல் எம்பெருமான் ஒருவனிடத்தில் மட்டுமே இப்படி அமைப்பு அமையும்! தானாகவே வந்து அமையும்!
பாடல் நன்றாக இருக்கிறது குமரா.
//எனது
பானை உடைந்து போகின்றதே கேசவா//
நந்தவனத்தில் ஓர் ஆண்டியை நினைவுபடுத்தியது.
மனதார அழைத்தால் வராமல் இருக்க மாட்டான். (அப்படித்தான் எல்லாரும் சொல்றாங்க :). எந்த இராகவனுக்குமே (இரவிக்கும்) உங்கள் மீது சினம் இருக்காது. கவலைப்படாதீங்க :) கண்ணன் கண்ணனை தொடர வைப்பான். அப்படித்தானே கண்ணா? :)
உண்மை தான் அக்கா. எனக்கும் நந்தவனத்தில் ஓர் ஆண்டி பாட்டு நினைவுக்கு வந்தது.
இராகவன், கண்ணன் - இந்தப் பெயர்கள் கொண்ட நண்பர்களுக்கு என்னிடம் எந்த சினமும் இல்லை அக்கா. இரவிகுலதிலகன் இராகவனுக்குத் தான் என் மேல் சினம் போல.
//இரவிகுலதிலகன் இராகவனுக்குத் தான் என் மேல் சினம் போல//
ஹா ஹா ஹா!
என்னமா பேசுறாருப்பா இந்தக் குமரன்? சான்ஸே இல்லை! :)))
//கண்ணன் கண்ணனை தொடர வைப்பான். அப்படித்தானே கண்ணா? :)//
ஹிஹி! அப்படித் தான்-க்கா!
பாருங்க எத்தனை பின்னூட்டம் போட்டுத் தொடர்கிறேன், குமரனோட கண்ணன் பாட்டு வலைப்பூவுக்கு! :)
மாதவிபந்தல் முடிவுபெற்றதா? எதற்கு இந்த மா தவிப்பு எங்களுக்கு.
எனக்கும் அது தான் புரியவில்லை தி.ரா.ச. ஐயா.
//தி. ரா. ச.(T.R.C.) said...
மாதவிபந்தல் முடிவுபெற்றதா? எதற்கு இந்த மா தவிப்பு எங்களுக்கு//
திராச ஐயா
இதை இப்பத் தான் பார்த்தேன்! சென்னை வரும் போது பேசுகிறேன்! இப்போ உங்க கிட்ட ஒரே ஒரு வேண்டுகோள்!
தயவு செய்து ஆசார்ய ஹிருதயத்தை மீளத் துவங்கி விடுங்களேன்!
என்ன நடந்தாலும், ஹிருதயம்-ன்னா துடித்துக் கொண்டே இருக்க வேணும் அல்லவா?
அது தானே பகவான் உள்ள உகப்பு? நம் சொந்த அபிமானங்களை விட அவன் தானே முக்கியம்?
அடியேன் ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கு இரங்கி, இதை மீளத் துவக்கி விடுங்கள்!
நான் யாரிடம் வேண்டுமானாலும், பொதுவிலும், மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்!
குரு ராகவேந்திரரை அன்று சமூகம் ஒதுக்கி வைத்தாற் போலே, ஆசார்ய ஹிருதயம் ஒதுக்கி வைக்கப்பட்டது என்று பேச்சு வரக்கூடாது!
முன்பு நான் விலகிய போதே, நீங்கள் தான் ஆணையிட்டு மறுபடியும் ஆசார்ய ஹிருதயத்தில் சேர்த்தீர்கள்! அதனால் உங்களிடமே இந்த விண்ணப்பத்தை வைக்கிறேன்!
இப்போது நான் எங்கும் எழுதுவதும் இல்லை! பின்னூட்டங்களும் அவ்வளவாக இடுவதில்லை! அதனால் தயக்கமின்றி இதை மீள் துவங்கி விடுங்கள்!
ஒரு கருத்தைக் கருத்தாகத் தான் வைப்பேனே அன்றி,
தனிப்பட்ட தாக்குதலோ, காழ்ப்புச் சொல்லோ, கும்மியோ, அதை ஏன் எழுதல, இதை ஏன் எழுதலை போன்றவையோ எல்லாம் நான் சொல்ல மாட்டேன்! கருத்தை ஒட்டி மட்டுமே விவாதிப்பேன் என்று தங்களுக்கே தெரியும்!
சாஸ்திர விசாரங்களில் விளக்கத்தைத் தூண்டும் விதமாகக் கேள்விகளை எழுப்பி,
வறட்டு மதமாக இல்லாமல், சமூக அக்கறையோடு கூடிய ஆன்மீகமாகத் தான் அவ்வப்போது கேள்விகளை எழுப்பி இருப்பேன்! அதில் புரிதற் பிழை இருக்கலாம்! ஆனால் பொய் இருக்காது!
அதனால் அடியேனை மன்னித்து, இதை மீள் துவக்கம் செய்ய வழி கோலுங்கள்!
தெய்வங்களுக்கான மற்ற குழு வலைப்பூக்கள் எல்லாம் இயங்கும் போது, ஆசார்யர்களுக்கான குழு வலைப்பூ இயங்காமல் இருக்கக் கூடாது! - இதுவே அடியேன் வேண்டுவது!
என் கேள்விகளோ, இடைஞ்சலோ வராதவாறு இனி அடியேன் நடந்து கொள்கிறேன் என்ற உறுதியைத் தருகிறேன்! ஆசார்ய ஹிருதயத்தை மீளத் துவங்கி விடுங்கள்!
முத்தமிழால் "வைதாரையும்" ஆங்கே வாழ வைப்பான் அருள் முன்னிற்க!
க்ஷமஸ்தத்வம் க்ஷமஸ்தத்வம் சேஷசைல சிகாமணே!