Thursday, August 13, 2009

Rock இசையில்....கிருஷ்ணா முகுந்தா முராரே!

கிருஷ்ணா முகுந்தா முராரே! - கந்தா கடம்பா கதிர்வேலா-ன்னு மாத்திப் பாடி கலாட்டா பண்ணிய கல்லூரிக் காலங்கள் எல்லாம் உண்டு! தேவா கூட இப்படி மாத்திப் பாடி மண்ணாங்கட்டித்தனமா ஒரு பாட்டு போட்டிருக்காரு! :)

MK தியாகராஜ பாகவதர்-ன்னாலே, அலறி அடிச்சிக்கிட்டு ஓடும் இளைய தலைமுறை கூட அவரின் ஒரே ஒரு பாட்டை மட்டும் விரும்பிக் கேட்கும்! கும்மியும் அடிக்கும்! :)
அதை ரீ-மிக்ஸ் எல்லாம் பண்ணாம, கொஞ்சம் Rock இசையில் கிண்டலாப் போட்டா? Rock-முத்து-Rocku! கண்ணா Rock-கொடியைச் சூட்டு :)

கண்ணன் பிறந்த நாள், இரவுப் பதிவுகளின் தொடர்ச்சியாக, இன்று கண்ணன் பாட்டு வலைப்பூவில்.....
The Ever Green கிருஷ்ணா முகுந்தா முராரே! = பாடலுக்கு இசை: ஜிரா! :))

அட நம்ம பதிவர் ஜிரா இல்லீங்க! இவரு வேற ஜிரா! ஜி.ராமநாதன்! :))
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கண்ணா! Happy Birthday!
ஊரு ஃபுல்லா Swine Flu ஏவி விட்டிருக்கான் கம்சன்! பார்த்து! ஜாக்கிரதையா இரு! தண்ணி காய்ச்சிக் குடி! முகமூடி போட்டுக்கிட்டு புல்லாங்குழல் வாசி! :)நம்ம துளசி டீச்சருக்குப் புடிச்ச பாட்டாம்-ல?
மொதல்ல ராக் மீஜிக்-ல கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க! :)
KrishnaMukundaMura...


1944-இல் வந்த படம் ஹரிதாஸ்! ப்ளாக் & வொயிட் அலர்ஜி இல்லாதவங்க, அந்தச் சூப்பர் ஹிட் படத்தை இன்னிக்கும் பார்க்கலாம்! :)
அதிலும் தேவதாசியா நடக்கும் டி.ஆர்.ராஜகுமாரி அவர்களின் வில்லித்தனமான ரோலுக்காகவே பார்க்கலாம்! நீலாம்பரி ரம்யா கிருஷ்ணன் எல்லாம் பிச்சை வாங்கணும்! :)

அப்போது வந்த படங்கள் எல்லாம் நாலு மணி நேரம் ஓடும்! ஆனா அப்பவே ஹரிதாஸ் பண்ணுச்சி புரட்சி! ரெண்டே மணி நேரம் தான்! நம்ப முடியல-ல்ல? ஆனா ரெண்டே மணி நேரத்தில் மொத்தம் 18 பாட்டு! :))))) ஆனா படம் செம ஹிட்டு! ரெண்டு தீபாவளி வரைக்கும் படம் ஓடிச்சி!

புராணப் படமாவும் இல்லாம, பக்திப் படமாவும் இல்லாம, ஒரு சமூகப் படமா எடுத்திருக்காங்க!

ஓவராப் பெண்ணாசை வீக்னஸ் உள்ள வாலிபன், அதே சமயம் வாய்த் துடுக்கும் எக்கச்சக்கம்! அவன் எப்படியெல்லாம் சிக்கல்-ல மாட்டிப்பான்? ஆண்-பெண் உறவுகளை வெளிப்படையாப் பேசத் தயங்கிய அந்தக் காலத்தில் வந்த நல்ல சமூகப் படம்!

ஒரு தேவதாசியின் மாயையில் விழுந்த ஹரிதாஸ், சொத்தை இழந்து, மனைவியை இழந்து, ஆனாலும் வயசான அம்மா அப்பாவை முதியோர் இல்லத்தில் வைக்காம, தானே எப்படி வச்சிக் காப்பாத்தறான் என்பது தான் கதை!

முதல் பாதி அருணகிரிநாதரின் இளவயது வீக்னெஸ்களைப் போல் சொல்லி, இரண்டாம் பாதியில் பாண்டுரங்கன் கதையில் வருவது போன்ற சில காட்சிகள்! பெற்றோருக்காக கண்ணனையே செங்கல் வீசி உட்கார வைச்ச புண்டரீகன் கதை போல முடியும்!

கேட்க மட்டுமான ஒலிச்சுட்டி!
(பாடலின் ஓப்பனிங் ம்யூசிக்கைக் கட்டாயம் கேளுங்க - அருமையான புல்லாங்குழல்!)

கிருஷ்ணா முகுந்தா முராரே - ஜெய
கிருஷ்ணா முகுந்தா முராரே - ஜெய
(கிருஷ்ணா முகுந்தா முராரே)

கருணா சாகர கமலா நாயக
கருணா சாகர கமலா நாயக
கனகாம்பர தாரி கோபாலா

(கிருஷ்ணா முகுந்தா முராரே)
(கருணையின் கடலே, திருமகள் தலைவா - பொன் ஆடை சூடி, கோபாலா)

காளிய மர்த்தன கம்சனி தூஷண
காளிய மர்த்தன கம்சனி தூஷண
கமலாதள நயனா கோபாலா

(கிருஷ்ணா முகுந்தா முராரே)
(காளிங்க ஆட்டம், கம்சனின் ஓட்டம் - தாமரை தளக் கண்ணா, கோபாலா)

குடில குண்டலம் குவலய தள நீலம்
மதுர முரளீர் அவ லோலம்
கோடி மதன லாவண்யம்
கோபி புண்யம் பஜாமி கோபாலம்

(வளைந்த காதணி, குவளையின் நீலம்
இனிய குழலோ மயக்கும் நாதம்
கோடி மன்மத அழகு மோகம்
கோபியர் வரமே, பஜனை செய்வோம் கோபாலம்)

கோபி ஜன மனமோகன வியாபக
கோபி ஜன மனமோகன வியாபக
கோபி ஜன மனமோகன வியாபக
குவலய தள நீலா கோபாலா...
குவலய தள நீலா கோபாலா...
குவலய தள நீலா கோபாலா...

(கிருஷ்ணா முகுந்தா முராரே)
(கோபியர் மனத்தின் மோகனன் நீயே!
குவளை நிறக் கண்ணா - கோபாலா)

குரல்: எம்.கே.டி (தியாகராஜ பாகவதர்)
இசை: ஜி.ராமநாதன்
வரிகள்: பாபநாசம் சிவன்
படம்: ஹரிதாஸ் (1944) - 768 நாட்கள் ஓடியது.
ராகம்: நவ்ரோஜ்


பாட்டு-ல தமிழ்ச் சொற்கள் இல்லீன்னாக் கூட, இந்தப் பாடல் ஒரு பெரிய ஹிட் என்பதால் இங்கிட்டு கொடுத்தேன்! ஆனால் இதை எழுதிய பாபநாசம் சிவன் அவர்கள் சிறந்த தமிழ் மேதை!

தமிழிசைப் பாடல்கள் செய்து கொடுத்து, தமிழ்த் தியாகராஜர் என்ற சிறப்பு பெற்ற தமிழ்க் கவிஞர்! அவரு சினிமாவில் பாப்புலர் ட்யூனுக்கும் என்ன அருமையா பாடல் பண்ணிக் கொடுத்திருக்கார் பாருங்க! அதுவும் நவ்ரோஜ் ராகத்துல!

இதைக் குத்துப்பாட்டு-ன்னு கூட ஒரு வகையில் சொல்லலாம்!
இந்தப் பாட்டு வந்த காலத்தில், குத்துப்பாட்டுக்கு இலக்கணம் கூட இருந்திருக்காது! ஆனா குத்துக்கு உரிய அதே துள்ளல், ஸ்பீடு, ஆட்டம்-னு எல்லா இலக்கணமும் இந்தப் பாட்டுக்கும் இருக்கு! அதான் Rock Version-ல கேட்டீங்க-ல்ல? மயங்காத மனமும் உண்டோ?

Dandiya, Garba, கோலாட்டத்துக்கு மட்டும் இந்தப் பாட்டை வச்சாக்கா எப்படி இருக்கும்?...ஆகா! ஆடிப் பாருங்க! ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே!

10 comments :

Jawarlal said...

ராக் கிருஷ்ணா முகுந்தா பிரமாதமா இருக்கு.

பாடினது யாரு?
மிக்சிங் யாரு?

ரெண்டுமே நீங்கன்னா ஹாட்ஸ் ஆப்.

http://kgjawarlal.wordpress.com

Anonymous said...

இது குத்துப்பாட்டான்னு 2007 ல பதிவு போட்டீங்க ஞாபகம் இருக்கா. இப்ப அது ராக் ஆகிடுச்சா :)

என்னோட http://chinnaammini.blogspot.com/2008/02/blog-post_12.html இந்தப்பதிக்கு காரணமா இருந்தது அந்தப்பதிவு.

Raghav said...

பாட்டு பிரமாதம் !!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//Jawarlal said...
ராக் கிருஷ்ணா முகுந்தா பிரமாதமா இருக்கு//

நன்றி! நன்றி! :)

//பாடினது யாரு?
மிக்சிங் யாரு?
ரெண்டுமே நீங்கன்னா ஹாட்ஸ் ஆப்//

ஹிஹி! ரெண்டுமே நான் இல்லை! எனவே தொப்பியைத் தூக்காதீர்கள் ஜாவர்லால்! :)

இருங்க, யாரு-ன்னு தேடிப் பார்க்கணும்! என்னிடம் இருந்த Playlist Info டிலீட் ஆயிரிச்சி!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//Raghav said...
பாட்டு பிரமாதம் !!//

வாங்க ராதா கோஷ்டி! :)
யாரு படுற பாட்டு பிரமாதமாப் படுது ஒங்களுக்கு? :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//சின்ன அம்மிணி said...
இது குத்துப்பாட்டான்னு 2007 ல பதிவு போட்டீங்க ஞாபகம் இருக்கா. இப்ப அது ராக் ஆகிடுச்சா :)//

ஆமாக்கா! ரெண்டு வருசம் ஆயிரிச்சி-ல்ல? தமிழ் சினிமாப் பாட்டுகள் ஒலகத் தரம் ஆயிரிச்சி-ல்ல? :)

இப்பவும் சொல்லி இருக்கே பாருங்க! குத்துப்பாட்டின் அங்க அடையாளங்கள் இதில் தெரியுதுன்னு! :)

//என்னோட http://chinnaammini.blogspot.com/2008/02/blog-post_12.html இந்தப்பதிக்கு காரணமா இருந்தது அந்தப்பதிவு//

உங்க அப்பா எழுதிய பாட்டு தானே? கந்தா கடம்பா குமாரா! செம கலக்கல்! நல்லா ஞாபகம் இருக்கு! என் நண்பனும் முதல் ஆளா அதுக்கு ஓடியாந்தான்! :))

sury said...

எங்க காலத்துலே ரொம்பவே பிரபலமான பாடலாகும்.

இதை பாடாத ரசிகர் அந்த நாளில் இல்லை எனவே சொல்லலாம்.

பாபனாசம் சிவன் அவர்களது பாடலை மிகவும் அற்புதமாக
தமிழிலே மொழி பெயர்த்தமைக்கு தங்களை எத்தனை பாராட்டினாலும் தகும்.

இந்த மொழி பெயர்ப்பினையும் அதே ராகத்தில் பாட முடியுமோ என்று நினைத்தேன்.
நன்றாகவே வருகிறது. ( இந்தக் கிழவனுக்கு பதிலாக அந்த மிக்ஸ் செய்தவர் குரல்
இன்னும் பொருத்தமாக, அழகாக இருக்கும், முயற்சிக்கவும்)

ஒரு முறை மட்டும் கேட்பதற்காக இங்கே பதிவு செய்துள்ளேன்.
உங்களுக்கு பரவாயில்லை என்று தோன்றினால் மட்டும் உங்கள் நேயர்களுக்கு சிபாரிசு
செய்யலாம்.

http://www.youtube.com/watch?v=ft9WZs3a2tM

சுப்பு தாத்தா.

குமரன் (Kumaran) said...

இரண்டு வாரத்திற்கு முன்னர் தான் இந்தப் படத்தைப் பார்த்தேன். படம் தொடங்கும் போது எல்லோரும் உட்கார்ந்திருந்தார்கள். இந்தப் பாட்டு வரும் போது எல்லோரும் தூங்கிவிட்டார்கள்; நான் மட்டும் பார்த்துக் கொண்டிருந்தேன். :-)

குமரன் (Kumaran) said...

பல முறை எங்கள் குழந்தைகளுக்கு தாலாட்டு பாட்டும் இது தான். :-) ராக் முறையில் இல்லை; எம்.கே.டி. முறையில் தான்.

ஷைலஜா said...

கிருஷ்ணர் பராக் பராக்!

இசைமுழுக்க கேட்க முடியவில்லை.

இந்த’மால்’ பாட்டை நிதானமா கேக்கணும் இப்போ...
மாலு மாலுன்னு சுத்திட்டு இருக்கேன்!:)

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP