Saturday, December 13, 2008

சுசீலாவின் பிருந்தாவனத்துக்கு வருகின்றேன்!

காலங்கலமா இதே வழக்கம்ப்பா இந்த ஆண்களுக்கு! அழகான பெண்களைக் காதலிக்கவேண்டியது ,அப்புறமா மனசு மாறிட வேண்டியது!

பாருங்களேன் இந்த அழகான பெண்ணும், ஒரு கோபிகை தான்(கோபிகா அல்ல பாவனா அல்லன்னு KRS Ragav Rishan பின்னூட்டமிடு முன்பாக நான் முந்திட்டேனே:)))

ம்ம்ம் என்ன சொன்னேன் அழகான் பெண் என்றேனா அவளைக் குழலூதும் கண்ணன் தன் இசையில் மயக்கி இருக்கிறான்.

கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்னு அந்தப் பொண்ணும் மயங்கிட்டா...
அவளை நல்லா மருக வைத்துவிட்டு நைசா ப்ருந்தாவனத்துக்கு வந்துட்டான், அங்க இருக்கற கோபிகைகளுடன் குதூகலமாய் விளையாட ஆரம்பிக்கிறான் கண்ணன்.

காதலிக்கிறவ்ரை அ(எ)ந்த ஆணையும் ஒரு எதிர்பார்ப்போட‌ ஏறெடுத்தும் பார்க்க மாட்டாங்க பொண்ணுங்க, ஆனா, காதலிச்சிட்டால் அவன் என்ன பண்றான் எங்க போறான் வேற‌ எந்த ஃபிகர்கிட்ட செல்லுல சொல்லுல ஜொல்லுவிடறான்னு மோப்பம் பிடிக்கற‌தேதான் அவங்கவேலை!

ஆணை விட பெண்ணுக்கு அன்பின் ஆளுமையும் பொஸஸிவ் நெஸ்ஸும் ஜாஸ்திங்க!மோதிரத்தை தொலைச்சி மனைவியை மறந்தது துஷ்யந்தன் தானே!! காற் சில‌ம்பை அட‌குவ‌ச்சி க‌ண்ண‌கியை அம்போன்னு விட்ட‌து கோவ‌ல‌ன் தானே! இன்னும் மீத‌ம் இருப்ப‌தை ம‌க‌ளிர் பொங்கி எழுந்து நினைவுப‌டுத்த‌க்கேட்டுக்க‌றேன்!(முடிஞ்சா மறக்கலேன்னா ஆண்க‌ளும்:))))

சரி இருங்க கதைக்கு வருவோம்...கண்ணன் ப்ருந்தாவனத்துக்குப் போனால் விஷயம் தெரியாம போயிடுமா, நம்ம தமிழ்நாட்டு தங்க மகளுக்கு, ஆல்ரெடி ஸ்மார்ட்னெஸ் தமிழ்ப் பெண்களுக்கு நிறைய உண்டுன்னு சொல்வாங்க இதுல கண்ணபெருமானின் கடைக்க‌ண்பார்வை வேறு பெற்றுவிட்ட்வள்!!காதல் பார்வையையும் கூட!

so,சும்மா இருப்பாளா வாரேன் சுவாமி உங்க ப்ருந்தாவனத்துக்கே நேரா வரேன் வந்து க்ருஷ்ணா நான் ஒருபாவியோன்னு கேட்பேன் அதுக்கு நீ பக்கத்துல ஏகப்பட்ட கோபிகைகளை வச்சிட்டு என்னை கேலியா பார்த்தா அதை தாங்கிப்பேன்னு நினைக்காத...என் கேள்விக்கு பதில் என்ன கேலியோன்னு கேட்காம விடமாட்டேன்,,,

நீ காயிலே புளிப்பாய் கனியிலே இனிப்பாய் ! நோன்பிலே உயிர்ப்பாய்கண்ணா ! ஆமா நான் இப்போ இருப்பது உயிர் நோன்பு ! காதல் நோன்பு! பாவை நோன்பு கொண்டாட இதோ மார்கழி பிறக்கப் போகிறது! உன்னையும் நப்பின்னை முதல் நந்தகோபனின் வாயிற்காப்பான் வரை வரை எல்லாரையும் விரட்டிக்கேட்க வில்லிப்புத்தூர் வீரப்பெண் வேறு வந்து விடுவாள். ஆகவே அப்போதைக்கிப் போதே வந்தேன் அடியாளை ஏறிட்டுப்பார்த்து ஏற்றுக்கொள்ளும் சுவாமி! என்கிறாள்.

ஒருபொண்ணு நின‌ச்சா, நின‌ச்சா.....எதுக்கு அதை ஒரு பெண்ணே இப்போ சொல்லணும், பாட‌லைக் கேளுங்க‌ க‌ல்லும் க‌னியாகும்!

பாட்டு பிருந்தாவனத்துக்கு வ‌ருகின்றேன் என்பெருமான் உன்னிட‌ம் கேட்கின்றேன்!

ப‌ட‌ம்..லட்சுமிகல்யாணம்
பாடியவ‌ர்.....சுசீலா
இசை...MSV

பாடலை இங்கு கேட்கவும்!

பிருந்தாவனத்துக்கு வருகின்றேன்! - என்
பெருமான் உன்னிடம் கேட்கின்றேன்!
கிருஷ்ணா நான் ஒரு பாவியோ? - என்
கேள்விக்கு பதில் என்ன கேலியோ?
(பிருந்தாவனத்துக்கு)

கீதையில் உன் குரல் கேட்டேனே! - என்
கிருஷ்ணனின் திருமுகம் பார்த்தேனே!
பாதையில் உன் துணை வரவில்லையே!
பகவான் திருவருள் தரவில்லையே!
(பிருந்தாவனத்துக்கு)

குங்குமம் அணிந்தால் உன் தேவி! - தன்
கூந்தலை முடித்தாள் பாஞ்சாலி!
சங்கமம் என்பது எனக்கில்லையோ? - அந்த
மங்கல மரபுகள் உனக்கில்லையோ?

கங்கையின் வெள்ளம் தண்ணீரோ? - இல்லை
கன்னியர்கள் விடும் கண்ணீரோ?
கண்ணனின் மனமும் கல் மனமோ? - எங்கள்
மன்னனுக்கு இது தான் சம்மதமோ?
(பிருந்தாவனத்துக்கு)

கிருஷ்ணா...கிருஷ்ணா...
கிருஷ்ணா...கிருஷ்ணா...


By...
............திருவரங்கப்ரியா(shylaja)

12 comments :

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

/சங்கமம் என்பது எனக்கில்லையோ? - அந்த
மங்கல மரபுகள் உனக்கில்லையோ?//

எலே கண்ணா, கேக்குறா-ல்ல? பதில் சொல்லுலே!

//காதலிக்கிறவ்ரை அ(எ)ந்த ஆணையும் ஒரு எதிர்பார்ப்போட‌ ஏறெடுத்தும் பார்க்க மாட்டாங்க பொண்ணுங்க//

ஆமாம்! உண்மை! உண்மை! உண்மை! ரொம்பவே மெனக்கெடணும்!

//ஆனா, காதலிச்சிட்டால் அவன் என்ன பண்றான் எங்க போறான் வேற‌ எந்த ஃபிகர்கிட்ட செல்லுல சொல்லுல ஜொல்லுவிடறான்னு மோப்பம் பிடிக்கற‌தேதான் அவங்கவேலை//

வைர வரிகள்!
வைர வரிகள்!

வாழ்க நீ அக்கா! இந்த
வையத்து வீட்டில் எல்லாம்
ஆழ்வுற்ற காதல் செய்யும்
அருமைத் தம்பியும் போற்ற
வாழ்விக்க வந்த ஷைலு
அக்கா நீ வாழ்க வாழ்க!

Raghav said...

ஷைலுக்காவின் பிருந்தாவனத்துக்கு வந்துட்டேன்..

மின்னல் said...

அக்கா அருமை

ஷைலஜா said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
/\//

வைர வரிகள்!
வைர வரிகள்!

வாழ்க நீ அக்கா! இந்த
வையத்து வீட்டில் எல்லாம்
ஆழ்வுற்ற காதல் செய்யும்
அருமைத் தம்பியும் போற்ற
வாழ்விக்க வந்த ஷைலு
அக்கா நீ வாழ்க வாழ்க!>>>>>>

வாழ்த்திய தம்பி கே ஆர் எஸ் பல்லாண்டு வாழ்க!!

9:33 PM, December 14, 2008

ஷைலஜா said...

Raghav said...
ஷைலுக்காவின் பிருந்தாவனத்துக்கு வந்துட்டேன்
>>>>>>>நல்வரவு ராகவ்!!!

குமரன் (Kumaran) said...

அக்கா. சுசிலா பாடுனதால இந்தப் பாட்டு ஒரு பெண் பாடுனதுன்னு டூப் அடிக்கிறீங்களா? பாடலைப் படிச்சா நான் பாடுற மாதிரியே இருக்கே?

ஷைலஜா said...

குமரன் (Kumaran) said...
அக்கா. சுசிலா பாடுனதால இந்தப் பாட்டு ஒரு பெண் பாடுனதுன்னு டூப் அடிக்கிறீங்களா? பாடலைப் படிச்சா நான் பாடுற மாதிரியே இருக்கே?

6:23 PM, December 15, 2008
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

சுசீலா சுசீலாதான்!

ஆனா கும்ரன் தான் இந்தப்பாட்டுபாடறப்போ குமரி ஆகிட்டார்!!!!!

கவிநயா said...

கண்ணனுக்குக் கல்மனம்தான். எனக்கு சந்தேகம் இல்லை :)

//ஆணை விட பெண்ணுக்கு அன்பின் ஆளுமையும் பொஸஸிவ் நெஸ்ஸும் ஜாஸ்திங்க!//

உண்மையக்கா. உண்மை :)

திகழ்மிளிர் said...

/கங்கையின் வெள்ளம் தண்ணீரோ? - இல்லை
கன்னியர்கள் விடும் கண்ணீரோ?
கண்ணனின் மனமும் கல் மனமோ? - எங்கள்
மன்னனுக்கு இது தான் சம்மதமோ?/

அருமை

Srinivas said...

// Raghav said...
ஷைலுக்காவின் பிருந்தாவனத்துக்கு வந்துட்டேன்..//

Brindhavanam Varuvadhan Poruttu dhaan PULLAANGULAL class Pogireergalaaa???

sury said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
எங்களது
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com

maicher said...

I think I come to the right place, because for a long time do not see such a good thing the!
jordan shoes

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP