Wednesday, November 12, 2008

ஆடி வரார்.. ஓடி வரார் வரதராஜப் பெருமாள்


என்ன இது.. இத்தனை பேரு மஞ்சள் ஆடை உடுத்தி எம்பெருமான் திருச்சின்னங்களை கையில் ஏந்திக் கொண்டு.. பாத்தா கோவில் வாசல்ல யாருக்கோ வரவேற்பு கொடுப்பதற்காக நிக்கிறாங்களோன்னு நினைக்கிறீங்களா ?

அதான் இல்லை.. இவங்கெல்லாம் ஒரு ஐந்து நாள் எமனேஸ்வரம் ஊரை விட்டு ஊர் சுத்தப் போறாங்க.. யாரோட சுத்தப் போறாங்கன்னு கேக்குறீங்களா.. இதோ கீழ இருக்கார் பாருங்க.. அவரோட தான்

பெருந்தேவி மணாளன்.. தேவர் பிரான்.. பேரருளாளன்.. ஸ்ரீவரதராஜன்..

எங்க ஊர் வரதராஜனை பற்றி எழுதலாம்னு உக்காந்தப்போ சில நாள் முன்பு கேட்ட திருச்சின்னமாலை ஞாபகம் வந்தது..

அத்திகிரி அருளாளப் பெருமாள் வந்தார்
ஆனை பரி தேரின் மேல் அழகர் வந்தார்

என்று ஸ்ரீமத் வேதாந்த தேசிகர், பேரருளாளனை அழகுற வர்ணித்திருப்பார். பேரருளாளனை உடனே தரிசிக்கணும்னு மனதில் ஆசை.. அப்புறம் என்ன.. உடனே பஸ்ஸை பிடிச்சு கிளம்பிட்டோம்ல.. அந்த திவ்யமான அனுபவம் இன்னொரு நாள் சொல்லுறேன்.


சாமிக்கு கோவில் கட்டி, நித்யப்படி பூஜையும் செஞ்சு.. முக்கிய தினங்களில் வீதி உலாவும் பண்ணுறோம்.. இருந்தும் ஸ்ரீவரதராஜன், ஒரு 5 நாள் சேந்தாப்புல ஊர் சுத்தணும்கிறார்.. எதுக்காம்??

காரணன்.. காரியம் இரண்டுமாகி இருப்பவன் ஆயிற்றே..
காரணமில்லாமலா, வெளியில் கிளம்புவார்.. துர்வாச முனிவரால் சபிக்கப்பட்டு மண்டூகமாக மாறி இருந்த சுதபஸ் என்ற முனிவருக்கு சாப விமோசனம் தர வேண்டியே இந்த விஜயம்

எமனேஸ்வரத்தில் மிகச் சிறப்பான திருவிழா.. திருவிழா நடக்கும் 18 நாட்களும் ஊரே கொண்டாட்டமா இருக்கும். அழகரை “அழகரப்பன்” என்று செளராஷ்ட்ர மக்கள் அழைப்பர்.


மேல உள்ள படத்துல தெரியற அர்ச்சகர் யாரா இருக்கும்னு சொன்னா.. அவர்களுக்கு அடையார் ஆனந்த பவனில் ஒரு கிலோ மை.பா வாங்கி அனுப்பப்படும் :).



புறப்படுவதற்கு வேண்டிய ஏற்பாடுகள், பயணத் திட்டம் யார் யாருக்கு என்ன பொறுப்பு எல்லாம் விஷ்வக்‌ஷேனர் ஆகிய சேனை முதலி தயாரா வைச்சிருக்கார்.

பயணத்திட்டத்தின் படி.. அதிகாலை கள்ளர் திருக்கோலத்துடன்.. புஷ்பப் பல்லக்கில் ஏறி.. பெருந்தேவி தாயாரிடமும், சக்கரத்தாழ்வானிடமும் மற்றும் முக்கியமாக காவல் தெய்வம் கருப்பண்ண சுவாமியிடமும் விடை பெற்றுக் கொண்டு,

பக்தர்கள் தீவட்டி ஏந்திக் கொண்டும்.. தோளுக்கினியானை தோளில் சுமந்தபடி. ஆடியும் பாடியும் ஓடியும் ஆரோகணித்துக் கிளம்புகின்றார்.

எந்த வருடமும் தவற விடாத.. என் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியையும்.. ஊரார் அனைவரும் மிக்க சந்தோஷத்துடனும்.. பக்தியுடனும் எம்பெருமான்.. பேரருளாளன்.. வரதனை.. அழகனை கொண்டாடும்.. இப்பாடலை கண்டு களிப்போமா..





புஷ்பப் பல்லக்கு அசைந்தாடி வர.. குதூகலத்துடன்.. கோவிந்தா.. ஹரி என்ற கோஷம் முழங்க.. ஒரு துள்ளலுடன் எழுந்தருளுகிறார் வரதன்.



புஷ்பத்தின் மணங்களுடன்.. காலை குளிரில் பக்தர்களின் மரியாதைகளை ஏற்றுக் கொண்டு.. ஆற்றில் இறங்க தயாராகிறார்..

சரி.. இனி பாடலுடன் எம்பெருமான் ஆடலையும் பாப்போமா..

ஆடி வரார் ஓடி வரார் அழகழகாய்
அசைந்து வரார் வரதராஜ பெருமாள்
நம்மை வாழவைக்கும் திருமால்
அவர் கள்ளழகர் கோலத்திலே களிப்புடனே வருவார்..

கோவிந்த கோவிந்த கோவிந்தா.. ஹரி
கோவிந்த கோவிந்த கோவிந்தா..

வைகாசி மாசத்திலே பிரம்மோத்ஸவம் பாரு
அந்த வைபவத்தில் காட்சி தரும் வாகனங்கள் பாரு..

கல்யாண வைபவத்தில் வரதராஜனைப் பாரு..
கல்யாண வைபவத்தில் வரதராஜனைப் பாரு..
நாம் வடம்பிடித்து வலம் வருகின்ற தேரோட்டம் பாரு

ஆடி வரார் ஓடி வரார் அழகழகாய்
அசைந்து வரார் வரதராஜ பெருமாள்
நம்மை வாழவைக்கும் திருமால்
அவர் கள்ளழகர் கோலத்திலே களிப்புடனே வருவார்..

கோவிந்த கோவிந்த கோவிந்தா.. ஹரி
கோவிந்த கோவிந்த கோவிந்தா..


வஸந்தோத்ஸவ வைபவத்தில் வாண வேடிக்கை பாரு..
பூ பல்லாக்கிலே பவனி வரும் கள்ளழகரை பாரு..

கோவிந்த கோவிந்த கோவிந்தா.. ஹரி
கோவிந்த கோவிந்த கோவிந்தா..


அதிர்வேட்டு சத்தத்திலே தீவட்டி வெளிச்சத்திலே
அதிர்வேட்டு சத்தத்திலே தீவட்டி வெளிச்சத்திலே

ஐந்தடுக்கு வாத்தியங்கள் இஷ்டத்துக்கு முழங்குது பார்..


ஆடி வரார் ஓடி வரார் அழகழகாய்
அசைந்து வரார் வரதராஜ பெருமாள்
நம்மை வாழவைக்கும் திருமால்
அவர் கள்ளழகர் கோலத்திலே களிப்புடனே வருவார்..

கருப்பண்ண சுவாமியிடம் காவல் காக்க சொல்லி
தான் கைபிடித்த தேவியிடம் தைரியத்தை சொல்லி

வைகையிலே இறங்குகிறார் வட்ட நிலா ஜொலிக்க
வைகையிலே இறங்குகிறார் வட்ட நிலா ஜொலிக்க

அவர் கள்ளழகர் கோலத்திலே தல்லாகுளம் போய் அமர்வார்..

ஆடி வரார்..

தங்க நிற குதிரையிலே கள்ளழகரை பாரு
அவர் தங்கமென ஜொலித்து நிற்கும் வண்ணவராம் பாரு

சொர்ணமய சப்பரத்தில் சொர்க்க வாசல் பாரு

சொர்ணமய சப்பரத்தில் சொர்க்க வாசல் பாரு

நம்ம வரதராஜப் பெருமாளும் வண்டியூரில் அமர்வாரு..


ஆடி வரார்..


மண்டூக மகரிஷிக்கு மோட்சம் தரார் பாரு
அந்த மண்டகப்படியில் எழுந்தருளி தசவதாரம் பாரு..


கோவிந்தா கோவிந்தா... கோவிந்தோவ்..


நகரெங்கும் வலம் வருகின்ற நாராயணனை.. நம் வரதராஜனை தரிசித்து மகிழுங்கள்.


பேரருளாளன் அருள்வானாக.. மூன்று அழகர்களை பற்றி சொல்லலாம் என்று நினைத்துள்ளேன்.. அடுத்ததா.. பரமக்குடி சுந்தரராஜனையும்.. இறுதியாக.. சோலைமலை அழகனையும் வரும் வாரங்களில் பார்ப்போம்.


பாடல் எழுதி பாடியவர்: திரு. குங்கா. கே. நாகநாத அய்யர் அவர்கள் குழு, எமனை.






43 comments :

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஆடி வந்தோம், ஓடி வந்தோம் வரதனின் அடிப் பொடிகள்
நாடி வந்தோம், தேடி வந்தோம்
எமனைத் திருக் குடிகள்!
:)

பல்லாக்கு வைபவம் சூப்பரோ சூப்பர்! பல்லாக்கின் குலுங்கல் சுகம் கண்ணாரக் கண்டேன்!

கையில் திருமங்கையாழ்வார் கணக்கா, வரதனின் வேல் என்ன? அம்பு என்ன, கத்தி, கபடா என்ன? அடா அடா அடா!

இதுல ஃபுல் ஸ்லீவ்ஸ் மற்றும் ஒயிட் ஜீன்ஸ்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மேல உள்ள படத்துல தெரியற அர்ச்சகர் யாரா இருக்கும்னு சொன்னா.. அவர்களுக்கு அடையார் ஆனந்த பவனில் ஒரு கிலோ மை.பா வாங்கி அனுப்பப்படும் :)//

:)))
மை.பா டிஸ்ட்ரிப்யூஷன் கை மாறிடிச்சா? யக்கா..சொல்லவே இல்லை!

ராகவானுஜா, நியாயத்தை நீயே கேளுப்பா!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மூனு ராஜன்கள் கெளம்பிட்டாங்கய்யா! கெளம்பிட்டாங்க!

எமனை வரதராஜன்!
பரமக்குடி சுந்தரராஜன்!
அழகர்கோயில் சுந்தரராஜன்!

அவரவர் தாயார் திருநாமங்களையும் சபையில் சொல்லுமாறு வேண்டிக் கொள்கிறேன்!

ஷைலஜா said...

ஐப்பசில வந்தேன் (ஆமா ஆடி மாசமா இப்போ அதான்:)))
பதிவை முழுக்கப்படிச்சிட்டு பின்னூட்டமிடறேன் இப்போ அடுப்புல சாம்பார்!

Raghav said...

//ஆடி வந்தோம், ஓடி வந்தோம் வரதனின் அடிப் பொடிகள்
நாடி வந்தோம், தேடி வந்தோம்
எமனைத் திருக் குடிகள்!
:)
//

வாங்க வாங்க.. வைகாசி மாசத்துல இந்தியால இருக்குற மாதிரி வந்தீங்கன்னா.. கூட்டிட்டுப் போறேன்.. அட்டகாசமா இருக்கும்..

ஷைலஜா said...

ராகவ்!!! வரதராஜனை இத்தனை நாளாய் வராத-ராஜனாய் இருக்கவிட்டு இப்போதாவது பதிவுக்கு வரச்செய்ததற்கு முதல்ல நன்றி.

உங்க ஊர்ல இவ்வளோ அமக்களமா நடக்குமா? பல்லாக்கு பல்லாக்குதான்! அதுல ஊர்வலம்வர்ரப்போ வெறும் ராஜாக்களே கம்பீரமா ஜொலிக்கிறபோது நம்ம வரதராஜதெய்வத்தின் அழகைக்கேட்கணுமா?

"துரக விஹகராஜ ஸ்யந்த நாந்தோளிகாதிஷு
அதிக மதிக மந்யா மாத்ம சோபாம் ததாநம்
அநவதிக விபூதிம் ஹஸ்திசைலேச்வரம் த்வாம்
அநுதிந மநிமேஷைர் லோசநைர் நிர்விசேயம்"

துரக=== குதிரைவாஹன
விஹக ராஜ-- கருட வாஹன
ஸ்யந்தக---திருத்தேர்
ஆந்தோளிகா ஆதிஷு====ஆடும் பல்லக்கு முதலியவற்றில்
ஆத்ம சோபாம்====திருமேனி அழகை
அதிகம் அதிகம்==மிக அதிமாக
ததாநம்====தரிப்பவனாய்
அநவதிக====எல்லையற்ற
விபூதிம்=====விபவங்களையுடையவனாய்
ஹஸ்தி சைல ஈச்வரம்----அத்திகிரி நாயகனான
த்வாம்==உன்னை
அநிமேஷை; இமைகொட்டாத
லோசநை;-----கண்களால்
அநுதிநம்====தினந்தோறும்
நிர்விசேயம்==அனுபவிப்பேனாக.

(தேசிகரின் ஸ்ரீ வரதராஜ பஞ்சாசத்)


இங்கயும் அனுபவிக்க வைத்த ராகவ்க்கு
பதினாறும் பெற்று வாழ ஆசிகள்!

Raghav said...

//பல்லாக்கு வைபவம் சூப்பரோ சூப்பர்! பல்லாக்கின் குலுங்கல் சுகம் கண்ணாரக் கண்டேன்! //

எங்க ஊர்ல.. பல்லாக்குன்னாலே.. ஒரு தனி களை வந்துரும்.. ஏன்னா பல்லாக்குல தான்.. பெருமாளாஇ எப்படி வேணும்னாலும் குலுக்கலாம், ஆடலாம்.. பஸ்கி கூட எடுப்பாங்க.. :)

//இதுல ஃபுல் ஸ்லீவ்ஸ் மற்றும் ஒயிட் ஜீன்ஸ்! :) //
என் செலக்‌ஷன் ஆச்சே.. :) அலங்காரம் முடிஞ்சவுடனே.. எங்க கண்ணே பட்டுருச்சு.. நல்லபடியா திருவிழா நடக்கணும்னு... திருஷ்டி சுத்திட்டு அப்புறம் தான் திரையை விலக்கினோம்.

Raghav said...

//அவரவர் தாயார் திருநாமங்களையும் சபையில் சொல்லுமாறு வேண்டிக் கொள்கிறேன்! //

தனியா தானே போறாரு ஸ்ரீ பூமி நீளா பெருந்தேவி நாயகி ஸமேத ஸ்ரீவரதராஜப் பெருமாள்
அதனால சொல்லல..

ஷைலஜா said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//மேல உள்ள படத்துல தெரியற அர்ச்சகர் யாரா இருக்கும்னு சொன்னா.. அவர்களுக்கு அடையார் ஆனந்த பவனில் ஒரு கிலோ மை.பா வாங்கி அனுப்பப்படும் :)//

:)))
மை.பா டிஸ்ட்ரிப்யூஷன் கை மாறிடிச்சா? யக்கா..சொல்லவே இல்லை!

ராகவானுஜா, நியாயத்தை நீயே கேளுப்பா!

11:41 PM, November 12
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<< என்ன சொல்ல ரவி!!! ராகவ் எங்க வீட்டுக்கு வந்தப்போ மிளகுகுழம்பும் சுட்ட அப்பளமும் போட்டகோபத்தை இப்போ காட்டறாரு....அடையாறு ஆனந்தபவன் மைபாவாம்!!!

எந்தமைபா எங்கெங்குபோய் உண்டாலும்
அந்தமைபா அக்கா செய்வதுபோல் வருமா? என இப்படிபுதுக்குறள் எழுதவச்சிட்டாரே தம்பி!:)

Raghav said...

// உங்க ஊர்ல இவ்வளோ அமக்களமா நடக்குமா? பல்லாக்கு பல்லாக்குதான்! //

ஆமாக்கா.. சின்னக் குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் ஒரே சந்தோஷமா இருக்கும், கோவிலை விட்டு கிளம்பி.. எப்போ ஆத்துல இறங்குவார்னு ஆவலா இருப்பாங்க..

முதல் நாள் சாயங்காலம் மாவிளக்கு மாவு வைச்சு பூஜை செஞ்சு... இரவு முழுவது கண் விழித்து.. மறுநாள் அதிகாலை அழகர அனுப்பி வைச்சுட்டு தான் வீட்டுக்கு போவாங்க..

Raghav said...

//"துரக விஹகராஜ ஸ்யந்த நாந்தோளிகாதிஷு
அதிக மதிக மந்யா மாத்ம சோபாம் ததாநம்
அநவதிக விபூதிம் ஹஸ்திசைலேச்வரம் த்வாம்
அநுதிந மநிமேஷைர் லோசநைர் நிர்விசேயம்" //

அக்கா.. இந்த தம்பியின் நமஸ்காரங்கள்.. ஆபீஸ்ல இருந்தே உங்க வீடு இருக்குற திசையை பாத்து நமஸ்கரிக்கிறேன்.. ஆசீர்வாதம் பண்ணுங்க.. தேசிகர் ஸ்தோத்திரம் சொல்லி இப்பதிவை சிறப்பித்ததுக்காக இந்த நமஸ்காரம்..

Raghav said...

//என்ன சொல்ல ரவி!!! ராகவ் எங்க வீட்டுக்கு வந்தப்போ மிளகுகுழம்பும் சுட்ட அப்பளமும் போட்டகோபத்தை இப்போ காட்டறாரு.... //

அக்கா.. உங்க மேல நான் கோபப்படுவேனா.. அக்காவின் மை.பா இந்த தம்பிக்கு மட்டுமே.. மத்தவங்களுக்கெல்லாம் கடைல வாங்கி தந்தா போதும்..

அக்கா, இன்னைக்கு சாம்பாரா?? மத்தியானம் ஒரு நடை வரலாமா ?? :)

மெளலி (மதுரையம்பதி) said...

ரொம்ப அழகா இருக்குங்க ராகவ் படங்களும், பாடலும்.

ஷைல்ஸக்கா, வரதராஜ பஞ்சாசத் புஸ்தகமாக உங்களிடம் இருக்கா? :)

ஷைலஜா said...

மதுரையம்பதி said...
ரொம்ப அழகா இருக்குங்க ராகவ் படங்களும், பாடலும்.

ஷைல்ஸக்கா, வரதராஜ பஞ்சாசத் புஸ்தகமாக உங்களிடம் இருக்கா? :)

1:19 AM, November
>>>>.இருக்கு மௌலி. வேணுமா?

மெளலி (மதுரையம்பதி) said...

//>>>>.இருக்கு மௌலி. வேணுமா?//

ஆமாம்க்கா....என்னிடம் உங்களது இரு புத்தகங்கள் + ஒரு கட்டிங் இருக்கு, அதை குடுத்துட்டு வாங்கிக்கறேன். :-)

முடிந்தால் சனிக்கிழமை போன் பண்ணிட்டு வரேன்.

ஷைலஜா said...

Raghav said...
//அக்கா.. உங்க மேல நான் கோபப்படுவேனா.. அக்காவின் மை.பா இந்த தம்பிக்கு மட்டுமே.. மத்தவங்களுக்கெல்லாம் கடைல வாங்கி தந்தா போதும்..

அக்கா, இன்னைக்கு சாம்பாரா?? மத்தியானம் ஒரு நடை வரலாமா ?? :)//


வடைபாயசம் மைபாவுடனே உனக்கு சாப்பாடு போட்ற ஐடியா இன்னிக்க்கு வெறும் சாம்பாரும் வாழைக்காய் வதக்கலுமே!!

12:51 AM, November 13, 2008

ஷைலஜா said...

Raghav said...
//"துரக விஹகராஜ ஸ்யந்த நாந்தோளிகாதிஷு
அதிக மதிக மந்யா மாத்ம சோபாம் ததாநம்
அநவதிக விபூதிம் ஹஸ்திசைலேச்வரம் த்வாம்
அநுதிந மநிமேஷைர் லோசநைர் நிர்விசேயம்" //

அக்கா.. இந்த தம்பியின் நமஸ்காரங்கள்.. ஆபீஸ்ல இருந்தே உங்க வீடு இருக்குற திசையை பாத்து நமஸ்கரிக்கிறேன்.. ஆசீர்வாதம் பண்ணுங்க.. தேசிகர் ஸ்தோத்திரம் சொல்லி இப்பதிவை சிறப்பித்ததுக்காக >>>>>>>

டக்குனு புக் கிடச்சிது பாத்து தட்டச்சினேன் பயந்துண்டேதான் ஏதாவது தப்புபண்ணாம சொல்லணுமேன்னும் சம்ஸ்க்ருதம் சுமாராதானே தெரியும்!
எல்லாருமா
தூப்புல் பார்த்துதிரும்பி அந்த மாமுனியை நமஸ்கரிப்போம்!

ஷைலஜா said...

மதுரையம்பதி said...
//>>>>.இருக்கு மௌலி. வேணுமா?//

ஆமாம்க்கா....என்னிடம் உங்களது இரு புத்தகங்கள் + ஒரு கட்டிங் இருக்கு, அதை குடுத்துட்டு வாங்கிக்கறேன். :-)

முடிந்தால் சனிக்கிழமை போன் பண்ணிட்டு வரேன்.

1:28 AM, November 13, 2008

>>>>>>>>சரி.....வாங்க மௌலி., போன் பண்ணிட்டு(ஹிஹி ஊர்சுத்துவேனே அதான்:)))

Anonymous said...

//அக்கா, இன்னைக்கு சாம்பாரா?? மத்தியானம் ஒரு நடை வரலாமா ?? :)//

வரதராஜ பெருமாள் ஆடி வரார் ..ஓடி வரார் யென அட்டகாசமாக பதிவை தொடங்கி இப்பொது தாங்கள் சம்பாருக்கு ஓடி போவதாக பதிவை மாட்ட்ரலாமா???

டைட்டில்:
ராகவ் ஒடி வர்ரார்..சாம்பாருக்காக...

குமரன் (Kumaran) said...

இராகவ்,

அருமை அருமை. எங்க ஊர் தெற்கு கிருஷ்ணன் கோவில் பிரசன்ன வேங்கடாசலபதியைப் பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது என்று ஏங்கிக் கொண்டிருந்தேன். பேரருளாளனாகக் காட்சி தந்துவிட்டான். அப்படியே எங்க ஊர்க் கோவில் திருவிழாவைப் பார்த்தது போலவே ஒரு உணர்வு.

பூப்பல்லக்கில் பெருமாளைக் கட்டிக் கொண்டு ஒரு சிறுவன் நிற்கிறானே. அவன் தானே படத்திலும் அர்ச்சகராக நிற்கிறான். பல்லக்கு ஆடும் ஆட்டத்தில் பெருமாள் கீழே விழாமல் இருக்க பெருமாளை இவன் பிடித்துக் கொண்டிருக்கிறானா இல்லை இவன் கீழே விழாமல் இருக்க அவனைப் பிடித்துக் கொண்டிருக்கிறானா தெரியவில்லையே. டக்குன்னு கேட்டுச் சொல்லுங்கள். :-)

Raghav said...

//மதுரையம்பதி said...
ரொம்ப அழகா இருக்குங்க ராகவ் படங்களும், பாடலும் //

ஆஹா.. நன்றி மெளலிண்ணா.. ஒருமுறை உங்களை எங்க ஊருக்கு கடத்திகிட்டு போய் காட்டுறேன்.. :)

Raghav said...

//குமரன் (Kumaran) said...
இராகவ்,

அருமை அருமை. //

ரொம்ப ரொம்ப நன்றி குமரன்.. மற்ற அழகர்களை பற்றியும் நல்லா சொல்ல முயற்சிக்கிறேன்.

//அப்படியே எங்க ஊர்க் கோவில் திருவிழாவைப் பார்த்தது போலவே ஒரு உணர்வு. //

அது என்ன உங்க ஊர் போல.. உங்க ஊரே தான்.. :)

//பூப்பல்லக்கில் பெருமாளைக் கட்டிக் கொண்டு ஒரு சிறுவன் நிற்கிறானே. அவன் தானே படத்திலும் அர்ச்சகராக நிற்கிறான். //

நல்லா பாருங்க குமரன்.. சிறுவனுக்கும், முதலில் படத்தில் உள்ளவருக்கும் குடுமி இருக்குற வித்யாசம் கூடவா தெரியல.. :)

Raghav said...

//பல்லக்கு ஆடும் ஆட்டத்தில் பெருமாள் கீழே விழாமல் இருக்க பெருமாளை இவன் பிடித்துக் கொண்டிருக்கிறானா இல்லை இவன் கீழே விழாமல் இருக்க அவனைப் பிடித்துக் கொண்டிருக்கிறானா தெரியவில்லையே. //

ஹி ஹி.. இதுதான் அவனுக்கு முதல்முறை.. அதுதான் கொஞ்சம் பயம்.. குலுக்கல்ல க்/இழ தள்ளிருவாங்களோன்னு.. அதான்.. :)

Divyapriya said...

ரொம்ப நல்லா இருந்தது இந்த பதிவு…படங்களும் அருமையோ அருமை…

எமனேஸ்வரம் எங்க இருக்கு?

Raghav said...

//Divyapriya said...
ரொம்ப நல்லா இருந்தது இந்த பதிவு…படங்களும் அருமையோ அருமை…//

நன்னி திவ்யப்ரியா .. வரதன் அழகன் தானே.. அதான் பதிவும் அழகா அமைஞ்சுருச்சு..

//எமனேஸ்வரம் எங்க இருக்கு? //

மதுரை - இராமேஸ்வரம் வழியில் பரமக்குடி கேள்விப்பட்டுருப்பீங்க.. அங்க இருந்து ஒரு ரெண்டு கிலோமீட்டர், வைகை ஆற்றைக் கடந்து போனா வரும் சிற்றூர் தான் எமனை.. ராகவன் எனும் தவப்புதல்வனை தமிழகத்துக்கு தந்த ஊர்னு சொல்லலாம் :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//என்னிடம் உங்களது இரு புத்தகங்கள் + ஒரு கட்டிங் இருக்கு//

இது என்னா கட்டிங்?
90 கட்டிங்கா? இல்லை வேறு ஏதாச்சுமா? :)
சபையில் சொல்லி அருளுமாறு மெளலீச்வரரிடம் விண்ணப்பிக்கிறேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வரதராஜன் வைபவத்தை தேசிகர் பாடியது போல் வேறு யாரும் ரசித்து ருசித்துப் பாடி இருப்பார்களா என்று ஐயம் தான்! அவ்வளவு சுலோகங்கள் வரதன் மீது!

வரதராஜ பஞ்சசாத்=வரதன் ஐம்பது
இது தான் சிறுவனாய் முதலில் பாடியது!

அரங்கன், வேங்கடவன் என்று பின்னாளில் சேவித்து மகிழ்ந்த ஆசார்யர்கள் எல்லாம் தங்கள் வாழ்நாளில் முதலில் கண்டு கொண்டு சேவித்தது பேரருளாளன் என்னும் வரதனையே!

இராமானுசரும் வரதன் சன்னிதியில் தான் வாழ்க்கைத் திருப்புமுனை கண்டு கொண்டார்!
தேசிகரும் வரதன் சன்னிதியில் தான் கைங்கர்ய வாழ்வினைத் துவக்கிக் கொண்டார்!

இப்படி மற்ற திவ்ய தேச எம்பெருமானுக்கு எல்லாம் ஆச்சார்ய சம்பந்தம் ஏற்படுத்திக் கொடுத்தவன் அத்திகிரியில் எழுந்தருளி வரமருளும் எங்கள் வரதராஜனே!

அடியேன் கண்டுகொண்ட முதல் பெருமாளும் எங்கள் வாழைப்பந்தல் கிராமத்தின் (கஜேந்திர) வரதராஜனே! (ஆனைக்கருளிய அருளாளப் பெருமாள்).
காஞ்சிக்கும் அண்ணாமலைக்கும் நடுவில் உள்ள கிராமம்!
காஞ்சிபுரம்-செய்யார் வழித்தடத்தில், ஒரு மணி நேரப் பயணம்!

வரதனை வணங்குதல் அல்லால் வாழ்த்தல் என் நாவிற்கு அடங்காது!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வரதன் உத்தரவேதி என்னும் யக்ஞப் புகையில் தோன்றியவன்!
அதனால் இன்னும் கருவறையில் யக்ஞ வாசம் வீசும்!

திருவரங்கத்தில் வெண்ணெய் வாசம்!
திருமலையில் பச்சைக் கர்ப்பூர வாசம்!
திருக்கச்சியில் யக்ஞ வாசம்!

திருவரங்கம் நடை அழகு!
திருமலை வடை அழகு!
திருக்கச்சி குடை அழகு!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வரமெல்லாம் அருளும் வரதனைச் சைவப் பெரியார்களும், அத்வைத சிரேஷ்டர்களும் பரவிப் பாடியுள்ளனர்!

அப்பைய தீட்சிதர் வரதராஜ ஸ்தவம் என்றே 105 பாடல்கள் தனியாகச் செய்துள்ளார்.

கூரத்தாழ்வான் செய்த வரதராஜ ஸ்தவம்-மும் மிகவும் புகழ் பெற்றது!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வரதராஜன் திருச் சின்ன மாலை!

அத்திகிரி அருளாளப் பெருமாள் வந்தார்
அனை பரி தேரின் மேல் அழகர் வந்தார்

கச்சி தனில் கண் கொடுக்கும் பெருமாள் வந்தார்
கருத வரம் தரு தெய்வப் பெருமாள் வந்தார்

முத்தி மழை பொழியும் முகில் வண்ணர் வந்தார்
மூலம் என ஓலமிட வல்லார் வந்தார்

உத்தர வேதிக்குள்ளே உதித்தார் வந்தார்
உம்பர் தொழும் கழல் உடையார் வந்தார் தாமே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

(So called) தாழ்த்தப்பட்ட குலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கருவறைக்குள் போய் உட்கார்ந்து திருத்தொண்டு செய்ததும் வரதன் கருவறையில் தான்!

வைசிய குல எண்ணெய் வாணிபச் செட்டியார் வீட்டில் பிறந்த திருக்கச்சி நம்பிகள்! அவர் வரதனுக்குக் கருவறைக்குள் இருந்து பூசையும் ஆலவட்டக் கைங்கர்யமும் செய்தவர்!

இப்படி வரதன்,
சமூகப் புரட்சிகளும் செய்து இருக்கிறான்!
ஆச்சார்யர்களையும் காட்டிக் கொடுத்து இருக்கிறான்!
தரிசனமும் தழைக்கச் செய்து இருக்கிறான்!

கனக வலய முத்ராம் கண்ட தேஷே ததாந
"வரதம்" சததம் அந்தர் மானசம் சன்னிதேயா:

ஸ்ரீவரதராஜ சரணெள சரணம் ப்ரபத்யே!
பேரருளாளப் பெருமாள் திருவடிகளே சரணம்!!

Unknown said...

மிக அற்புதம், பெருமாள் அட்டகாசம்! வைகாசி மாதம் வர மாதிரி இருந்தா எம‌னேஸ்வரம் கட்டாயம் போய்ப் பார்க்கணும்.

ராகவ், விடியோ பிர‌மாதம். //சாப விமோசனம் தர வேண்டியே இந்த விஜயம்// பண்ற மாதிரியா இருக்கு? குறும்புப் புள்ள ஓடி விளையாடற மாதிரி இருக்கு! நன்றி!!

Anonymous said...

\\வரதராஜன் வைபவத்தை தேசிகர் பாடியது போல் வேறு யாரும் ரசித்து ருசித்துப் பாடி இருப்பார்களா என்று ஐயம் தான்! அவ்வளவு சுலோகங்கள் வரதன் மீது!வரதராஜ பஞ்சசாத்=வரதன் ஐம்பது
இது தான் சிறுவனாய் முதலில் பாடியது!

அரங்கன், வேங்கடவன் என்று பின்னாளில் சேவித்து மகிழ்ந்த ஆசார்யர்கள் எல்லாம் தங்கள் வாழ்நாளில் முதலில் கண்டு கொண்டு சேவித்தது பேரருளாளன் என்னும் வரதனையே! //

முக்தி கொடுக்கும் தெய்வம் வரதன் மட்டுமே என்னும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர் ஸ்வாமி நிகமாந்த மகா தேசிகர்.

அதுனால தான் வரதராஜர், எமனேஸ்வரத்திற்கு சென்று, எமனிடம் இருந்து, பக்தர்களைக் காத் து, மோட்ச்த்திற்கு அனுப்ப வேண்டும் என்னும் கருணை கொண்டாரோ.??

இந்த் பதிவு எழுதியதால் , தம்பி ராகவன் மீது இருக்கும் , கருட புருடானம் சாபத்தை விலக்கி அருளுமாறு கே ஆர் எஸ் அவ்ர்களை ,கேட்டுக் கொள்கிறேன்.

வரும் பதிவுகளில், குழல் அழகர், வாயழகர், எழுகமலக் கொப்பூழ் அழகர் எனும், மாலிருஞ்சோலை மணாளன் , 300 தடா நிறைந்த அக்கார அடிசிலை அமுதாகப் பெற்ற சுந்தரனை விரைந்து எழுதுமாறு , தம்பி பரவஸ்து ராகவனை , கேட்டுக் கொள்கிறேன்.

Anonymous said...

//ராகவன் எனும் தவப்புதல்வனை தமிழகத்துக்கு தந்த ஊர்னு சொல்லலாம் :)//

தமிழகத்துக்கு தரப்பட்ட தவப்புதல்வன்,
கர்னாடகம் சென்ரது யேனோ???

Raghav said...

//இப்படி மற்ற திவ்ய தேச எம்பெருமானுக்கு எல்லாம் ஆச்சார்ய சம்பந்தம் ஏற்படுத்திக் கொடுத்தவன் அத்திகிரியில் எழுந்தருளி வரமருளும் எங்கள் வரதராஜனே!
//

ரவி அண்ணா.. அற்புதமாக சொல்லிருக்கீங்க.. உங்கள் மூலமே பதிவு சிறப்படைகிறது. என்ன தவம் செய்தேனோ நான்.. உங்களை அறிய..

Raghav said...

//கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
மிக அற்புதம், பெருமாள் அட்டகாசம்! வைகாசி மாதம் வர மாதிரி இருந்தா எம‌னேஸ்வரம் கட்டாயம் போய்ப் பார்க்கணும்.
//

வாங்க கெ.பி அக்கா, உங்கள் முதல் வரவுக்கு நன்றி..

//குறும்புப் புள்ள ஓடி விளையாடற மாதிரி இருக்கு! நன்றி!! //

அதே தான்க்கா.. இதே மாதிரி கோவிலுக்கு திரும்ம்பி வரும் நிகழ்ச்சி காலையில நடக்கும்.. அப்போ இன்னும் சந்தோஷமா நடத்துவாங்க.. கோவிலுக்கு உள்ள போனவுடனே.. நேரா தாயார் சன்னதி முன்னால போய் தான் நிப்பாங்க.. பல்லாக்கினை கையில் ஏந்திக் கொண்டு தொட்டிலை ஆட்டுவது போல் செய்து.. இறுதியில் கீழே இறக்குவார்கள்.. அதெல்லாம் பாக்க ரொம்ப அழகா இருக்கும்..

அந்த வீடியோவும் அப்லோட் பண்றேன்..

Raghav said...

// paravasthu said...
முக்தி கொடுக்கும் தெய்வம் வரதன் மட்டுமே என்னும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர் ஸ்வாமி நிகமாந்த மகா தேசிகர். //

வாங்க பரவஸ்து (வீர வைஷ்ணவர் )சுந்தரராஜரே.. மதுரையில்.. சுந்தரராஜப் பெருமாளை வீரராகவப் பெருமான் வரவேற்பார்.. எங்க ஊர்ல.. வரதராஜரை பரமக்குடி சுந்தரராஜர் வரவேற்பார்..

//இந்த் பதிவு எழுதியதால் , தம்பி ராகவன் மீது இருக்கும் , கருட புருடானம் சாபத்தை விலக்கி அருளுமாறு கே ஆர் எஸ் அவ்ர்களை ,கேட்டுக் கொள்கிறேன். //

ஹா ஹா... சாபமா எனக்கா.. அவர் கொடுத்தது வரமாச்சே.. :)

// 300 தடா நிறைந்த அக்கார அடிசிலை அமுதாகப் பெற்ற சுந்தரனை விரைந்து எழுதுமாறு , தம்பி பரவஸ்து ராகவனை , கேட்டுக் கொள்கிறேன். //

அய்யா.. நான் வெறும் வஸ்து தான் பரவஸ்து கிடையாது.. :) ..

Raghav said...

//srinivas said...
தமிழகத்துக்கு தரப்பட்ட தவப்புதல்வன்,
கர்னாடகம் சென்ரது யேனோ??? //

யப்பா சீனிவாஸா... அடங்க மாட்டியா நீ.. :)

Anonymous said...

//யப்பா சீனிவாஸா... அடங்க மாட்டியா நீ.. :)
//

39 comments....Running succesfully..
Towards 50th and also 100th.

exelent post..............

Kavinaya said...

அழகரப்பனின் அழகைச் சொல்லவும் வேண்டுமோ? ஆடிவரும் அவருடைய பூப்பல்லக்கும் அதற்கேற்ற பாடலும் அழகோ அழகு. மிக்க நன்றி ராகவ்.

Anonymous said...

\\அத்திகிரி அருளாளப் பெருமாள் வந்தார்
கச்சி தனில் கண் கொடுக்கும் பெருமாள் வந்தார்
கருத வரம் தரு தெய்வப் பெருமாள் வந்தார்
முத்தி மழை பொழியும் முகில் வண்ணர் வந்தார்
மூலம் என ஓலமிட வல்லார் வந்தார் //

அத்திகிரி வரதர் மீது அருமையான தமிழ் பாடல்களைப் பாடியுள்ளார்.

அடைக்கலப் பத்து என்னும் பாடல்களில்
பத்தி முதலாமவற்றில் பதி எனக்குக் கூடாமல்
எத்திசையும் உழன்றோடி, இளைத்து விழும் காகம் போல்

முத்தி தரும் நகர் ஏழில் முக்கியமாங்கச்சி தன்னில்,

அத்திகிரி அருளாளர்க்கு அடைக்கலம் நான் புகுந்தேனே என தொடங்கி பத்து பாடல்கள் பாடி இருக்கிறார்.

அரிய சுவையும், அர்த்தமும், உள்ள இந்த பத்து பாடல்கள், அத்திகிரி அருளாளப் பெருமாள் மீது பாடப்பட்டவை.


அத்திகிரி அருளாளன், எமனை வரதனாக அழகாக இருக்கிறார்.

பரவஸ்து கண்ணன் பட்டருக்கு , சிறப்பான யோகம். வரதனுக்குக் கைங்கரியம் பண்ணும் பாக்கியம். நமக்கு , அடுத்த பிறவியிலாவது அது கிடைக்குமா?

Unknown said...

சுமார் நாற்பது வருஷங்களுக்கு முன் வரை கொடகநல்லூர் சுவாமி ஒருவர் அர்ச்சக கைங்கர்யம் பண்ணிக்கொண்டிருந்தார். தற்போது யாரென்று தெரியவில்லை.பல்லக்கு சேவை அற்புதம்.

Shanthi Krishnakumar said...

Nalla padhivu. Arumai

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP